தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, August 10, 2011

New Pension Scheme - a story

ஓய்வூதியம் சுமையானது?
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் 10-08-11
மத்திய அரசு நாடாளுமன்ற கடந்த கூட் டத்தொடரின் இறுதி நாள் அன்று புதிய ஓய் வூதிய திட்டத்திற்கான மசோதாவை மக்கள வையில் தாக்கல் செய்தது. ஆளும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப் பினர்கள் பெரும்பாலானோர் இல்லாத நிலை யில் தாக்கல் செய்யப்பட்டதை அறிந்த மார்க் சிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழு தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா இதற்கு எதிர்ப்பு தெரி வித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். வேறு வழியின்றி சபாநாய கரும் வாக்கெடுப்புக்கு விட மசோதாவை திரும்பப் பெறவேண்டிய நிலையில், காங்கி ரஸ் வெட்கமின்றி பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாகட்சி தலைவர்களிடம் சென்று கெஞ்சி ஆதரவைப் பெற்றது. இப்படி ஆளும்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் சேர்ந்து கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதிய மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றிட மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

கடந்த 2003-ல் அன்று ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய ஓய்வூதிய திட்டம் இன்றுவரை உழைப்பாளி மக்களின் போராட்டங்களினா லும் இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகள் காரணமாகவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனினும் நிர்வாக உத்தரவின் மூலம் மத்திய அரசும், சில மாநில அரசுகளும் இதனை அமல்படுத்தி வருகின்றன. சட்டப்பூர்வமான அங்கீகாரம் இதற்கு இல்லாத காரணத்தினால் இந்த திட்டத்தை எதிர்த்து தட்சிண இரயில்வே ஊழியர் சங்கத்தின் சார்பில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் இந்திய அரசியல் சட்டத் திற்கு எதிராக சட்ட ரீதியான ஒப்புதல் இதற்கு இல்லை என்றும் எனவே புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஊழியர்களை பழைய, வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றும் இடைக் கால தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும் தற் போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மசோதா நிறைவேற்றப்படுமானால் இந்த தீர்ப்பும் பயனற்றதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசுகள் எதிர்ப்பு

இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருந்தாலும் அவை ஆளும் மாநிலங்களிலேயே புதிய ஓய் வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆரம்பக்காலத்தில் மத்திய அரசு அமைத்த ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத் துடன் (ஞகுசுனுயு) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் இன்று ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை செலுத்தாமல் உள்ளன. 19-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 5 மாநிலங்கள் மட்டுமே சந்தா தொகையை செலுத்தியுள் ளன. தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்கள் தொகையை செலுத்தாமல் அனாமத்து கணக் கில் வரவு வைத்துள்ளன. இதன் பொருள் இத்தகைய மாநிலங்களில் 1.01.2004-க்குப் பிறகு பணியில் அமர்த்தப்பட்ட அரசு ஊழியர் களுக்கு புதிய ஓய்வூதிய திட்டமும் இல்லை; பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமும் இல்லை என்பதாகும்.

6-வது ஊதியக்குழுவிற்காக, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகை கள் குறித்து ஆய்வு செய்த டாக்டர் கே.காயத் திரி பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து தனது அறிக்கையில், மத்திய அரசு தற்போது (2004-ல்) இதற்காக ஒதுக்கீடு செய்ய வேண் டிய தொகை ரூ.14,284 கோடியாக உள்ளது. இது 34 ஆண்டுகளில் (2004-38) ரூ.57,088 கோடியாக உயர்ந்து, மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் சுமையாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே பல்வேறு மாநில அரசுகள் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்டாலும் தற்போது அமல்படுத்த தயங்கி வருகின்றன. தமிழ்நாட் டில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போ தைய தமிழக முதல்வர் தனது ஆட்சி அமைந் தால் புதிய ஓய்வூதிய திட்டம் அகற்றப்பட்டு, அனைவரும் ஓய்வூதியம் பெறும் வகையில் பென்சன் திட்டம் அமல்படுத்ததப்படும் என அறிவித்தார். தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த புதிய ஓய்வூதிய மசோதாவை எதிர்த்து இடசாரிக்கட்சிகளு டன் அண்ணா திமுகவும் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய அரசு, நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்துள்ள மசோதாவில் அரசுப்பணிகளில் புதிதாக சேரும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே (1-01-2004 முன்னதாக பணியில் அமர்த்தப்பட் டவர்கள்) பணியாற்றிவரும் ஊழியர்களுக்கும் மற்றும் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை மாற்றியமைக்க அதிகாரம் வழங் கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலானோர், ஓய்வு பெற்றவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் மத்திய அரசு கைவைப்பது என்பது இயலாது என்றும் அரசியல் சட்டம் 309 பிரிவின் கீழ் தங்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்றும் விவாதித்து வருகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா சட்டமா கும் நேரத்தில், மத்திய-மாநில அரசுகள் பணி யில் இருப்பவர்களாக இருந்தாலும் ஓய்வு பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களின் ஓய்வூ தியத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை பெற்று விடுகின்றன என்பதே உண்மையாகும்.

