தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, June 27, 2012

Veelchiyum Yeluchiyum

    பொருளாதார வீழ்ச்சியும் மக்கள் எழுச்சியும்!


                                                              -க.ராஜ்குமார்
                                              
                                                   நன்றி தீக்கதிர்

 
முதலாளித்துவ வளர்ச்சி என்பது அதன் அழிவினை நோக்கி என்றார் காரல் மார்க்ஸ். இன்றைய நிகழ்வுகள் இது உண்மை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன. 1992-ல் சோவியத் ரஷ்யாவின் சிதைவுக்குப் பிறகு, முதலாளித்துவத்திற்கு மாற்று ஏதும் இல்லை என்று உரத்த குரலில் பலர் கொக் கரித்தனர். முதலாளித்துவமே இறுதி கட்டம்; இதுவே முடிவானது என்றனர். உலகெங்கும் சோசலிசத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த கட்சிகள் கூட தங்களை கம்யூனிஸ்டுகள் அல்லது சோசலிஸ்டுகள் என்று சொல்ல அஞ்சின. கட்சியின் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள முடிவு செய்தன. இருபது ஆண்டு கள் கடந்த நிலையில் முதலாளித்துவ நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யும், அதிலிருந்து மீள முடியாமல் அவை தடு மாறுவதும் இனி முதலாளித்துவம் நீடித் திருக்க முடியாது என்பதையே நமக்கு உணர்த் துகின்றன. 21ஆம் நூற்றாண்டு என்பது சோச லிச அமைப்பிற்கு உலகை கொண்டு செல்வ தற்கான ஆண்டு என்பதில் ஐயமில்லை. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகொண்டு நடத்தி வரும் போராட்டங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன.



அமெரிக்காவிற்கு என்ன நேர்ந்தது?



இன்று சோவியத் ரஷ்யா என்ற அமைப்பு இல்லை. உலகில் உள்ள எந்த ஒரு நாட்டிற் குள்ளும் அமெரிக்க ராணுவம், அனுமதியில்லா மல் அத்துமீறி நுழையலாம். கேட்பாரில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட லாம். பொருளாதாரத் தடை விதிக்கலாம். ஐ.நா. சபையின் தீர்மானத்தை காலில் போட்டு மிதிக்கலாம். தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட் டால் தம்பி சண்டபிரசங்கன் என்பார்கள். அப்படி ஆட்டம் போடும் அமெரிக்காவிற்கு இப் போது என்ன வந்துவிட்டது.? ‘ஹிலாரி கிளிண்டன் ஏன் உலகம் முழுவதும் பறந்து பறந்து நாடுகளுடன் பொருளாதார நடவடிக் கைகளுக்கான ஒப்பந்தங்களை செய்து வரு கின்றார்? அமெரிக்க அதிபர் சிக்கன நடவ டிக்கை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து வெளி நாடுகளுக்கு அவுட்சோர்சிங் முறை யில் வேலை தரும் தனது நாட்டிலுள்ள கம் பெனிகளுக்கு வரி விதித்து வருகின்றார். தொடர்ந்து அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதத்திற்கு மேல் எட்டவில் லையே ஏன்? டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதே. உலகம் முழுவதும் நாடுகள் தங்க ளுக்குள் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி (செலாக், பிரிக்ஸ் போன்று) வர்த்தகத்திற்கு தங் கெளுக்கென தனி நாணயமுறையை ஏற் படுத்தி வருகின்றனவே அது ஏன்? அமெரிக் காவில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டதே! நாள் தோறும் அந்நாட்டில் உள்ள வங்கிகளில் ஒரு வங்கி மூடப்பட்டு வரு கின்றதே? “வால் ஸ்டிரீட்டை கைப்பற்று வோம்” என்று போராட்டத்தை துவக்கிய அமெ ரிக்க மக்கள் “வாஷிங்டன்னையே கைப் பற்றுவோம்” என்று வீறு கொண்டு எழுந்து போராடுகிறார்களே ஏன்? முதலாளித்துவம் தான் இறுதியானது என்றால் இவர்களுக்கெல் லாம் தீர்வு காண முடியாமல் திணறுவது ஏன்? இந்தியா போன்ற நாடுகளிடம் கையேந்தி நிற்பது ஏன்?



மாற்றம் ஏன்?



உலகம் முழுவதும் முதலாளித்துவ நாடு களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் இடதுசாரி சக்திகள் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதற்கு என்ன காரணம்?. பிரான்ஸில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்துள் ளனர். கீரிஸ் நாட்டில் இடதுசாரிகள் கை ஓங்கிவருகின்றது. அமெரிக்காவைச் சுற்றி யுள்ள இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடது சாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றி வரு கின்றன. வெனிசுலா உள்ளிட்ட நாடுகளில் நிலச் சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளன. எண்ணெய்க் கிணறுகள் பொதுவுடைமையாக் கப்பட்டுள்ளன. இவையெல்லாம் சோவியத் ரஷ்யா சிதைந்த இருபது ஆண்டுகள் கடந்த பிறகுதானே நடைபெறுகின்றன. போட்டியே இல்லாத நிலையில் ஏன் முதலாளித்துவம் காலாவதியாகி வருகின்றது. தன்னைச் சுற்றி இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட நாடு கள் வளர்ந்துவருவதை ஏகாதிபத்திய அமெரிக் காவால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.



உலகம் முழுவதும் பொருளாதார பின்ன டவை முதலாளித்துவ நாடுகள் சந்தித்து வரு கின்ற நிலையில் சீனப் பொருளாதாரம் மட்டும் வளர்ந்து வருகின்றதே, அதற்கு என்ன கார ணம். முதல் இடத்தை நோக்கி சீனாவின் வளர்ச்சி இருப்பதை சமீபத்தில் நடந்த ஜி-20 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள மடி பிச்சையேந்தி நிற்கின்றது என் பதுதானே உண்மை.



