தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Sunday, August 29, 2010

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நியாயமானதே

சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோபம்
-க.ராஜ்குமார்

நன்றி - தீக்கதிர் - 30-08-10

சத்துணவு ஊழியர்கள் பணி நிய மனம் செய்யப்பட்ட 1982-ம் ஆண்டு முதல், அவர்களின் பணிப் பாதுகாப்பிற்காகவும் ஊதிய மேம்பாட்டிற்காகவும் சங்கம் அமைத்துக் கொடுத்து வழிநடத்தியவர் தோழர் எம்.ஆர். அப்பன். அவரின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 30) முறையான காலமுறை ஊதியம் வழங்க கேட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானதே!இந்தியாவிலேயே குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டிருந்த தமிழக அரசு ஊழியர் களிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிற் போக்கு குணம் கொண்ட தலைமைகளை எதிர்த்து போராடி, அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை ஒரு மகத்தான போராட்டம் மூலம் பெற்றுத்தந்தவர் தோழர் எம்.ஆர்.அப்பன் அவரின் எளிமையான தோற்றமும், கொஞ்சும் தமிழும் லட்சக் கணக்கான ஊழியர்களை கவர்ந்தது என் றால் மிகையாகாது. அவரின் ஆழ்ந்த ஞான மும், ஆங்கிலச்சொல் திறனும் அரசு அதிகாரி களை ஈர்த்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது அறிக்கையில், நாங்கள் வெற்றி பெற்றுவந்தால் தொகுப்பூதிய முறையை ஒழித்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்து. அரசு ஊழியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், பிற மாநி லங்களில் இத்தகைய ஊழியர்களுக்கு தரப்ப டும் ஊதியத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் கூடுதலாக வழங்கப்படுவதாகவும், எனினும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் உறுதி யளித்தார். மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தும்போது சத்துணவு ஊழியர் களுக்கு ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதற்கு பதிலாக, ஒரு புதிய சிறப்பு காலமுறை ஊதியத்தை குறைந்தபட்ச ஊதியத்திற்கும் மிகக் குறைவாக கண்டுபிடித்து வழங்கினார். பிரச்சனைகளை சங்க பிரதிநிதிகளுடன் பேசி தீர்ப்பதற்கு பதிலாக தனக்கும் தனது ஆட்சிக்கும் எதிரான போராட்டமாக பார்ப்பது என்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது.

விஷம் போல் ஏறிவரும் விலைவாசி இன்று நடுத்தர மக்களை வாட்டி வதைப்பதை உணராமல் அரசு ஊழியர்களுக்கு அள்ளித் தந்துவிட்டதாக நினைத்து செயல் பட்டால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். இன்று 12 லட்சம் அரசுஊழியர்களில் 5 லட்சம் அரசு ஊழியர் கள் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற பெயரில் குறைந்த ஊதியத்தை, மாதம் ரூ.100 முதல் ரூ.6000 வரை பெற்றுக் கொண்டி ருப்பதை அலட்சியப்படுத்துவது ஆபத்தில் முடியும் என்பதை சுட்டிக் காட்ட விரும்பு கின்றோம்.மாறாக சத்துணவு ஊழியர்களின் போராட் டத்தை ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடுவ தாக அங்கலாய்த்துக்கொள்கிறார். தமிழக அர சின் அணுகுமுறைதான் உண்மையில் போராட் டங்களை தூண்டுகிறது. இந்தியாவிற்கே வழி காட்டுவதாக அமைந்துள்ள சத்துணவுத் திட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணி யாற்றும் ஊழியர்களின் பரிதாப நிலையை கண்டு கொள்ளாமல், சங்கத்திலிருந்து ஓடிய தலை வர்களை வைத்து போட்டி மாநாடு நடத்தி, நன்றி மழையில் நனைந்து மகிழ்வது நியாயமா? வாழ்க்கையை தொகுப்பூதிய பணியில் தொலைத்துவிட்ட ஊழியர்களின் கோபம் நியாயமானதே! .

