தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, April 30, 2014

தீக்கதிர்
நாள்  01-05-2014
மரம் தனது கனிகளால் அறியப்படும்!


மரம் தனது கனிகளால் அறியப்படும்! அமைதியான இந்த வார்த்தைகள்தான் இன்று உலகம் முழுவதும் தொழிலாளர்கள், தங்களின் உரிமைகளுக்காக ஆர்த்தெழுந்து போராட ஆவேசமளித்துள்ளது. ஆம் மே தின தியாகிகளில் ஒருவரான தோழர் ஆல்பர்ட் ஆர்.பார்சன்ஸ், தன் மீது பொய்யாக, சுமத்தப்பட்ட கொலைக்குற்றத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடுகையில் இறுதியாக முழக்கமிட்ட முழக்கமிது!8 மணி நேரம் வேலை கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிகாகோ நகர தொழிலாளர்களின் தலைவர்கள் மீதும் காவல் துறையினர் மீதும் குண்டு எறிந்தனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்ச்சர், மைக்கேல் ஸ்வாஃப், சாமுவேல் பீல்டன், லூயிஸ் லிங்க் ஆகிய ஏழு தோழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆஸ்கர் நீபீ என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். இதன் விளைவாக ஸ்வாஃப் மற்றும் பீல்டன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஏங்கல், பிட்ச்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந்தேதி யன்று தூக்கிலிடப்பட்டனர்.
லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார்.இவர்கள் செய்த குற்றம்தான் என்ன? தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு அவர்களை அணி திரட்டியதுதான். 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் உறார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களின் மத்தியில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக்கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார்.
ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர். காவல் துறையின் இந்த அடக்குமுறையை கண்டித்து அன்று இரவு கண்டன கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு சிகாகோ நகரின் மையப் பகுதியில் ஹே மார்க்கெட் என்ற பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து சிகாகோ நகரத்திலிருந்து வெளியாகும் “ஆர்பைட்டர் ஜெட்டங்” என்ற செய்தித்தாளில் ஆகஸ்டு ஸ்பைஸ் தொழிலாளர்களை கண்டனக் கூட்டத்தில் பங்கேற்கும்படி அறைகூவல் விட்டிருந்தார். அன்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்டனர்.
இக் கூட்டத்தில் தொழிலாளர்கள் தலைவர்கள் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆல்பர்ட் பார்ஸன்ஸ் சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதிக் கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன்பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. திடீரென்று காவல்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந்தார். 70-க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர். காவல்துறையினர் உடனடியாக துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் எத்தனைப் பேர் இறந்தனர் காயமுற்றனர் என்பது இறுதிவரை தெரிவிக்கப்படவே இல்லை.இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிகாகோ நகர் முழுவதும் தொழிற்சங்க தலைவர்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. தொழிலாளர் தலைவர்கள் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டுகள் எறிந்தது தொழிலாளர் தலைவர்கள்தான் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு 8 தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கூட்டத்தைப் பற்றி அந்நகர மேயர் கூறுகையில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டம். தொழிலாளர் தலைவர்கள் அமைதியான முறையில் பேசிக்கொண்டிருந்தனர். காவலர்களுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது என கூறியுள்ளார்.
அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பார்சன் தனது இரு சிறிய குழந்தைகளையும் அந்த கூட்டத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். எனினும் தொழிலாளர்கள் தலைவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆல்பர்ட் பார்ஸன்ஸ் சாமுவேல் பீல்டன் ஆகியோர் மட்டும்தான். ஆனால் 8 தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தொழிலாளர் தலைவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை மறுத்துரைத்தனர். தங்களின் உரிமைக்கான போராட்டத்தினை நசுக்கிடவே இந்த பொய்வழக்கு என எடுத்துரைத்தனர்.

