தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Tuesday, November 23, 2010

History of Blackmoney

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
-க.ராஜ்குமார்-
நன்றி தீக்கதிர் 23-11-2010

அதிசயம் ஆனால் உண்மை! உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ளதைவிட, கருப்பு பணம் இந்திய நாட்டில்தான் அதிகம் உள்ளது. ௨௦௦௬-ம் ஆண்டு சுவிஸ் நாட்டு வங்கிகள் சங்கத்தின் (SBA) அறிக்கையின்படி இந்தியாதான் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.. அந்நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் இருந்து 1,456 பில்லியன் டாலர் அதாவது 72,80,000 கோடி ரூபாய் சுவிஸ் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசோ, கடந்த ஆகஸ்ட் மாதம் (2010) நாடாளுமன்றத்தில் கருப்புப் பணம் குறித்த அரசு ரீதியான மதிப்பீடு ஏதும் அரசின் கைவசம் இல்லை என பொறுப்பற்ற முறையில் தெரிவித்துள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில், அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கருப்பு பணத்தை மீட்போம் (!) என வாக்குறுதி தந்தது. காங்கிரஸமூம் தனது பங்கிற்கு கருப்புப் பணத்தை மீட்க உறுதி தர வேண்டியதாயிற்று. சுவிஸ் வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள கருப்புப்பணத்தின் மதிப்பு இறுதியானது அல்ல. இதைவிட கூடுதலாகவே இருக்கும். சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டுமல்லாமல் இன்னும் சில நாடுகளிலும் இந்திய பணம் கருப்புப்பணமாக முதலீடு செய்யப்பட் டுள்ளது.

தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பொருளாதார பேராசிரியர் அருண்குமார் ‘இந்திய கருப்புப் பொருளாதாரம்’ என்ற புத்தகத்தில் இந்திய ‘தேசிய மொத்த உற்பத்தி’ யில் (GDP) 50 சத வீதம் கருப்புப்பணமாக மாறுகிறது என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் புள்ளியல் நிறுவனம் (CSO) 2009-10 ஆண்டிற்கான இந்திய தேசிய மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.61,64,000 கோடி என மதிப்பீடு செய்துள் ளது. இதில் 40 சதவீதம் கருப்புப்பணம் என் பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. இந்த கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இதை கணக்கு காட்ட முன் வருவார்கள் என்றால் 30 சதம் வருமானவரி கட்ட வேண்டும். இதன் மூலம் மத்திய அரசிற்கு ரூ.7,50,000 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். இது 2009-10-ம் ஆண்டில் மத்திய அரசிற்கு கிடைத்துள்ள 6,41,000 ரூபாய் வரி வருமானத்தை விட கூடுதலானது என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் அருண்குமார், இது தவிர மேலும் நியாய மான வரி வருமானத்திற்கான வழியினையும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மத்திய அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.10,00,000 கோடி வரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மக்கள் நலத் திட்டங்கள் மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்க முடியும் என்கிறார் அருண்குமார்.

இது ஒரு புறம் இருக்க கருப்புப்பணத்தின் தாக்கம் குறித்து காண்போம். கருப்புப் பணத்தின் மதிப்பு இந்திய நாட்டு அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும் அந்நிய நாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்துள்ள கோடான கோடி ரூபாய்களை கைப்பற்றினால் என்ன நடக்கும்? 1456 பில்லியன் டாலர் கருப்புப் பணம் (ரூ.72,80,000 கோடி) சுவிஸ் நாட்டு வங்கிகளில் மட்டும் உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த பணத்தை இந்திய நாட்டில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 45 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.1,00,000 என பிரித்து கொடுக்கலாம். அல்லது இந்தியாவிற்கு தற்போது உள்ள அனைத்து வெளிநாட்டு கடன்களையும் ஒரே தவணையில் செலுத்தலாம். அப்படி செலுத்தினாலும், நம்மிடம் வெளிநாட்டு கடன் மதிப்புப் போல் 12 மடங்கு தொகை மீதம் இருக்கும். இந்த உபரி தொகையை நியாயமான முறையில் முதலீடு செய்தால், இதன் மூலம் கிடைக்கும் ஆண்டு வட்டி மத்திய அரசாங்கத்தின் நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆண்டு வருமானத்தை விட அதிகமாக கிடைக்கும். அப்படி கிடைத்தால் தற்போது நிதி நிலை அறிக்கையில் விதிக்கும் அனைத்து வரிகளையும் ரத்து செய்துவிடலாம். வரியே இல்லாத ஒரு பொருளின் விலையை எண்ணிப்பாருங்கள்! இடதுசாரிகள் கருப்புப்பணத்தை குறித்தும் சுவிஸ் வங்கிகளில் உள்ள இரகசிய கணக்குகள் குறித்தும் தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்துவந்ததின் விளைவாக கருப்புப்பணம் குறித்த விழிப்புணர்வு ஓரளவு மக்களிடையே ஏற்பட்டது. அதன் விளைவாகவே சுவிஸ் வங்கியில் உள்ள இந்திய கருப்புப்பணம் குறித்த விபரங்கள் ஓரளவு வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் மதிப்பு ரூ.72,80,000 கோடி என்றாலும், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ரூ.108,00,000 கோடி இருக்கும் என்பதே இடதுசாரி பொருளாதார வல்லுனர்களின் மதிப்பீடு ஆகும். இந்திய நாட்டு மக்களை சுரண்டி அந்நிய நாட்டு வங்கிகளில் சேர்த்து வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து இன்று முதலாளித்துவ கட்சிகள் பேச ஆரம்பித்துள்ளன. காரணம் உண்மையாகவே கருப்புப்பணத்தை கைப்பற்றுவதற்காக அல்ல, அவற்றை காப்பாற்றுவதற்காகவே அவைகள் உள்ளன என்பது சமீப காலத்திய நடவடிக்கைகளிலிருந்து தெளிவாகிறது.கருப்புப் பணம் குறித்து பாரத பிரதமர் மன்மோகன் சிங் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், கருப்புப் பணத்தை மீட்க 20 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியா உலகம் முழுவதும் 85 நாடுகளுடன் இரட்டை வரி விதிப்பு முறை குறித்து ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், 25 நாடுகளுடன் விரிவான முறையில் வரி திருத்தம் குறித்து பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இன்றுவரை இந்நடவடிக்கைகளினால் கருப்புப்பணம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை.

