தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Monday, February 11, 2013

பெண்கள் மீதான தாக்குதல் - காங்கிரஸ் வடிக்கும் நீலிக்கண்ணீர்
க.ராஜ்குமார்
தீக்கதிர் 
 நாள் 2-01-13

தில்லியில் ஒடும் பேருந்தில் மருத்துவக் கல் லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் சமூகவிரோதிகளால் பாலி யல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார். இந்திய நாட் டின் தலைநகரில் நடை பெற்றுள்ள இச்சம்பவம் இந்திய நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது. தில்லி சம்பவம், ஏதோ தற்செயலாக நடந்துவிட்ட சம்பவம் என்றோ, சில பத் திரிகைகள் ஆதங்கப்படு வதைப்போல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தினாலோ ஏற் பட்டுள்ள சம்பவமாக கருத முடியாது. இந்தியாவில் பெண்கள் எப்படி எப்படி திட்டமிட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று இந்திய குற்றப்பதிவு ஆணையம் திடுக்கிடும் தக வல்களை வெளியிட்டுள்ளது.நமது நாட்டில் கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் பெண்கள் மீதான வன் கொடுமை வழக்குகள் 2.28 லட்சம் பதிவு செய்யப்பட் டுள்ளன என்றும், இதில் 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மீதான பாலி யல் வன்கொடுமை வழக்கு கள் 24 ஆயிரம் ஆகும் என்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவ லை தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள் ளது. குற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, குறிப்பாக அரியானா மற் றும் மேற்கு வங்கத்தில் சமீ பகாலமாக பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அதிகரித்து வருவதையும் இந்த தகவல் தெரிவிக்கிறது.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் அரி யானா மாநிலம் பெண்கள் மீதான தாக்குதலில் முதல் இடத்தில் உள்ளது.

செப்டம்பர் 9 அன்று ஹிசார் அருகில் உள்ள தாப் ரா என்ற இடத்தில் 16 வயது தலித் பெண் ஒருவர் 8 காட்டுமிராண்டிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த தலித் பெண்ணின் தந்தை இந்த கொடுமையை தாங்க முடியாமல் தற்கொ லை செய்துகொண்டுள்ளார்.செப்டம்பர் 27ந் தேதி யன்று சோனாபட் அருகில் உள்ள கோஹன என்ற ஊரில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி நான்கு கொடிய வர்களால் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட் டுள்ளார்.கடந்த ஒரு மாத காலத் தில் மட்டும் அரியானா மாநிலத்தில் 17 பாலியல் வன் கொடுமைகள் நடந்துள் ளன. சென்ற 2011-ம் ஆண்டு மட்டும் இந்த மாநிலத்தில் 733 பாலியல் வன் கொடு மைகள் நடத்தப்பட்டு, காவல் துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் 6 மாத காலத்தில் மட்டும் 367 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவை நீங் கலாக இன்னும் பல வன் கொடுமைகள் நடந்தேறி யுள்ளன. காவல் துறையின் மீதுள்ள அவநம்பிக்கை யின் காரணமாக பாதிக்கப் பட்டவர்கள் புகார்கள் தரு வதில்லை. இது குறித்து ஜக மதி சங்வான் குறிப்பிடுகை யில், காவல்துறையினர் குற்ற வாளிகள் காப்பாற்றவே செய்கின்றனர். பாதிக்கப் பட்டவர்களின் பெற்றோர் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்து காவல்துறையில் புகார் செய்ய முன் வருவ தில்லை என்கின்றார். மேலும் அரியானா மாநிலத்தில் 1000 ஆண்கள் 830 பெண்கள் என்ற விகிதாச்சாரஅளவில் உள்ள ஆண்-பெண் பாகு பாடும் சமூகத்தின் அவலத் திற்கு காரணமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள் ளார்.

