தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Saturday, May 14, 2011

Election Counting proceedure

வாக்கு எண்ணிக்கை வழிமுறைகள்
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 12-05-11

தமிழக தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணப்படும் இடத்தில் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் வாக்கு எண்ணப்படும் விபரம் குறித் தும், முடிவுகள் அறிவிக்கப்படும் நடைமுறை குறித்தும் விரிவாக கூறப்பட் டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் மட்டுமின்றி, இந்த நடைமுறையை பொதுமக் களும் அறிந்திடுவது அவசியமாகும்.

வாக்கு எண்ணிக்கை முகவர்களின் கவனத்திற்கு

* வாக்கு எண்ணிக்கை நாளன்று சரியாக காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணிக் கை அறைக்குள் சென்றுவிட வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப் பட்ட அடையாள அட்டையை தவறாமல் கொண்டுசெல்ல வேண்டும்.

* தேர்தல் நடத்தும் அதிகாரி முன் ‘வாக்க ளித்தல் இரகசியத்தை காத்திடல்’ குறித்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெ ழுத்திட வேண்டும்.

* வாக்கு எண்ணப்படும் அறைக்குள் செல் போன்கள் கொண்டு செல்லக் கூடாது. அப்படி கொண்டு செல்லப்படும் செல் போன்கள் வாக்கு எண்ணிக்கை அறைக்கு வெளியே அதிகாரிகளால் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.

* வாக்கு எண்ணப்படும் மேஜைக்கும் முகவர்கள் உள்ள இடத்திற்கும் இடை யில் வாக்கு எண்ணிக்கையை தெளி வாக பார்க்கும் வகையில், கம்பி வலைகள் அல்லது மூங்கில் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டு இருக்கும். இதைத் தாண்டி முகவர்கள் செல்லக் கூடாது.

* தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட் சிகள், மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பிற மாநிலத்தில் அங்கீகரிக்கப் பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங் கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சைகள் என வரிசைக்கிரமமாக முகவர்கள் வாக்கு எண்ணப்படும் இடத்தில் அமர்வதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

* வாக்கு எண்ணப்படும் அறையிலிருந்து ஒரு முறை முகவர்கள் வெளியேறினால் மீண்டும் அறைக்குள் வர அனுமதிக் கப்படமாட்டார்கள்.

* உணவு, தேனீர் அரசு அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்படும். வெளியே செல்ல அனுமதி இல்லை. புகை பிடித்தல் கூடாது.

பொதுவாக, முகவர்கள் வாக்கு எண்ணிக் கையின்போது, தங்களுடைய வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன என்பதற் காகவோ அல்லது குறைவான வாக்குகள் கிடைக்கின்றன என்பதற்காகவோ கவனக் குறைவாக இருப்பது நல்லதல்ல. ஒவ்வொரு சுற்றிலும் கவனம் தேவை. வாக்கு எண்ணிக் கையின்போது வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் மேஜைக்கு அருகே வந்து பார்வையிட வாய்ப்பில்லை. எனவே மேஜை பொறுப்பில் உள்ள முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முறை

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து வாக்கு எண்ணப்படும் மேஜைகளின் எண்ணிக் கை அதற்கேற்றவாறு இருக்கும். ஆனால் 14 மேஜைகளுக்கு மேல் இருக்காது. ஒவ் வொரு மேஜைக்கும் ஒவ்வொரு வேட்பாள ருக்கு ஒரு முகவர், இருக்க அனுமதிக்கப்படு வார். வேட்பாளரின் தலைமை முகவர், தேர்தல் நடத்தும் அதிகாரி அருகிலிருந்து அவர் மேற் கொள்ளும் பணியினை பார்வையிடலாம்.

