தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, December 15, 2010

Unemployment Problem

வேலை வாய்ப்பு கானல் நீரே!
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர்-16-12-10

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பிரபல தொலைக்காட்சியில், ‘வேலை தேடி அலைந்தது அந்தக்காலம்! வேலை வீடு தேடி வருவது இந்தக்காலம்’ என்ற விளம்பரம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. பிரபல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்ய மாவட்டந்தோறும் வேலைச் சந்தைகளை ஊயஅயீரள இவேநசஎநைறள யனே துடிப குயசைள நடத்தியதற்கான விளம்பரமே இது! இத்தகைய வேலைச் சந்தைகளில் எந்த அளவு வேலை கிடைத்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே! காலப்போக்கில் பல கல்லூரிகள் இத் தகைய வேலைச் சந்தைகளை நடத்தி அதன் மூலம் நல்ல வருவாயை பெருக்கிக்கொண்டதுதான் மிச்சம்! சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இத்தகைய வேலைச் சந்தை ஒரு கல்லூரி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு, அது வெறும் போலித்தனமானது என்பது தெரியவர, மாணவர்கள் கொதித்தெழுந்து அந்தக்கல்லூரி வளாகத்தையே ஒரு போர்க்களமாக மாற்றிக்காட்டினர்.

உலகம் ஒரு கிராமம் ஆகிவிட்டது என்று உலகமயத்தை வானளாவ புகழ் பவர்கள், உலகமயம், தாராளமயம், தனி யார் மயம் என்ற கொள்கைகள் வேலை வாய்ப்புகளை சிதைத்து வருவதை மறைக்கப்பார்க்கின்றனர். வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி மட்டுமல்ல, உள்ள வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் வளர்ச்சியாக ‘மயங்களின்’ வளர்ச்சி உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் தொலைத்தொடர்புத்துறையில் ஏற் படுத்தியுள்ள வேலைவாய்ப்புகளை மிகைப்படுத்திக்காட்டுகின்றனர். தற்போதைய பொருளாதார வீழ்ச்சி இத னையும் அம்பலப்படுத்திவிட்டது. இத் தகைய துறைகளில் பணியாற்றுபவர்கள் ஆயிரக்கணக்கில் பணி இழந்து நாடு திரும்பி வருகின்றனர். கடந்த ஆண்டு (2009) நாடாளுமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டு நிறு வனங்கள் விசாவை புதுப்பிக்காமல் விட்டு விட்டதால் 20 ஆயிரம் இந்தி யர்கள் வேலை இழந்து நாடு திரும்பி யுள்ளனர் என்று தெரியவருகிறது. இன்று லட்சக்கணக்கானோர் வேலையிழப்பை , ஊதியக் குறைப்பையும் சந்தித்து வருகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு

இந்த ஆண்டு (2010) செப்டம்பர் மாதத்தில் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) கூட்டு மாநாட்டில், மோசமாகி வரும் இன்றைய வேலையின்மை மற்றும் வறுமை குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநாட்டில் வைக்கப்பட்ட அறிக்கையில், உலகம் முழுவதும் 2010-ம் ஆண்டு இதுவரை மட்டும் 210 மில்லியன் தொழிலாளர்கள் வேலை யின்றி உள்ளனர் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் வேலையின்மை என்பது 34 மில்லியன் உயர்ந்துள்ளது எனவும், உலகில் 80 சதவிகித மக்கள் எவ்வித சமூக நலத் திட்டங்களையும் கொண்டிருக்க வில்லை என்றும், கிட்டத்தட்ட 12 பில்லி யன் மக்கள் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவாகவே ஊதியம் பெற்று வரு கின்றனர் என்றும், அமெரிக்காவில் வேலையின்மை என்பது 7.5 மில்லி யனிலிருந்து 15 மில்லியனுக்கு மேல் உயர்ந்துவிட்டது. ஐரோப்பா முழுவதும் 23 மில்லியனுக்கு மேல் வேலையில்லாமல் உள்ளனர். இது 2007-ல் இருந்ததை விட 36 சதவிகிதம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்மாநாட்டில் உரையாற்றிய, சர்வ தேச தொழிலாளர் அமைப்பின், வேலை கள் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்த ஐரோப்பிய ஆணையாளரான லாஸ்லோ ஆண்டர் குறிப்பிடுகையில், 2010 வேலை யின்மையை பொறுத்தவரை 2010-ம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என் றும் இதை சரியாக எதிர்கொள்ளவில்லை என்றால் 2011-ம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக மாறிவிடும் என எச்சரித் துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஎம்எப் தலைவர் டொமினிக் ஸ்ட் ராஸ் கான், ‘உலக நிதி நெருக்கடி என்பது, வேலையின்மை என்ற வீணடைந்த பூமியை கொண்டுவந்துள்ளது’ என்றும் ஒரு வேலை பெறுவது என்பது ‘வாழ்வா சாவா’ என்ற பிரச்சனையாக மாறிவிட் டது என்றும், உயரும் வேலையின்மை வன்முறை மோதல்களுக்கு வழிவகுக் கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இம்மாநாட்டின் முக்கிய பேச்சாளர் களான ஸ்பெயினின் பிரதமர் ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் ஜாபடெரோ, கிரேக்க அமைச் சர் ஜோர்ஜ் பாபபாண்ட்ரூ, வேலை யின்மை இப்படியே நீடித்தால் ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதன் விளைவாகவே சமீபத்தில் நடைபெற்ற பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் சுவீடன் நாட்டு தேர்தல்களில் ஆளுங்கட்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டு, அங்கு தொங்கும் நாடாளுமன் றங்கள் அமைந்துள்ளன. அமெரிக்காவில் நவம்பரில் நடைபெற்ற தேர்தல்களில் ஓபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக் காவில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. சரா சரியாக ஒரு மாதத்திற்கு 13 வங்கிகள் அங்கு மூடப்பட்டு வருகின்றன. ஊக்கு விப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்ட போதும் நிதி ஆதாரமின்றி வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. அங்கு கடந்த ஓராண்டாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலைமை உலகம் முழுவதும் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டு ஆவணம், வேலை இழப்பு களால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் அரசியல் திறனில் தீவிரமடைந்திருப் பதை சுட்டிக் காட்டுகிறது. உலகெங் கிலும் வேலை கிடைக்காத இளைஞர் களின் எண்ணிக்கை 6.6 மில்லியன் ஆகும். வேலையின்மை என்பது ஜனநா யகத்தின் திறன் குறித்து கேள்வி எழுப்பி யிருப்பதாகவும், இது ஒரு மாற்றுத் தலை மையை நாடிச் செல்லும் என்றும் அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மா நாட்டில் கலந்துகொண்ட முதலாளித் துவ நாடுகளின் தலைவர்கள், வேலை யின்மை குறித்து கவலைப்பட்டவர் களாக காட்டிக்கொண்டாலும், முதலா ளித்துவம் அல்லது அதன் அரசியல் பிரதிநிதிகள் தொழிலாளர் வர்க்கத்தின ருக்கு எந்தவித தீர்வுகளையும் அளிக்க இயலாத நிலைமையை மாநாட்டு விவா தத்தில் காண முடிந்தது. இச்சூழலில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் களிடையே புரட்சிகர உணர்வுகள் எழுச்சி பெறுவது முதலாளித்துவ சக்தி களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டின் இறுதி அறிக்கையானது, “வேலைகளை தோற்றுவிக்கும் வளர்ச்சி” “வறுமையில் வாடும் மக்க ளுக்கு குறைந்தபட்சம் சமூகப் பாதுகாப்பு நிலை” ஆகியவற்றிற்கு உழைப்பதாக உறுதிமொழி கூறியுள்ளது.

இந்த மாநாட்டின் வாயிலாக முத லாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள உலகளவிலான நெருக்கடியை உணர்ந்து கொண்டுள்ளது. அது தொழிலாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை பறித்திட திட்டமிட்டுள்ளது. தொழிலாளி வர்க்கம் இதை புரிந்துகொண்டு எதிர் தாக்குதலுக்கு தயாராவதே இன்று தலை யாயக் கடமையாக உள்ளது.


Saturday, December 4, 2010

Careless in Water Management

வெள்ளப்பெருக்கும், வீணாகும் தண்ணீரும்!
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் - 3-12-10

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் ஓரளவு கூடுதலாக தமிழகத் திற்கு மழை கிடைத்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன. இது மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான் என்றாலும், தமிழகம் வெள்ளக்காடாக மாறி, ஆங்காங்கே மக்கள் துன்பத்தில் மூழ்கியிருப்பது வருத்தமளிக்கிறது. மாநி லம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்க ரில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகி வருகின்றன. மக்களின் உட மைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள் ளது. இயற்கையின் சீற்றத்தால் இழப் புகள் ஏற்பட்டுள்ளது என்றாலும், வெள் ளப்பெருக்கை முறையாக தடுத்து நிறுத்தி நீரை சேமிக்க மாநில அரசு தவறி விட்ட தும் ஒரு காரணமாகும்.

பற்றாக்குறை காலங்களில் அண்டை மாநிலங்களில் தண்ணீர் பெறுவதற்காக முயலும் மாநில அரசு, மழைக் காலங்களில் கிடைக்கும் உபரி நீர் கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

உபரி நீரை சேமிப்பதன் மூலம் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல்; வெள்ளப் பெருக்கெடுத்து விவசாய நிலங்களையும், மக்கள் வாழும் இடங் களையும் சேதப்படுத்துவதிலிருந்து பாது காக்க முடிந்திருக்கும். சோழ மன்னர் களாக தங்களை சித்தரித்து மகிழ்ச்சி அடைபவர்கள், சோழ மன்னர்கள் காவிரி பெருக்கெடுக்கும் காலங்களில் சேமிப்ப தற்காக அமைத்த நீர்த்தேக்கங்கள் போல; தேவை அறிந்து இக்கால கட்டத் தில் அமைக்க தவறிவிட்டனர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தனது முழுகொள்ள ளவை எட்டியுள்ளது. 2005-ல் மேட்டூர் அணை ஒரே ஆண்டில் நான்குமுறை அதன் முழு கொள்ளளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. 2005-ல் மட் டும் 400 டிஎம்சி நீர் உபரியாக வெளி யேற்றப்பட்டடது. 2006-ல் 300 டி.எம்.சி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 2 அன்றைய நிலவரப்படி மேட் டூர் அணையில் அந்த ஆண்டு முழு வதும் 100 அடிக்கு குறையாமல் நீர் மட்டம் இருந்து வந்தது என்பது அணை யின் வரலாற்றில் ஒரு சாதனையாக கரு தப்பட்டது. 2007-ம் ஆண்டு 100 டி.எம்.சி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட் டுள்ளது. இப்படி அடிக்கடி மேட்டூரி லிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு கட லில் கலக்கிறது. இந்த நீரை சேமிப்பதற் கான வழிமுறைகளை ஆராய அரசு இப்போதாவது முன்வர வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட லூர் மாவட்ட விவசாயிகள், மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை 110 அடிக்கு மேல் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். காரணம், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் நிச்சயம் அது தன் முழு கொள்ளளவை எட்டிவிடும். அதற்குமேலும் நீர்வரத்து இருக்கும் என்பதால் அவை அப்படியே திறந்து விடப்பட்டால் கடலூர் மாவட்டம் அதனால் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை அவர்கள் தெரிவித்துள் ளனர். எனவே முன்கூட்டியே நீரை வெளி யேற்றி வெள்ளப்பெருக்கை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது போன்று முன்கூட்டி அறிந்து செயல்படு கின்ற தேவை இன்று தமிழக அரசிற்கு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏற் கெனவே அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நிரம்பி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. மேட்டூரிலும் அணை நிரம்பி விட்டதால் வெளியேற்றப்படும் உபரி நீர் கடலூர் மாவட்டத்திற்கு பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடும்; என அஞ்சப்படுகிறது.எனவே வெள்ளப்பெருக்கை கட்டுப் படுத்துவதற்கும் உபரி நீரை சேமிப் பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உபரி நீர் வீணாவதை தவிர்த்து, சேமிப் பதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தமிழக அரசிற்கு ஆலோசனைகள் சிலவற்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து 24-08-2007-ல் திருச்சியில் என்.ஐ.டி-யில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை இணைக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி பேசியுள்ளார். ஒரு நீர்த்தேக்கம் நிறைந்து வழிந்துகொண்டிருக்கையில், ஓர் நீர்த் தேக்கம் நிரம்பாமல் இருப்பதை சுட்டிக் காட்டி, இவைகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கையும் கட்டுப்படுத்த முடியும்; நீரையும் சேமிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இன்று வெளிப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் அதன் மிக அருகில் உள்ள பவானி சாகர் அணை நிரம்பாமல் உள்ளது. மேட்டூரின் உபரி நீரை பவானி சாகர் அணைக்கு திருப்ப வழி காண வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் தனது உரையில், தமிழ்நாட்டில் உள்ள நீர்த் தேக்கங்களை இணைப்பது தொடர்பாக காமராஜ் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கொடுத் துள்ள அறிக்கையை தமிழகத்தின் இரு முதலமைச்சர்களிடமும் தான் கொடுத் திருப்பதாகவும், அவர்களும் இந்தப் பிரச்சனை குறித்து அறிந்துள்ளதால் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். காமராஜ் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், தமிழ்நாட் டில் உள்ள சாத்தனூர், மேட்டூர், பவானி சாகர், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப் பாறை, சோலையாறு, பாபநாசம் மற்றும் சேர்வலார் அணைகளை இணைப்பது குறித்தும், அதுபோலவே ப+ண்டி, சோழ வரம், ரெட்ஹில்ஸ், செம்பரப்பாக்கம், வீராணம் மற்றும் முகவை மாவட்டத்தி லுள்ள ஏரிகளை இணைப்பதற்கும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பொதுவான நீர்வழிப் பாதை (கூயஅடையேனர றயவநச றயலள ழுசுஐனு) அமைக்க லாம் என்றும், இந்த திட்டத்தை 5 கட்ட மாக 5 முதல் 8 ஆண்டுகளில் நிறை வேற்ற முடியும் என்றும், இதற்கு 36,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 350 கி.மீ. இடைவெளி உள்ள மேட்டூர் - வைகை அணைகளை இணைப்பது என்றும், இரண்டாவது கட்டமாக 250 கி.மீ. இடைவெளி உள்ள மேட்டூர் - பள்ளார் நீர்த்தேக்கங்களை இணைப்பது என்றும், 3-வது கட்டமாக 150 கி.மீ. இடை வெளி உள்ள வைகை - தாமிர பரணி ஆறுகளை இணைப்பது என்றும், நான் காவது கட்டமாக 130 கி.மீ. இடைவெளி உள்ள தாமிரபரணி பெருஞ்சாணி நீர் நிலைகளை இணைப்பது என்றும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு 4600 கோடி ரூபாய் ஒதுக்கினால் இத்திட்டங்களை படிப்படி யாக நிறைவேற்ற முடியும்..

