தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, April 4, 2012

தலித் மக்களுக்கு அநீதி!
-க.ராஜ்குமார் -
நன்றி தீக்கதிர் 29-03-12


தமிழக அரசின் 2012-13ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலையறிக்கையில், பட்டியலினத்தவருக்கான துணைத்திட்டத் திற்காக, இதுவரை எப்போதும் ஒதுக்கப்படாத அளவில் 6108.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட் டுள்ளதாக நிதியமைச்சர் பெருமையடித்துக் கொண்டார். இது மாநிலத்தின் இந்த ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில் 21.82 சதவீதம் ஆகும். சென்ற ஆண்டு இதே தலைப்பின் கீழ் தமிழக அரசு ஒதுக்கிய தொகை ரூ.5007 கோடியாகும். இது சென்ற நிதியாண்டில் மாநிலத்தின் ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில் 21. 27 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு மேல் நிதிநிலை அறிக்கை யை தாக்கல் செய்துள்ள நிலையில், 0.55 சத வீதம் அதிகரித்து வழங்கியிருப்பதைத்தான் நமது நிதியமைச்சர் இதுவரை எப்போதும் ஒதுக்கப்படாத அளவில் ஒதுக்கப்பட்டுள்ள தாக தெரிவித்துள்ளார். சென்ற நிதியாண்டில் பட்டியலினத்தவருக்கான துணைத்திட்டத் தில் ஒதுக்கப்பட்ட தொகை எந்தெந்த இனங் களில் செலவிடப்பட்டுள்ளது என்ற விபரத் தினை நிதியமைச்சர் சட்டமன்றத்தில் வைக்க முன்வருவாரா? என்பதே நமது கேள்வியாகும். அலங்கார வார்த்தைகளைக் கொண்டு, மிகைப்படுத்தி காட்டுகின்ற காகிதப் பூ வாகத்தான் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை உள்ளது.

பூனை பங்கு பிரித்த அப்பம்

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘தாட்கோ’ நிறுவனம், தாழ்த்தப்பட்ட மக்களுக் காக மானியத்துடன் கூடிய கடன் உதவி செய்து வருகிறது. மாவட்டம் தோறும் தாட்கோ நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறு வனத்தின் மூலம் கடந்த 2011-12 ஆம் நிதி யாண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடன் வழங்க தமிழக அரசு மூலதனப் பங்காக ஒதுக் கிய தொகை ரூ.26 கோடியாகும். ஆனால் இந்த நிதியாண்டில் அது சரிபாதியாக குறைக்கப்பட் டுள்ளது. தமிழக அரசின் மூலதனப் பங்காக ரூ.13.26 கோடிதான் இந்த நிதிநிலை அறிக் கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன் னெப்போதும் ஒதுக்கப்படாத தொகையை பட் டியலின மக்களுக்கு ஒதுக்கியதாக சொல்லும் பட்ஜெட்டில்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடன் வழங்கும் தாட் கோ நிறுவனத்திற்கு வழங்கப்படும் பங்கு மூல தனத்தை சரிபாதியாக நிதியமைச்சர் குறைத் துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் மீது அண்ணா திமுக அரசிற்கு எந்த அளவிற்கு அக்கறை பாருங்களேன். பூனை அப்பத்தை பங்கு பிரித்துக் கொடுத்த கதைதான் நினைவுக்கு வருகிறது.

சென்ற ஆண்டும் இந்த ஆண்டும்

அதுமட்டுமல்ல, கடந்த நிதியாண்டில் (2011-12) பழங்குடியின இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தவும், தற்போது செயலாக்கத்தில் உள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாடு, வறுமை ஒழிப்புத் திட்டங்களோடு ஒருங் கிணைந்த முன்னோடி திட்டத்திற்கு ரூ.246 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிதிநிலையறிக்கையிலோ இத்த கைய இனங்களுக்கு ரூ.50 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் துரோகமிழைக்கப்பட் டுள்ளது என்று சொன்னால் அது மிகை யாகாது. தாழ்த்தப்பட்ட மாணவ-மாணவி களுக்கு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் சைக்கிள் வழங்க அரசு ரூ.43 கோடி ஒதுக் கீடு செய்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சைக்கிள் கொடுப் பது தொடர்பாக ஏதும் சொல்லப்படவில்லை. பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் தலித் மாணவர்களுக்கு மாதாந்திரப் படி முறையே ரூ.450 லிருந்து ரூ.650ம், ரூ.550 லிருந்து ரூ.750ம் உயர்த்தி கொடுக்கப்பட் டிருப்பதாக நிதிநிலையறிக்கையில் சொல்லப் பட்டுள்ளது. இது ஏதோ தலித் மாணவர் களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருப்பது போல, அறிக்கையில், ஆதிதிராவிடர் பழங்குடி யினர் வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் வழங்கும் வகையில் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் உண்மையில் இதே தொகையை கல்வி உதவித்தொகை பெறும் ஏனைய மாணவர்களுக்கும் அரசு கொடுத்துவருகிறது என்பதுதான் உண்மை யாகும். வெறும் வார்த்தை ஜாலங்கள் மூலம் தலித் மக்களை ஏமாற்றிவிடலாம் என அரசு நினைத்துள்ளது.

தலித் மக்களின் பணம் எங்கே போகிறது?