* வாக்குச்சாவடியில் இருந்து பெறப்பட்ட, கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக் குகள் எண்ணப்படும். கட்டுப்பாட்டுக் கரு வியுடன் வாக்குச் சாவடி தலைமை அதி காரி பூர்த்தி செய்து, முகவர்களின் கை யொப்பம் பெற்று தனது கையொப்பத்துடன் அனுப்பிய படிவம் 17-சி ஒவ்வொரு மேஜைக்கும் கட்டுப்பாட்டுக் கருவியுடன் கொண்டுவரப்படும். எண்ணிக்கைக்கு முன்பாக, வாக்குச்சாவடியில், கட்டுப் பாட்டுக் கருவிக்கு வைக்கப்பட்டுள்ள ‘சீல்’ நல்ல முறையில் உள்ளதா என்ப தை கண்டறிய வேண்டும். வாக்குச் சாவடி அதிகாரியால் சீல் செய்ய பயன்படுத்தப் பட்ட பச்சை நிற முத்திரை எண் 17-சி யில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுடன் ஒத்து வருகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதுவே முக்கியமானது. சீல் சேதமடைந்திருந்தாலோ, முத்திரை எண் மாறுபட்டிருந்தாலோ முகவர்கள் அந்த கட்டுப்பாட்டுக் கருவி எண்ணிக்கைக்கு உட்படுத்தப்படுவதை ஆட்சேபித்து மறுக்க வேண்டும். இத்தகைய கட்டுப் பாட்டுக் கருவி குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணை யமே இறுதியில் முடிவு செய்யும்.

* கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள, வாக்குப்பதிவு முடிவு பட்டன் மேல் உள்ள சீல் முகவர்கள் முன்னிலையில் உடைக் கப்பட்டு, பட்டன் அழுத்தப்படும். தற்போ து கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள திரை யில், ஒவ்வொரு வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை காண முடியும். அவசியம் எனில் வாக்குப்பதிவு முடிவு பட்டனை மீண்டும் அழுத்தி வாக்கு எண்ணிக்கையை திரும்பவும் அறியலாம். இதை ஒவ்வொரு மேஜையி லும் உள்ள வாக்கு எண்ணிக்கை மேற் பார்வையாளர் 17-சி படிவத்தில் பதிவு செய்து கையொப்பமிடு வார். முகவர்களும் இந்த படிவத்தில் கையொப்பமிடலாம். முகவர்கள் வாக்குப்பதிவு தினத்தன்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடமிருந்து பெறப்பட்ட 17-சி படிவத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை முகவரிடம் அளிக்க வேண்டும்.

* தலைமை முகவர், மேஜை முகவர்களி டமிருந்து பெற்ற 17-சி படிவத்திற்கும் ஒவ் வொரு மேஜையிலிருந்து பெறப்பட்ட 17-சி படிவத்திற்கும் ஒத்து வருகிறதா என்று சரிபார்க்க வேண்டும். அல்லது இக்குறிப் பிற்கு மேஜை வாரியாக ஒவ் வொரு சுற்றி லும் வாக்கு எண்ணிக்கை குறித்து முக வர்கள் ஒரு குறிப்பேட்டையும் பராமரிக் கும் வகையில் ஏற்பாடு செய்தால் நல்லது.

* வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சுற்றிற்கும் முடிவில் தேர்தல் வாக்கு எண் ணிக்கை பார்வையாளர் அங்கொன்றும், இங்கொன்றுமாக இரு மேஜைகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கருவியினை எடுத்து மீண் டும் ரிசல்ட் பட்டனை அழுத்தி அதிலுள்ள விபரமும், 17-சி படிவத்தில் கொடுக்கப் பட்ட விபரமும் சரியாக உள்ளதா என ஒப் பிட்டுப் பார்ப்பார். அவருக்கு உதவ ஒவ் வொரு மேஜையிலும் மத்திய அரசு அல் லது பொதுத்துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் விபரங்களை சேகரித்து அளிப்பார்.

* ஒவ்வொரு சுற்றிலும் அனைத்து மேஜை களிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் நடத்தும் அதிகாரி விபரங்களைப் பெற்று, முதல் சுற்று எண்ணிக்கை விபரத் தை அறிவித்த பிறகுதான் அடுத்த சுற்று எண்ணிக்கை துவங்கும்.