இந்த திட்டத்தை நிறைவேற்றினாால், அதன் காரணமாக * ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தி சேதாரங்களை தவிர்க்க முடியும், * 7,50,000 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு கொண்டு வர முடியும்* 2150 மெகாவார்ட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும்* நிலத்தடி நீர் உயரும் என்பதால் மின் சாரம் கொண்டு நீர் பெறுவதை தவிர்ப் பதன் மூலம் 135 மெகாவார்ட்ஸ் மின் சாரம் மிச்சம் செய்ய வாய்ப்பு உண்டு.* 5 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதியும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீரும் கிடைக்கும்* 900 கி.மீ.தூரத்திற்கு நீர்வழிப்பாதை அமைவதால் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் சாலைப் போக்குவரத்து செலவுகளை கட்டுப் படுத்த முடியும்.* மீன் வளத்தை பெருக்க முடியும். * வெளி மாநில சுற்றுலாவாசிகளை ஈர்க்க முடியும்.இவ்வளவு நன்மைகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்பதால் இந்த திட்டத்தை கிடப்பில் போடாமல் செயல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும். இதனை வெகுஜன அமைப்புகள் வலியுறுத்த வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள கட்சிகள் இணைந்து ஆக்கப்ப+ர்வமான வழி காண வேண்டும்.

Tuesday, November 23, 2010

History of Blackmoney

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
-க.ராஜ்குமார்-
நன்றி தீக்கதிர் 23-11-2010

அதிசயம் ஆனால் உண்மை! உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ளதைவிட, கருப்பு பணம் இந்திய நாட்டில்தான் அதிகம் உள்ளது. ௨௦௦௬-ம் ஆண்டு சுவிஸ் நாட்டு வங்கிகள் சங்கத்தின் (SBA) அறிக்கையின்படி இந்தியாதான் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.. அந்நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் இருந்து 1,456 பில்லியன் டாலர் அதாவது 72,80,000 கோடி ரூபாய் சுவிஸ் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசோ, கடந்த ஆகஸ்ட் மாதம் (2010) நாடாளுமன்றத்தில் கருப்புப் பணம் குறித்த அரசு ரீதியான மதிப்பீடு ஏதும் அரசின் கைவசம் இல்லை என பொறுப்பற்ற முறையில் தெரிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில், அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கருப்பு பணத்தை மீட்போம் (!) என வாக்குறுதி தந்தது. காங்கிரஸமூம் தனது பங்கிற்கு கருப்புப் பணத்தை மீட்க உறுதி தர வேண்டியதாயிற்று. சுவிஸ் வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள கருப்புப்பணத்தின் மதிப்பு இறுதியானது அல்ல. இதைவிட கூடுதலாகவே இருக்கும். சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமல்லாமல் இன்னும் சில நாடுகளிலும் இந்திய பணம் கருப்புப்பணமாக முதலீடு செய்யப்பட் டுள்ளது.

தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பொருளாதார பேராசிரியர் அருண்குமார் ‘இந்திய கருப்புப் பொருளாதாரம்’ என்ற புத்தகத்தில் இந்திய ‘தேசிய மொத்த உற்பத்தி’ யில் (GDP) 50 சத வீதம் கருப்புப்பணமாக மாறுகிறது என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் புள்ளியல் நிறுவனம் (CSO) 2009-10 ஆண்டிற்கான இந்திய தேசிய மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.61,64,000 கோடி என மதிப்பீடு செய்துள் ளது. இதில் 40 சதவீதம் கருப்புப்பணம் என் பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. இந்த கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இதை கணக்கு காட்ட முன் வருவார்கள் என்றால் 30 சதம் வருமானவரி கட்ட வேண்டும். இதன் மூலம் மத்திய அரசிற்கு ரூ.7,50,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இது 2009-10-ம் ஆண்டில் மத்திய அரசிற்கு கிடைத்துள்ள 6,41,000 ரூபாய் வரி வருமானத்தை விட கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் அருண்குமார், இது தவிர மேலும் நியாய மான வரி வருமானத்திற்கான வழியினையும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மத்திய அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.10,00,000 கோடி வரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மக்கள் நலத் திட்டங்கள் மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க முடியும் என்கிறார் அருண்குமார்.

இது ஒரு புறம் இருக்க கருப்புப்பணத்தின் தாக்கம் குறித்து காண்போம். கருப்புப் பணத்தின் மதிப்பு இந்திய நாட்டு அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும் அந்நிய நாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்துள்ள கோடான கோடி ரூபாய்களை கைப்பற்றினால் என்ன நடக்கும்? 1456 பில்லியன் டாலர் கருப்புப் பணம் (ரூ.72,80,000 கோடி) சுவிஸ் நாட்டு வங்கிகளில் மட்டும் உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பணத்தை இந்திய நாட்டில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 45 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.1,00,000 என பிரித்து கொடுக்கலாம். அல்லது இந்தியாவிற்கு தற்போது உள்ள அனைத்து வெளிநாட்டு கடன்களையும் ஒரே தவணையில் செலுத்தலாம். அப்படி செலுத்தினாலும், நம்மிடம் வெளிநாட்டு கடன் மதிப்புப் போல் 12 மடங்கு தொகை மீதம் இருக்கும். இந்த உபரி தொகையை நியாயமான முறையில் முதலீடு செய்தால், இதன் மூலம் கிடைக்கும் ஆண்டு வட்டி மத்திய அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆண்டு வருமானத்தை விட அதிகமாக கிடைக்கும். அப்படி கிடைத்தால் தற்போது நிதி நிலை அறிக்கையில் விதிக்கும் அனைத்து வரிகளையும் ரத்து செய்துவிடலாம். வரியே இல்லாத ஒரு பொருளின் விலையை எண்ணிப்பாருங்கள்! இடதுசாரிகள் கருப்புப்பணத்தை குறித்தும் சுவிஸ் வங்கிகளில் உள்ள இரகசிய கணக்குகள் குறித்தும் தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்துவந்ததின் விளைவாக கருப்புப்பணம் குறித்த விழிப்புணர்வு ஓரளவு மக்களிடையே ஏற்பட்டது. அதன் விளைவாகவே சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய கருப்புப்பணம் குறித்த விபரங்கள் ஓரளவு வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் மதிப்பு ரூ.72,80,000 கோடி என்றாலும், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ரூ.108,00,000 கோடி இருக்கும் என்பதே இடதுசாரி பொருளாதார வல்லுனர்களின் மதிப்பீடு ஆகும். இந்திய நாட்டு மக்களை சுரண்டி அந்நிய நாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து இன்று முதலாளித்துவ கட்சிகள் பேச ஆரம்பித்துள்ளன. காரணம் உண்மையாகவே கருப்புப்பணத்தை கைப்பற்றுவதற்காக அல்ல, அவற்றை காப்பாற்றுவதற்காகவே அவைகள் உள்ளன என்பது சமீப காலத்திய நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகிறது.கருப்புப் பணம் குறித்து பாரத பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், கருப்புப் பணத்தை மீட்க 20 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியா உலகம் முழுவதும் 85 நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு முறை குறித்து ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், 25 நாடுகளுடன் விரிவான முறையில் வரி திருத்தம் குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை இந்நடவடிக்கைகளினால் கருப்புப்பணம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை.

இந்த ஆண்டு (2010) ஆகஸ்ட் மாதம் சுவிஸ் அரசும் இந்திய அரசும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அது இரட்டை வரி விதிப்பு முறையை தவிர்ப்பதற்கான ஒரு ஏற்பாடாகவே உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுவிஸ் நாட்டு வங்கிகளில் உள்ள கணக்குகளின் விபரத்தை பெற முடியும் என இந்திய அரசு கருதுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா சுவிஸ் நாட்டை மிரட்டி 4000 அமெரிக்கர்கள் வைத்துள்ள கணக்கின் விபரங்களை தர ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது. ஆனால் இந்தியாவால் இன்னும் கணக்கு வைத்து இருப்பவர்களின் பட்டியலை பெற முடியவில்லை. சுவிஸ் வங்கிகள் சங்கத்தின் சர்வதேச தொடர்பாளர் ஜேம்ஸ் நாசன் என்ப வர் இது குறித்து குறிப்பிடுகையில், ‘எங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் களின் இரகசியம் காப்பாற்றப்படும் என்றும், நியாயமற்ற இரகசிய விசாரணைகள் உறுதியாக தடை செய்யப்படும்’ என்றும் அறிவித் துள்ளார். வரி ஏய்ப்பர்களுக்கும் வரி ஏமாற்றுபவர்களுக்கும் சுவிஸ் நாட்டு சட்டங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. ஆரம்பகாலத்தில் இத்தகையவர்கள் குறித்த விபரத்தினை வெளியிட சுவிஸ் நாட்டு அரசு மறுத்து வந்தாலும், இன்று ஒவ்வொரு நாடும் வரி ஏய்ப்பவர்கள் மற்றும் வரி ஏமாற்றுபவர்கள் குறித்த விபரங்களை முறையாக கொடுத்தால் அவர்களின் கணக்கு விபரத்தை தர தயார் என அறிவித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவா திக்கப்பட்டும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் ஆக்கப்ப+ர்வமான பலன் ஏதும் இல்லை. காரணம் இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே கருப்புப் பணத்தின் உடைமையாளர்களாக உள்ளனர்.

எனவே இவர்களால் வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கைப்பற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது. மாறாக அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சியிலே ஈடுபடுவார்கள். சமீபத்தில் வெளிப்பட்ட ஊழல் களான, காமன்வெல்த் நகரம் அமைப்பதில் முறைகேடு, தொலைத் தொடர்பு அலைவரிசைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நிவாரணப் பணிகளில் முறையீடு என இலட்சக் கணக்கான கோடி ரூபாய் முறைகேடுகள் அம்பலமாகியும் கடும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி யுள்ளதிலிருந்தே இந்த அரசு யாருடைய அரசு என அறியமுடியும். கருப்புப்பணத்தின் ஊற்றுக் கண்ணாக உள்ள லஞ்சம் என்பது இன்று சட்டப்பூர்வ மாகிவிட்டது.

செல்வ செழிப்பான இந்தியா ஒரு காலத்தில் அந்நிய நாட்டினரால் சுரண் டப்பட்டது. இன்று இந்திய ஆட்சியாளர் களால் சுரண்டப்பட்டு வருகிறது. இந்திய நாட்டு மக்களில் சரி பாதி மக்கள் தினம் ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்கின்றனர் என்ற நிலை ஆட்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Wednesday, October 13, 2010

சட்டமேலவை யாருக்காக ?