Sunday, August 22, 2010

அணு உலை விபத்து நஷ்ட ஈடு மசோதா

பயணங்கள் வேறு; பாதை ஒன்று
-க.ராஜகுமார்
நன்றி - தீக்கதிர் - 20-08-10

அமெரிக்க-இந்திய அணுசக்தி; ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியாவில் அணு உலைகள் அமைப்பதற்கு பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. அணு உலை களில் விபத்து அல்லது கசிவு ஏற்பட் டால் அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வழிவகை செய்யும் வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறி முகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவில் உள்ள பல ஷரத்துக்கள் இந்திய நாட்டு மக்களின் நலனுக்கு எதிரானது என பாஜக உள்பட அனைத்து கட்சிகளும் அதை எதிர்த்தன. ஆனால் பாஜக தற் போது நடப்பு கூட்டத்தொடரில், 18-08-10 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா-2010-ஐ ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நிதியமைச் சருமான பிரணாப் முகர்ஜி, பாஜக தலை வர்களான எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவ ராஜ், அருண் ஜேட்லி ஆகியோரை சந் தித்து இந்த மசோதாவை ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டார். அறிமுக நிலையில் இந்த மசோதாவை எதிர்த்த பா.ஜ.க இப் போது தனது நிலையை மாற்றிக்கொண் டது. தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நான்கைந்து ஆலோசனைகளை காங்கி ரஸ் ஏற்றுக்கொண்டிருப்பதால் மசோதா விற்கு ஆதரவு தர முடிவு செய்திருப்பதாக அது அறிவித்துள்ளது. நஷ்ட ஈட்டுத் தொகையை அதிகரிக்கவும், நஷ்ட ஈட்டு ஆணையருக்கு கூடுதல் அதிகாரங் களை தரவும் மசோதாவில் திருத்தங்கள் செய்யப்படும் என காங்கிரஸூம் அறிவித்துள்ளது.

ஓரே குட்டையில்ஊறிய மட்டைகள்

இந்திய ஜனநாயகத்தில் பிரதான எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் ஒன்று சேர்ந்து ஆதரித்து ஒரு மசோதாவை நிறைவேற்றுவது அரிதான நிகழ்வாக இருந்தாலும், இந்திய நாட்டின் இறை யாண்மைக்கு எதிராக அவை ஒன்றுபட்டி ருப்பது கவலைக்குரிய நடவடிக்கையா கும். வெளிநாட்டில் உள்ள இலட்சக் கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணத் தை கைப்பற்றுவதற்காகவோ அல்லது விலைவாசி உயர்விற்கு காரணமாக உள்ள பதுக்கல்காரர்களை பிடிப்பதற்கோ ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்தி ருக்க முடியும். ஆனால் இந்திய நாட்டு மக் களுக்கு துரோகம் செய்ய இவை இரண் டும் இன்று ஒன்று சேர்ந்துள்ளன. அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதாவை இவ் வளவு அவசரம் அவசரமாக நிறைவேற்று வதில் இவ்விரு கட்சிகளுக்கும் ஒரு நோக்கம் உண்டு. விரைவில் இந்தியா வர விருக்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வை திருப்திப் படுத்தத்தான் இவ்விரு கட்சிகளும் ஒன்றுசேர்ந்துள்ளன. தங்கள் எஜமான விசுவாசத்தை போட்டி போட் டுக்கொண்டு காட்டுவதற்கு தயாராகி விட்டன.

அவசரம் ஏன்?