* வாக்கு எண்ணப்படும் முறை குறித்தும், வாக்கு எண்ணும் அதிகாரிகளின் நடத் தை குறித்தும் சந்தேகம் ஏற்படின் அல் லது ஆட்சேபணை இருப்பின், முகவர்கள், வேட்பாளர்கள் அல்லது தலைமை முகவர் கள் மூலமாகவோ அல்லது தானோ தேர் தல் நடத்தும் அதிகாரிக்கு புகார் கொடுக்க லாம். வாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் எவரும் வாக்குவாதத்தில் இறங்கக் கூடாது.

* வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியால் படிவம் 20-ல் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் அறிவிக் கப்படும். இதற்கு பிறகே அடுத்த சுற்று எண்ணிக்கை தொடங்கும். முடிவுத்தா ளில் முடிவினை எழுதி தேர்தல் அதிகாரி கையெழுத்திடுவதற்கு முன்பாக மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான கோரிக்கை வேட்பாளராலோ அவரது முகவர்களாலோ உரிய காரணங்களோடு அளிக்கப்படலாம்.

* ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமரா மூல மும், வீடியோ மூலமும் வாக்கு எண்ணும் பணி நேரடியாக பதிவு செய்யப்படுகிறது

தபால் வாக்குகள் எண்ணிக்கை

* முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக் குகள் எண்ணும் பணி துவங்கும். இப் பணி 8.30மணிக்குள் முடியவில்லை என் றாலும், 8.30 மணிக்கு கட்டுப்பாட்டுக் கரு விமூலம் வாக்கு எண்ணிக்கை தொடங் கப்படும்.

* தபால் வாக்குகள் 13-இ என்ற கவரில் இருக்கும். இதனை திறந்து அதனுள் உள்ள 13-அ மற்றும் 13-ஆ, கவர்களை எடுக்க வேண்டும். முதலில் 13-அ கவரில் உள்ள உறுதிமொழிப் படிவம் முறை யாக பூர்த்தி செய்யப்பட்டு, வாக்காளர் கையொப்பமிட்டு இருக்க வேண்டும். அதை உரிய அலுவலர் மேலொப்பம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு இல்லை எனில் 13-ஆ (வாக்குச் சீட்டு உள்ள கவர்) திறக்கப்படாமல் நிராகரிக்கப் பட வேண்டும். உறுதிமொழி படிவம் சரி யான முறையில் இருந்தால் 13-ஆ கவர் பிரிக்கப்பட் டு அதி லுள்ள வாக்குச்சீட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். முன்னதாக இந்த வாக்குச் சீட்டுகள் செல்லத்தக்கதா? முறையான வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என் பதையும் கண்டறிய வேண்டும். பின்னரே வாக்குகளை எண்ண வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டுக் கரு விகளில் வாக்கு எண்ணிக்கை முடிவ டைவதற்கு இரண்டு சுற்றுக்களுக்கு முன்னர் தபால் வாக்குகள் எண்ணிக்கை வெளியிடப்பட வேண்டும்.

* வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் வேட்பாளர் அல்லது அவரின் முகவர்கள் முன்னிலையில் கட்டுப்பாட்டுக்கருவி யில் உள்ள பேட்டரிகள் அகற்றப்பட்டு, மீண்டும் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியின் முத்திரை வைக் கப்படும். வேட்பாளரின் முத்திரையும் இதில் வைக்கலாம். இப்பணியிலும் முக வர்கள் முழுமையான கவனம் செலுத்தப் பட வேண்டும். அனைத்து கட்டுப்பாட்டுக் கருவிகளின் பேட்டரிகளும் நீக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பிற்கு கொண்டு செல்லப்படும்வரை கவனம் தேவை. குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி அமையுமானால் மறு வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