காங்கிரஸால் இறக்கு மதி செய்யப்பட்ட திரிணா முல் காங்கிரஸ் ஆட்சி செய் யும் மேற்கு வங்க மாநிலத் தில் பெண்கள் மீதான தாக் குதல்கள், கடந்த ஆண் டைக் காட்டிலும் (2011) இந்த ஆண்டு 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது தேசிய அளவில் 33 விழுக் காடு என்ற சராசரி அள வைக்காட்டிலும் இரண்டு மடங்கு என தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தக வல் கூறுகிறது. இதற்கு மேற் குவங்க முதல்வர் மம்தா செய்தித்தாள்களின் மீது பாய்கிறார். செய்தித் தாள் கள் விஷயத்தை ஊதி பெரி துபடுத்துகின்றன என்பது அவரின் குற்றச்சாட்டு. இவர் இப்படி கூறினாலும், கொல் கத்தா நகரில் இரவில் வெறிச்சோடி கிடக்கும் வீதி களும், பூட்டிகிடக்கும் அடுக்குமாடி கேட்டுகளும், காலையில் நடைபயணம் மேற்கொள்வோரின் எண் ணிக்கை சொற்பமாக குறைந்திருப்பதும் கொல் கத்தா நகரில் வன்கொடு மைகள் அதிகரித்து வருவ தை நிரூபிக்கின்றன. என் பதை அவர் மறுக்க முடி யாது.சமீபத்தில் மாநிலங்கள வையில், உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்; 2011-ம் ஆண்டில், நாட்டி லுள்ள 28 மாநிலங்களில் மிக அதிகமாக மேற்கு வங் கத்தில் மட்டும் 29,133 வழக் குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன என அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஜனநாயக உரிமைகள் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்க ளின்படி இந்தியாவில் 260 அரசியல் வாதிகள் மீது பாலியல் வன்முறை வழக் குகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கடந்த தேர் தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களாவர். இவர் களில் 72 பேர் சுயேச்சை ஆவர்கள். 26 பேர் காங்கி ரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். 24 பேர் பாரதிய ஜனதா கட்சியையும், 16 பேர் சமாஜ்வாதி கட்சியை யும் 18 பேர் பகுஜன் சமாஜ் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதன்மையான இடத்தில் உள்ளது. இங்கு 41 பேரும், மேற்கு வங்கத்தில் 22 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 37 பேரும் இந்த பட்டியலில் உள்ளனர். இந்த லட்சணத் தில் காங்கிரஸ் கட்சி பாலி யல் வன்முறையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை தேர்த லில் போட்டியிடுவதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளது நகைப்பிற் குரியது.

பாஜக வின் பகல் கனவு

 தீக்கதிir - நாள் 8-02-13

க .ராஜ்குமார்

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில், பிரதமருக்கான வேட்பாளர் யார் என்ற விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இதற்கான ஆலோசனை கட்சியின் உயர்மட்ட தலைவர்களால் மேற் கொள்ளப் பட்டுள்ளது. பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற வகுப்புவாத தலைமைகளுடன் இது குறித்து ஆலோ சிக்க தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரி விக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் ‘திடீர்’ தலைவர் ராஜ்நாத் சிங், குஜராத் முதல் வர் நரேந்திர மோடிக்கு மக்களின் ஆதரவு இருப்பதாக தனது கருத்தை வெளியிட்டுள் ளார். கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இதற்கு மாறாக இருப்பதாக தெரியவரு கிறது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா உடனடியாக தனது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதளம் தனது கருத்தை தெரிவித் துள்ளது.
இக்கட்சி பீகார் மாநிலத்தில் ஆளுங் கட்சியாக உள்ளது. முதல்வராக உள்ள நிதீஷ் குமாருக்கும், குஜராத் முதல்வராக உள்ள மோடிக்கும் அவ்வளவாக நல்ல உறவு கிடை யாது. பல முறை வெளிப்படையாகவே இவர் கள் இரண்டு பேரும் மோதிக்கொண்டுள் ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறி விக்கப்பட்டால் ஐக்கிய ஜனதாதளம் கூட் டணியிலிருந்து வெளியேறிவிடும் என்று நிதிஷ்குமார் அறிவித்ததாக செய்திகள் வெளி யாகின. ஐக்கிய ஜனதாதளத்தின், பீகார் மாநிலத் தலைவர் வஷிஸ்டநாராயண்சிங் கூறுகை யில், கடந்த காலத்தில், வி.பி.சிங் மற்றும் வாஜ்பாய் ஆகியோரது பெயர்கள் முன் கூட் டியே பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டது. இது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்தது. அது போன்று தற்போதும் கூட் டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற் கொண்டு பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்கு முன் அறிவிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் ராம்ஜெத்மலானி, யஷ்வந்த் சின்கா, சி.பி. தாகுர், முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் குஜ ராத் முதல்வர் நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக அறி விப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