முதலாளித்துவத்திற்குக் முட்டுக்கொடுக்க முடியுமா?



முதலாளித்துவத்திற்கு இன்று ஏற்பட் டுள்ள இத்தகையப் போக்கைத்தான் காரல் மார்க்சும், ஏங்கெல்சும் முன்னறிந்து நமக்கு தெளிவுபடுத்தினர். முதலாளித்துவம் சுயமாக இயங்கும் தன்மையுடையது. அது பங்கேற் பாளர்களின் விருப்பத்திற்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு தன்னைத்தானே இயக்கிக் கொள்கிறது என்பதே மார்க்சியம். மூலதனத் திரட்சி என்பது முதலாளித்துவத்தின் நெருக் கடியின் உச்சகட்டம் என்றும் முதலாளித் துவம் தனக்குத்தானே சவக்குழியை பறித்துக் கொள்ளும் என்றும் அவர்கள் பகன்றனர். அது தான் இன்றைய முதலாளித்துவத்தின் கதி யாக உள்ளது. 2008-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிலிருந்து மிக விரைவில் மீளும் என்று சிலர் ஆரூடம் கூறினர். ஆனால் ஆண் டுகள் 4 ஆகியும் முதலாளித்து வீழ்ச்சியி லிருந்து அது மீள முடியாமல் திணறிவருகின் றன. வெறும் தங்கத்தையும் பணத்தையும் கொண்டு பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லாத முதலாளித்துவம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை உலகமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.



சமீபத்தில் மெக்ஸிகோ நாட்டில் நடை பெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில், கடன் சுமையில் சிக்கித் திவாலாகும் நிலையில் உள்ள 17 ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமையை சரிப்படுத்த ஐஎம்எப்-க்கு 43 ஆயிரம் கோடி டாலர் நிதி உதவி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. நமது இந்திய நாடு பங்கேற்றுள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பு இதற்காக 7500 கோடி டாலர் நிதியுதவி அளிப்பதாக அறி வித்துள்ளது. இதில் இந்தியா மட்டும் 1000 கோடி டாலர் ( இந்திய ரூபாயில் மதிப்பு ரூ.57 ஆயிரம் கோடி ரூபாய்) ஆகும். ‘அம்மாபாடு அவலம் கும்பகோணத்தில் கோதானம்’ என்று சொல்வதைப்போல; ஒரு நேர உணவோடு உறங்கச்செல்லும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட இந்தியா, அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கு உதவப் போகிறதாம். அது சரி இப்படி சில நாடுகள் உதவுவதன் மூலம் முதலாளித்துவத்திற்கு (நாடுகளுக்கு) ஏற்பட்ட நெருக்கடியை சரிக் கட்ட முடியுமா என்பதுதான் நமது கேள்வி. எந்த அளவிற்கு தூக்கிப் பிடித்தாலும் முதலா ளித்துவத்தின் வீழ்ச்சியை தடுத்த நிறுத்த முடியாது. இன்று உலகம் முழுவதும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்ற போராட் டங்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.



சரித்திரம் திரும்புகிறது



ஜி-20 நாடுகள் எடுத்துள்ள முடிவு ‘பிரெட்டன் உட்ஸ் கோட்பாடுகளுக்கு’ முர ணானது என்பதுதான் வேடிக்கையாகும்.



(பிரெட்டன் உட்ஸ் என்பது ஐ.நா.சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதி ஆணையம் ஆகிய வற்றை உருவாக்குவதற்காக நடத்திய சிறப்புக் கூட்டத்தின் முடிவுகள் பற்றியதாகும்) ஐஎம் எப்-ம் உலகவங்கியும் மூன்றாம் உலக நாடு களின் (இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு கள்) நிர்வாகத்தை கண்காணிக்கும் வேலை களுக்காகவும், அத்தகைய நாடுகளுக்கு முத லாளித்துவ நாடுகள் மூலமாக, அந்நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவது என்ற பெயரில் நிதி மூலதனத்தை அனுமதித்து, அந்நாட்டு அரசு நிர்வாகத்தில் தலையிட்டு, நிபந்தனைகள் விதித்து, அந்நாடுகளின் இறையாண்மையை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புக ளாகும். ஆனால் இன்று ஐஎம்எப்-க்கு மூன் றாம் உலக நாடுகள் நிதியுதவி செய்து அதன் மூலம் முதலாளித்துவ நாடுகளின் பொருளா தார நெருக்கடிக்கு முட்டுக்கொடுக்கும் வகை யில், ஜி-20 நாடுகள் நிறைவேற்றிய தீர்மானம் அமைந்துள்ளது. சரித்திரம் திரும்புகிறது என்பதையே இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது.