Monday, May 9, 2011

Crorebathi CMs in India

கோடீஸ்வர முதலமைச்சர்கள்
-க.ராஜ்குமார் -
நன்றி - தீக்கதிர் - 10-05-11

இந்தியாவில் உள்ள 30 முதலமைச் சர்களில், 24 முதலமைச்சர்கள் கோடீஸ் வரர்கள் என தகவல்கள் வெளியாகி யுள்ளது. 30 முதலமைச்சர்களின் சொத்து மதிப்பீடு அவர்கள் தேர்தலில் போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அளித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 236 கோடி ரூபாய் ஆகும். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங் களில் உள்ள இடதுசாரி அரசுகளின் முத லமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டிய லில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய் யும்போது ஒவ்வொரு வேட்பாளரும் தனது சொத்து மதிப்பு குறித்து உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என 2003-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்த ரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படை யில் பெறப்பட்ட தகவல்களே முதல மைச்சர்களின் சொத்து குறித்து கிடைத் துள்ள தகவல்கள் ஆகும். ஆனால் இந்த தகவல்களே குறைத்து கொடுக்கப்பட் டுள்ளன என்றும் இது குறித்து வரு மானவரித்துறை ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒரு கருத்து உள்ளது. ஏனெனில் தற்போது மேற்கண்ட முதலமைச்சர்கள் கொடுத் துள்ள தகவல்களில் பெரும்பான்மை யோருக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் அவர்களின் வங்கி இருப்புத் தொகை சொற்பத் தொகையாகவும் காட் டப்பட்டுள்ளது.

அண்மையில், ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கோடீஸ்வர முதலமைச் சர்களின் பட்டியலில் முதல் இடத்தை உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் மாயாவதி பிடித்துள்ளார். பள்ளி ஆசிரி யையாக இருந்த மாயாவதி இன்று 2010ல் ரூ.87 கோடிக்கு அதிபதியாக உயர்ந்துள் ளார். 2007-ல் இவரது சொத்து மதிப்பு ரூ.52 கோடி என இவர் கணக்கு காட்டி யுள்ளார். இந்த மூன்று ஆண்டு காலத்தில் 67 விழுக்காடு இவரது சொத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. 2007-2008 வரி விதிப்பு ஆண்டில் இவர் ரூ.26 கோடி வரி செலுத்தி இந்தியாவில் அதிக மான வரி செலுத்துவோர் பட்டியலில் முதல் இருபது இடத்தில் உள்ளார்.

பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளவர் தமிழ்நாட்டின் முதலமைச் சர் கருணாநிதியாவார். இவரின் சொத் தின் மதிப்பு ரூ.44 கோடி ஆகும். இவரது துணைவியார் தயாளம்மாளுக்கு ரூ.17.34 கோடியும் மற்றொரு துணைவியாருக்கு ரூ.18.68 கோடியும் உள்ளது என கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் இவரது மகன்கள், பேரன்கள் சொத்து மதிப்பு ஏதும் சேராது. 2010-ல் சன் டி.வியில் இருந்து தனக்கு ரூ.100 கோடி பங்கு தொகை கிடைத்ததாகவும், இதற்கு ரூ.22.50 கோடி வருமானவரி செலுத்தி யிருப்பதாகவும், இதில் தான் 10 கோடி ரூபாய் வைத்துக்கொண்டு, மீதியை தனது குழந்தைகளுக்கும் அறக்கட் டளை நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டதாகக் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இப்பட்டியலில் மூன்றாவது இடத் தைப் பிடித்துள்ளவர், காங்கிரஸ் கட்சி யை சேர்ந்த சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஆவார். இவர் 2009ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையின்படி இவருக்கு ரூ.23 கோடி சொத்து உள்ளது.

இவருக்கு அடுத்ததாக, பிஜேபியை சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் எடியூ ரப்பாவிற்கு 2008-ம் ஆண்டில் அவர் காட்டிய சொத்து மதிப்பு ரூ.2 கோடியாக இருந்தாலும், தற்போது அவரின் சொத்து இந்த வருடம் ரூ.11 கோடியாக உயர்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தனது தொகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு ஒன்றும் உள்ளது.

