தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Monday, July 19, 2010

சென்னை இப்படி மாறவேண்டுமா ?

டெட்ராய்டாக மாறும் சென்னையும் “டெஸ்ட்ராயாகும்”தொழிலாளர் உரிமைகளும்!
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 19-07-10

தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் என்ற பத்திரிகை, சென்னை நகரம் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்டு நகரமாக மாறி வருகிறது என பாராட்டி எழுதியிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றான டெட்ராய்டு, அழகிய டெட்ராய்டு நதியின் கரையில் அமைந்துள்ள துறைமுக நகரம் ஆகும். உலகின் மோட்டார் நகரம் எனவும் இதற்கு பெயர் உண்டு. இங்குதான் ஜெனரல் மோட்டார் நிறுவனமும், பிரசித்த பெற்ற ஃபோர்டு நிறுவனத்தின் தலைமையகமும் உள்ளது.. இந்த நகரத்திற்கு “ மோட்டார் சிட்டி” மற்றும் “மோடவுன்” என்ற பெயர்களும் உண்டு. 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இந்த நகரைச் சுற்றி 4000-க்கும் மேற்பட்ட தொழிற்சாலை கள் உள்ளன. ஆட்டோமொபைல் தொழில், ஒருகாலத்தில் இங்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியது உண்மைதான். எனவேதான் அந்நகரத்திற்கு, வெளி மாநிலங்களிலிருந்து மக்கள் ஆயிரக்கணக்கில் குடியேறினர். இத் தகைய குடியேற்றங்களாால் 1950-60களில் அங்கு கலவரங்களே ஏற்பட்டன.

சென்னையை டெட்ராய்ட்டுடன் ஒப் பிட்டு செய்தித்தாளில் செய்தி வந்ததை முதல்வருக்கு சொன்னவர்கள், டெட்ராய்டு நகரின் இன்றைய நிலைமை என்ன என் பதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள். 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எடுத்த புள்ளிவிபரங்கள்படி அங்கு வேலையின்மை என்பது 50 விழுக்காடாக உள்ளது என்பது தகவல். அமெரிக்க நாட்டின் தொழிலாளர் துறையே அங்கு வேலையின்மை என்பது 24.3 விழுக்காடு என அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் சமீபத்திய பொருளாதார நெருக்கடியில் இந்த மோட்டார் நகரில் அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 2009-ல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்நகரை மீட்டிட, மீட்புக் குழு ஒன்றை அமைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜெனரல் மோட்டார் கம்பெனிக்கும், கிரிஸ்லர் என்ற கம்பெனிக் கும் அமெரிக்க அரசின் கஜானாவில் இருந்து மீட்புத்தொகை என்ற பெயரில் பெருமளவில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அங் குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும் போது ஓய்வூதியத்தொகை வழங்க முடியாமல் தொழில் நிறுவனங்கள் நெருக்கடிக்கு தள்ளப் பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு வழங்கப் பட்டு வந்த மருத்துவ உதவிகள் கூட வழங் கப்படவில்லை. இதுதான் இன்றைய டெட்ரா யிடின் கதை! சென்னை இப்படி மாற வேண் டுமா ! உலகம் முழுவதும் தனியார் நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து, அந்நாட்டு மக்களின் வரிப் பணத்தி லிருந்து மீட்புத்தொகை என கோடி கோடியாக பெற்றுக்கொண்டுள்ளன. சென்னையில் பல நாடுகளிலிருந்து தனியார் நிறுவனங்கள் தொழில் துவங்குவதை எதிர்ப்பது என்பது நமது நோக்கமல்ல. அந்த நிறுவனங்கள் இந் திய நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு தொழில் நடத்த வேண்டும். இந்திய அரசாங்கம் அவற் றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண் டும். ஆனால் இவை இரண்டும் இன்று இந் தியாவில் இல்லை. போபால் விஷவாயு விபத் தின் காரணமாக ஆண்டர்சன்னை சட்டத் திற்கு முன் நிறுத்தக் கூட இந்திய அரசால் முடியவில்லை.

அங்கு இனி தொழில் நடத்த முடியாது என்ற காரணத்தினால்தான் கலைஞர் அறிக் கையில் குறிப்பிட்டுள்ள மோட்டார் கம்பெனி கள் சென்னையை நோக்கி படையெடுத் துள்ளன. இங்கு வந்தும் அவை தங்களின் கோர முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டன. தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்க உரிமை கிடையாது. இந்திய நாட்டின் எந்த தொழி லாளர் சட்டங்களையும் மதித்து நடப்பதில் லை. ஒப்பந்தங்கள் போட முடியாது; போராட் டங்களின் வாயிலாக ஒப்பந்தம் போட்டாலும் அதை அமல்படுத்த முடியாது. உரிமைக்கான போராட்டங்களை அடக்குமுறையின் மூலம் அடக்கிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டுள்ளனர். தொழிலாளர்களின் தலை வர்களை பணி நீக்கம் செய்தாலும் தொழிற் சங்க இயக்கங்கள் துவண்டுவிடாது என்ப தை இன்று ஹோண்டாய் மோட்டர் கம்பெனி யில் சிஐடியு நடத்தி வரும் போராட்டங்கள் நிரூபித்து வருகின்றன.