தனது பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களை திசை திருப்ப தனது சொந்த நாட்டி லேயே பொது எதிரியாக ‘பயங்கரவாதத்தை’ முன்னிறுத்திய அமெரிக்கா, ஒசாமா பின்லேட னின் கொலைக்குப் பிறகு, ஆப்கானிஸ் தானில் தொடர்ந்து ராணுவத்தை வைத்து பரா மரிக்க முடியாமல் திணறும் நிலைக்கு வந்த பிறகு, மேலும் மேலும் உலக அரங்கில் அம் பலப்பட்டு வருகின்றது. என்ன காரணத்திற் காக நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டதோ, அதை மீறி அதனை விரிவாக்கம் செய்து, தனக்கு முட்டுக்கொடுக்க அதை பயன்படுத்த அமெ ரிக்கா முயற்சி செய்கிறது. இன்று அதன் கூட் டாளி நாடுகளில் இத்தகைய ராணுவ நட வடிக்கைகளில் தங்கள் நாடு ஈடுபடுவதை மக்கள் விரும்பாமல் கிளர்ந்து எழுந்து போராடு வதும், தங்கள் இராணுவ வீரர்கள் பிறநாட்டில் சென்று செத்து மடிவதை விரும்பாத மக்கள், அவர்களை திரும்பப்பெற வலியுறுத்தியதன் காரணமாக தங்கள் இராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக்கொள்ளும் போக்கும் அமெ ரிக்காவை அச்சத்தில் ஆழத்தியுள்ளது. தனது கட்டுப்பாட்டில் இருந்து கூட்டாளிகள் வில கிச்செல்வதை செய்வதறியாது அமெரிக்கா பார்த்துவருகிறது.



பிரச்சனைக்கு காரணம் என்ன?



அதி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக உற்பத்திப்பெருக்கம், அதனால் செல்வக் குவிப்பு ஒரு புறமும் வேலை யின்மை, வறுமை பெருக்கம் என மறுபுறமும் சமூகத்தில் சரிசமமற்ற நிலையை உருவாக்கி வரும் இந்த முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கமைப்பு, “இயற்கையான ஒழுங் கமைப்பு அல்ல” “இயற்கை விதிகளுக்கு உட் பட்டதும் இல்லை”. ஆகவே மனிதகுலம் விடு தலை பெற வேண்டுமெனில் இத்தகைய அமைப்பை தூக்கியெறிய வேண்டிய அவ சியம் உலகம் முழுவதும் இன்று ஏற்பட்டுள் ளது. மார்க்சியக் கோட்பாட்டின்படி. முதலாளித் துவ அமைப்பின் இயக்கம் என்பது அதன் இயற்கையான நிகழ்வுப்போக்கிலிருந்து அதன் முடிவை நோக்கி தவிர்க்க முடியாத அதன் இறுதிக் கட்டத்தை நோக்கிச்செல்லும் என்பதே இன்றைய நிகழ்வுகளாக உள்ளன. இருபதாம் நூற்றாண்டு துவக்கம் என்பது உலகம் சோசலிச அமைப்பில் காலடி எடுத்து வைக்கும் நுழைவு வாயில் என்ற எண்ணத் துடன், எழுச்சியுடன் செயல்படுவோம்.

















Wednesday, April 4, 2012

தலித் மக்களுக்கு அநீதி!
-க.ராஜ்குமார் -
நன்றி தீக்கதிர் 29-03-12


தமிழக அரசின் 2012-13ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலையறிக்கையில், பட்டியலினத்தவருக்கான துணைத்திட்டத் திற்காக, இதுவரை எப்போதும் ஒதுக்கப்படாத அளவில் 6108.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளதாக நிதியமைச்சர் பெருமையடித்துக் கொண்டார். இது மாநிலத்தின் இந்த ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில் 21.82 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டு இதே தலைப்பின் கீழ் தமிழக அரசு ஒதுக்கிய தொகை ரூ.5007 கோடியாகும். இது சென்ற நிதியாண்டில் மாநிலத்தின் ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில் 21. 27 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு மேல் நிதிநிலை அறிக்கை யை தாக்கல் செய்துள்ள நிலையில், 0.55 சத வீதம் அதிகரித்து வழங்கியிருப்பதைத்தான் நமது நிதியமைச்சர் இதுவரை எப்போதும் ஒதுக்கப்படாத அளவில் ஒதுக்கப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ளார். சென்ற நிதியாண்டில் பட்டியலினத்தவருக்கான துணைத்திட்டத் தில் ஒதுக்கப்பட்ட தொகை எந்தெந்த இனங் களில் செலவிடப்பட்டுள்ளது என்ற விபரத் தினை நிதியமைச்சர் சட்டமன்றத்தில் வைக்க முன்வருவாரா? என்பதே நமது கேள்வியாகும். அலங்கார வார்த்தைகளைக் கொண்டு, மிகைப்படுத்தி காட்டுகின்ற காகிதப் பூ வாகத்தான் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை உள்ளது.

பூனை பங்கு பிரித்த அப்பம்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘தாட்கோ’ நிறுவனம், தாழ்த்தப்பட்ட மக்களுக் காக மானியத்துடன் கூடிய கடன் உதவி செய்து வருகிறது. மாவட்டம் தோறும் தாட்கோ நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறு வனத்தின் மூலம் கடந்த 2011-12 ஆம் நிதி யாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடன் வழங்க தமிழக அரசு மூலதனப் பங்காக ஒதுக் கிய தொகை ரூ.26 கோடியாகும். ஆனால் இந்த நிதியாண்டில் அது சரிபாதியாக குறைக்கப்பட் டுள்ளது. தமிழக அரசின் மூலதனப் பங்காக ரூ.13.26 கோடிதான் இந்த நிதிநிலை அறிக் கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன் னெப்போதும் ஒதுக்கப்படாத தொகையை பட் டியலின மக்களுக்கு ஒதுக்கியதாக சொல்லும் பட்ஜெட்டில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடன் வழங்கும் தாட் கோ நிறுவனத்திற்கு வழங்கப்படும் பங்கு மூல தனத்தை சரிபாதியாக நிதியமைச்சர் குறைத் துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் மீது அண்ணா திமுக அரசிற்கு எந்த அளவிற்கு அக்கறை பாருங்களேன். பூனை அப்பத்தை பங்கு பிரித்துக் கொடுத்த கதைதான் நினைவுக்கு வருகிறது.