சிரோன் மணி அகாலிதள தலை வரும், பஞ்சாப் முதலமைச்சருமான பிர காஷ் சிங் பாதலுக்கு உள்ள சொத்தின் மதிப்பு ரூ.9.20 கோடியாகும். (2007) ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் பஞ் சாப் முழுவதும் ஹெலிகாப்டரில் சென்று வந்ததற்குமட்டும் ரூ.33 கோடி செலவிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் கர்கோன் நகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள டிரிடென்ட் ‘ஹில்டன் என்ற ஹோட்டலில் இவ ருக்கு 85 விழுக்காடு பங்கு உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

மற்ற கோடீஸ்வரர்கள் பட்டியல் தொடர்கிறது

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள சொத்தின் மதிப்பு ரூ.8.11கோடி

ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ. 7.89 கோடி, நாகலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ ரூ.7.23 கோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மகாராஷ்டிர முதல்வர் பிரித்வி சவாண் ரூ.6.81 கோடியும், பாண்டிச்சேரி முதலமைச்சர் வி.வைத் தியலிங்கத்திற்கு ரூ.5.70 கோடியும், அசாம் முதலமைச்சருக்கு ரூ.4.94 கோடியும், சிக்கிம் முதலமைச்சர் பாவன் சாம்லிங்கிற்கு ரூ.3.82 கோடியும், ஹரியானா முதலமைச்சர் பி.எஸ். ஹமூடாவிற்கு ரூ.3.74 கோடியும், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு ரூ.3.49 கோடியும், மேகாலயா முதல்வர் முகுல் சங்மாவிற்கு ரூ.3.42 கோடியும், கோவா முதலமைச்சர் திகம்பர் காமத் திற்கு ரூ.3.23 கோடியும், மிசோராம் முதல் வர் பு லல்தன் வாலாவிற்கு ரூ.2.29 கோடியும்,

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ரூ.1.5 கோடியும், ஜார்கண்ட் முதல்வர் அர்ஜூன் முன்டாவிற்கு ரூ.1.33 கோடியும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு ரூ.1.23 கோடியும், தில்லி முதலமைச்சர் ஷீலாதீட்ஷித்திற்கு ரூ.1.18 கோடியும், இமாச்சலப் பிரதேச முதல்வர் பி.கே.துமாலுக்கு ரூ.1.18 கோடியும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டிற்கு ரூ.1.04 கோடியும், சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கிற்கு ரூ.1 கோடியும் சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற முதல்வர்களின்

சொத்து மதிப்பு

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் புத்ததேவின் சொத்து மதிப்பு ரூ.46.20 இலட்சம், கேரள முதல்வர், அச்சுதானந்தன் சொத்து மதிப்பு ரூ.16.09 லட்சம், திரிபுரா முதல மைச்சர் மாணிக் சர்க்கார் சொத்து மதிப்பு ரூ.8.11 லட்சம் எனவும் தகவல்கள் வெளி யிடப்பட்டுள்ளன. பட்டியலில் கடைசி மூன்று இடத்தில் இரண்டு இடம் கம்யூ னிஸ்டு முதலமைச்சர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகாலம் மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் வர் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது இங்குள்ள அரசி யல்வாதிகளுக்கு திகைப்பூட்டும் செய்தியாக இருக்கும்.

உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணை யமும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலமாக மக்கள் தங்கள் முதலமைச் சர்கள் குறித்து அறிந்துகொள்ள ஓரள விற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் ஏழைப்பங்காளர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சிக் கும் தலைவர்களின் முழுமையான சொரூபம் இன்னும் வெளிப்படவில்லை என்பதே உண்மையாகும். வருமானவரி ஏய்ப்பவர்கள் பட்டியலிலும், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டிய லிலும், கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டிய லிலும் உள்ளவர்களின் பெயர்கள் வெளி யிடப்பட்டால், இவற்றிலும் இந்நாள் முன் னாள் முதலமைச்சர்களின் பல பெயர் கள் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐய மில்லை.

Sunday, May 1, 2011

மே தின வரலாறு

மேதினி போற்றும் மேதினம்!
-க.ராஜ்குமார் -

நன்றி தீக்கதிர் - 01-05-11
1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங் களது இன்னுயிரை இதற்காக விலை யாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது.