எஜமான விசுவாசம்

அரசுஊழியர்களுக்கும் பயன் இல்லாமல் அரசுகளுக்கும் பயன் இல்லாமல் உள்ள ஒரு திட்டத்தை கொண்டுவர காங்கிரசும் பிஜேபி யும் சேர்ந்து அவசரப்படுவதின் நோக்கம் என்ன? உலக வங்கியும், பன்னாட்டு நிதி அமைப்பும் கொடுக்கும் நிர்ப்பந்தத்தின் காரணமா கவே இன்று புதிய ஓய்வூதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே உண்மை யாகும்.

புதிய ஓய்வூதியம் திட்டம் என்று பேசப் படும்போது, இது ஏதோ, மத்திய-மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒரு சில பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சம்பந்தப் பட்ட விஷயமாக கருதப்படுகிறது. சமூகபாது காப்பு திட்டம் என்ற பெயரில் அரசு 2009-ல் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கென கொண்டுவரப்பட்டுள்ள பென்சன் திட்டத் தின் கதியும் இதுதான். தொழிலாளர்களிட மிருந்து பெறப்படும் சந்தா தொகை பங்குச் சந் தைக்கு அனுப்பப்பட்டு, அதன் ஏற்ற இறக்கங் களின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என் பதே மத்திய அரசின் திட்டமாகும். சில தொழிற்சங்கங்களும் மத்திய அரசும் இந்த திட் டத்தை தூக்கிப் பிடித்தாலும் ஊழியர்கள் இதை நிராகரித்து விட்டார்கள். இந்த திட்டத் தில் அரசின் பங்களிப்பு ஏதும் கிடையாது. ஊழியர்களின் பங்களிப்பை வைத்து சூதாடும் நாடகம்தான் புதிய சமூக பாதுகாப்புத்திட்டம். அதனால்தான் இந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 50,000 தொழிலாளர்கள் கூட இதுவரை இந்த திட்டத்தில் சேரவில் லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு இந்த சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு போது மான நிதியினை ஒதுக்கிட முன் வரவேண் டும். ஆக்கப்பூர்வமான திட்டமாக செயலாற்ற வேண்டும் என்பதே பொருத்தமாக இருக்கும். அதை தவிர்த்து, பங்குச் சந்தைக்கு பணத் தை அள்ளிச் செல்லும் நோக்கத்தோடு செயல்பட்டால் அது கடுமையான விளைவு களை சந்திக்க நேரிடும். இதுவே இன்று பல் வேறு மேலை நாடுகளில் நடந்தேறிவருகி றது. அர்ஜென்டினாவில் இருபது ஆண்டு காலமாக இருந்து வந்த புதிய பென்சன் திட் டம் இன்று விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

நாட்டுடமையாக்கப்பட்ட ஓய்வூதியம்

உலகம் முழுவதும் பென்சன் தனியார் மயமாக்கப்பட்டு வரும் இந்நேரத்தில் பொலி வியா நாட்டில் பென்சன் நாட்டுடமை ஆக்கப் பட்டுள்ளது. ஆம்.! உண்மைதான்! அந்நாட்டு அதிபர் ஈவோ மொரேல்ஸ் இதற்கான உத் தரவை பிறப்பித்துள்ளார். அது மட்டுமல்லா மல் அந்நாட்டில் பென்சன் பெறுவதற்கு வயது ஆணுக்கு 65 என்றும் பெண்ணுக்கு 60 என்றி ருந்ததை 58 மற்றும் 55 ஆக குறைத்தும் ஆணையிட்டுள்ளார். இதே காலகட்டத்தில் மேலை நாடுகளில் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியிருப்பதால் அங்கு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது. பென்சன் பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்க்கும் நமது நாட்டு ஆட்சி யாளர்களுக்கு பொலிவியா நாட்டில் பென் சனை அரசே ஏற்க முன் வந்திருப்பது அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கும்.

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான இயக்கங்கள் இந்தியாவில் வலுவடைந்து வருகின்றன. கடந்த 22-07-11 அன்று தலை நகர் தில்லியில் நடைபெற்ற தேசிய கருத் தரங்கில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், இரயில்வே ஊழியர்கள், காப்பீட்டுத்துறை ஊழியர்கள், ஆகியோரின் அமைப்புகளும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் அமைப்புகளும் இணைந்து நாடுதழுவிய இயக்கங்கள் நடத் திட முடிவு செய்துள்ளன. மக்கள் மத்தியில் இப்பிரச்சனையை கொண்டு செல்லும் வகை யில் முதலில் கையெழுத்து இயக்கம் நடத் திடவும், பின்னர் தில்லியில் நாடாளுமன்றத் தை நோக்கி பேரணியாக சென்று முறையீடு அளிப்பது என்றும், அதே நாளில் அனைத்து மாநில தலைநகரங்களிலும், பேரணி சென்று ஆளுநரிடம் முறையீடு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன.

கடந்த 10 ஆண்டுகாலமாக புதிய ஒய்வூ திய திட்டத்திற்கு எதிராக இரண்டு வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இம்முறை நடைபெறவுள்ள இந்த இயக்கங்களில் இது வரை கண்டிராத ஒற்றுமை உருவாக்கப்பட் டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் ஏற்கெ னவே அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்கள் என கோடிக்கணக் கான ஊழியர்கள் ஒன்று திரண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதிய திட்டத் திற்கான மசோதாவை பிஜேபியின் ஆதர வோடு எளிதாக சட்டமாக்கிவிடலாம் என கருதிகொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு ஒரு கடுமையான எதிர்ப்பை மக்கள் மன்றத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்: பொருளாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்