தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Saturday, December 4, 2010

Careless in Water Management

வெள்ளப்பெருக்கும், வீணாகும் தண்ணீரும்!
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் - 3-12-10

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் ஓரளவு கூடுதலாக தமிழகத் திற்கு மழை கிடைத்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிகின்றன. இது மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான் என்றாலும், தமிழகம் வெள்ளக்காடாக மாறி, ஆங்காங்கே மக்கள் துன்பத்தில் மூழ்கியிருப்பது வருத்தமளிக்கிறது. மாநி லம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்க ரில் பயிரிடப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகி வருகின்றன. மக்களின் உட மைகள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள் ளது. இயற்கையின் சீற்றத்தால் இழப் புகள் ஏற்பட்டுள்ளது என்றாலும், வெள் ளப்பெருக்கை முறையாக தடுத்து நிறுத்தி நீரை சேமிக்க மாநில அரசு தவறி விட்ட தும் ஒரு காரணமாகும்.

பற்றாக்குறை காலங்களில் அண்டை மாநிலங்களில் தண்ணீர் பெறுவதற்காக முயலும் மாநில அரசு, மழைக் காலங்களில் கிடைக்கும் உபரி நீர் கடலில் கலப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

உபரி நீரை சேமிப்பதன் மூலம் எதிர்கால தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல்; வெள்ளப் பெருக்கெடுத்து விவசாய நிலங்களையும், மக்கள் வாழும் இடங் களையும் சேதப்படுத்துவதிலிருந்து பாது காக்க முடிந்திருக்கும். சோழ மன்னர் களாக தங்களை சித்தரித்து மகிழ்ச்சி அடைபவர்கள், சோழ மன்னர்கள் காவிரி பெருக்கெடுக்கும் காலங்களில் சேமிப்ப தற்காக அமைத்த நீர்த்தேக்கங்கள் போல; தேவை அறிந்து இக்கால கட்டத் தில் அமைக்க தவறிவிட்டனர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை தனது முழுகொள்ள ளவை எட்டியுள்ளது. 2005-ல் மேட்டூர் அணை ஒரே ஆண்டில் நான்குமுறை அதன் முழு கொள்ளளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. 2005-ல் மட் டும் 400 டிஎம்சி நீர் உபரியாக வெளி யேற்றப்பட்டடது. 2006-ல் 300 டி.எம்.சி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 2 அன்றைய நிலவரப்படி மேட் டூர் அணையில் அந்த ஆண்டு முழு வதும் 100 அடிக்கு குறையாமல் நீர் மட்டம் இருந்து வந்தது என்பது அணை யின் வரலாற்றில் ஒரு சாதனையாக கரு தப்பட்டது. 2007-ம் ஆண்டு 100 டி.எம்.சி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட் டுள்ளது. இப்படி அடிக்கடி மேட்டூரி லிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு கட லில் கலக்கிறது. இந்த நீரை சேமிப்பதற் கான வழிமுறைகளை ஆராய அரசு இப்போதாவது முன்வர வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட லூர் மாவட்ட விவசாயிகள், மேட்டூர் அணையின் நீர்மட்டத்தை 110 அடிக்கு மேல் உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். காரணம், தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் நிச்சயம் அது தன் முழு கொள்ளளவை எட்டிவிடும். அதற்குமேலும் நீர்வரத்து இருக்கும் என்பதால் அவை அப்படியே திறந்து விடப்பட்டால் கடலூர் மாவட்டம் அதனால் பெருமளவில் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை அவர்கள் தெரிவித்துள் ளனர். எனவே முன்கூட்டியே நீரை வெளி யேற்றி வெள்ளப்பெருக்கை தடுக்க அரசு முன்வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது போன்று முன்கூட்டி அறிந்து செயல்படு கின்ற தேவை இன்று தமிழக அரசிற்கு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏற் கெனவே அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நிரம்பி தண்ணீர் கடலுக்குச் செல்கிறது. மேட்டூரிலும் அணை நிரம்பி விட்டதால் வெளியேற்றப்படும் உபரி நீர் கடலூர் மாவட்டத்திற்கு பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடும்; என அஞ்சப்படுகிறது.எனவே வெள்ளப்பெருக்கை கட்டுப் படுத்துவதற்கும் உபரி நீரை சேமிப் பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