‘குஜராத்’ விலைக்கு விற்கப்படுகிறது

மீண்டும் வெற்றி பெற்று குஜராத் முதல் வராக பொறுப்பேற்றிருந்தாலும், குஜராத் மாநி லத்தில் மோடியின் செல்வாக்கு சரிந்து வரு வதையே தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. பெற்ற வெற்றியும் பணபலத்தால் என்ப தையே புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. குஜராத் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களில் 74 விழுக்காடு கோடீஸ்வரர்கள். சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 182 இடங்களில் 134 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள். 51 விழுக்காடு சட்டமன்ற உறுப்பினர்கள் 5 கோடிக்கும் மேல் சொத்து உள்ளவர்கள். 31 விழுக்காடு உறுப்பினர்கள் 1-5 கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்கள். இப்பொழுது புரிகிறதா ஜென்டில்மேன் மோடியின் வெற்றிக்கு பின்னால் யார் உள் ளார்கள் என்பது? குஜராத் தேர்தல்களின் போது கட்டணச் செய்திகள் பெருமளவில் வெளியாகியுள்ளன என்று இந்திய பத்திரிகை கவுன்சில் தலைவர் நீதிபதி கட்ஜூ அமைத்த குழு கண்டறிந்து வெளியிட்டுள் ளதை இங்கு நினைவுகூரலாம். நிர்வாகப் புலி என கூறப்படும் நரேந்திர மோடி அறிவித்துள்ள, கிராமங்களில் தேர்தல் இல்லாமல் பஞ்சாயத்து தலைவர் ஆகும் திட்டம் என்பது எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பணம் இருந்தால் கிராமத்தில் யார் வேண்டுமானாலும் பஞ் சாயத்து தலைவராகலாம். இந்தத் திட்டத்தின் கீழ் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள ‘டேராட்’ என்ற கிராமத்தில் ஸ்ருதி குமாரி கோகில் என்பவர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். இவர் வேறு யாருமில்லை. இமாச்சல பிர தேச முதலமைச்சராக உள்ள வீரபத்ர சிங்கின் மகள். மன்னர் குடும்பத்தைச் சேர்ந் தவர். இக்கிராமத்திற்கு அவர் வந்து செல்ல ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட் டுள்ளது. இளவரசி கிராமப் பஞ்சாயத்து தலைவராக குஜராத்தில் உள்ளார். இப்படி பணம் இருந்தால் குஜராத்தில் எதையும் விலைக்கு வாங்கலாம். நரேந்திர மோடி ஒரு வேளை இந்தியாவின் பிரதமராக வந்தால் டாடாவும், பிர்லாவும், அம்பானியும் ஒவ்வொரு மாவட்டத்தை விலைக்கு வாங்கி பரிபாலனம் செய்யமுடியும்.

மோடிக்கு எதிர்ப்பு

குஜராத் மாநிலத்தில், லோக் அயுக்தா அமைப்பிற்கு ஆர்.ஏ.மேத்தா நியமிக்கப்பட் டதை மோடியின் அரசு எதிர்த்து உச்சநீதி மன்றம் வரை சென்றது. குஜராத் அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால், அவ ருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்ன தாக இந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன் றத்தில், மோடியின் நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.ஆரம்பத்தில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் மோடிக்கு தனது எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் உள்ள சிவசேனை கட்சி, தற்போது மக்களவையில் எதிர்க்கட் சித் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜை பிர தமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அதன் கருத்தை வெளியிட்டுள்ளது.பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் தனது பெயரை தானே முன்மொழிந்து கொண்டுள் ளார். பாரதிய ஜனதா கட்சியில், தான் உள் ளிட்ட பெரும்பாலானோர் பிரதமர் வேட்பாள ராவதற்கு தகுதியானவர்களே என திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் பிரவீண் தொகாடியா, மோடிக்கு எதிரான கருத்தினை கொண்டுள்ளார். மோடியை பிரதமராக்க வேண்டும் என்று பா.ஜ.க.வில் உள்ள சிலர் குரல் எழுப்புவது என்பது, அடிப்படையில் தேசிய ஜனநாயகக் கூட்ட ணியையும், பாஜகவையும் உடைக்க வேண் டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவர் களே ஆவர் என அவர் தெரிவித்துள்ளார்.இப்படி பிரதமர் பதவிக்கான வேட்பாளர் குறித்து பிஜேபி குட்டையை குழப்பிக் கொண் டிருக்கையில், அது தொடர்ந்து மக்கள் மத் தியில் செல்வாக்கை இழந்து வருகிறது.