சென்ற ஆண்டும் இந்த ஆண்டும்

அதுமட்டுமல்ல, கடந்த நிதியாண்டில் (2011-12) பழங்குடியின இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தவும், தற்போது செயலாக்கத்தில் உள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடு, வறுமை ஒழிப்புத் திட்டங்களோடு ஒருங் கிணைந்த முன்னோடி திட்டத்திற்கு ரூ.246 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிதிநிலையறிக்கையிலோ இத்த கைய இனங்களுக்கு ரூ.50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் துரோகமிழைக்கப்பட் டுள்ளது என்று சொன்னால் அது மிகை யாகாது. தாழ்த்தப்பட்ட மாணவ-மாணவி களுக்கு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் சைக்கிள் வழங்க அரசு ரூ.43 கோடி ஒதுக் கீடு செய்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சைக்கிள் கொடுப் பது தொடர்பாக ஏதும் சொல்லப்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் தலித் மாணவர்களுக்கு மாதாந்திரப் படி முறையே ரூ.450 லிருந்து ரூ.650ம், ரூ.550 லிருந்து ரூ.750ம் உயர்த்தி கொடுக்கப்பட் டிருப்பதாக நிதிநிலையறிக்கையில் சொல்லப் பட்டுள்ளது. இது ஏதோ தலித் மாணவர் களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருப்பது போல, அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடி யினர் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் வழங்கும் வகையில் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையில் இதே தொகையை கல்வி உதவித்தொகை பெறும் ஏனைய மாணவர்களுக்கும் அரசு கொடுத்துவருகிறது என்பதுதான் உண்மை யாகும். வெறும் வார்த்தை ஜாலங்கள் மூலம் தலித் மக்களை ஏமாற்றிவிடலாம் என அரசு நினைத்துள்ளது.

தலித் மக்களின் பணம் எங்கே போகிறது?

இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசு, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகள் எப்படி செலவிடப்படுகின்றன என்பது குறித்து ஒரு பரிசீலனை மேற்கொண்டால் வேதனையே நமக்கு மிஞ்சும். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வீட்டுமனை வழங்குவதற்காக அரசு ஒவ் வொரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் ஒதுக் கீடு செய்யும் தொகையில் நிலங்களை ஆர் ஜிதம் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட அதி காரிகள் கிராமத்தில் உள்ள ‘பிரபலங்களின்’ உதவியோடு அரசு விலைக்கு மேல் விலை கொடுத்து நிலத்தை வாங்கி பகிர்ந்துகொடுத் தால் உண்டு, இல்லை என்றால் அதுவும் கிடையாது. இத்தகைய இனங்களுக்காக ஒதுக்கிடும் தொகை செலவிடப்படாமலேயே அரசு கஜானாவிற்கே திரும்பி வந்துவிடும் நிலையும் உள்ளது. இதற்கு அதிகாரிகளை காரணம் காட்டி அரசு தப்பித்துக்கொள்கிறது. உண்மையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இன்று வெளிநாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆர்ஜிதம் செய்து தர முடிகின்ற அரசால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து தருவதற்கு எது தடையாக இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவு படுத்த முன்வர வேண்டும்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்த பின்னும் கிராமங்களில், இறந்துபோன தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கம் செய்ய சுடுகாடு கிடையாது. சுடுகாடு இருந்தால் அதற்கு பாதை கிடையாது. இவ்விரண்டிற் காகவும், தலித் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குடிக்க நீர் கிடையாது. குடி நீருக்காக பல மைல்கள் நடந்து சென்று சுமந்துவர வேண்டிய அவல நிலையில்தான் இன்றும் ஏழை தலித் மக்கள் உள்ளனர். தலித் மக்களுக்காக அரசால் ஏற்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி, பாதை வசதி செய்து தரவேண்டும் என ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படு கிறது. இந்த நிதி எதற்காக செலவிடப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தடுமாறும் தாட்கோ

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத் திற்காக தமிழக அரசு ‘தாட்கோ நிறுவனம்’ ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கடன் தர ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அரசு கவனம் செலுத் துவதில்லை. ஆண்டு முழுவதும் உண்டு உறங்கிவிட்டு நிதியாண்டின் முடிவில் தாழ்த் தப்பட்ட மக்களின் கடன் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, கடன் அனுமதிப்பதற்காக அவர்களை நிர்ப்பந்தம் செய்து, இறுதியாக வங்கிக்கு விண்ணப்பங்களை தாட்கோ நிறு வனம் அனுப்புகின்ற போது நிதியாண்டு முடி வுறும் தறுவாய் ஆகிவிடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வங்கிக்கு சென்றாலொ எந்த வங்கியும் உடனடியாக கடன் தருவதில்லை. தாழ்த்தப் பட்ட மக்களை ஒருவழியாக இழுத்தடித்து, கடனே வேண்டாம் என்று சொல்லுமளவிற்கு வங்கிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