அரசு வழக்குரைஞரோ தலைவர்கள் தங்களுக்கு பின்னால் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்களை திரட்டியதுதான் மிகப்பெரிய குற்றம் என்றும், தலைவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தொழிலாளர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் எனவும் வாதிட்டார். நீதிமன்றத்தில் மரண தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்ட பின், ஆகஸ்டு ஸ்பைஸ், இத்தகைய தீர்ப்புகளால் உலகத் தொழிலாளர்களின் உரிமைகளை முடக்கி வைத்துவிட முடியாது, எங்களுக்கு வழங்கப்பட்ட இந்த மரண தண்டனை தீப்பொறியாக கிளம்பி உலகமெங்கெங்கும் பரவி, உரிமைகளுக்கான போராட்டங்களாக மாறி கொழுந்துவிட்டெறியும் என முழக்கமிட்டார். 128 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மே தின தியாகிகளின் முழக்கம் தொழிலாளர்களின் ஆயுதமாக விளங்கி வருகிறது.- க.ராஜ்குமார்

Sunday, January 26, 2014

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்
க. ராஜ்குமார் 
நன்றி தீக்கதிர் 22-01-2014

காங்கிரசுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி பிஜேபி பிரச்சாரம் செய்து வருகின்றது. ஊழல் புரிவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. காங்கிரசுக்கு ஊழல் புரிவதில் பாரம்பரியம் உள்ளதுபோல் பிஜேபிக்கும் உண்டு. வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது ஆயுதபேர ஊழலில், உலகம் முழுவதும் தொலைக்காட்சியில் பார்க்க பார்க்க கட்டு கட்டாக பணத்தை வாங்கி வைத்து சிக்கிய பிஜேபி தலைவர் பங்காரு இலட்சுமணன், மற்றொரு முன்னாள் தலைவர் நிதின் கட்காரிக்கு சொந்தமான பூர்த்தி நிறுவனத்தோடு தொடர்புடைய 30 நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டு இது தொடர்பாக விசாரிக்க வருமானவரித்துறை நிதினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தென்னகத்தில் பிஜேபி தடம்பதிக்க காரணமானவர் என்று சொல்லப்படுகின்ற எடியூரப்பா கர்நாடகத்தில் முதலமைச்சராக இருந்த போது, சுரங்க உழல் மற்றும் நில ஊழல்களில் சிக்கி வழக்கை சந்தித்து கொண்டிருப்பதும், கட்சியிலிருந்து விலகிய அவர் மீண்டும் மோடி தலைமையில் இந்தியாவில் ஊழலை ஒழிக்க பிஜேபியில் இணைந்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. குஜராத்தில் மோடி அமைச்சரவையில் இருந்து பாபு பொக்கிரியா. 54 கோடி லைம் ஸ்டோன் வழக்கில் சிக்கி தண்டிக்கப்பட்டவர். இப்படி ஊழலோ ஊழல் என காங்கிரசுக்கு சற்றும் சளைத்தது அல்ல பிஜேபி.அது மட்டுமல்ல, 2001ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை நாடாளுமன்றத்தில் பாதுகாத்து, 10 ஆண்டுகள் கழித்து பிஜேபியின் தயவுடன்தான் காங்கிரஸ் அதை சட்டமாக்கியது. அதே போல் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க முதன் முதலில் வழிவகுத்தது பிஜேபிதான். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இதற்கான வித்தை விதைத்தார். காப்பிட்டுத்துறையில் அன்னிய மூலதனம், வங்கிகளில் தனியார் மயம் இதில் காங்கிரசுக்கு கைகொடுத்தது பிஜேபி. கடந்த 5 ஆண்டுகாலமாக இவ்விரு கட்சிகளும் இரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்றின. காங்கிரசும் பிஜேபியும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.-

Thursday, November 28, 2013

சட்ட மன்ற தேர்தல்களில் கிரிமினல்கள் 

தற்போது (2013) ராஜஸ்த்தான்,  மத்திய பிரதேஷ், டெல்லி, சட்டிஸ்கர் , மிசோராம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுக்  கொண்டுள்ள, சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும்  வேட்பாளர்களில், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் , குறித்த விபரங்கள்,  அதிர்ச்சி அளிப்பதாக  உள்ளது .

ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் போட்டியிடும் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 733 வேட்பாளர்களில் 111 வேட்பாளர்கள் , கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது . இந்த 111 வேட்பாளர்களில் 62 வேட்பாளர்கள், கொலை, பாலியல் பலாத்காரம், கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ்  சேர்ந்த 199 வேட்பாளர்களில் 28 வேட்பாளர்களும்   பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 199 வேட்பாளர்களில் 31 வேட்பாளர்களும்,  பி.எஸ்.பி     கட்சியை சேர்ந்த 190 வேட்பாளர்களில் 26 வேட்பாளர்களும், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.

ராஜஸ்தானில் போட்டியிடும் 733 வேட்பாளர்களில் 346 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் . காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஸ்வேந்திர  சிங் 118.96 கோடி ரூபாய்க்கு சொந்தகாரர் ஆவார் . பிஜே பி  சேர்ந்த பிரேம் சிங் 87.70 கோடி ரூபாய்க்கு சொந்தகாரர் ஆவார். மூம்ரவது இடத்தையும்  காங்கிரஸ் சே  பிடித்துள்ளது . இக்கட்சியை சேர்ந்த அஞ்சன  உதயலால் சொத்து மதிப்பு  65.55 கோடியாகும். இவர்கள் மூவருக்கும் கோடி கணக்கான ருபாய்  செலுத்தவேண்டிய  பொறுப்பும் உள்ளது .

  மத்திய பிரதேசில்  காங்கிரஸ், பிஜே பி, பி.எஸ்.பி  ஆகிய மூன்று கட்சிகளை சேர்ந்த 686 வேட்பாளர்களில் 683 வேட்பாளர்கள் குறித்து பரிசிளிக்கப்பட்டது . இதில் 206 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன . 120 வேட்பாளர்கள் மீது  கொலை., கொலை செய்ய முயற்சி , கடத்தல், உள்ளிட்ட  குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடு பட்டதாக  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்களில் ,  காங்கிரஸ் - 15, பிஜே பி- 37,  பி.எஸ்.பி - 33 ஆவர்.

 டெல்லி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும், 796  வேட்பாளர்களில் 129 வேட்ப்ளர்கள் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் . 93 வேட்பாளர்கள் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்புடையவர்கள் . 68 பி ஜே பி  வேட்பாளர்களில் 31 வேட்பாளர்கள் மீது ககுற்ற வழக்குகள் உள்ளன . காங்கிரசின்  70 வேட்பாளர்களில் 15 வேட்பாளர்கள் மீது வழக்குகள் உள்ளன. பி.எஸ்.பி கட்சியின் 68 வேட்பாளர்களில் 31 வேட்பாளர்களும், புதிதாக முளத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் 70 வேட்பாளர்களில் 5 வேட்பாளர்களும் குற்ற வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் ஆவர். சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகளின் 64 வேட்பாளர்கள் மீதும் வழக்குகள் உள்ளன.

 டெல்லி தேர்தலில், சிரோன்மணி அகாலி  தள் கட்சியை சேர்ந்த மஞ்சிந்தர் சிங்  ரஜெளரி கார்டன் தொகுதில் போட்டி இடுகிறார். இவருடைய சொத்து மதிப்பு  235.51 கோடியாகும். இரண்டாவது இடம் காங்கிரஸ் கட்சிக்கு இதன் மோடி நகர் வேட்பாளரான சுஷில் குப்தா  14.44 கோடிக்கு சொந்தகாரர் ஆவார்.  இதே கட்சியை சேர்ந்த  டெல்லி கான்ட்  தொகுதி வேட்பாளரான அசோக் குமார் ஜெயின் 143.69 கோடிக்கு சொந்தகார ர். பி ஜே பி கட்சியை சேர்ந்த சத் பிரகாஷ் ரான  பிஜிவசன் தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு 2008 தேர்தலில் சொத்து மதிப்பு 6.38 கோடியாகும். தற்போது மதிப்பு 111.89 கோடியாகும் . அதே போல் காங்கிரஸ் கட்சியின் பாதர்பூர் வேட்பாளர் ராம் சிங் நேதாஜி யின் சொத்து மதிப்பு 2008 ல் 8.44 கோடி தற்போது 58.71 கோடியாகும்.