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை: ஒரு கண்ணோட்டம்
-க.ராஜ்குமார்

நன்றி - தீக்கதிர் - 13-11-10

ஆங்கிலேயர்கள் இந்தியநாட்டை ஆள் வதற்காக, அவர்களின் வசதிக்கேற்ப அமைக் கப்பட்டதுதான் சட்ட மேலவையாகும். 1861ல் பிரிட்டிஷ் அரசு, இந்திய கவுன்சில் சட்டம்-1861 மூலம் இந்த அவையை உருவாக்கியது. அப்போது ஆளுனருக்கு பரிந்துரைகள் வழங் கும் அவையாகவே இது செயல்பட்டுவந்தது. இந்த அவையில் நான்கு இந்திய உறுப்பினர் கள் மட்டும் ஆளுநரால் நியமனம் செய்யப்பட் டனர். இவர்களுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. ஆளுநரே அவையின் தலைவ ராக இருந்துவந்தார். இரட்டை ஆட்சி முறை 1935-ல் ஒழிக்கப் பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத் தப்பட்டது. அப்போது சென்னை மாகாண சட்டமன்றம் இரு அவைகளாக மாற்றப் பட்டது. 215 உறுப்பினர்களைக் கொண்ட கீழ வையும், 54 முதல் 56 வரை உறுப்பினர்களைக் கொண்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. மேலவை ஆளுநரால் கலைக்கப்பட முடியாத அவையாக இருந்தது. உறுப்பினர்கள் பதவிக் காலம் ஆறு ஆண்டுகாலமாகவும், மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் இரு ஆண்டு களுக்கு ஒரு முறை ஓய்வு பெறும் வகையில் நியமனம் செய்யப்பட்டனர். இந்தியா 1947ல் விடுதலையடைந்து 1950-ல் குடியரசு நாடானவுடன், இந்திய அர சியல் சட்டத்தின்படி மாநிலங்களில் மேல வை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆரம்ப காலத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 72 ஆக இருந்தது. சென்னை மாகாணம் பிரிக்கப் பட்டு ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 51 ஆக குறைந்தது. 1956-ல் 50 ஆக மீண்டும் குறைந்தது. 1957-ல் 63 ஆக உயர்ந்து 1986ல் அவை கலைக்கப்படும் வரை 63 எண்ணிக் கை தொடர்ந்து இருந்து வந்தது.தமிழ்நாட்டில் 1986-ம் ஆண்டு சட்டமன்ற மேலவை அண்ணா திமுக அரசால் கலைக்கப்பட்டது. மீண்டும் சட்டமன்ற மேல வை உருவாக்க வேண்டும் என திமுக 1989, 1996ம் ஆண்டுகளில் முயன்றது. ஆனால் அதற்கு இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதுமான ஆதரவு கிடைக் காததால் அதன் முயற்சிகள் தோல்வியடைந் தன. தற்போது 2006-ம் ஆண்டு ஆளுநர் உரையில் சட்ட மேலவை மீண்டும் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 12-04-2010ல் தமிழக சட்ட மன்றத்தில் மேலவையை கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்ற மேலவை சட்டம் 2010ல் உருவாக் கப்பட்டு 4-05-2010 அன்று மத்திய அமைச் சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் அடிப்படை யில் மேலவை உருவாக்குவதற்கான அறிவிப்பு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் அரசால் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

மேலவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள்
தொகுதிகள் எண்ணிக்கை - 78
சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு - 26
(௯ சட்டமன்ற உறுப்பினருக்கு ஒருவர் )
உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களால் தேர்வு - 26
(சிற்றூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது)பட்டதாரி தொகுதிகள் மூலம் தேர்வு - 7
ஆசிரியர் தொகுதிகள் மூலம் தேர்வு - 7
ஆளுநரால் நியமனம் - 12

சட்டமன்ற உறுப்பினர்களாலும், உள்ளாட் சிமன்ற உறுப்பினர்களாலும் தேர்வு செய்யப் பட வேண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை 52, ஆளுநரால் நியமனம் செய்யப்படக் கூடிய வர்களின் எண்ணிக்கை 12, மீதம் உள்ள 14 பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதியா கும். இந்த தொகுதியில் வாக்காளர்களை சேர்ப்பதும், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள் வதும், வாக்குப் பதிவு கண்காணிப்பதும் இன்றைய பணிகளாகும்.

தொகுதிகள்தமிழ்நாட்டில் 7 பட்டதாரிகள் தொகுதிகளும், 7 ஆசிரியர்கள் தொகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பட்டதாரி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான தகுதி :-

* சென்னை மாநகராட்சி பகுதிகளில் மண் டல மேலாளர்கள் மற்றும் உதவி ஆணை யர்கள், மற்ற பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர்கள் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்களாக (designated officer ) செயல்படுவர். இவர்களிடம் விண்ணப் பம் கொடுக்கப்பட வேண்டும்.
* பட்டதாரி தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் ஒருவர் பெயரை சேர்க்க வேண்டும் எனில் அவர் 1-11-2010 தேதியில் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். தகுதி என்பது அவர் 1-11-2007 க்கு முன்னர் பட் டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண் டும். ஒருவர் 10+2+3 அல்லது 11+1+3 ஆண்டுகள் படித்து பட்டம் அல்லது பட்ட யம் பெற்றிருக்க வேண்டும்.
.* விண்ணப்பத்துடன் (படிவம் 18) பட்டம் அல்லது பட்டயம் நகல் விண்ணப்பதாரரால் கையொப்பமிடப்பட்டு ஆஜர்படுத்த வேண் டும். விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ள ஒரு நபரோ நேரில் வாக்காளர் பதிவு அதிகாரியிடத்தில் ஆய் விற்கு கொடுக்க வேண்டும். ஆய்வின்போது அசல் பட்டம் அல்லது பட்டயச் சான்றி தழை சரிபார்க்க ஆஜர்படுத்த வேண்டும்.
* பட்டம் அல்லது பட்டயம் அசல் இல்லாத வர்கள் அரசு ஆவணம் ஏதாவது ஒன்றில் அவர் பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர் என்று பதிவு பெற்றிருப்பின் அதனை ஆஜர்படுத்தலாம்.
* வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் பட்டியலில் பதிவு பெற்றதற்கான
சான்றாவணங்கள்
* பல்கலைக்கழக பதிவாளர் அல்லது கல் லூரி முதல்வரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் விண்ணப்பதாரரின் ஆணை யுறுதி ஆவணம்ஆசிரியர் - தொகுதி வாக்காளர் பட்டியலில் சேருவதற்கான

* அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் ஆசிரி யராக 1-11-2010 முன்னதாக ஆறு ஆண்டு களில் மூன்று ஆண்டுகள் பணி புரிந் திருக்க வேண்டும்.
* ஆசிரியர் தொகுதிக்கென உள்ள படிவம் 19ல் விண்ணப்பிக்க வேண்டும்.* கல்லூரி-பள்ளியில் பணி புரிந்ததற்கான சான்றினை சம்பந்தப்பட்ட முதல்வரிட மிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும் காலத்தில் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று இல்லை. கடந்த 6 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் போதுமானது.
* கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங் களில் பணியாற்றும் ஆசிரியர்களின் விண் ணப்பங்களை தனித்தனியாக பெற்று சான் றுகளுடன் வாக்காளர் பதிவு அதிகாரியிடம் ஆய்விற்கு ஒப்படைக்கலாம்.இருப்பிடச் சான்றிதழ்ஒவ்வொரு விண்ணப்பத்துடனும் விண் ணப்பதாரர் தற்போது வசிக்கும் முகவரிக்கான கீழ்க்கண்ட சான்றில் ஒன்றினை ஆய்வின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
* வங்கி-அஞ்சல் நடப்பு கணக்குப் பதிவேடு நகல்,
* குடும்ப அட்டை அல்லது கடவுச் சீட்டு, ஒட்டுநர்உரிமம் நகல்,
* விண்ணப்பதாரர் அல்லது அவரின் பெற றோர் பெயரில் உள்ள வீட்டு வரி விதிப்பு அல்லது குடிநீர், தொலைபேசி, மின்சாரம். சமையல் எரிவாயு இணைப்பிற்கான ஆவ ணங்கள்.
* விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட முகவ ரிக்கு அஞ்சல் துறை மூலம் பெறப்பட்ட கடி தங்களின் உறைகள்.

விதிமுறைகள்
* ஒருவர் ஆசிரியராக இருப்பின் அவர் பட்ட தாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
* விண்ணப்பங்கள் 1-10-2010 முதல் 6-11-2010
* சிறப்பு முகாம்கள் செயல்படும் நாள் 16-10-10,17-10-10, மற்றும் 30-10-10,31-10-10 இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பெறுவ தற்கென தனி முகாம்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் அமைக்கப்படும்.
* வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் வாக்காளர் பெயர் சேர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும் மேற்கண்ட கால அவகாசத்தில் பெயர்களை பதிவு செய்வது சரி.
* விண்ணப்பங்கள் அஞ்சலில் அனுப்பி னால் அவை விண்ணப்பதாரர் வசிக்கும் பகுதியில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். விண் ணப்பதாரர் 9-11-10 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தனது ஆவணங் களை சம்பந்தப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட அலுவலரிடம் காட்ட வேண்டும். அவர் ஆய்விற்குபிறகு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலருக்கு பரிந்துரை செய்வார்.
குறிப்புகள்
* ஆசிரியர்கள் இரண்டு வாக்குரிமை கொண் டவர்கள். அவர்கள் பட்டதாரி தொகுதிக்கும் மற்றும் ஆசிரியர் தொகுதிக்கும் வாக்களிக்க லாம். எனவே அவர்கள் படிவம் 18 மற்றும் படிவம் 19 இரண்டிலும் தங்களது விண்ணப் பத்தினை அளித்திட வேண்டும்.
* ஆசிரியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலமாக அந்நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களிடமிருந்து படிவங் களை பெற்று விண்ணப்பித்தால் காலவிர யத்தை தவிர்க்கலாம்.
* பள்ளிப் படிப்பு முடித்து ( 10 ஆண்டுகள் ) மேலும் 5 ஆண்டுகள் படித்து பட்டம் அல் லது பட்டயம் பெற்றவர்கள் பணியில் இருந் தாலும் இல்லாவிட்டாலும் வாக்காளர் பட்டி யலில் பதிவு செய்யலாம்.
* வெளி மாநிலங்களில், வெளி நாடுகளில், மத்திய-மாநில அரசுகளால் அங்கீகரிக் கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயின்று பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யலாம்.சட்டமன்ற தேர்தல்களில் சமீபகாலமாக வாக்குகளை விலைபேசும் போக்கு காணப் படுகையில், படித்து பட்டம் பெற்றவர்கள் மற்ற வர்களுக்கு நல்ல ஓர் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

Friday, October 1, 2010

அகில இந்திய அரசுஊழியர் சம்மேளனத்தின் பொன் விழா

போராடும் அமைப்பிற்கு பொன்விழா
-க.ராஜ்குமார்-
நன்றி தீக்கதிர் 2-10-10

மாநில அரசு ஊழியர்களை இணைக்கும் பாலமாக விளங்கும் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் 1960-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், ஐதராபாத் நகரில் ஜனவரி 23, 24-ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் மாநாட்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆந்திர மாநில என்.ஜி.ஓ. யூனியனின் பெருமைமிகு தலைவர் ஸ்ரீ இராமுலுவின் சீரிய முயற்சியால் துவக்கப்பட்டது. அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தில் தற்போது 28க்கும் மேற்பட்ட மாநிலங்களில் செயல்படும் அரசு ஊழியர் அமைப்புகள் இணைந்துள்ளன. சுமார் 80 லட்சம் மாநில அரசு ஊழியர்களை பிரதிபலிக்கக்கூடிய அமைப்பாக சம்மேனம் விளங்குகிறது. சமீபத்தில் நடைபெற்ற செப்டம்பர் 7 வேலை நிறுத்தத்தில் பல்வேறு மாநில இணைப்பு அமைப்புகளின் பங்கேற்பு இதனை உறுதி செய்துள்ளது.

சம்மேளனத்தின் சாதனை

கடந்த 50 ஆண்டுகாலமாக, சம்மேளனத் தின் இடைவிடாத செயல்பாட்டின் காரண மாக பெரும்பான்மையான மாநிலங்களில் இன்று மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத்தர முடிந்துள்ளது. 1980க்குப் பிறகு மத்திய அரசில் புதிய பொருளாதாரக் கொள் கைகள் அமல்படுத்த தொடங்கிய காலம் முதல் இன்றுவரை நடைபெற்றுள்ள 14 அகில இந்திய வேலை நிறுத்தங்களில், சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று லட்சக் கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்று முத்திரை பதித்துள்ளனர். சம்மேளனத்தின் அறைகூவலை ஏற்று 10.02.1988 அன்று நடைபெற்ற அகில இந்திய சூவலை நிறுத்தமே, தமிழகத்தில் 1988ல் நடைபெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் (ஜாக்டீ) போராட்டத் திற்கு வித்திட்டது. இந்த போராட்டமே தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசால் 2001ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் சட்டமாக்கிட முயலும் புதிய பென்சன் திட்டத்தை இதுவரை தடுத்து நிறுத்திட முடிந்துள்ளது என்றால், அதில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பங்கு மகத்தானது. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், ஆசிரியர் கூட்டமைப்பு, எல்.ஐ.சி., வங்கி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதை எதிர்த்தும், வேலை நிறுத்த உரி மையை அடிப்படை உரிமையாக்கிட வலியுறுத்தியும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களில் குறிப்பிடும்படியான பாத்திரத்தை சம்மேளனம் வகித்து வருகிறது. வேலையின்மைக்கு எதிரான பிரச்சார இயக் கத்தில் ஏனைய வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து நமது சம்மேளனம் பணியாற்றியுள்ளது.

போராட்டக் களத்தில் ஆதரவு

தமிழ்நாட்டில் 2003ல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட லட்சக்கணக்கான ஊழியர்களை பாதுகாத்திட நாடு முழுவதும் நிதி திரட்டி தமிழக அரசு ஊழியர்களின், ஆசிரியர்களின் போராட்டத்தை பாதுகாத்தது அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம். இன்றும் காஷ்மீர் மற்றும் பீகாரில் போராடி வரும் அரசு ஊழியர்களின் போராட்டத்தை பாதுகாத்து, நாடு முழு வதும் அவர்களுக்கு ஆதரவினை திரட்டி வருகிறது சம்மேளனம்.

இந்த காலகட்டத்தில் அகில இந்திய சம்மேளனம், பெண்களை அணிதிரட்டி, அவர்களை பயிற்றுவித்து தலைமைப் பொறுப்பிற்கு உயர்த்தவும் தவறவில்லை. சம்மேளனத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மாநில அமைப் பும் அம்மாநிலத்தில் பெண்களுக்கென்று ஒரு துணை அமைப்பினை உருவாக்கிட வேண்டும் என முடிவெடுத்து, அந்த துணை அமைப்பின் பொறுப்பாளர்களை தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலத்தில் பெண்களுக்கான அமைப்பு மேற் கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக் கின்றனர். இதன் மூலம் பெண்களை தேசிய தலைவர்களாக அடையாளம் காட்ட முடிந் துள்ளது.

தமிழகத்தின் பங்கு

தோழர் எம்.ஆர்.அப்பன் சம்மேளனம் உருவான 1960-ம் ஆண்டிலிருந்து சம்மேளனத்துடன் தொடர்பு கொண்டு வந்தார். அரசு அலுவலர் ஒன்றியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தோடு இணைந்து செயலாற்றிட வலியுறுத்தி வந்தார். பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சம்மேளனக் கூட்டங்களில் எம்.ஆர்.அப்பன் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடவடிக்கைக் குழு உருவாகி செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் அறிவிக்கக் கூடிய போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத் தப்பட்டன.

தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் தொடங்கப்பட்ட பின்னர் (1984) மும்பையில் 1985ல் நடைபெற்ற சம்மேளனத்தின் 6-வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் அகில இந்தியச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம் மேளனத்தின் 7வது தேசிய மாநாடு 1990, மே மாதம் 12 முதல் 15 தேதிகளில் கோவையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆரம்பித்து (1984) குறுகிய காலத்தில் அகில இந்திய மாநாட்டை நடத்திட முன்வந்தது, அனைத்து மாநில பிரதிநிதிகளின் பாராட்டை பெறத்தக்கதாக அமைந்தது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1996-ம் ஆண்டு நடைபெற்ற 9வது தேசிய மாநாட்டில் எம்.ஆர்.அப்பன் சம்மேளனத்தின் கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த கே.கங்காதரன் அகில இந்திய செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் இரண்டாவது முறையாக சம்மேளனத்தின் 11-வது தேசிய மாநாடு 2002 டிசம்பர் மாதம் 27 முதல் 30 வரை சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவர் என்.எல்.ஸ்ரீதரன் அகில இந்திய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கொல்கத்தாவில் 2005-ம் ஆண்டு நடை பெற்ற சம்மேளனத்தின் 12-வது தேசிய மாநாட்டில் அரசுஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் துணைப் பொதுச் செயலாளராகவும், இன்றைய மாநிலத் தலைவராக உள்ள இரா.தமிழ்செல்வி, அகில இந்திய துணைத் தலைவராக வும் தேர்வு செய்யப்பட்டனர்.

திருவனந்தபுரத்தில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற சம்மேளனத்தின் 13-வது தேசிய மாநாட்டில் ஆர்.ஜி.கார்னிக் அகில இந்திய தலைவராகவும், சுகுமால்சென் மூத்த துணைத்தலைவராகவும், அஜய் முகோபாத்யாயா கவுரவ தலைவராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அன் றைய பொதுச் செயலாளர் ஆர்.முத்துசுந்தரம் அகில இந்திய பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி அகில இந்திய துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமையிடம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் க.ராஜ்குமார் சம்மேளனத்தின் அகில இந்திய பொருளாளராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் இன்றைய பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன் தலைமையிடத்து செயலாளராகவும், கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் இரா.பீட்டர் பர்னபாஸ் மற்றும் மாநிலச் செயலாளர் மு.அன்பரசு ஆகியோர் தேசிய செயற்குழு உறுப்பினர்களாகவும் தற்போது செயல்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சி.பி.மல்லிகா பத்மினி தேசிய செயற்குழுவில் தமிழகத்தின் சார்பில் மகளிர் பிரதிநிதியாக பங்கேற்று வருகின்றார்.

அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் அக்டோபர் மாதம் 5,6,7 தேதிகளில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. விழாவில் நாடு முழுவதுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். முதல் நாள் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்கும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சம்மேளனத்தின் 50-ம் ஆண்டு பொன் விழா நடைபெறுகின்ற நேரத்தில் தமிழகம் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமையிடமாக மாறியிருப்பதின் மூலம் அகில இந்திய சம்மேளனத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னோடிகள் கடந்த காலங்களில் ஆற்றிய உழைப்பு அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 15, 2010

Majority and Minority

பெரும்பான்மையும்! சிறுபான்மையும்!
-க.ராஜ்குமார்

நன்றி தீக்கதிர் -14-09-10

தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி யார் போராடினாலும் அவர்கள் ஒரு சிறுபான்மையினர் என்பதும், அப்பகுதியிலிருந்து, போராட்டத்தில் முழுமையாக ஊழியர்கள் பங்கேற்கவில்லை என்று சொல்வதும் அரசின் வாடிக்கையாகிவிட்டது.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஒரு சிறு பகுதியினரே ஈடுபட்டனர் என்று சொன்ன அரசு, போராட்டம் முடிந்த சில நாட்களிலேயே அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அங்கன்வாடி ஊழியர்கள் போராடினாலும், சத்துணவு ஊழியர்கள் போராடினாலும், போராடுபவர்கள் ஒரு சிறுபான்மையினர் என்றே தமிழக அரசு திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றது. போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் அனைவரும் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்பதை போன்று சித்தரிக்க அரசு முயல்கிறது. இது உண்மையா?

சென்ற ஆண்டு இலங்கை பிரச்சனைக்காக முதலமைச்சர் அவர்கள் ஒரு நாள் திடீரென்று சென்னை கடற்கரை சாலையில், உழைப்பாளர் சிலை அருகே, உண்ணாவிரதம் மேற்கொண்டார். யாருக்கும் தெரியாமல் அவர் ஒருவர் மட்டும் சென்று உண்ணாவிரதம் மேற்கொண்ட சில மணி நேரத்தில், தமிழக அரசின் அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும், அவரின் தோழமைக் கட்சி தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், முதல்வரின் குடும்பத்தாரும் என அந்த இடத்தில் ஆயிரக்கணக் கானோர் வந்து குவிந்தனர். கடற்கரை சாலை போக்குவரத்து பாதித்தது. காவல்துறை அனுமதி தராத இந்த போராட்டத்திற்கு, பல்லாயிரக்கணக்கான காவலர்களை குவித்து, காவல் துறை பாதுகாப்பு வழங்கியது. முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் வேறு யாரும் இன்றளவும் உண்ணாவிரதம் இருக்க சென்னை மாநகர காவல்துறையிடம் அனுமதி பெறமுடியாது என்பது கவனிக்கதக்கது. இந்த ஒரு சில மணி நேர உண்ணாவிரதத்தின்போது தமிழக அரசின் நிர்வாகமே ஸ்தம்பித்தது என்பது யாவரும் அறிந்ததே.

தனி மனிதர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு ஒரு நாட்டு மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க முடிந்துள்ளது என்றால், ஒரு சில ஆயிரம் ஊழியர்கள் மேற்கொள்ளும் போராட்டம் அவர்கள் சார்ந்துள்ள பகுதியிலுள்ள பல்லாயிரக் கணக்கானோரின் உணர்வுகளை ஏன் பிரதிபலிக்காது?

மக்களின் பிரச்சனைகளை, அவர்கள் சார்ந்துள்ள அமைப்பு முன் எடுத்து வைப்பதும், அதற்காக அதில் ஒரு பகுதியினர் போராடுவதும் காலம் காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். ஒரு சிலர், பலரை பிரதிநிதித்துவப்படுத்தி போராடுவது போராட்டமாகும். சமீபத்தில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான சத்துணவு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் ஒரு சில மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது மட்டும் அரசு நடவடிக்கை எடுத்து பணி நீக்கமும், தற்காலிக பணி நீக்கமும் செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க அரசு துணியவில்லை. அப்படி எடுத்தால் என்ன நடக்கும் என்பதை முதல்வர் நன்கறிந்தவர். ஒரு சோற்றுபானைக்கு ஒரு சோறு பதம் என்ற முதுமொழியை அறியாதவரா முதல்வர்?

சமீபத்தில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் சில நூறு பேரை அமர வைத்து, அரசு அலுவலர் ஒன்றியத்தின் நன்றி (!) அறிவிப்பு மாநாட்டில் முதலமைச்சர் கலந்துகொண்டு மகிழ்ந்தாரே! அதனால்தான் அவருக்கு எது மெஜாரிட்டி, எது மைனாரிட்டி என்பது தெரியாமல் போனதோ ?

ஆறுகோடிக்கும் மேல் மக்கள் தொகையுள்ள தமிழ்நாட்டில் சுமார் 4 கோடி வாக்காள பெருமக்கள் இருப்பதும், இதில் சுமார் 50 விழுக்காடே தேர்தலில் பதிவு செய்வதும் அதில் ஆளுங்கட்சி அணி சுமார் 30 விழுக்காடு பெற்று ஆட்சி அமைப்பதும் பெரும்பான்மை என்று அல்லவா சொல்லப்படுகிறது? அதுவும் தற்போது ஒரு கட்சி பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருந்தால்தானே கோலோச்ச முடிகிறது.நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்த பெரும்பான்மை போராட்டக் களத்திற்கு ஒத்துவராதோ?

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஆளும் கட்சியின் கூட்டணி 18க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் சிறுபான்மை அரசுஊழியர்களின் அஞ்சல் வாக்குகளை பெற்றுத்தான் வெற்றி பெற முடிந்தது என்பது உண்மைதானே?வரலாற்றுப் புத்தகத்தை புரட்டிப்பார்த்தால் பெரும்பான்மை மக்கள் எப்போதும் பார்வையாளர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பதும், தக்க தருணத்தில் அவர்கள் செயல்பட்டு சரியான முடிவினை உரிய காலத்தில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதையும் தெளிவாக அறியமுடிகிறது. இன்று நடைபெற்று வரும் இந்த போராட்டங்களை அரசு அலட்சியப்படுத்தும் என்றால், காலம் அதற்கு சரியான பாடத்தை புகட்டும்.

Sunday, August 29, 2010

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நியாயமானதே

சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோபம்
-க.ராஜ்குமார்

நன்றி - தீக்கதிர் - 30-08-10

சத்துணவு ஊழியர்கள் பணி நிய மனம் செய்யப்பட்ட 1982-ம் ஆண்டு முதல், அவர்களின் பணிப் பாதுகாப்பிற்காகவும் ஊதிய மேம்பாட்டிற்காகவும் சங்கம் அமைத்துக் கொடுத்து வழிநடத்தியவர் தோழர் எம்.ஆர். அப்பன். அவரின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 30) முறையான காலமுறை ஊதியம் வழங்க கேட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானதே!இந்தியாவிலேயே குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டிருந்த தமிழக அரசு ஊழியர் களிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிற் போக்கு குணம் கொண்ட தலைமைகளை எதிர்த்து போராடி, அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை ஒரு மகத்தான போராட்டம் மூலம் பெற்றுத்தந்தவர் தோழர் எம்.ஆர்.அப்பன் அவரின் எளிமையான தோற்றமும், கொஞ்சும் தமிழும் லட்சக் கணக்கான ஊழியர்களை கவர்ந்தது என் றால் மிகையாகாது. அவரின் ஆழ்ந்த ஞான மும், ஆங்கிலச்சொல் திறனும் அரசு அதிகாரி களை ஈர்த்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது அறிக்கையில், நாங்கள் வெற்றி பெற்றுவந்தால் தொகுப்பூதிய முறையை ஒழித்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்து. அரசு ஊழியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், பிற மாநி லங்களில் இத்தகைய ஊழியர்களுக்கு தரப்ப டும் ஊதியத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் கூடுதலாக வழங்கப்படுவதாகவும், எனினும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் உறுதி யளித்தார். மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தும்போது சத்துணவு ஊழியர் களுக்கு ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதற்கு பதிலாக, ஒரு புதிய சிறப்பு காலமுறை ஊதியத்தை குறைந்தபட்ச ஊதியத்திற்கும் மிகக் குறைவாக கண்டுபிடித்து வழங்கினார். பிரச்சனைகளை சங்க பிரதிநிதிகளுடன் பேசி தீர்ப்பதற்கு பதிலாக தனக்கும் தனது ஆட்சிக்கும் எதிரான போராட்டமாக பார்ப்பது என்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது.

விஷம் போல் ஏறிவரும் விலைவாசி இன்று நடுத்தர மக்களை வாட்டி வதைப்பதை உணராமல் அரசு ஊழியர்களுக்கு அள்ளித் தந்துவிட்டதாக நினைத்து செயல் பட்டால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். இன்று 12 லட்சம் அரசுஊழியர்களில் 5 லட்சம் அரசு ஊழியர் கள் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற பெயரில் குறைந்த ஊதியத்தை, மாதம் ரூ.100 முதல் ரூ.6000 வரை பெற்றுக் கொண்டி ருப்பதை அலட்சியப்படுத்துவது ஆபத்தில் முடியும் என்பதை சுட்டிக் காட்ட விரும்பு கின்றோம்.மாறாக சத்துணவு ஊழியர்களின் போராட் டத்தை ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடுவ தாக அங்கலாய்த்துக்கொள்கிறார். தமிழக அர சின் அணுகுமுறைதான் உண்மையில் போராட் டங்களை தூண்டுகிறது. இந்தியாவிற்கே வழி காட்டுவதாக அமைந்துள்ள சத்துணவுத் திட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணி யாற்றும் ஊழியர்களின் பரிதாப நிலையை கண்டு கொள்ளாமல், சங்கத்திலிருந்து ஓடிய தலை வர்களை வைத்து போட்டி மாநாடு நடத்தி, நன்றி மழையில் நனைந்து மகிழ்வது நியாயமா? வாழ்க்கையை தொகுப்பூதிய பணியில் தொலைத்துவிட்ட ஊழியர்களின் கோபம் நியாயமானதே! .

Sunday, August 22, 2010

அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதா

பயணங்கள் வேறு; பாதை ஒன்று
-க.ராஜகுமார்
நன்றி - தீக்கதிர் - 20-08-10

அமெரிக்க-இந்திய அணுசக்தி; ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவில் அணு உலைகள் அமைப்பதற்கு பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. அணு உலை களில் விபத்து அல்லது கசிவு ஏற்பட் டால் அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வழிவகை செய்யும் வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறி முகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள பல ஷரத்துக்கள் இந்திய நாட்டு மக்களின் நலனுக்கு எதிரானது என பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் அதை எதிர்த்தன. ஆனால் பாஜக தற் போது நடப்பு கூட்டத்தொடரில், 18-08-10 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா-2010-ஐ ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நிதியமைச் சருமான பிரணாப் முகர்ஜி, பாஜக தலை வர்களான எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவ ராஜ், அருண் ஜேட்லி ஆகியோரை சந் தித்து இந்த மசோதாவை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அறிமுக நிலையில் இந்த மசோதாவை எதிர்த்த பா.ஜ.க இப் போது தனது நிலையை மாற்றிக்கொண் டது. தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நான்கைந்து ஆலோசனைகளை காங்கி ரஸ் ஏற்றுக்கொண்டிருப்பதால் மசோதா விற்கு ஆதரவு தர முடிவு செய்திருப்பதாக அது அறிவித்துள்ளது. நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரிக்கவும், நஷ்ட ஈட்டு ஆணையருக்கு கூடுதல் அதிகாரங் களை தரவும் மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும் என காங்கிரஸூம் அறிவித்துள்ளது.