முரண்டு பிடிக்கும் வங்கிகள்

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், தாட்கோ அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட் டத்தில் உள்ள முன்னோடி வங்கிகளின் அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதிக்கப் படும் விண்ணப்பங்களை வங்கிகள் எளிதாக நிராகரித்துவிடுகின்றன. இதற்கு தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளும் விதிவிலக் கல்ல. தனியார் வங்கிகளோ ஒருபடி மேலே போய் பயனாளிகளுக்கு ஏன் கடன் தர வில்லை என்பதைக் கூட தெரிவிக்க வேண் டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவிக்கின்றன. சமீபத்தில் கரூரை தலை மையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் வங்கி ஒன்று ஈரோடு மாவட்டத்தில் தலித் மக்களுக்கு கடன்தர மறுத்ததின் விளைவாக ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தலையிட்டு நியாயம் கேட்டு போராடி வருகின்றது. அந்த தனியார் வங்கி, மாவட்ட நிர்வாகத்தின் உத் தரவையோ முன்னோடி வங்கியின் வழிகாட்டு தலையோ ஏற்கத் தயராக இல்லை. மாவட்ட ஆட்சித் தலைவரும், முன்னோடி வங்கியின் அதிகாரியும் செய்வதறியாது திகைத்துப்போய் நிற்கின்றனர். தலித்மக்களுக்கு கடன் தந்தால் திரும்ப வராது என்று தப்புக் கணக்கு போடும் வங்கிகள், சமீபத்தில் கிடைத்துள்ள புள்ளி விபரத்தில் வங்கியில் கடன் வாங்கி சரியாக திருப்பிச் செலுத்துபவர்களில் தலித் மக்கள் முன்னணியில் உள்ளனர் என்ற உண்மையை காண மறுக்கின்றன. தலித் மக்களுக்கு எதி ராக செயல்படும் இத்தகைய வங்கிகள் மீது மத் திய-மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன.

தமிழக அரசால் அறிவிக்கப்படும் திட்டங் கள் அதிகாரிகளால் நிறைவேற்றப்படுகின் றதா? தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் செல விடப்படுகின்றதா என்று கண்காணிக்க வேண்டிய அரசே, இந்த நிதிகளை வேறுவழி யில் கையாளுகின்றன என்ற உண்மையை அறியும்போது வேதனைதான் ஏற்படுகிறது.

தலித் மக்கள் வறுமையிலிருந்து விடுபடு வது, அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைவது என்பது ஒட்டுமொத்த இந்திய மக்க ளின் வறுமையை போக்குவதும், பொருளாதார முன்னேற்றம் காண்பதும் ஆகும் என்ற உண்மையை மத்திய-மாநில அரசுகள் உணர வேண்டும். இத்தகைய உணர்வினை மத்திய -மாநில அரசுகளுக்கு புகட்டும் வகையில் சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் தலித் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இணைவது என்பதே சரியான தீர்வாக அமையும்.

Monday, January 23, 2012

வாரிய அட்டை
-க.ராஜ்குமார் -


நன்றி தீக்கதிர் 23-01-2012

புதிதாக கட்டப்பட்டுவரும் அந்த கட்டிடத்தின் அருகே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, எட்டி எட்டி பார்த்துவிட்டு புலம்பிக் கொண்டே சென்றனர்.

என்ன பலமான அடியா?

சரியான அடிபோல இருக்கு

நடுத்தர வயது இருக்கும் போல..

உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. தப்பிச்சுட்டான்.

-இப்படி சிலர்.

வீட்டுக்காரர் ஏதாவது உதவி செய்வாரா?

அவரு ஏன் செய்யறார்? அவரு தான் கான்ட்ரக்ட் விட்டுவிட்டாரு இல்ல. இஞ்சினியர் செஞ்சாதான் உண்டு.

தனியார் ஆஸ்பத்திரிக்கு போனா ரூ.25000க்கு குறையாது.

-இப்படி சிலர்.

நான் சாரம் கட்டும்போதே சொன்னேன். கயிறு பழையது என்று, மேஸ்திரி புதிதாக வாங்கித் தர சங்கடப்பட்டார். இப்போ செந் தில் கால்தான் உடைந்தது.. இது சகதொழிலாளியின் புலம்பல்.

சாரம் சர சர வென்று சரியும் சத்தம் கேட்டு அவரு எட்டிக் குதிச் சுட்டாரு. அதனாலே தப்பிச்சிட் டாரு. இல்லைன்னா அவ்வளவு தான். அவர் போட்ட சத்தத்திலே நாங்கெல்லாம் விலகி ஓடிப்போ னோம், தப்பிச்சோம்... இது கூட வேலை செய்துகொண்டிருந்த சித்தாள்.

செந்திலோ வலி தாங்கமுடியா மல் கதறிக்கொண்டே இருந்தான்.

இவர்கள் இப்படி பேசிக்கொண் டிருக்க, அங்கு வந்த முதியவர் ஒரு வர் எல்லோரையும் பார்த்து ஆளுக்கு ஆள் இப்படி பேசிக் கொண்டிருந்தா எப்படி? யாராவது அடிபட்ட ஆளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேண்டாமா என்று பொதுவாகக் கடிந்துகொண்டார்.

செந்தில் வீடு பக்கம்தான். அவ ரது மனைவிக்கு சொல்லியிருக்கு. அவங்க வந்துடுவாங்க என்று ஒரு வர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,

அய்யோ.. என்னங்க ஆச்சு உங் களுக்கு.. என்று உரத்தக் குரலில் அழுதுகொண்டே, இடுப்பில் ஒரு குழந்தையுடன் வந்து சேர்ந்தாள் செந்திலின் மனைவி.

ஒண்ணுமில்லை. காலில் சரி யான அடி. கவர்ன்மெண்ட் ஆஸ்பத் திரிக்கு கொண்டுபோகலாம்.. மற் றதை பின்னால் பார்த்துக்கொள்ள லாம். மேஸ்திரி வரட்டும் என சக தொழிலாளிகளின் ஆலோசனை.

அங்கு வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி கவர்ன்மெண்ட் ஆஸ்பத் திரிக்கு அடிபட்டவரை கொண்டு போகனும் என்று சொல்ல,

ஆட்டோக்காரர் கேட்டார், பலத்த அடியா? உயிர் இருக்கிறதா?

அய்யய்யோ காலில்தான் அடி. எழுந்திருக்க முடியாம கிடக்கிறாரு என அவரது மனைவி கதற,

இருவர் சேர்ந்து செந்திலை ஆட் டோவில் ஏற்றி கூட அவரது மனை வியையும் அனுப்பிவைத்தனர். நீங்க முன்னாலே போங்க, நாங்க பின்னா டியே வர்றோம் என்றனர் செந்தி லின் நண்பர்கள்.