அணு சக்தி துறையில் அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்க்க இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது அவசியம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஸ் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள் ளார். ஆனால் அமெரிக்கா அணு உலை தொழில்நுட்ப மறுபயன்பாட்டிற்கு தடை விதித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்ற அவசரம் காட்டுவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்துள்ள அணுவிபத்து நஷ்ட ஈட்டு மசோதா இந்திய நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் நலனுக்கும் எதிரானது என்பதை இடதுசாரி கட்சிகள் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளன. இந்த மசோதா இந்திய நாட்டு மக்களுக்கு பயன் படுவதை காட்டிலும் அந்நிய நாட்டு நிறுவ னங்களுக்கு பாது காப்பு அளிப்பதாகவே உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டி யுள்ளன. மசோதாவில் உள்ள பாதகமான ஷரத்துக்கள்மசோதாவில் அந்நிய நாட்டு நிறு வனங்கள் இந்திய நாட்டில் அணு மறு சுழற்சி ஆலைகளை அமைக்கும்போது, விபத்து நஷ்ட ஈட்டிற்காக முதலீடு செய்ய வேண்டிய பாதுகாப்பு தொகையாக 458 மில்லியன் டாலர் (2,087 கோடி) என குறிப் பிட்டுள்ளது. அணு உலைகளின் விபத் துக்களால் ஏற்படும் இழப்புகளை ஈடு கட்ட இது போதுமானதல்ல. இத்தகைய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ள அணு விபத்து நஷ்ட ஈட்டுத் தொகையோ 10.5 பில்லியன் டாலர் ஆகும்.நஷ்ட ஈட்டுத் தொகையை பெற விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அந்நிய நாட்டு நிறுவனங்களை நேரடியாக அணுக முடியாது. இந்த சட்டத்தின் பிரிவு 17-ன்படி இதற்கென மத்திய அரசு அமைக்கவுள்ள இந்திய அணுசக்தி கழ கத்தின் (சூஞஊஐடு) மூலமாகவே நிவாரணம் கேட்க முடியும். மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள இந்த கழகத்திற்கு மத்திய அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய் யவில்லை. முதலில், ரூ.500 கோடி என்று அறிவித்து, இப்போது ரூ.1500 கோடி என்று உயர்த்துவதாக மத்திய அரசு அறி வித்துள்ளது. இந்த தொகை போதுமான தல்ல என்பதே இடதுசாரிகளின் வாத மாகும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலை உபகரணங் களுக்கு இந்த மசோதாவிலிருந்து விதிவி லக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தர மற்ற உபகரணங்கள் இறக்குமதி செய்யப் பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போபாலில், விஷவாயுக் கசிவினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக் கும் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர் சனை இந்திய நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தர முடி யாத இவர்களுக்கு, இத்தகைய சட்டங்கள் கொண்டுவருவதில் தயக்கம் ஏதும் இருக்காது என்பதில் வியப்பில்லை.பாஜகவும் காங்கிரசும் ஒன்று சேர்ந்து ஒரு மசோதாவை, அதுவும் மக்கள் விரோத மசோதாவை நிறைவேற்றுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பாஜக ஆட்சியின் போது கொண்டுவந்த மின்சார மசோதா வை (2001) இதே இருகட்சிகளும் சேர்ந்து ஆதரித்த நிகழ்வும் உண்டு. பாஜக அறிமு கப்படுத்திய புதிய பென்சன் திட்டத்தை சட்டமாக்கிட இன்றும் காங்கிரஸ் துடி யாய் துடித்துக்கொண்டிருப்பதும் நாட்டு மக்கள் அறிந்ததே!இந்திய நாட்டு மக்களின் பாதுகாப் பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த சட்டத்தை நிறைவேற்றத்தான் இன்று காங்கிரஸூம் பாஜகவும் ஒன்று சேர்ந்துள் ளன. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற இவர்களின் பயணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் பாதை ஒன்றுதான். அது ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான பாதை என்பதை நாட்டுமக்கள் இன்று புரிந்து கொண்டுள்ளனர்.