ஓரே குட்டையில்ஊறிய மட்டைகள்

இந்திய ஜனநாயகத்தில் பிரதான எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்று சேர்ந்து ஆதரித்து ஒரு மசோதாவை நிறைவேற்றுவது அரிதான நிகழ்வாக இருந்தாலும், இந்திய நாட்டின் இறை யாண்மைக்கு எதிராக அவை ஒன்றுபட்டி ருப்பது கவலைக்குரிய நடவடிக்கையா கும். வெளிநாட்டில் உள்ள இலட்சக் கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணத் தை கைப்பற்றுவதற்காகவோ அல்லது விலைவாசி உயர்விற்கு காரணமாக உள்ள பதுக்கல்காரர்களை பிடிப்பதற்கோ ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்தி ருக்க முடியும். ஆனால் இந்திய நாட்டு மக் களுக்கு துரோகம் செய்ய இவை இரண் டும் இன்று ஒன்று சேர்ந்துள்ளன. அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதாவை இவ் வளவு அவசரம் அவசரமாக நிறைவேற்று வதில் இவ்விரு கட்சிகளுக்கும் ஒரு நோக்கம் உண்டு. விரைவில் இந்தியா வர விருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வை திருப்திப் படுத்தத்தான் இவ்விரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்துள்ளன. தங்கள் எஜமான விசுவாசத்தை போட்டி போட் டுக்கொண்டு காட்டுவதற்கு தயாராகி விட்டன.

அவசரம் ஏன்?

அணு சக்தி துறையில் அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்க்க இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஸ் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள் ளார். ஆனால் அமெரிக்கா அணு உலை தொழில்நுட்ப மறுபயன்பாட்டிற்கு தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற அவசரம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்துள்ள அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதா இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளன. இந்த மசோதா இந்திய நாட்டு மக்களுக்கு பயன் படுவதை காட்டிலும் அந்நிய நாட்டு நிறுவ னங்களுக்கு பாது காப்பு அளிப்பதாகவே உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டி யுள்ளன. மசோதாவில் உள்ள பாதகமான ஷரத்துக்கள்மசோதாவில் அந்நிய நாட்டு நிறு வனங்கள் இந்திய நாட்டில் அணு மறு சுழற்சி ஆலைகளை அமைக்கும்போது, விபத்து நஷ்ட ஈட்டிற்காக முதலீடு செய்ய வேண்டிய பாதுகாப்பு தொகையாக 458 மில்லியன் டாலர் (2,087 கோடி) என குறிப் பிட்டுள்ளது. அணு உலைகளின் விபத் துக்களால் ஏற்படும் இழப்புகளை ஈடு கட்ட இது போதுமானதல்ல. இத்தகைய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள அணு விபத்து நஷ்ட ஈட்டுத் தொகையோ 10.5 பில்லியன் டாலர் ஆகும்.நஷ்ட ஈட்டுத் தொகையை பெற விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களை நேரடியாக அணுக முடியாது. இந்த சட்டத்தின் பிரிவு 17-ன்படி இதற்கென மத்திய அரசு அமைக்கவுள்ள இந்திய அணுசக்தி கழ கத்தின் (சூஞஊஐடு) மூலமாகவே நிவாரணம் கேட்க முடியும். மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த கழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய் யவில்லை. முதலில், ரூ.500 கோடி என்று அறிவித்து, இப்போது ரூ.1500 கோடி என்று உயர்த்துவதாக மத்திய அரசு அறி வித்துள்ளது. இந்த தொகை போதுமான தல்ல என்பதே இடதுசாரிகளின் வாத மாகும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலை உபகரணங் களுக்கு இந்த மசோதாவிலிருந்து விதிவி லக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தர மற்ற உபகரணங்கள் இறக்குமதி செய்யப் பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போபாலில், விஷவாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக் கும் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர் சனை இந்திய நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தர முடி யாத இவர்களுக்கு, இத்தகைய சட்டங்கள் கொண்டுவருவதில் தயக்கம் ஏதும் இருக்காது என்பதில் வியப்பில்லை.பாஜகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து ஒரு மசோதாவை, அதுவும் மக்கள் விரோத மசோதாவை நிறைவேற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பாஜக ஆட்சியின் போது கொண்டுவந்த மின்சார மசோதா வை (2001) இதே இருகட்சிகளும் சேர்ந்து ஆதரித்த நிகழ்வும் உண்டு. பாஜக அறிமு கப்படுத்திய புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கிட இன்றும் காங்கிரஸ் துடி யாய் துடித்துக்கொண்டிருப்பதும் நாட்டு மக்கள் அறிந்ததே!இந்திய நாட்டு மக்களின் பாதுகாப் பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த சட்டத்தை நிறைவேற்றத்தான் இன்று காங்கிரஸூம் பாஜகவும் ஒன்று சேர்ந்துள் ளன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இவர்களின் பயணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பாதை ஒன்றுதான். அது ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான பாதை என்பதை நாட்டுமக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளனர்.

Thursday, August 12, 2010

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் கற்றுக் கொடுத்த படிப்பினை


பூட்டை உடைக்கும் தொழிலே சரிதானா?
-க.ராஜ்குமார்-

நன்றி தீக்கதிர் 13-08-௧0


பட்டுக்கோட்டையாரின் பாடலை நினைவுப்படுத்தும் வகையில், டாஸ்மாக் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட் டத்தில் தமிழக அரசின் அணுகுமுறை இருந்தது. மூடிக் கிடந்த மதுக்கடைகளை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக்கொண்டு பூட்டை உடைத்து, மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு கடைகளை திறந்து மதுவை தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு அவசரகதியில் நடவடிக்கை எடுத்துள் ளது. ஒரு நாள் குடிக்காவிட்டால் குடியா மூழ்கிவிடும்? பிரச்சனை அதுவல்ல. போராட்டங்களை அனுமதிப்பது இல் லை என்ற தமிழக அரசின் மனப்பான் மைதான் இந்த அதிரடி நடவடிக்கை எல்லாம். காரணம்

thamilnaatil palveru மாவட்டங்க ளில் பூட்டப்பட்டிருந்த மதுக்கடைகளின் பூட்டுக்களை அதிகாரிகள் உடைக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் காட்டப் பட்டுள்ளன. செய்திதாள்களில் வெளி யிடப்பட்டுள்ளன. இவ்வாறு பூட்டுக் களை உடைத்து கடைகளை திறப்ப தற்கு டாஸ்மாக் நிர்வாகம் எந்த மட்டத் தில் முடிவெடுத்தது. அதற்கு துணை போன காவல்துறைக்கு யார் பூட்டை உடைக்க ஆணையிட்டது. வட்டாட்சியர் களும் கிராம நிர்வாக அலுவலர்களும் இந்தப்பணியில் எந்த சட்டத்தின் கீழ் ஈடுபடுத்தப்பட்டார்கள். பூட்டை உடைப் பதற்கு எந்த நீதிமன்றம் ஆணை வழங் கியது? எத்தனை காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? யார் புகார் கொடுத்தார்கள்? என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகமும் தமிழக அரசும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சி பொறுப்பு தன்வசம் உள்ளது என்பதால் சட்டங்களை மதிக் காமல் எதையும் யாரையும் வைத்துக் கொண்டு செய்யலாம் என்ற தாந்தோன் றித்தனமான நடவடிக்கையாகவே டாஸ் மாக் போராட்டத்தில் தமிழக அரசின் நடவடிக்கை உள்ளது.

போராடும் ஊழியர்களின் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டிய தமிழக அரசு, அவர்களை அச்சுறுத்தி போராட் டத்தை உடைக்க முயற்சித்தது. காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி களை பயன்படுத்தி மதுக்கடை ஊழியர் களை அச்சுறுத்தியது. வேலை நிறுத்தத் தில் பங்கேற்க மாட்டோம் என நிர்ப்பந்தப் படுத்தி எழுதி வாங்கியது. “எஸ்மா” சட் டத்தை பயன்படுத்த மாட்டோம் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு மற்றொரு பக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலை போய்விடும் என்று அச்சுறுத் தியது. வேலை வாய்ப்பகத்திலிருந்து மாற்றுப் பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. வேலை நிறுத்த நாளன்று ஆங்காங்கே டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத் திற்கு எதிராக அரசு நிர்வாகத்துடன் அரசியல் பிரமுகர்கள் கைகோர்த்துக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஆண்டிற்கு சுமார் ரூ.14000 கோடி வருவாயை அரசுக்கு ஈட்டித்தரும் இந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தயங்கு வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றால் ஆண்டிற்கு ரூ.200 கோடிதான் செலவாகும். பணியாளர்கள் ஊதியம் கேட்டால் மதுக் கடைகளை மூடிவிடக் கூட அரசு தயங்காது என்று சொல்வது அரசின் தொழிலாளர் விரோத அணுகு முறையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள சுமார் 6700 அரசு மதுக்கடைகளில் கடந்த ஏழு ஆண்டு காலமாக 30000-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உதவியாளர்களுக்கு, ரூ.2100 விற்பனையாளர்களுக்கு, ரூ.2800 மேற் பார்வையாளர்களுக்கு, ரூ.4000 என தொகுப்பூதியத்தின் கீழ் ஊதியம் வழங் கப்பட்டு வரப்படுகிறது. இவர்கள் அனை வரும் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலிக் கூட இவர்களுக்கு இதுவரை ஊதியமாக வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை நேரம் என்பதற்கு பதிலாக இவர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றி வருகின் றார்கள். இவர்களில் 5000-க்கும் மேற்பட் டோர் 2003-ம் ஆண்டு நடைபெற்ற அரசு ஊழியர்-ஆசிரியர் போராட்டத்தின்போது, தற்காலிகமாக அரசு ஊழியர்களாக நிய மனம் செய்யப்பட்டு, தலைமைச்செயல கம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் பணி யாற்றியவர்கள். அரசால் நிரந்தர வேலை என்ற ஆசை வார்த்தை காட்டப்பட்டு அரசு மதுக்கடைகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இவ்வாறு மதுக் கடைகளுக்கு வர விருப்பம் தெரிவிக்கா மல் அரசுத்துறைகளிலேயே பணியாற்றி வந்த 10000 ஊழியர்களுக்கு தேர்வா ணையம் மூலம் தனித் தேர்வு நடத்தப் பட்டு, அரசுத்துறைகளில் காலியாக வுள்ள இடங்களில் நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுக் கடைகளில் பணி நியமனம் செய்யப்பட்ட வர்கள், தற்காலிக ஊழியர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவர்களின் நியா யமான கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியே போராடிவந்தனர். அதன் விளைவாக பலன் ஏதும் கிடைக்காத தால், இன்று அங்குள்ள அனைத்து சங் கங்களும் ஒன்றாக இணைந்து கூட்டு போராட்டக்குழுவினை அமைத்துக் கொண்டு வேலை நிறுத்தப் போராட் டத்தை துவக்கியுள்ளனர்.இன்று மதுக்கடை ஊழியர்களின் போராட்டத்தை முறியடிக்க காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை ஏற்படுத்தியிருப்பது போல் உணவுப் பொருளை பதுக்குபவர் களை பிடிக்கவும், ரேசன் கடை அரி சியை கடத்தி விற்பவர்களை பிடிக்கவும், ஆற்றில் மணல் எடுத்து கொள்ளை கொள்ளையாக கோடிக்கணக்கில் குவிப் பவர்களை பிடிக்கவும், ஒரு தனிப்படை யை அமைக்க இந்த அரசு முன்வருமா என வினவ விரும்புகின்றோம். வீட்டுமனைப்பட்டா கேட்டு ஆயிரக் கணக்கான மக்கள் விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கையில், அவர்க ளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஆக் கப்பூர்வமான நடவடிக்கையை வரு வாய்த்துறை அலுவலர்களை கொண்டு மேற்கொள்ளாமல் அவர்களை சாராயக் கடை களை நடத்த அரசு தூண்டுவது ஏன்?அரசு நிலங்களை ஆக்கிரமித்து வைத் துள்ளவர்களிடமிருந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினை அமைத்து ஆக்கிர மிப்பை அகற்றி ஏழைகளுக்கு பட்டா கொடுக்கும் நடவடிக்கையை எடுக்க அரசு முன் வருமா? அரசுக்கு செலுத்த வேண் டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிலுவையை இத்தகைய அதிரடிப்படை மூலம் வசூலிக்க அரசு தயாரா? நாள் ஒன்றிற்கு ரூ.100 கூட ஊதியம் இல்லை என்பதற்காக போராடும் டாஸ்மாக் பணி யாளர்கள் அரசின் பார்வையில் ஏளன மாக தெரிவதால்தானே இந்த அதிரடி நடவடிக்கை? போராடும் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் ஊழி யர்களுக்கு களத்தில் கிடைத்துள்ள அனு பவம் அவர்களை ஒன்றுபடுத்தும்! தமி ழக அரசில் பணியாற்றிக் கொண்டுள்ள, தொகுப்பூதியம் பெறும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் நிச்சயம் தங்களின் உரிமைகளுக்கான் போராட்டத்தை நியாய ஊதியத்திற்கான போராட்டத்தை முன் எடுத்து செல்வார்கள்! அடக்கு முறைக்கு எதிராக அணிதிரள்வார்கள். அரசிற்கு சரியான பாடத்தை புகட்டு வார்கள்.