ஆஸ்பத்திரிக்கு சென்று சேர்ந் தவுடன், ஆட்டோவிலிருந்து செந் திலை எப்படி இறக்குவது என்று அவரது மனைவி தெரியாமல் புலம் பிக்கொண்டிருந்தார்.

ஆட்டோக்காரர், யாராவது தெரிந் தவர்கள் இருந்தால் கூப்பிடு, சிலையாட்டம் நின்னுக்கிட்டு இருந்தா எப்படி என்று அவரது பங்கிற்கு செந் திலின் மனைவியை கடிந்துகொள்ள,

செந்திலோ வலி தாங்க முடியா மல் ஆட்டோவில் கதறிக்கொண் டிருந்தார். அக்கம்பக்கம் நின்று கொண்டிருந்தவர்களிடம் செந்தி லின் மனைவி கெஞ்ச, அவர்கள், உள்ளே போய் சொல்லு ஸ்ட்ரெச்சர் வரும் என்று ஆலோசனை சொன் னார்கள்.

அவசர அவசரமாக உள்ளே போய் செந்திலின் மனைவி வழி யில் பார்த்தவர்களிடம் கெஞ்ச அவர்கள் ‘காசுவாலிட்டிக்கு’ கொண்டு போ இங்குவந்து கத்தாதே என்று கடிந்துகொண்டனர். செந்திலின் மனைவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் ஆட்டோ இருக்குமிடத்திற்கே ஓடிவந்தாள். கையில் குழந்தையுடன்.

அதற்குள் ஆட்டோக்காரர் தனக்கு அவசரம் என்று அவருக்கு தெரிந்த சிலரை அழைத்து செந் திலை கீழே இறக்கி அமரவைத் திருந்தார். செந்திலின் மனைவியை கண்டவுடன் எங்கே போயிட்டே? நான் போக வேண்டாம் என்று முகம் காட்ட, செந்திலின் மனைவி தனது இடுப்பில் இருந்த ரூபாயை எடுத்து ஆட்டோக்காரரிடம் நீட்டி னாள். ஆட்டோக்காரர் அந்த ரூபாயை பெற்றுக் கொண்டு திருப்பி திருப்பி பார்த்தார். அது போதாது என்பதை தெரிந்துகொண்ட செந்திலின் மனைவி, அண்ணா.. என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது. பின்னால் தர்றேன் என்று சொல்ல அவளை ஏற இறங்கப் பார்த்த ஆட்டோ டிரைவர், பரவாயில்லை நீ போய் உன் புருஷனை பாரு என்றார்.

மனம் ஒடிந்து போயிருந்த செந் திலின் மனைவிக்கு இந்த வார்த் தையே பெரும் நம்பிக்கையை அளித்தது.

மீண்டும் ஆஸ்பத்திரிக்குள் போய் காசுவாலிட்டியை கண்டு பிடித்த செந்திலின் மனைவி தனது கணவன் அடிபட்டதையும் வெளி யில் அமர்ந்திருப்பதையும் கூறி அவரை அழைத்துவர ஸ்ட்ரெச்சர் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்களோ போலீசுக்குச் சொல்லிட்டியா? முதலில் போலீ சில் போய் புகார் கொடுத்து அவர் களிடமிருந்து கடிதம் கொண்டுவா என்றனர்.

செந்திலின் மனைவி என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க, அவளைப் பார்த்து இரக்கப்பட்ட ஒருவர், ஆஸ்பத்திரிக்குள்ளேயே போலீஸ் அவுட்போஸ்ட் ஒன்று உள்ளதை காட்டி அங்கேபோய்ச் சொல் என்று சொன்னார். செந் திலின் மனைவி இதைக்கேட்ட வுடன் தெம்பு பெற்றவளாக போலீஸ் அவுட் போஸ்டிற்கு சென்றாள்.

அங்கு அமாந்திருந்த காவலரி டம் நடந்ததைச் சொல்ல அவர் சாவகாசமாக, போய் ஒரு வெள் ளைப் பேப்பர் ஒரு குயர் வாங்கி வா. உன்னிடம் ஸ்டேட்மெண்ட் வாங்க வேண்டும் என்றார். வெள்ளை பேப் பர் எங்கே வாங்குவது என்று தெரி யாமல் திணறிய செந்திலின் மனைவி கடை எங்கே இருக்கிறது என்று பலரையும் கேட்டு தெரிந்து கொண்டு ஒரு குயர் பேப்பர் வாங்கிக் கொண்டு வந்து காவலரிடம் கொடுத் தார்.

அதைப்பெற்றுக்கொண்டு, நடந்த விபரத்தை கேட்டறிந்து ஸ்டேட் மெண்ட் வாங்குவதற்குள் நான்கு முறை ஒண்ணும் தெரியாத நீயெல் லாம் ஏன் வெளியே வர? எங்க உயிரை வாங்கற? என்று செந்தி லின் மனைவியை திட்டித் தீர்த்தார்.

அவர் கொடுத்த புகார் பெற்றுக் கொண்டதற்கான ரசீதை பெற்றுக் கொண்டுவந்து காசுவாலிட்டியில் காண்பிக்க, அவர்கள் ஒரு ஸ்ட்ரெச் சரை அனுப்பி வைத்தனர். அவர் களை செந்தில் அமர்ந்துகொண் டிருந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் செந் திலின் மனைவி.

அப்போது அங்கு வந்திருந்த செந்திலின் நண்பர்கள் அவளைப் பார்த்து கேட்டனர். இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்? உன் புரு ஷனை தனியாக விட்டு விட்டு.