Thursday, August 12, 2010

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் கற்றுக் கொடுத்த படிப்பினை


பூட்டை உடைக்கும் தொழிலே சரிதானா?
-க.ராஜ்குமார்-

நன்றி தீக்கதிர் 13-08-௧0


பட்டுக்கோட்டையாரின் பாடலை நினைவுப்படுத்தும் வகையில், டாஸ்மாக் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட் டத்தில் தமிழக அரசின் அணுகுமுறை இருந்தது. மூடிக் கிடந்த மதுக்கடைகளை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக்கொண்டு பூட்டை உடைத்து, மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு கடைகளை திறந்து மதுவை தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு அவசரகதியில் நடவடிக்கை எடுத்துள் ளது. ஒரு நாள் குடிக்காவிட்டால் குடியா மூழ்கிவிடும்? பிரச்சனை அதுவல்ல. போராட்டங்களை அனுமதிப்பது இல் லை என்ற தமிழக அரசின் மனப்பான் மைதான் இந்த அதிரடி நடவடிக்கை எல்லாம். காரணம்

thamilnaatil palveru மாவட்டங்க ளில் பூட்டப்பட்டிருந்த மதுக்கடைகளின் பூட்டுக்களை அதிகாரிகள் உடைக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் காட்டப் பட்டுள்ளன. செய்திதாள்களில் வெளி யிடப்பட்டுள்ளன. இவ்வாறு பூட்டுக் களை உடைத்து கடைகளை திறப்ப தற்கு டாஸ்மாக் நிர்வாகம் எந்த மட்டத் தில் முடிவெடுத்தது. அதற்கு துணை போன காவல்துறைக்கு யார் பூட்டை உடைக்க ஆணையிட்டது. வட்டாட்சியர் களும் கிராம நிர்வாக அலுவலர்களும் இந்தப்பணியில் எந்த சட்டத்தின் கீழ் ஈடுபடுத்தப்பட்டார்கள். பூட்டை உடைப் பதற்கு எந்த நீதிமன்றம் ஆணை வழங் கியது? எத்தனை காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? யார் புகார் கொடுத்தார்கள்? என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகமும் தமிழக அரசும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சி பொறுப்பு தன்வசம் உள்ளது என்பதால் சட்டங்களை மதிக் காமல் எதையும் யாரையும் வைத்துக் கொண்டு செய்யலாம் என்ற தாந்தோன் றித்தனமான நடவடிக்கையாகவே டாஸ் மாக் போராட்டத்தில் தமிழக அரசின் நடவடிக்கை உள்ளது.