Monday, July 19, 2010

சென்னை இப்படி மாறவேண்டுமா ?

டெட்ராய்டாக மாறும் சென்னையும் “டெஸ்ட்ராயாகும்”தொழிலாளர் உரிமைகளும்!
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 19-07-10

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் என்ற பத்திரிகை, சென்னை நகரம் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்டு நகரமாக மாறி வருகிறது என பாராட்டி எழுதியிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றான டெட்ராய்டு, அழகிய டெட்ராய்டு நதியின் கரையில் அமைந்துள்ள துறைமுக நகரம் ஆகும். உலகின் மோட்டார் நகரம் எனவும் இதற்கு பெயர் உண்டு. இங்குதான் ஜெனரல் மோட்டார் நிறுவனமும், பிரசித்த பெற்ற ஃபோர்டு நிறுவனத்தின் தலைமையகமும் உள்ளது.. இந்த நகரத்திற்கு “ மோட்டார் சிட்டி” மற்றும் “மோடவுன்” என்ற பெயர்களும் உண்டு. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இந்த நகரைச் சுற்றி 4000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை கள் உள்ளன. ஆட்டோமொபைல் தொழில், ஒருகாலத்தில் இங்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியது உண்மைதான். எனவேதான் அந்நகரத்திற்கு, வெளி மாநிலங்களிலிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் குடியேறினர். இத் தகைய குடியேற்றங்களாால் 1950-60களில் அங்கு கலவரங்களே ஏற்பட்டன.

சென்னையை டெட்ராய்ட்டுடன் ஒப் பிட்டு செய்தித்தாளில் செய்தி வந்ததை முதல்வருக்கு சொன்னவர்கள், டெட்ராய்டு நகரின் இன்றைய நிலைமை என்ன என் பதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள். 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுத்த புள்ளிவிபரங்கள்படி அங்கு வேலையின்மை என்பது 50 விழுக்காடாக உள்ளது என்பது தகவல். அமெரிக்க நாட்டின் தொழிலாளர் துறையே அங்கு வேலையின்மை என்பது 24.3 விழுக்காடு என அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் சமீபத்திய பொருளாதார நெருக்கடியில் இந்த மோட்டார் நகரில் அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 2009-ல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்நகரை மீட்டிட, மீட்புக் குழு ஒன்றை அமைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜெனரல் மோட்டார் கம்பெனிக்கும், கிரிஸ்லர் என்ற கம்பெனிக் கும் அமெரிக்க அரசின் கஜானாவில் இருந்து மீட்புத்தொகை என்ற பெயரில் பெருமளவில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அங் குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும் போது ஓய்வூதியத்தொகை வழங்க முடியாமல் தொழில் நிறுவனங்கள் நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்டு வந்த மருத்துவ உதவிகள் கூட வழங் கப்படவில்லை. இதுதான் இன்றைய டெட்ரா யிடின் கதை! சென்னை இப்படி மாற வேண் டுமா ! உலகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து, அந்நாட்டு மக்களின் வரிப் பணத்தி லிருந்து மீட்புத்தொகை என கோடி கோடியாக பெற்றுக்கொண்டுள்ளன. சென்னையில் பல நாடுகளிலிருந்து தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்குவதை எதிர்ப்பது என்பது நமது நோக்கமல்ல. அந்த நிறுவனங்கள் இந் திய நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு தொழில் நடத்த வேண்டும். இந்திய அரசாங்கம் அவற் றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண் டும். ஆனால் இவை இரண்டும் இன்று இந் தியாவில் இல்லை. போபால் விஷவாயு விபத் தின் காரணமாக ஆண்டர்சன்னை சட்டத் திற்கு முன் நிறுத்தக் கூட இந்திய அரசால் முடியவில்லை.

அங்கு இனி தொழில் நடத்த முடியாது என்ற காரணத்தினால்தான் கலைஞர் அறிக் கையில் குறிப்பிட்டுள்ள மோட்டார் கம்பெனி கள் சென்னையை நோக்கி படையெடுத் துள்ளன. இங்கு வந்தும் அவை தங்களின் கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டன. தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்க உரிமை கிடையாது. இந்திய நாட்டின் எந்த தொழி லாளர் சட்டங்களையும் மதித்து நடப்பதில் லை. ஒப்பந்தங்கள் போட முடியாது; போராட் டங்களின் வாயிலாக ஒப்பந்தம் போட்டாலும் அதை அமல்படுத்த முடியாது. உரிமைக்கான போராட்டங்களை அடக்குமுறையின் மூலம் அடக்கிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர். தொழிலாளர்களின் தலை வர்களை பணி நீக்கம் செய்தாலும் தொழிற் சங்க இயக்கங்கள் துவண்டுவிடாது என்ப தை இன்று ஹோண்டாய் மோட்டர் கம்பெனி யில் சிஐடியு நடத்தி வரும் போராட்டங்கள் நிரூபித்து வருகின்றன.

Wednesday, June 30, 2010

பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றம் ஏன் ?

விலை உயர்வும்! விளம்பரம் சொல்லும் உண்மையும்!
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 30-06-10

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், கடந்த 25.06.2010 அன்று கூடிய அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2ம், மண்ணெண் ணெய் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 எனவும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 எனவும் விலை உயர்த்தி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, இனி பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ளவும்; தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் விலை தனியார் கையில் போய் சிக்கியுள்ளது. அவர்கள் நினைத்தபோது நினைத்தவாறு விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி தந்துவிட்டது.


பெட்ரோலியப் பொருட்களின் விலைஉயர்வினை தொடர்ந்து, மத்திய அரசின் பெட்ரோலியத் துறை நாடு முழுவதும் செய்தித்தாள்களில் ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில் அண்டை நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலையுடன் இந்திய நாட்டில் (தில்லி) உள்ள விலையையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளது. இத்தகைய விளம்பரம் வெளியிடுவது மத்திய அரசில் இதுவே முதல் முறை என்றாலும், தமிழ்நாட்டில் இது ஆட்சியாளர்களுக்கு கைவந்த கலையாகும். போக்குவரத்துக் கட்டணம் உயர்த்துகின்ற நேரங்களில் அண்டை மாநிலங்களுடன் ஒப்பிட்டு விளம்பரம் செய்வது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாகும். மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ள விளம்பரத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள எரிபொருள்களின் விலை விபரம் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைவு என்று சொல்லவருகிறது மத்திய அரசு. இ;ந்த விளம்பரத்தில் கியாஸ் சிலின்டர் ஒன்றிற்கு அரசு ரூ.225 மானியமும் மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு ரூ.12-ம் மானியமும் வழங்குவதாகவும் இதனால் ஆண்டொன்றிற்கு மத்திய அரசிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது என கணக்கு காட்டியுள்ளது. இந்திய நாட்டில் 11 கோடியே 50 லட்சம் குடும்பங் கள் சமையல் எரிவாயுவினை பயன் படுத்துகின்றன. ஒவ்வொரு மாதமும் 94 கோடி லிட்டர் மண்ணெண்ணெய் ஏழை-எளிய மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விபரங்களும் அதே விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன .
இந்திய நாட்டின் ஜனத்தொகையில் 50 விழுக்காடு மக்களுக்கு ஆண்டொன்றிற்கு 53 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்குவதை சுமையாக விளம்பரப்படுத்தியுள்ள மத்திய அரசு, சென்ற ஆண்டு ஒரே ஒரு நபருக்கு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக இதே அளவு தொகையை மீட்புத் தொகையாக வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. அம்பானி குடும்பத்தினரை காப்பாற்ற துடிக்கும் மத்திய அரசு, இந்நாட்டு ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களை சுமையாக கருதுவது ஏன்?மத்திய அரசு, சுட்டிக்காட்டியுள்ள நாடுகளின் எண்ணெய் சந்தையுடன் இந்திய நாட்டு எண்ணெய் சந்தையை ஒப்பிட்டு நோக்கினால், அந்நாடுகளின் ஒட்டுமொத்த சந்தையை காட்டிலும் இந்திய எண்ணெய் சந்தை மிகப்பெரியது. மேலும் இந்த நான்கு நாடுகளிலும் உள்நாட்டு பிரச்சனைகளால் ஒரு நிலையற்றத்தன்மை நிலவுவதை யாரும் மறுக்க முடியாது. இந்த நாடுகளுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்க்க மத்திய அரசு முனைவது விந்தையானது.
கூட்டணிக் கட்சிகளின் கடமை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் பெற்றுள்ள மாநிலக்கட்சிகள், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விலை உயர்வு முடிவாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கான முடிவாக இருந்தாலும் அவைகளை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆதரிப்பதும், இந்த முடிவுகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியவுடன், மத்திய அரசிற்கு முடிவினை மறுபரிசீலனை செய்ய கடிதம் எழுதுவதும் விந்தையானது. இக்கட்சிகள் மேற்கொண்டு வரும் இரட்டை நிலைபாட்டினை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியது உடனடி வேலையாகும். தற்போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கு அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் ஒருமித்த குரலில் ஒப்புதல் தந்துள்ளனர். தமிழக முதல்வரோ பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை பற்றி குறிப்பிடுகையில், தமிழக அரசு தெரிவித்த கருத்துக்களை முழுமையாக புறக்கணிக்காமல், உத்தேசித்திருந்த விலை உயர்வைவிட ஓரளவு குறைத்தே விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என ஆறுதல் கூறியுள்ளார். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கு இந்த விலை ஏற்றத்தில் ஒரு ஆதாயமும் உண்டு. எரிபொருள்களின் மீது மாநில அரசுகள் விதித்துவரும் வரி வருமானம் உயரவும் செய்வதால், இந்த கட்சிகள் எரிபொருள்களின் விலை ஏறும்போது கண்டும் காணாமல் இருக்கின்றன. கடந்த முறை இதே ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 ஆட்சிக்கு இடது சாரிகள் வெளியிலிருந்து ஆதரவு அளித்தபோது, பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த முடியாமல் தடுத்துவந்தனர் என்பதை மக்கள் அறிவர். ஆனால் இன்றோ பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த இனி அமைச்சரவைக் குழுக் கூட கூட வேண்டியதில்லை. எண்ணெய் நிறுவனங்களின் உரிமையாளர்களே விலையை உயர்த்திக்கொள்ளலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கிவிட்டது.

Friday, June 25, 2010

மே தின வரலாறு - May Day History


மரம் தனது கனிகளால் அறியப்படும்!
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 27-04-10


மரம் தனது கனிகளால் அறியப்படும்! அமைதியான இந்த வார்த்தைகள்தான் இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் கள் ஆர்த்தெழுந்து போராட ஆவேசமளித் துள்ளது. ஆம் மே தின தியாகிகளில் ஒரு வரான தோழர் ஆல்பர்ட் ஆர்.பார்சன்ஸ், தன் மீது பொய் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடுகையில் இறுதி யாக முழக்கமிட்ட வார்த்தை இது!8 மணி நேரம் வேலை கேட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சிகாகோ நகர தொழிலாளர்களின் தலைவர்கள் மீது, காவல் துறையினரை நோக்கி குண்டு எறிந்தனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தண்டிக்கப்பட்டனர். தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்ச்சர், மைக்கேல் ஸ்வாஃப், சாமுவேல் பீல்டன், லூயிஸ் லிங்க் ஆகிய ஏழு தோழர்களுக்கு மரண தண்டனை விதிக் கப்பட்டது. ஆஸ்கர் நீபீ என்ற தோழருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப் பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே தொழிலாளர்கள் கிளர்ந் தெழுந்தனர். இதன் விளைவாக ஸ்வாஃப் மற்றும் பீல்டன் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர் கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஏங்கல், பிட்ச்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர். லிங்க் என்ற தோழர் சிறையிலேயே தன்னைத் தானே மாய்த்துக்கொண்டார்.இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு அணி திரட்டியதுதான். 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி யன்று சிகாகோ நகரில் 40000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார்வெஸ்டர் என்ற கம்பெனியின் முன்னால் திரண்டிருந்த 500 தொழிலாளர்களின் மத்தியில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக்கொண் டிருந்தார். அமைதியான முறையில் நடை பெற்றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொலலப்பட்டார். ஐவர் படுகாயமுற்றனர். பலர் தாக்கப்பட்டனர்.

காவல் துறையின் இந்த அடக்குமுறையை கண்டித்து அன்று இரவு கண்டன கூட்டம் நடத்த திட்ட மிடப்பட்டு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் ஹே மார்கெட் என்ற பகுதியில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து சிகாகோ நகரத்திலிருந்து வெளியாகும் “ஆர்பைட்டர் ஜேட்டங்” என்ற செய்தித்தாளில் ஆகஸ்டு ஸ்பைஸ் தொழிலாளர்களை கண்டன கூட்டத்தில் பங்கேற்கும்படி அறைகூவல் விட்டிருந் தார். அன்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் திரண்ட னர். இக்கூட்டத்தில் தொழிலாளர்கள், தலைவர்கள், தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்த போது, ஜான்போன்பீல்டு என்ற அதிகாரி யின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும் படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. திடீரென்று காவல்துறையினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. ஒருவர் உயிரிழந் தார். 70-க்கும்மேற்பட்டோர் காயமடைந்த னர். காவல்துறையினர் உடனடியாக துப் பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் எத்தனைப் பேர் இறந்தனர், காய முற்றனர் என்பது இறுதிவரை தெரிவிக் கப்படவே இல்லை.