கழுதை தேய்ந்துகட்டெறும்பு ஆனது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை பறி கொடுத்து, பா.ஜ.க. பரிதாபமாக காட்சியளிக் கிறது. பா.ஜ.கவுடன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி செய்துகொண்ட ஒப்பந்தப் படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜே.எம்.எம். கட்சிக்கு தற்போது முதல்வர் பதவியை பா.ஜ.க. விட்டுத்தர வேண்டும். ஆனால் பா.ஜ. க.வைச் சேர்ந்த முதல்வர் அர்ஜூன் முண்டா பதவி விலக மறுத்ததால், ஜே.எம்.எம். கட்சி ஆதரவினை விலக்கிக்கொண்டு விட்டது. பிஜேபி ஆட்சி கவிழ்ந்து தற்போது அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி நடை பெற்று வருகிறது.சமீபத்தில் இமாச்சலபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. படுதோல்வி அடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. கடந்த முறை 41 இடங்களை இம்மாநிலத்தில் பெற்ற பிஜேபி, தற்போது 26 இடங்களே பெற்றுள்ளன.அடுத்தடுத்து மாநிலங்களில் தனது ஆட்சிகளை பறிகொடுத்து வருகின்ற பா. ஜ.க. தற்போது கர்நாடகத்திலும் ஆட்சியை இழக்கப்போகிறது. சத்தீஷ்கர், குஜராத் மற் றும் மத்திய பிரதேசத்தில் மட்டும் பிஜேபி ஆட்சி உள்ளது.

ஊழலில் சிக்கிய பாஜக

பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் ஆயுத வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, நான்கு வருடம் சிறை தண்டனை கொடுக் கப்பட்டுள்ளது. அவர் தற்போது ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையில் உள்ள ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. பாரதிய ஜனதாவில் இருந்து 12 சட்டமன்ற உறுப்பி னர்கள் விலகி முன்னாள் முதல்வர் எடியூரப் பாவின் கட்சிக்கு தாவிவிட்டனர். பாரதிய ஜனதா ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள் ளது. பிஜேபியின் தென் மாநில கனவு கலைந் தது. எடியூரப்பா பிஜேபியை விட்டு விலகி தனிக் கட்சியை ஆரம்பித்துவிட்டார்.கர்நாடகாவில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து விசா ரணை நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள துணை முதல்வர் ஈஸ்வரப்பா, வருமானத் திற்கு அதிகமாக சொத்து சேகரித்த வழக் கில் சிக்கி முன் ஜாமீன் பெற்றுள்ளார்.பாரதிய ஜனதாவின் முன்னாள் அகில இந்திய தலைவர் நிதின் கட்காரி மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ ருக்கு சொந்தமான பூர்தி பவர் அன்ட் சுகர் நிறுவனத்தில் பல்வேறு நிறுவனங்கள் செய் துள்ள முதலீடு தொடர்பாக சந்தேகம் எழுப் பப்பட்டுள்ளது. இதனால் அவர் மீது வரு மான வரித்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் வருமானவரித்துறை அதி காரிகளை பார்த்து, பிஜேபி ஆட்சிக்கு வந் தால் உங்களை கவனித்துக்கொள்கிறேன் என்று மிரட்டியுள்ளார். இப்பிரச்சனை பிஜே பிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

உட்கட்சி பூசலில் சிக்கிய பா.ஜ.க

இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசத்தில் நடை பெறவுள்ள சட்டமன்ற தேர்தல்களை எதிர் கொள்ள உட்கட்சி பூசல்களின் காரணமாக பிஜேபி தடுமாறி வருகிறது. உட்கட்சி பூச லின் காரணமாகவே சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர் தலில் பிஜேபி ஆட்சியை பறிகொடுத்தது.காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத நட வடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வரும் பா.ஜ.க. நாடாளுமன்றத்தில் இரட்டை வேடம் போட்டு, நாடாளுமன் றத்தை நடத்தவிடாமல், மக்கள் பிரச்சனை களை பேசவிடாமல் நடந்துகொண்டது. ஜன நாயக நடவடிக்கைகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இக்கட்சியின் மீது வெறுப்பு அடைய வைத்துள்ளது.தடிஎடுத்தவன் தண்டல்காரன் என்பது போல் கட்சிக்குள் யாரும் யாருக்கும் கட்டுப் படாத நிலையிலும், ஊழலிலும், உட்கட்சி பூசலிலும் சிக்கி திணறிக்கொண்டிருக்கும் பா.ஜ.க, மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதைப் போலவும், அதற்கு யாரை பிரதமராக்குவது என்றும் பகல் கனவு கண்டுகொண்டுள்ளது நகைப்புக்குரியது.