 rj;jP];fh; khepyj;jpy;> Kjy;fl;l Njh;jypy; 143 njhFjpfspy; Nghl;bapLk; ; 15 Ntl;ghsh;fs; fphpkpdy; tof;Ffspy; njhlh;Gilath;fs; vd;Wk;> ,uz;lhk; fl;l Njh;;jypy; 72 njhFjpfspy; Nghl;bapLk; Ntl;ghsh;fspy; 60 Ntl;ghsh;fs; fphpkpdy; tof;Ffspy; njhlh;Gilath;fs; vd;W njhpate;Js;sJ. ,k;khepyj;jpy; Nghl;bapLk; Ntl;ghsh;fspy;> fhq;fpu]; fl;rpiar; Nrh;e;j jpUGtNd];th; rud; rpq; vd;gtUf;F 561.5 Nfhb nrhj;Jkjpg;Gs;sjhf njhptpf;fg;gl;Ls;sJ. ,k;khepyj;jpy; Nghl;bapLk; Ntl;ghshfspy;>  188 Ntl;ghsh;fs; NfhB];tuh;fs; Mth;.

kpNrhuhk; khepyj;jpy;> Nghl;bapLk; 142  Ntl;ghsh;fspy;>  %d;W Ntl;ghsh;fs; kl;Lk; fphpkpdy; tof;Ffspy; njhlh;Gilath;fs;. ,q;F  75 Nfhb];tuh;fs; Ntl;ghsh;fshf Nghl;bapLfpd;whh;fs;.

nghJthf ,e;jpahtpy; eilngWk; rl;lkd;w ehlhSkd;w Njh;jy;fspy;> Nfhb];tuh;fSk;> fphpkpdy; tof;Ffspy; rpf;fpath;fSk;jhd; Nghl;b NghlKbAk; vd;w epiy Vw;gl;Ls;sJ . ,J [dehafj;jpw;F tplg;gl;Ls;s rthyhfNt mike;Js;sJ.