இந்நிகழ்வைத் தொடர்ந்து சிகாகோ நகர் முழுவதும் தொழிற்சங்க தலைவர்க ளின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. தொழிலாளர் தலைவர்கள், ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டுகள் எறிந்தது தொழிலாளர் தலைவர்கள்தான் என குற்றம் சாட்டப்பட்டு, 8 தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கூட்டத்தைப் பற்றி அந்நகர மேயர் கூறுகையில், மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது கூட்டம். தொழிலாளர் தலைவர்கள் அமைதியான முறையில் பேசிக்கொண்டி ருந்தனர். காவலர்களுக்கு அங்கு எந்த வேலையும் கிடையாது என கூறியுள்ளார். அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பார் சன் தனது இரு சிறிய குழந்தைகளையும் அந்த கூட்டத்திற்கு அழைத்துச் சென் றிருந்தார். எனினும் தொழிலாளர் தலைவர் கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. கூட் டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல் பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் ஆகி யோர் மட்டும்தான். ஆனால் 8 தலை வர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தொழிலாளர் தலைவர்கள் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினை மறுத்துரைத் தனர். தங்களின் உரிமைக்கான போராட் டத்தினை நசுக்கிடவே இந்த பொய்வழக்கு என எடுத்துரைத்தனர். அரசு வழக்குரை ஞரோ தலைவர்கள் பின்னால் ஆயிரக்க ணக்கில் தொழிலாளர்கள் திரண்டதுதான் மிகப்பெரிய குற்றம் என்றும், தலைவர் களுக்கு வழங்கப்படும் தண்டனை தொழிலாளர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் எனவும் வாதிட்டார். நீதிமன்றத்தில் மரண தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ஆகஸ்டு ஸ்பைஸ், இத்தகைய தீர்ப்புகளால் தொழி லாளர்களின் உரிமைகளை முடக்கி வைத்துவிட முடியாது. எங்களுக்கு வழங் கப்பட்ட மரண தண்டனை தீப்பொறியாக கிளம்பி எங்கெங்கும் பரவி உரிமைக்கான போராட்டங்களாக கொழுந்துவிட்டெரியும் என முழக்கமிட்டார். 125 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மே தின தியாகிகளின் முழக்கம் தொழிலாளர்களின் ஆயுதமாக விளங்கி வருகிறது.

கட்டுரையாளர், முன்னாள் மாநிலத் தலைவர், அரசு ஊழியர் சங்கம்

Thursday, June 24, 2010

மொழியின் அவசியம்


மொழிப்பற்று
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 25-06-10

தமிழ்ச்சான்றோர்கள் நிறைந்த அரங்கம். புலவர் பெருமக்கள் வாதம் புரிந்துகொண்டிருந்தனர். மொழிப்பற்று குறித்தே அன்றைய வாதத்தின் மையக் கருத்து அமைந்திருந்தது. தாய்மொழிப்பற்று ஆதிக்கம் குறித்து ஒரு சாராரும், அயல் மொழிகள் மோகம் குறித்து ஒரு சாராரும் வாதிட்டனர். தாய்மொழிப்பற்று குறித்து வாதிட்ட ஒரு புலவர், தனது தரப்பினை வலுப்படுத்த ஒரு கதையை கூறினார்.ஒரு நாள் சில மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் மரக்கலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று வீசிய சூறாவளிக் காற்றால் மரக்கலம் கவிழ்ந்தது. அதில் பயணித்துக்கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பல மணி நேரம் கடலில் நீந்தி ஒரு தீவினை அடைந்தனர். கரையை அடைந்த அவர்களை ஒரு காட்டுவாசி கும்பல் சூழ்ந்து வலுக்கட்டாயமாக காட்டிற்குள் இழுத்துச் சென்றது. அவர்களை அழைத்துச் சென்ற காட்டுவாசியினர், தங்கள் தலைவனின் முன்னால் மீனவர்களை கொண்டுபோய் நிறுத்தினர். மனிதக் கூட்டத்தை கண்ட அந்த காட்டுவாசிகளின் தலைவன் மகிழ்ந்து, இவர்கள் நமக்கு நல்ல விருந்தாவார்கள். இவர்களை அழைத்துப்போய் குகையில் அடையுங்கள். நல்ல உணவு கொடுத்து கொழுக்க வையுங்கள். வருகின்ற திருவிழா நாட்களில் தினம் ஒருவனை, நமது கிராமத்து மக்களுக்கு விருந்து படைக்கலாம் என்று கட்டளையிட்டான். அந்த காட்டுவாசிகள் மனிதர்களை உண்பவர்கள் என்று அப்பொழுதுதான் தெரிந்தது.

ஆடு, மாடுகளை அடைப்பது போல் அந்த மீனவர்கள் குகைக்குள் அடைக்கப்பட்டனர். தினசரி அவர்களுக்கு ஒருவன் உண்ண உணவினை கொண்டுவந்து கொடுத்தான். ஒருவன் அவர்களை ஓடைக்கு அழைத்துச் சென்று இயற்கை கடன்களை முடித்து குளிக்கவைத்து அழைத்து வந்தான். அவ்வாறு அந்த குகைக்குள் அவர்கள் வரும்போது காட்டுவாசிகள் தங்கள் மொழியில் உரையாடிக்கொண்டிருந்ததை ஒருவன் கேட்டு, சைகையின் மூலம் அவர்களிடம் உரையாட ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் மொழியில் தனக்கு உயிர் பிச்சை கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை சொல்வதற்கு தெரிந்துகொண்டான். நாட்கள் செல்லச் செல்ல அவன் காட்டுவாசிகளின் மொழியினை ஓரளவு பேச கற்றுக்கொண்டான்.
திருவிழாவும் வந்தது. தினம் ஒருவர் என பிடித்துவந்த மீனவர்களை அந்த காட்டுவாசியினர் விருந்து சமைத்து உண்டனர். ஒருநாள் காட்டுவாசிகளின் மொழி அறிந்தவனை விருந்து படைக்க இழுத்துச் சென்றனர். அவ்வாறு அவனை இழுத்துச் செல்லும்போது, அவன் காட்டுவாசி மொழியில் தனக்கு உயிர்பிச்சை கொடுக்க வேண்டும் எனவும், தன்னை பிழைக்க வைத்தால் காட்டுவாசிகளுக்கு தான் நன்றிவிசுவாசத்துடன் இருப்பேன் எனவும் காட்டுவாசி மொழியில் கத்தினான். அங்கு இருந்த காட்டுவாசிகளின் தலைவன் உள்பட அனைவரும் அவன் காட்டுவாசி மொழியில் பேசியதைக் கண்டு அதிசயித்துப்போயினர். காட்டுவாசிகளின் தலைவன், அவனைக் கொல்வதை உடனடியாக நிறுத்தும்படி கட்டளையிட்டான். எனது தாய்மொழியை இவன் கற்று அம்மொழியில் உயிர்பிச்சை கேட்கிறான். எனவே அவனை விடுதலை செய்யுங்கள். அவனுக்கு ஒரு மரக்கலம் கொடுத்து அனுப்பிவையுங்கள் என கட்டளையிட்டான்.
இந்தக் கதையை கூறிய புலவர், அந்த காட்டுவாசியின் தாய் மொழிப்பற்றினை ஆகவென புகழ்ந்து தள்ளினார். காட்டுமிராண்டிக்கும் தாய் மொழிப்பற்று இருக்கிறது என்பதை இக்கதை உணர்த்துகிறது என தெளிவுபடுத்தினார். ஆனால் அடுத்து வந்த புலவரோ, இந்த கதைக்குள் இன்னொரு கதையும் இருக்கிறது. அதையும் இந்த தமிழ்மன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட, அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்தனர். அந்தப் புலவர், தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அந்த மீனவன் கடுமையான காட்டுவாசிகளின் மொழியைக் கூட குறுகிய காலத்தில் கற்றுக்கொண்டான். ஒரு மனிதன் தனது வாழ்க்கையின் தேவைக்காக எந்த ஒரு மொழி பயன்படுகிறதோ அதை கற்றுக்கொள்வான் என்பதையே இந்தக் கதை உணர்த்துகிறது. மொழியின் வளர்ச்சி என்பது வளர்ந்து வரும் மனிதனின் தேவையை பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும். காலத்திற்கேற்ப எந்தவொரு மொழியும் செழுமைப்படுத்தப்பட வேண்டும். ஒரு மொழி அதன் வளர்ச்சிக்காக பிறமொழிகளில் சில வார்த்தைகளை ஈர்த்துக்கொள்வது இந்த அடிப்படையில்தான் என அந்தப் புலவர் தனது வாதத்தை எடுத்துரைத்தார்.
புலவரின் இந்த வாதத்தை தொடர்ந்து ஒரு நீண்ட மவுனம் அந்த அவையில் நிலவியது.

Wednesday, June 23, 2010

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனைக்கு


பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெரிப்பதா?
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 18-6-10


மத்தியஅமைச்சரவை கூடி இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் ‘ ஹிந்துஸ் காப்பர் நிறுவனங்களின் பங்குகளில் 10 விழுக்காட்டை விற்பனை செய்துவிட முடிவு எடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க அமைச்சரவை எடுத்த முடி வின் மூலம் மத்திய அரசிற்கு ரூ.16 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் இந்த நிதி ஆண்டில் ரூ 4 ஆயிரம் கோடி நிதியினை பொதுத்துறைகளின் பங்கினை விற்பனை செய்வதின் மூலம் திரட்ட எடுத்த முடிவினடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு தன் வசம் உள்ள இந்திய நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளில் 10 விழுக்காட்டினை விற்பனை செய்யவும், ‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனத்தின் ௧௦ விழுக்காட்டு பங்குடன் மேலும் அந்த நிறுவனம் புதிதாக 10 விழுக்காட்டு பங்கினை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யும்போது பொதுத்துறை நிறு வனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் எனவும், இந்திய நிலக்கரி நிறுவனத்தின் விற்பனை பங்குகளில் 18 விழுக்காடு அந் நிறுவனத்திலும் அதன் எட்டு துணை நிறு வனத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக் கும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.தற்போது மத்திய அரசிற்கு நிலக்கரி நிறுவனத்தில் 100 விழுக்காடு பங்கு உள்ளது. அதன் மதிப்பு ரூ.6316.36 கோடி யாகும். அதில் 10 விழுக்காடு 63.16 கோடி ரூபாய் தற்போது விற்கப்படுகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு இந்த பங்குகளின் சில்லறை விற்பனையில் 5 சதம் சலுகை தரவும் முடிவு செய்துள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் (ஐசிஎல்) உலகத்திலேயே பெரிய நிலக்கரி நிறு வனம் ஆகும். கடந்த ஆண்டில் 431.5 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டில் உற்பத்தி ஆகும்; நிலக்கரி மொத்த உற்பத்தி 531.5 மில்லியன் டன், இது 85 விழுக்காடு ஆகும்.‘ஹிந்துஸ்தான் ஃகாப்பர் நிறுவனமும் ஒரு வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். இது தனது உற்பத்தியை ஆண்டிற்கு 3.15 மில்லியன் டன்னிலிருந்து ௧௨ மில்லியன் டன்னாக உயர்த்திட திட்டமிட்டுள்து. இத்தகைய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்திட மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ. 4 ஆயிரம் கோடி திரட்டிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரிசாவில் உள்ள நால்கோ அலுமினிய உற்பத்தி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திட, கடந்த மாதம் மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களும் இடதுசாரி தொழிற்சங்கங்களும் போராடி வருகின்றன. பொன் முட்டையிடும் வாத்துகளின் கழுத்தை நெரித்திடும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தினை நடத்திட மத்திய தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றன.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - சட்டமாகுமா ?