1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார் வெஸ்டர் என்ற கம்பெனியின் முன் னால் திரண்டிருந்த 500 தொழிலாளர் களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற் றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தன மாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமுற்ற னர். பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமு வேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர் கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறை யினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயி ரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உரிமைக் குரல்

இந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர் கள் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி கைது செய்யப் பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன் றத்தில் விசாரணை செய்யப் பட்டு, 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம்தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்ட னர். மேற்கண்ட நான்கு தோழர்களு டன், அடால்ப் பிட்சர், மைக்கேல் ஸ்வார்ப், சாமுவெல் பீல்டன், லூயிஸ் லிங்க் மற்றும் ஆஸ்கர் நீப் ஆகிய தோழர் களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழ ருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற தோழர்களுக்கு மரண தண் டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடை பெற்றன. இதன் விளைவாக ஸ்வார்ப் மற்றும் பீல்டன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந்தேதியன்று தூக்கிலிடப்பட் டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறை யிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

நீதிமன்றத்தில்

உரிமைக் குரல்

சிகாகோ நகர தொழிலாளர் களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர் களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். நீதிமன் றத்தில் இவர் மீது குற்றம் சுமத்தி வாதா டிய அரசு வழக்குரைஞர், ‘ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் இவர் பின்னால் அணிதிரண்டதே இவர் செய்த முதன் மையான குற்றம்’ என வாதிட்டார். ஆகஸ்ட் ஸ்பைஸோ, ‘இந்த குற்றச் சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்து விட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட் டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டி ருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற் றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரி யத்தோடு உரைத்தார்.

மற்றொரு தோழர் ஆல்பர்ட் பர் ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில், மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரண தண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்ப்பரித்தார்.

ஆஸ்கர் நீபி என்ற தோழர், கல வரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வ தாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்க ளுக்கு நான் தலை வன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.

அடால்ப் பிட்சர் என்ற தோழர் நீதி மன்றத்தில் உள்ள காவலர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இவர்களா சட்டத்தின் காவலர்கள்? இவர்கள் திரு டர்கள். அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள் என எக்காளமிட்டார்.

தோழர் மைக்கேல் ஸ்வாப், நீதி மன்றத்தில் தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோச லிசத்தை அடைவதே என்று பிரக டனப்படுத்தினார்.

தோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலா ளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இது கூட இவர்களுக்கு இன்று உத்தரவா தப்படுத்தப்படவில்லை என்று முழக்க மிட்டார்.

தோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங் கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெய ரில் அபகரித்து விடுவோம் என நினைக் கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல. யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினார்.

முதலாளித்துவத்திற்கு சாவுமணி!

சுரண்டப்படும் தொழிலாளர்களை திரட்டி, சோசலிச உணர்வுகளை ஊட்டி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதை ஒடுக்கவே, காவல்காரர்களே குண்டு வீசி சதி செய்து, தங்கள் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிந்தி ருந்தும், மே தின தியாகிகள் சிறிதும் அஞ்ச வில்லை. நீதிமன்றத்தில் வாதாடுவது மூலம் தாங்கள் தண் டனையிலிருந்து தப்பமுடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் கொலைக்களத்தை யும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி முதலாளித்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்து, சோசலிசத்தின் மேன் மையை தூக்கிப் பிடித்து, நீதிமன்றத் தில் அவர்கள் ஆற்றிய உரையும், ஆதிக்க சக்திகளின் திணறலையும், வரலாற்று ஆவணமாக மாற்றிய அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட வார்த்தை களே இல்லை. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர் களுக்கு கிடைத்த மரண தண்ட னையே முதலாளித்துவத்திற்கு அடிக் கப்பட்ட முதல் சாவு மணியாக மாறி யது. அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாக இன்று உருவெ டுத்து உள்ளது. மே தின தியாகிகள் வாழ்க!