Saturday, October 26, 2013

ஒப்புதல் வாக்குமூலம்

மறைப்பதும் மறப்பதும் மார்க்சிஸ்ட்டுகள் அல்ல!
 நன்றி தீக்கதிர் 26-102013

தமிழருவி மணியன் அவர்கள், 25-10-13 தேதிய தினமணியில் தெரிவித்துள்ள கருத்துக்கள், மதச்சார்பற்ற கட்சிகளின் அணிச்சேர்க்கை அவரை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மார்க்சியர்கள் ஏதோ செய்யக் கூடாததை செய்துவிட்டதாக ஒரே அடியாக புலம்பித் தள்ளியுள்ளார். அவரது பதற்றத்தில், அவரை அறியாமல் பல விஷயங்கள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் மறைக்க நினைத்தாலும், மறக்க நினைத்தாலும் அவரது மனசாட்சி அதற்கு தயாராக இல்லை.எனவேதான் தனது கட்டுரையில், ‘குஜரத்தில் 2002-ல் நடந்த படுகொலைஎன்ற வார்த்தையை அவர், அவரை அறியாமலேயே திரும்ப, திரும்ப குறிப்பிட வேண்டியதாயிற்று. இந்த படுகொலைக்கு தலைமை தாங்கியவர், பின்பலமாக இருந்தவர் திருவாளர் மோடிதான் என்று, அம்மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் கூறியிருப்பதை ஏன் நண்பர் மணியன் மறைக்கப்பார்க்கிறார்?
பல்வேறு மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் உள்ள இந்திய நாட்டு மக்களுக்கு தலைமை தாங்க மோடி போன்ற, குறுகிய நோக்கங்கள் கொண்ட தலைவர்களுக்கு தகுதி இல்லை என்பது தெரியாதா?
பாபர் மசூதி இடிப்பு கடவுளின் தீர்ப்புஎன்று பரவசப்பட்ட கல்யாண்சிங் பாஜகவிலிருந்து வெளியேறி முலாயம் சிங் கூட்டணிக்கு சென்றதை மேற்கோள் காட்டும் நண்பர் மணியன், இதன் மூலமாக, அவரை அறியாமல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த பாபர் மசூதி இடிப்புக்கு பின்னால் கல்யாண்சிங் மட்டும்தான் உள்ளாரா? பிஜேபி தலைவர்கள், அத்வானி, உமாபாரதி போன்ற வர்களுக்கு பங்கில்லையா? மசூதியை இடிக்கசங் பரிவார்’; கூட்டத்திற்கு உத்தரவு போட்டது ஆர்.எஸ்.எஸ் என்பதை நண்பர் மணியன் மறந்து விட்டாரா? இன்று அந்த ஆர்.எஸ்.எஸ். வேட்பாளராகத்தானே மோடி உருவெடுத்திருக்கிறார்? இதை நண்பர் மணியன் மறைக்கலாமா? மறக்கலாமா? இதற்கு அவரது மனசாட்சி இடம் தராது என்பதைதானே அவரது எழுத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அதிமுக இப்போது பாஜக விடமிருந்து விலகி நிற்கிறது என்று அவர் ஆரூடம் சொல்லும்போதே, பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற செய்தியையும் நண்பர் மணியன் ஒப்புக்கொளள்ளத்தானே செய்கிறார்? மலினமான மக்கள் விரோத அரசை அகற்ற மார்க்சியர்கள் அமைக்கும் மூன்றாவது அணிஎன அவர் குறிப்பிடும் இடத்தில் மக்கள் விரோத காங்கிரஸ் அரசுடன், இந்த 5 ஆண்டுகாலம் இரகசியமாக கூட்டு வைத்து, பொருளாதார சீர்திருத்தம் என்று, வங்கிகளை சீரமைப்பது என்ற பெயரில் தனியார் மயமாக்கவும், காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கவும், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதற்கும்,
புதிய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், மற்றும் பல மக்கள் விரோத மசோதாக்களை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் கையை தூக்கி உடந்தையாக இருந்த பாரதிய ஜனதா கட்சியை மக்களிடமிருந்து தப்பிக்க வைத்துவிடலாம் என்றால் முடியுமா 
இந்த காலக்கட்டத்தில், காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக, பங்காரு இலட்சமணன், எடியூரப்பா, நிதின்கட்காரி போன்ற பிஜேபி தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலில் திளைத்துப்போய், கையும் களவுமாக பிடிபட்டு அம்பலப்பட்டு போயிருப்பதை நண்பர் மணியன் மறைக்கப் பார்க்கிறாரா? இவர் வக்காலத்து வாங்கும் திருவாளர் மோடி ஆட்சிசெய்யும் குஜராத்தில் நடைபெற்று வருகின்ற ஊழல் பட்டியல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதே? இதற்கு அவர் என்ன செய்யப் போகிறார்?மதச்சார்பற்ற கட்சிகளின் அணிச் சேர்க்கை தவிர்க்க முடியாதது.
காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகளை, அவர் களின் செயல்பாடுகள் காரணமாக, இந்திய மக்கள் நிராகரிக்க முடிவு செய்து விட்டனர். ஆங்காங்கே உள்ள மாநிலக் கட்சிகளே மக்கள் முன் சரியான மாற்றாக பார்க்க முடிகிறது. இதன் வெளிப் பாடே ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட் டணியும் சிதைந்து வருவதும், இவ்விரு கூட்டணிகளில் இடம் பெற்றிருந்த பல்வேறு மாநிலக் கட்சிகள் வெளியேறுவதுமாக உள்ளன. இவற்றையெல்லாம் மறந்து விட்டு, மறைத்துவிட்டு நண்பர் மணியன் மார்க்சியர்களை விளாசி தள்ளுகிறார்.
மாநிலக் கட்சிகள் வலுப்பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் பிஜேபியின் மக்கள் விரோத நடவடிக்கைகளே காரணம் என்பதை அவர் சொல்ல தயாராக இல்லை. காங்கிரஸை விமர்சிக்க துணிவுள்ள அவருடைய எழுதுகோலுக்கு பிஜேபியை விமர்சிக்கத் துணிவில்லை; திராணி இல்லை.தேர்தலுக்கு முன் மூன்றாவது அணி இல்லை என்பதை இடதுசாரிகளும், மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் திரும்ப திரும்ப சொன்னப்பிறகும் மூன்றாவது அணி குறித்து திரு மணியன் அச்சப்படுவது, தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் மாநி லக்கட்சிகள் வெற்றி பெற்று காங்கிரஸ்- பிஜேபிக்கு மாற்றாக ஒரு கூட்டணி ஆட்சி அமையும் என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ள காரணத்தினாலேயே அவருக்கு இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர் தூக்கி பிடித்துள்ள, பிரதமர் நாற்காலி மீது ஆசை வைத்துள்ள மோடியை இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற முடிவிற்கு நண்பர் மணியன் வந்து விட்டதாலேயே அவர் அச்சப்படுகிறார்.
இந்திய நாட்டின் பிரதமர் பதவியே மாhக்சிஸ்ட்டுகளை தேடிவந்து, காத்துக்கொண்டிருந்தபோது அதை ஏற்க மாட்டோம் என்று சொல்லக் கூடிய துணிவு மிக்கவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். எந்த அமைச்சர் பதவியைக் கேட்டிருந்தாலும் கிடைக்கும் என்ற நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு தந்தவர்கள் இடதுசாரிகள். அவர்கள் நினைத் திருந்தால் அமைச்சரவை பதவி மட்டுமல்ல பல மாநிலங்களின் ஆளுநர்களாகக் கூட சென்றிருக்க முடியும். ஆனால் குறைந்த பட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் இன்று கிராம மக்களின் உயிர் மூச்சாக உள்ள, கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கியவர்கள் மார்க்சியர்கள் என்பதை எல்லாம் மறந்து விட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மீது அவதூறு எழுத நண்பர் மணியனுக்கு எப்படி துணிவு வந்ததோ?
காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்த இரு கட்சிகளின் கூட் டணி கூடாரங்களிலிருந்தும் பல கட்சிகள் ஏற்கனவே வெளி யேறிவிட்டன. இதன் காரணமாக மாநிலக்கட்சிகள் வலுப்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அரசியல் அறிந்தவர்கள் அனைவரும் அறிவர். இன்றைய இந்திய அரசியல் போக்கு தவிர்க்க முடியாதது என்பதும், இதில் சில மாநிலக் கட்சிகளிடம் தடுமாற்றம் இருக்கும் என்பதும் அறிந்ததே. இதை காங்கிரசும் பிஜேபியும் மீண்டும் பயன்படுத்திக்கொண்டு மக்களை சுரண் டும் ஆட்சியை அமைத்துவிடக்கூடாது என்பதற்காகவே மார்க் சிஸ்ட்டுகளின் இன்றைய செயல்பாடு என்பதை மணியன் அறியாவிட்டாலும் மக்கள் அறிவர்.

ஏனெனில் மார்க்சிஸ்ட்டுகள் மறக்க கூடியவர்களும் அல்ல மறைப்பவர்களும் அல்ல என்பது அவர்களுக்கு தெரியும்.