தடைகளும் விடைகளும்
-க.ராஜ்குமார் -
நன்றி - தீக்கதிர்-11-06-2010

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் அதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இருமுறை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியும் ஒருமித்தக் கருத்தினை எட்ட முடியவில்லை. காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்குள்ளேயே இம்மசோதாவிற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தாமதம் ஏன்?
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் சென்ற ஆண்டு பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் மத்திய அரசுத் துறைகளில் பெண்களின் பங்கு வெறும் 7.5 சதவீதம் மட்டும் என தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆட்சிப்பணிகளில் 24 சதவீதம், காவல் பணிகளில் 18 சத வீதம், அயல்நாட்டுப் பணிகளில் 18 சதவீ தம் எனவும் தெரிவித்துள்ளார். நாடு விடுதலை அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளில் சமத்துவம் என்பது இல்லை என்பதே அவர் அளித்துள்ள புள்ளி விபரங்கள் மூலம் அறிய முடிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நிலையான ஜனநாயக ஆட்சி தொடர்ச்சியாக இல்லாமல் உள்ள பாகிஸ்தானில் கூட, அரசு வேலைகளில் பெண்கள் 21 சதவீதம் என்பதும், நமது அண்டை நாடுகளான நேபாளத்தில் 30 சதவீதம், பங்களா தேஷில் 10 சதவீதம் என்பதும் நமக்கு கிடைத்திருக்கும் செய்திகளாகும். இந்தப் பின்னணியில்தான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக குரல் எழுப்பப்படுவதின் காரணத்தை புரிந்து கொள்ள முடியும்.
இந்திய நாட்டில் வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையானது, பதிவுகளின்படி 10 கோடிக்கும் மேல். இதில் ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. இந்திய நாட்டின் இன்றைய தலையாய பிரச்சனையாக மாறியுள்ளது வேலையின்மை. இதற்குக் காரணம், இன்றைய ஆட்சியாளர்களின் தாராளமயக் கொள்கைகள்தான். இந்த முதலாளித்துவ சுரண்டல் அமைப்பில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சமதர்ம சமுதாயத் தை உருவாக்கிட போராடினால்தான் பெண்களுக்கான சமத்துவத்திற்கு வழி பிறக்கும். சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையுடன் இணைந்ததே பெண் களுக்கான விடுதலையாகும்.
இடஒதுக்கீடு மசோதா
கடந்த 14 ஆண்டுகளாக இழுபறியாக இருந்து வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா 9.03.10 அன்று மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகுக்கும் இந்த மசோதாவை மத்திய அரசு, மகளிர் தினமான 8.03.10 அன்று மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது, வரலாறு காணாத அமளி ஏற்பட்டது. சமாஜ்வாடி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் உறுப்பினர்கள் வன் முறையில் ஈடுபட்டனர். மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறினாலும், மக்களவையும், மொத்தம் உள்ள 28 சட்டமன்றங்களில், 15 சட்டமன்றங்கள் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால்தான் இது சட்டமாகும். காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிலும் முணு முணுப்புகள் எழுந்துள்ளன. இத்தகைய எதிர்ப்பிற்கு என்ன காரணம்? அவர்களின் கோரிக்கைதான் என்ன?
ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு
பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் வழங்கப்படவுள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டிற்குள் இதர பிற் படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என இவர்கள் கோருகின்றனர். முதலில் 33 சதவீதம் மகளிருக்கான மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால் உள் ஒதுக்கீடு போன்ற இதர விஷயங்களை சட்டமாக்கப்படும் போது விவாதிக்கலாம் என்பதே பிறரின் நிலைபாடு. கடந்த 14 ஆண்டுகாலமாக பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்து வருபவர்களுக்கு ஒரு பொதுவான நோக்கம் உள்ளது. பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்க அவர்கள் தயாராக இல்லை. பெண்களுக்கு 33 சதவீதம் தருவதற்கு தயாராக இல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமாகவே உள் ஒதுக்கீடு கேட்பவர்களின் போராட்டங்கள் உள்ளன. இந்த இடஒதுக் கீட்டிற்குள் மத ஒதுக்கீட்டை கேட்பவர்களுக்கு ஒரு உள்நோக்கம் இல்லாமல் இல்லை. ஓட்டுச்சீட்டு அரசியலில் ஒரு பிரச்சனையை அணுகினால் தீர்வு காண முடியாது என்பதை பெண்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையின் மூலம் அறியலாம். சட்டம் கொண்டு வந்த பிறகு உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என் பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் ஒட்டுமொத்தமாக ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ளது ஏன் என்பதை அவர்கள் விளக்கியே ஆக வேண்டும். உள் ஒதுக்கீடு தேவையற்றது என்று யாரும் சொல்லவில்லை. பசியுடன் காத்திருக்கும் ஒரு வீட்டில் சமையல் செய்ய முனையும்போது எந்த குழந்தைக்கு எவ்வளவு என்பதை முடிவு செய்து விட்டு சமைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது போல் இன்று ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டிற்கு எதிராக செயல் படுபவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. பெண்கள் இன்று சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த இட ஒதுக்கீடு மட்டும் அமையாது என்பதும், ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை படைப்பதின் மூலமே விடுதலை காணமுடியும் என்பதால்தான் இடதுசாரிகள் இன்று இடஒதுக்கீட்டில் முதலில் 33 சதவீதம், பின்னர் உள் ஒதுக்கீடு குறித்து விவாதிக்கலாம் என்று சொல்லி வருகின்றனர்.
சொத்தை வாதங்கள்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் எந்த ஒரு பிரச்சனையும் இந்த அளவிற்கு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சில முதலாளித்துவ செய்தித்தாள்கள் எதிராக எழுதி வருகின்றன. பெண்களுக்கு வழங்கப்படும் அதி காரம் ஆண்களிடம் பினாமியாக சென்று சேர்ந்துவிடும் என அவை வாதாடுகின்றன. தற்போது உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒதுக் கீடு பயனளிக்கவில்லை என்பது அவைகளின் கருத்து ஆகும். பெண் பிரதிநிதிக ளின் கணவர்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர் என்பது அவர்களின் வாதம். எந்த ஒரு நடைமுறையும் ஆரம்ப காலத்தில் இத்தகைய விமர்சனத்தை எதிர்கொள்வது வழக்கம். நாளடைவில் பெண்கள் இத்தகைய அமைப்பில் செயல்பட்டு வெற்றி பெறும்போது இத்தகைய வாதங்கள் காணாமல் போய்விடும். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படாமல், படிப்பதற்கு கூட உரிமை இல்லாதவளாக பெண் இருந்தாள். தேர்தல்களில் வாக்களிக்க உரிமையில்லாதவளாகவும் அவள் இருந்தாள். இன்று இத்தகைய உரிமைகளை போராடி பெற்று அவள் தவிர்க்க முடியாத தீர்மானகரமான சக்தியாக முன்னேறி வருகின்றாள் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவளது வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கை நடைமுறை அனுபவங்கள் படிப்பறிவு இல்லாமல் கூட சிறந்த நிர்வாகியாக இல்லறத்தில் செயல்பட வைத்துள்ளது. இன்று அவள் பல பரிமாணங்களில் அறிவுத்திறன் பெற்றுள்ளாள். அப்படிப்பட்ட அடிப்படை குணாம்சத்தோடு அவள் அரசியல் அதிகாரத்திற்கு 33 சத வீத இடஒதுக்கீட்டு அடிப்படையில் தீர் மானகரமான சக்தியாக இடம்பெற்றால், இந்திய நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் மிகச்சிறந்த வரவேற்கத்தக்க இரசாயன மாற்றம் ஏற்படும். இது இன்றுள்ள புரையோடிப் போன சூழலில் சுக வாசியாக உள்ளவர்களுக்கு சம்மட்டி அடியாக அமையும். எனவேதான் சகல வசதிகள் ஆடம்பரத்தை ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வரக்கூடிய ஒரு பகுதியும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், ஏன் ஒட்டுமொத்த சமூகத்திற் கும் எதிரான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதிகாரபலம், ஆள்பலம், பண பலத்தினால் தண்டனைகளிலிருந்து தப்பியும் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் சில மனிதர்கள், பெண்களுக்கான, அல்ல அல்ல, சமூக முன்னேற்றத்திற்கான இம்மசோதாவை எதிர்க்கின்றனர்.
மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவேண்டுமென்றால் நாடு முழுவதும் அதற்கு ஆதரவான குரல்கள் உரத்து ஒலிக்க வேண்டும்.

வேலை வாய்ப்பை பறிக்கும் அரசின் ஆணை

வேலை வாய்ப்பை பறிக்கும் அரசின் ஆணை
-க.ராஜ்குமார்-
நன்றி - தீக்கதிர் - 12-01--10


கடந்த நான்கு ஆண்டுகாலமாக காலிப் பணியிடங்களை நிரப்பிட நிபந்தனைகள், பணியிடங்கள் குறைப்பு என தொடர்ச்சியாக பல்வேறு ஆணைகளை பிறப்பித்து வந்த தமிழக அரசு, இளைஞர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் அரசுப்பணியில் மறு நியமனம் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. இந்த ஆணைக்கு அரசு ஊழியர் சங்கங்கள் மட்டுமல்லாமல் அநேகமாக அனைத்து கட்சிகளும் இளைஞர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளைஞர்கள் தங்கள் வாய்ப்பு பறிபோகும் என அஞ்சுவதால் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆணை தேவைதானா?

இந்த ஆணை பிறப்பிக்க வேண்டிய தேவை குறித்து அரசு விளக்கமளிக்கையில், தேர்வாணையத்தின் மூலம் பணியிடங்களை நிரப்பிட காலஅவகாசம் தேவைப்படுவதால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது. இது சரியா? சரி என்றால் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களை மட்டும்தானே தற்காலிகமாக நிரப்பிட வேண்டும். ஆனால் அரசு பிறப்பித்துள்ள ஆணையில் அரசு ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும்போது வகித்து வந்த பதவியைக்காட்டிலும் உயர் பதவியில் அவரை நியமிக்கக் கூடாது எனவும், ஆனால் அவர் வகித்த பதவியைக் காட்டிலும் கீழ் பதவியில் பணியில் நியமிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருப்பதின் மூலம் பதவி உயர்வு அளிக்க வேண்டிய பணியிலும் கூட ஓய்வு பெற்றவர்களை நியமிக்க முடியும் என்பதுதானே உண்மை. இதனால் தற்போது பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப்படும் அல்லவா. தகுதி வாய்ந்த அரசு ஊழியர்கள் இருக்கின்றபோது அத்தகைய பணியிடங்களில் அவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க அரசு தயங்குவது ஏன். கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு பட்டியலுக்கு காலியிடங்களை நிர்ணயம் செய்திட அரசு நிபந்தனை விதித்திருந்ததால்தானே தற்போது தகுதியுள்ளவர்கள் இருந்தும் உயர் பதவிகளை நிரப்ப இயலவில்லை.

காலிப் பணியிடங்களை நிரப்பிட உள்ள அரசு விதி முறைகள்
இத்தககைய சூழ்நிலைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பி நிர்வாகத்தை மேற் கொள்ள ஏற்கெனவே அரசு பணி விதிமுறைகள் உள்ளன. தேர்வாணையத்தின் மூலம் பணியிடங்களை நிரப்பிட தாமதம் ஆனால் விதி 10 (ஏ) (1)ஐ பயன்படுத்தி நியமன அலுவலர்கள் வேலை வாய்ப்பகத்தின் மூலம் முறையான காலமுறை ஊதியத்தின் அடிப்ப டையில் காலிப்பணியிடங்களை நிரப்பிட முடியும். அந்த விதி தற்போது ஏன் முடக்கப் பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு பட்டியல் போட தாமதம் ஆனால் விதி 39 (ஏ) பிரிவு களை பயன்படுத்தி தற்காலிக பதவி உயர்வு கொடுக்க முடியும். கடந்த காலங்களில் இதுதான் நடைமுறையாக இருந்து வந்தது. இதை இப்போது மாற்றுவதற்கு என்ன அவசியம் வந்தது.

காலிப்பணியிடங்கள் கலைப்பு

சற்று கவனமாக பரிசீலித்தால் காலிப் பணியிடங்களை நிரப்பிட அரசு மேற்கொண்டு வரும் அணுகுமுறை அரசுப்பணியின் அடிப் படை கட்டமைப்பையே சிதைத்துவிட்டதை உணரமுடியும். தமிழ்நாட்டில் கடந்த 2001ல் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அரசுப் பணிக்கு நியமனம் செய்வதை தடை விதித்து அன்றைய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து தொடர்ந்து இயக்கங்கள் நடைபெற்றன. இறுதியில் கடந்த ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் இறுதிக்காலத் தில் அந்த தடையை முற்றிலும் நீக்கிவிட்டனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலிப்பணி யிடங்களை நிரப்புவோம் என வாக்குறுதி தந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கையுடன் இன்றைய ஆட்சியாளர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பிட நிபந்தனைகள் விதித்தனர். தேவையின் அடிப்படையில் அரசால் ஒரு முறை அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் ஓய்வு பெறுவதின் மூலமோ, பதவி உயர்வில் சென்றுவிடுவதின் மூலமோ, அரசு ஊழியர்கள் இறந்து விடுவதின் மூலமோ ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட நியமன அலுவலர்கள் மீண்டும் அரசின் அனுமதி பெற வேண்டும். தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள ஸ்டாப் கமிட்டி அதை ஆய்வு செய்து கணிசமான பணியிடங்களை குறைத்து ஆணையிடும். இப்படி பல்வேறு துறைகளில் இந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அரசியல்சட்டம் மீறப்படுகிறதா?

இந்திய குடியரசின் அரசியல் சட்டம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் சட்டம் இயற்ற அரசியல் தலைவர்களுக்கு எப்படி அதிகாரம் கொடுத்துள்ளதோ, அதே போல் அந்த சட்டங்களை பாரபட்சமின்றி செயல்படுத்திட அரசு ஊழியர்களுக்கும் அதி காரம் கொடுத்துள்ளது. இதனால் தான் அரசுப் பணிக்கு ஆள் எடுக்கும் தனி அமைப்பாக அரசியல் சட்டம் தேர்வாணையங்களை உருவாக்கியுள்ளது. அரசு ஊழியர்கள் எந்த ஒரு ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறிவிடக் கூடாது என்பதே இதன் நோக்கம்.தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள் போன்று சுயாட்சி அதிகாரத்தை கொண்ட அமைப்புதான் தேர்வாணையங்கள். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் தில்லியில் நடைபெற்ற மத்திய-மாநில தேர்வாணைய தலைவர்கள் மாநாட்டில், அரசுப்பணிக்கு பின்புற வழியாக பணி நியமனம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது எனவும், இத்தகைய நியமனங்களை தேர்வாணையங்கள் அங்கீகரிக்கக் கூடாது எனவும் வழிகாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் இத்தகைய நியமனங் களுக்கு எதிராக பல்வேறு தீர்ப்புகள் பகரப்பட்டுள்ளன. எனினும் மத்திய-மாநில அரசுகள் இவைகளை கண்டுகொள்வதில்லை. இன்று தமிழக அரசில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற் பட்ட அலுவலர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியம் பெற்று பணியாற்றி வருகின்றனர். இத்தகைய அரசின் நடவடிக்கைகள் காரணமாக இளைஞர்களின் மன நிலை பாதிக்கப்பட்டு மாற்று வழியில் திசை திரும்புகின்றன. அவர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அரசுப் பணிகளில் முறையான பணி நியமனங்களை மேற்கொள்ள தமிழக அரசு முன் வரவேண்டும். தற்போது அரசுப் பணியில் ஓய்வு பெற்றவர்களை நியம னம் செய்ய வழிவகுக்கும் ஆணையை ரத்து செய்ய முன்வர வேண்டும். இன்று தமிழ் நாட்டில் கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் 3000 உள்பட ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இவைகளில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதுவே அரசின் இன்றைய உடனடி பணி ஆகும்.