போராடும் ஊழியர்களின் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டிய தமிழக அரசு, அவர்களை அச்சுறுத்தி போராட் டத்தை உடைக்க முயற்சித்தது. காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி களை பயன்படுத்தி மதுக்கடை ஊழியர் களை அச்சுறுத்தியது. வேலை நிறுத்தத் தில் பங்கேற்க மாட்டோம் என நிர்ப்பந்தப் படுத்தி எழுதி வாங்கியது. “எஸ்மா” சட் டத்தை பயன்படுத்த மாட்டோம் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு மற்றொரு பக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலை போய்விடும் என்று அச்சுறுத் தியது. வேலை வாய்ப்பகத்திலிருந்து மாற்றுப் பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. வேலை நிறுத்த நாளன்று ஆங்காங்கே டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத் திற்கு எதிராக அரசு நிர்வாகத்துடன் அரசியல் பிரமுகர்கள் கைகோர்த்துக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஆண்டிற்கு சுமார் ரூ.14000 கோடி வருவாயை அரசுக்கு ஈட்டித்தரும் இந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தயங்கு வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றால் ஆண்டிற்கு ரூ.200 கோடிதான் செலவாகும். பணியாளர்கள் ஊதியம் கேட்டால் மதுக் கடைகளை மூடிவிடக் கூட அரசு தயங்காது என்று சொல்வது அரசின் தொழிலாளர் விரோத அணுகு முறையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள சுமார் 6700 அரசு மதுக்கடைகளில் கடந்த ஏழு ஆண்டு காலமாக 30000-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உதவியாளர்களுக்கு, ரூ.2100 விற்பனையாளர்களுக்கு, ரூ.2800 மேற் பார்வையாளர்களுக்கு, ரூ.4000 என தொகுப்பூதியத்தின் கீழ் ஊதியம் வழங் கப்பட்டு வரப்படுகிறது. இவர்கள் அனை வரும் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலிக் கூட இவர்களுக்கு இதுவரை ஊதியமாக வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை நேரம் என்பதற்கு பதிலாக இவர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றி வருகின் றார்கள். இவர்களில் 5000-க்கும் மேற்பட் டோர் 2003-ம் ஆண்டு நடைபெற்ற அரசு ஊழியர்-ஆசிரியர் போராட்டத்தின்போது, தற்காலிகமாக அரசு ஊழியர்களாக நிய மனம் செய்யப்பட்டு, தலைமைச்செயல கம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் பணி யாற்றியவர்கள். அரசால் நிரந்தர வேலை என்ற ஆசை வார்த்தை காட்டப்பட்டு அரசு மதுக்கடைகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இவ்வாறு மதுக் கடைகளுக்கு வர விருப்பம் தெரிவிக்கா மல் அரசுத்துறைகளிலேயே பணியாற்றி வந்த 10000 ஊழியர்களுக்கு தேர்வா ணையம் மூலம் தனித் தேர்வு நடத்தப் பட்டு, அரசுத்துறைகளில் காலியாக வுள்ள இடங்களில் நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுக் கடைகளில் பணி நியமனம் செய்யப்பட்ட வர்கள், தற்காலிக ஊழியர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவர்களின் நியா யமான கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியே போராடிவந்தனர். அதன் விளைவாக பலன் ஏதும் கிடைக்காத தால், இன்று அங்குள்ள அனைத்து சங் கங்களும் ஒன்றாக இணைந்து கூட்டு போராட்டக்குழுவினை அமைத்துக் கொண்டு வேலை நிறுத்தப் போராட் டத்தை துவக்கியுள்ளனர்.இன்று மதுக்கடை ஊழியர்களின் போராட்டத்தை முறியடிக்க காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை ஏற்படுத்தியிருப்பது போல் உணவுப் பொருளை பதுக்குபவர் களை பிடிக்கவும், ரேசன் கடை அரி சியை கடத்தி விற்பவர்களை பிடிக்கவும், ஆற்றில் மணல் எடுத்து கொள்ளை கொள்ளையாக கோடிக்கணக்கில் குவிப் பவர்களை பிடிக்கவும், ஒரு தனிப்படை யை அமைக்க இந்த அரசு முன்வருமா என வினவ விரும்புகின்றோம். வீட்டுமனைப்பட்டா கேட்டு ஆயிரக் கணக்கான மக்கள் விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கையில், அவர்க ளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஆக் கப்பூர்வமான நடவடிக்கையை வரு வாய்த்துறை அலுவலர்களை கொண்டு மேற்கொள்ளாமல் அவர்களை சாராயக் கடை களை நடத்த அரசு தூண்டுவது ஏன்?அரசு நிலங்களை ஆக்கிரமித்து வைத் துள்ளவர்களிடமிருந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினை அமைத்து ஆக்கிர மிப்பை அகற்றி ஏழைகளுக்கு பட்டா கொடுக்கும் நடவடிக்கையை எடுக்க அரசு முன் வருமா? அரசுக்கு செலுத்த வேண் டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிலுவையை இத்தகைய அதிரடிப்படை மூலம் வசூலிக்க அரசு தயாரா? நாள் ஒன்றிற்கு ரூ.100 கூட ஊதியம் இல்லை என்பதற்காக போராடும் டாஸ்மாக் பணி யாளர்கள் அரசின் பார்வையில் ஏளன மாக தெரிவதால்தானே இந்த அதிரடி நடவடிக்கை? போராடும் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் ஊழி யர்களுக்கு களத்தில் கிடைத்துள்ள அனு பவம் அவர்களை ஒன்றுபடுத்தும்! தமி ழக அரசில் பணியாற்றிக் கொண்டுள்ள, தொகுப்பூதியம் பெறும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் நிச்சயம் தங்களின் உரிமைகளுக்கான் போராட்டத்தை நியாய ஊதியத்திற்கான போராட்டத்தை முன் எடுத்து செல்வார்கள்! அடக்கு முறைக்கு எதிராக அணிதிரள்வார்கள். அரசிற்கு சரியான பாடத்தை புகட்டு வார்கள்.