செந்திலின் மனைவி அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டாள்.

செந்திலின் நண்பன் ஒருவன் செந்திலின் மனைவியை பார்த்து, தலைவருக்கு போன் பண்ணிச் சொல்லியிருக்கேன். அவரு இப்போ வந்துறேன்னு சொன்னாரு. எங்கே செந்திலின் வாரிய அட்டை? வந் தவுடனே தலைவர் கேட்பாரு என்று கேட்க, அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் அடி பட்ட கணவனைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றாள்.

Wednesday, January 18, 2012

லோக்பால் மசோதாவை முடக்கிய ஆளும் கட்சி

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!
-க.ராஜ்குமார்-

நன்றி தீக்கதிர்


நாடே பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லோக்பால் மசோதாவை காங்கிரஸ் தனக்கே உரிய தந்திரமான வழி முறைகளை பின்பற்றி மாநிலங்களவை யில் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொண்டது.

மத்திய அரசின் கீழ் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் மத்திய அரசில் பங் கேற்கும் அரசியல்வாதிகள் ஆகியோரின் ஊழல்கள் குறித்த புகார்களை விசாரிப் பதற்கு ‘லோக்பால்’ என்ற மத்திய அமைப் பும், இதேபோன்று மாநிலஅளவில் புகார் களை விசாரிக்க ‘லோக் அயுக்தா’ என்ற அமைப்பும் உருவாக்குவது என்பதே லோக்பால் மசோதாவின் நோக்கமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத் தாராம் யெச்சூரி குறிப்பிட்டிருப்பதுபோல், 44 ஆண்டுகாலமாக இந்த மசோதாவை, ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி முடக்கி வைத்துள்ளது. முதன்முதலில், 1968-ம் ஆண்டு மே மாதம் 9-ந்தேதி, 4வது மக்க ளவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற் றப்படுவதற்கு முன்னதாக மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியாகி விட்டது. பின்னர் 5-வது மக்களவையில் 11-08-1971ல் கொண்டுவரப்பட்டு, நிறை வேற்றப்பட்ட லோக்பால் மசோதாவும் இதேபோல் மாநிலங்களவையில் நிறை வேற்றப்படுவதற்கு முன்னதாக மக் களவை கலைக்கப்பட்டதால் காலாவதி யாகிவிட்டது.

தொடர்ந்து 1977, 1985, 1989, 1991, 1996, 1997, 2001ம் ஆண்டுகளில் லோக்பால் மசோதா குறித்து பேசப்பட்டு, மக்கள வையில் மசோதா கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்படாமல் போய்விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கால கட் டங்களில் பிஜேபி ஆட்சியில் இருந்த காலகட்டமும் உண்டு. இப்போது பிஜே பியும், காங்கிரசும் மசோதா நிறைவேறாமல் போனதற்கு ஒன்றையொன்று குற்றம் சுமத்திக்கொண்டுள்ளன.

நடந்து முடிந்த கூட்டத்தொடரின் போது, மத்திய அரசின் முயற்சிக்கு தொடர்ந்து, மூன்று முக்கிய பிரச்சனை களில் தோல்வி கிடைத்துள்ளது. நாடாளு மன்றம் நடைபெற்றுக்கொண்டிருக் கும்போதே அமைச்சரவை கூடி சில் லரை வணிகத்தில் அந்நிய நிறுவனங் களின் முதலீடுகளை அதிகரிக்க அனு மதி அளித்ததை எதிர்த்து எதிர்க்கட் சிகள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடத்திய போராட்டங்களின் விளைவாக அந்த முடிவிலிருந்து மத்திய அரசு பின்வாங்க வேண்டியிருந்தது.

இரண்டாவதாக, ஓய்வூதிய நிதி முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கான (ஞஞகுசுனுயு) மசோ தாவை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொ டரில் மக்களவையில் தாக்கல் செய் திருந்த மத்திய அரசு, இக் கூட்டத் தொடரில் எப்படியேனும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று துடித்தது. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிஜேபி தலைவர் அத்வானியை சந்தித்து ஆத ரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் இறுதி நேரத்தில் காங்கிரஸ் கூட் டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இம்மசோதாவை திருத்த வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததின் காரணமாக மத்திய அரசு இக் கூட்டத்தொடரில் இம் மசோதாவை நிறைவேற்றுவதற்கான முயற்சியை கைவிட்டது.