இந்த ஆண்டு (2010) ஆகஸ்ட் மாதம் சுவிஸ் அரசும் இந்திய அரசும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. அது இரட்டை வரி விதிப்பு முறையை தவிர்ப்பதற்கான ஒரு ஏற்பாடாகவே உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சுவிஸ் நாட்டு வங்கிகளில் உள்ள கணக்குகளின் விபரத்தை பெற முடியும் என இந்திய அரசு கருதுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா சுவிஸ் நாட்டை மிரட்டி 4000 அமெரிக்கர்கள் வைத்துள்ள கணக்கின் விபரங்களை தர ஒப்புக்கொள்ள வைத்துவிட்டது. ஆனால் இந்தியாவால் இன்னும் கணக்கு வைத்து இருப்பவர்களின் பட்டியலை பெற முடியவில்லை. சுவிஸ் வங்கிகள் சங்கத்தின் சர்வதேச தொடர்பாளர் ஜேம்ஸ் நாசன் என்ப வர் இது குறித்து குறிப்பிடுகையில், ‘எங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் களின் இரகசியம் காப்பாற்றப்படும் என்றும், நியாயமற்ற இரகசிய விசாரணைகள் உறுதியாக தடை செய்யப்படும்’ என்றும் அறிவித் துள்ளார். வரி ஏய்ப்பர்களுக்கும் வரி ஏமாற்றுபவர்களுக்கும் சுவிஸ் நாட்டு சட்டங்கள் பாதுகாப்பு அளிக்கின்றன. ஆரம்பகாலத்தில் இத்தகையவர்கள் குறித்த விபரத்தினை வெளியிட சுவிஸ் நாட்டு அரசு மறுத்து வந்தாலும், இன்று ஒவ்வொரு நாடும் வரி ஏய்ப்பவர்கள் மற்றும் வரி ஏமாற்றுபவர்கள் குறித்த விபரங்களை முறையாக கொடுத்தால் அவர்களின் கணக்கு விபரத்தை தர தயார் என அறிவித்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் விவா திக்கப்பட்டும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் ஆக்கப்ப+ர்வமான பலன் ஏதும் இல்லை. காரணம் இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களே கருப்புப் பணத்தின் உடைமையாளர்களாக உள்ளனர்.

எனவே இவர்களால் வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணத்தை கைப்பற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது. மாறாக அவற்றை பாதுகாப்பதற்கான முயற்சியிலே ஈடுபடுவார்கள். சமீபத்தில் வெளிப்பட்ட ஊழல் களான, காமன்வெல்த் நகரம் அமைப்பதில் முறைகேடு, தொலைத் தொடர்பு அலைவரிசைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு, சுனாமியால் பாதிக்கப்பட்டவர் களுக்கான நிவாரணப் பணிகளில் முறையீடு என இலட்சக் கணக்கான கோடி ரூபாய் முறைகேடுகள் அம்பலமாகியும் கடும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், அவர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி யுள்ளதிலிருந்தே இந்த அரசு யாருடைய அரசு என அறியமுடியும். கருப்புப்பணத்தின் ஊற்றுக் கண்ணாக உள்ள லஞ்சம் என்பது இன்று சட்டப்பூர்வ மாகிவிட்டது.

செல்வ செழிப்பான இந்தியா ஒரு காலத்தில் அந்நிய நாட்டினரால் சுரண் டப்பட்டது. இன்று இந்திய ஆட்சியாளர் களால் சுரண்டப்பட்டு வருகிறது. இந்திய நாட்டு மக்களில் சரி பாதி மக்கள் தினம் ஒரு வேளை உணவு மட்டும் உட்கொள்கின்றனர் என்ற நிலை ஆட்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.