இது ஒருபுறம் இருக்க, தமிழக அரசு, தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகள் எப்படி செலவிடப்படுகின்றன என்பது குறித்து ஒரு பரிசீலனை மேற்கொண்டால் வேதனையே நமக்கு மிஞ்சும். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வீட்டுமனை வழங்குவதற்காக அரசு ஒவ் வொரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் ஒதுக் கீடு செய்யும் தொகையில் நிலங்களை ஆர் ஜிதம் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட அதி காரிகள் கிராமத்தில் உள்ள ‘பிரபலங்களின்’ உதவியோடு அரசு விலைக்கு மேல் விலை கொடுத்து நிலத்தை வாங்கி பகிர்ந்துகொடுத் தால் உண்டு, இல்லை என்றால் அதுவும் கிடையாது. இத்தகைய இனங்களுக்காக ஒதுக்கிடும் தொகை செலவிடப்படாமலேயே அரசு கஜானாவிற்கே திரும்பி வந்துவிடும் நிலையும் உள்ளது. இதற்கு அதிகாரிகளை காரணம் காட்டி அரசு தப்பித்துக்கொள்கிறது. உண்மையில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று அரசு நினைத்தால் போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இன்று வெளிநாட்டு பகாசுர நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆர்ஜிதம் செய்து தர முடிகின்ற அரசால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து தருவதற்கு எது தடையாக இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவு படுத்த முன்வர வேண்டும்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்த பின்னும் கிராமங்களில், இறந்துபோன தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கம் செய்ய சுடுகாடு கிடையாது. சுடுகாடு இருந்தால் அதற்கு பாதை கிடையாது. இவ்விரண்டிற் காகவும், தலித் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குடிக்க நீர் கிடையாது. குடி நீருக்காக பல மைல்கள் நடந்து சென்று சுமந்துவர வேண்டிய அவல நிலையில்தான் இன்றும் ஏழை தலித் மக்கள் உள்ளனர். தலித் மக்களுக்காக அரசால் ஏற்படுத்தப்பட்டு தரப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி, பாதை வசதி செய்து தரவேண்டும் என ஆண்டு தோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படு கிறது. இந்த நிதி எதற்காக செலவிடப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தடுமாறும் தாட்கோ

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத் திற்காக தமிழக அரசு ‘தாட்கோ நிறுவனம்’ ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கடன் தர ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து அரசு கவனம் செலுத் துவதில்லை. ஆண்டு முழுவதும் உண்டு உறங்கிவிட்டு நிதியாண்டின் முடிவில் தாழ்த் தப்பட்ட மக்களின் கடன் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, கடன் அனுமதிப்பதற்காக அவர்களை நிர்ப்பந்தம் செய்து, இறுதியாக வங்கிக்கு விண்ணப்பங்களை தாட்கோ நிறு வனம் அனுப்புகின்ற போது நிதியாண்டு முடி வுறும் தறுவாய் ஆகிவிடுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் வங்கிக்கு சென்றாலொ எந்த வங்கியும் உடனடியாக கடன் தருவதில்லை. தாழ்த்தப் பட்ட மக்களை ஒருவழியாக இழுத்தடித்து, கடனே வேண்டாம் என்று சொல்லுமளவிற்கு வங்கிகளின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

முரண்டு பிடிக்கும் வங்கிகள்

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், தாட்கோ அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட் டத்தில் உள்ள முன்னோடி வங்கிகளின் அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதிக்கப் படும் விண்ணப்பங்களை வங்கிகள் எளிதாக நிராகரித்துவிடுகின்றன. இதற்கு தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளும் விதிவிலக் கல்ல. தனியார் வங்கிகளோ ஒருபடி மேலே போய் பயனாளிகளுக்கு ஏன் கடன் தர வில்லை என்பதைக் கூட தெரிவிக்க வேண் டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவிக்கின்றன. சமீபத்தில் கரூரை தலை மையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் வங்கி ஒன்று ஈரோடு மாவட்டத்தில் தலித் மக்களுக்கு கடன்தர மறுத்ததின் விளைவாக ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தலையிட்டு நியாயம் கேட்டு போராடி வருகின்றது. அந்த தனியார் வங்கி, மாவட்ட நிர்வாகத்தின் உத் தரவையோ முன்னோடி வங்கியின் வழிகாட்டு தலையோ ஏற்கத் தயராக இல்லை. மாவட்ட ஆட்சித் தலைவரும், முன்னோடி வங்கியின் அதிகாரியும் செய்வதறியாது திகைத்துப்போய் நிற்கின்றனர். தலித்மக்களுக்கு கடன் தந்தால் திரும்ப வராது என்று தப்புக் கணக்கு போடும் வங்கிகள், சமீபத்தில் கிடைத்துள்ள புள்ளி விபரத்தில் வங்கியில் கடன் வாங்கி சரியாக திருப்பிச் செலுத்துபவர்களில் தலித் மக்கள் முன்னணியில் உள்ளனர் என்ற உண்மையை காண மறுக்கின்றன. தலித் மக்களுக்கு எதி ராக செயல்படும் இத்தகைய வங்கிகள் மீது மத் திய-மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன.

தமிழக அரசால் அறிவிக்கப்படும் திட்டங் கள் அதிகாரிகளால் நிறைவேற்றப்படுகின் றதா? தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் செல விடப்படுகின்றதா என்று கண்காணிக்க வேண்டிய அரசே, இந்த நிதிகளை வேறுவழி யில் கையாளுகின்றன என்ற உண்மையை அறியும்போது வேதனைதான் ஏற்படுகிறது.

தலித் மக்கள் வறுமையிலிருந்து விடுபடு வது, அவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைவது என்பது ஒட்டுமொத்த இந்திய மக்க ளின் வறுமையை போக்குவதும், பொருளாதார முன்னேற்றம் காண்பதும் ஆகும் என்ற உண்மையை மத்திய-மாநில அரசுகள் உணர வேண்டும். இத்தகைய உணர்வினை மத்திய -மாநில அரசுகளுக்கு புகட்டும் வகையில் சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் தலித் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இணைவது என்பதே சரியான தீர்வாக அமையும்.