மூன்றாவதாக, லோக்பால் மசோ தாவை மக்களவையில் நிறைவேற்றிய அரசு, அதற்கான சட்டத் திருத்தத்திற்கு போதுமான ஆதரவினை பெற தவறிய தாகும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 உறுப்பினர்கள் கட்சி கொறடா உத்தர வினை மீறி இம்மசோதாவிற்கு வாக் களிக்க மக்களவைக்கு வரவில்லை என் பது குறிப்பிடத்தக்கது. இதன் கூட்டணிக் கட்சிகளின் 7 உறுப்பினர்களும் மக்கள வைக்கு வராமல் இருந்துவிட்டனர். இத் தகைய பின்னணியில்தான் மாநிலங்கள வைக்கு லோக்பால் மசோதா கொண்டு வரப்பட்டது. மக்களவையிலும், மத்திய அமைச்சரவையிலும் இம்மசோதா குறித்து வாய் திறக்காத காங்கிரஸ் கட்சி யின் கூட்டணிக் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற முடியாமல் தடுத்தது ஆச்சரி யமளிப்பதாக உள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் ரஜினிதி பிரசாத் என்பவர் அமைச்சர் நாராயணசாமியின் கையில் இருந்த மசோ தாவின் நகலை பறித்து அவையில் கிழித் தெறிந்த காட்சியை பார்த்து நாடே வெட்கி தலை குனிந்தது. அது சமயம் மாநிலங் களவையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடத்தில் அமர்ந்து இந்த காட்சியை ஆர்.ஜே.டியின் தலைவர் லல்லுபிரசாத் பார்த்துக்கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் - ஆர்ஜேடி இணைந்து நடத்திய நாடகம் என பிஜேபி விமர்சித்துள்ளது. ஆனால் பிஜேபியின் தலைவர் அருண்ஜெட்லி மாநிலங்கள வையில் இந்த மசோதாவின் மீது ஒரு நீண்ட நெடிய உரையாற்றி காலத்தை வீணடித்ததே மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு காரணம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த மசோதா நிறைவேறாதபடி காங் கிரஸ் நடந்துகொண்டது என்பது நாடாளு மன்ற ஜனநாயகத்திற்கு எதிராக தொடுக் கப்பட்ட தாக்குதலாகும் என மார்க்சிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத் தாராம் யெச்சூரி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசும்போது, லோக்பால் மசோ தாவை நிறைவேற்றுவதற்கென நாடாளு மன்ற கூட்டத்தொடரை இம்மாதம் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் நீட்டித்த மத்திய அரசு, 29 ந்தேதி இரவு 12 மணி வரை விவாதத்தை இழுத்தடித்து, வாக்கெடுப்பு இல்லாமல் ஒத்திவைத்தது சரியல்ல என்றும், இத்தகைய சூழ்நிலைகளில் ஜனாதிபதியின் அனுமதி இல்லாமலேயே நாடாளுமன்ற கூட்டத்தை நீட்டிக்க முடியும் என்றும், இதற்கு முந்தைய நிகழ்வு கள் பல உதாரணம் உள்ளன என்றும், 2004 ஜனவரி முதல் வாரத்தில் இப்படிப் பட்ட சம்பவம் நடந்துள்ளது என்றும், அது மட்டுமல்ல உச்சநீதிமன்றமும் இத்த கைய சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட் டத்தொடரை முன்னெடுத்துச் செல்ல லாம் என கருத்து தெரிவித்திருப்பதாகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இதிலி ருந்து காங்கிரஸ் இந்த மசோதாவை அரைமனதோடுதான் மாநிலங்கள வைக்கு கொண்டுவந்தது என்பது அறிய முடிகிறது.

காங்கிரஸ், பிஜேபி, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட் சிகள், முறையற்ற நடவடிக்கைகளின் காரணமாக ஒரு வலுவான லோக்பால் சட்டத்தை கொண்டுவருவதில் தடை யாக நிற்கின்றன.

ஆர்ஜேடி, லோக்பால் மசோதா சட்ட மாக்கப்படும்போது அதன்கீழ் அமைக்கப் படும், குற்ற நடவடிக்கைகளுக்கு எதிரான குழுவில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற தனது கோரிக் கையை வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் பூனையும் எலியும் போல் உள்ள திமுக மற்றும் அண்ணா திமுக, லோக்பால் மசோதாவின் கீழ், மாநில அளவில் ‘லோக் அயுக்தா’ என்ற குறைகேட்கும் பிரிவை அமைப்பதில் மாநி லங்களின் உரிமை பறிபோகக் கூடாது என்று ஒன்றுசேர்ந்து வலியுறுத்தி வரு கின்றன. மாநிலங்களவையில் திமுகவும் அண்ணா திமுகவும் இம்மசோதாவை எதிர்த்தன. கர்நாடகம் உள்பட தற்போது இத்தகைய அமைப்பு சில மாநில அரசு களால் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இத்தகைய அமைப்பை உருவாக்க மாநில அரசுகள் முன்வரவில்லை என்பதும் கவ னிக்கத்தக்கது;

இருப்பினும், இத்தகைய ‘லோக் அயுக்தா’ என்ற அமைப்பை உருவாக்கும் விஷயத்தில் மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண் டும் என்பதே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடாகும்.

தற்போது இந்த மசோதாவிற்கு எதிர்க் கட்சிகள் 187 திருத்தங்களை கொண்டு வந்திருப்பதால் அவற்றினை பரிசீலித்து, மசோதாவை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் நிறை வேற்ற மத்திய அரசு முயற்சி எடுக்கும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்திய அரசியலில் ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், கார்கில் போர்த் தியாகிக ளின் வாரிசுகளுக்கு வீடு கட்டியதில் ஊழல், யமுனை - கோதாவரி படுகை களில் எரிவாயு எடுப்பதற்கான அனுமதி வழங்குவதில் ஊழல், அந்நிய நாட்டு வங்கிகளில் கோடிக்கணக்கான கருப்புப் பணம் முதலீடு செய்திருப்பது தொடர்பாக அதிகார பூர்வமான தகவல்கள் வெளி வந்தது போன்ற நிகழ்வுகள் குறித்து இடது சாரிகள் நடத்திய இயக்கங்களின் விளை வாக இந்திய நாட்டு மக்களிடையே ஏற் பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக ஊழல் எதிர்ப்பு இயக்கங்களுக்கு மக் களின் ஆதரவு அமோக கிடைத்து வரு வதை பார்த்த முதலாளித்துவ கட்சிகள் அதை நீர்த்துப்போவதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

ஊழல் புரிபவர்கள் அரசியல்வாதி களாக இருந்தாலும் அதிகாரிகளாக இருந் தாலும், அவர்கள் யாராக இருப்பினும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத் தின் அடிப்படையில் ஒரு வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்று வது என்பது மக்களின் தொடர் போராட் டங்களின் மூலமே சாத்தியமாகும்.