உபரி நீர் வீணாவதை தவிர்த்து, சேமிப் பதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தமிழக அரசிற்கு ஆலோசனைகள் சிலவற்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து 24-08-2007-ல் திருச்சியில் என்.ஐ.டி-யில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவர் உரையாற்றுகையில், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை இணைக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தி பேசியுள்ளார். ஒரு நீர்த்தேக்கம் நிறைந்து வழிந்துகொண்டிருக்கையில், ஓர் நீர்த் தேக்கம் நிரம்பாமல் இருப்பதை சுட்டிக் காட்டி, இவைகளை இணைத்தால் வெள்ளப்பெருக்கையும் கட்டுப்படுத்த முடியும்; நீரையும் சேமிக்க முடியும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அவரின் கூற்று முற்றிலும் உண்மை என்பது இன்று வெளிப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் அதன் மிக அருகில் உள்ள பவானி சாகர் அணை நிரம்பாமல் உள்ளது. மேட்டூரின் உபரி நீரை பவானி சாகர் அணைக்கு திருப்ப வழி காண வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத்தலைவர் தனது உரையில், தமிழ்நாட்டில் உள்ள நீர்த் தேக்கங்களை இணைப்பது தொடர்பாக காமராஜ் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு கொடுத் துள்ள அறிக்கையை தமிழகத்தின் இரு முதலமைச்சர்களிடமும் தான் கொடுத் திருப்பதாகவும், அவர்களும் இந்தப் பிரச்சனை குறித்து அறிந்துள்ளதால் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். காமராஜ் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில், தமிழ்நாட் டில் உள்ள சாத்தனூர், மேட்டூர், பவானி சாகர், வைகை, மணிமுத்தாறு, பேச்சிப் பாறை, சோலையாறு, பாபநாசம் மற்றும் சேர்வலார் அணைகளை இணைப்பது குறித்தும், அதுபோலவே ப+ண்டி, சோழ வரம், ரெட்ஹில்ஸ், செம்பரப்பாக்கம், வீராணம் மற்றும் முகவை மாவட்டத்தி லுள்ள ஏரிகளை இணைப்பதற்கும் ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்தில் பொதுவான நீர்வழிப் பாதை (கூயஅடையேனர றயவநச றயலள ழுசுஐனு) அமைக்க லாம் என்றும், இந்த திட்டத்தை 5 கட்ட மாக 5 முதல் 8 ஆண்டுகளில் நிறை வேற்ற முடியும் என்றும், இதற்கு 36,000 கோடி ரூபாய் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 350 கி.மீ. இடைவெளி உள்ள மேட்டூர் - வைகை அணைகளை இணைப்பது என்றும், இரண்டாவது கட்டமாக 250 கி.மீ. இடைவெளி உள்ள மேட்டூர் - பள்ளார் நீர்த்தேக்கங்களை இணைப்பது என்றும், 3-வது கட்டமாக 150 கி.மீ. இடை வெளி உள்ள வைகை - தாமிர பரணி ஆறுகளை இணைப்பது என்றும், நான் காவது கட்டமாக 130 கி.மீ. இடைவெளி உள்ள தாமிரபரணி பெருஞ்சாணி நீர் நிலைகளை இணைப்பது என்றும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு 4600 கோடி ரூபாய் ஒதுக்கினால் இத்திட்டங்களை படிப்படி யாக நிறைவேற்ற முடியும்..

இந்த திட்டத்தை நிறைவேற்றினாால், அதன் காரணமாக * ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தி சேதாரங்களை தவிர்க்க முடியும், * 7,50,000 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கு கொண்டு வர முடியும்* 2150 மெகாவார்ட்ஸ் மின்சாரம் தயாரிக்க முடியும்* நிலத்தடி நீர் உயரும் என்பதால் மின் சாரம் கொண்டு நீர் பெறுவதை தவிர்ப் பதன் மூலம் 135 மெகாவார்ட்ஸ் மின் சாரம் மிச்சம் செய்ய வாய்ப்பு உண்டு.* 5 லட்சம் மக்களுக்கு குடிநீர் வசதியும், தொழிற்சாலைகளுக்கு தண்ணீரும் கிடைக்கும்* 900 கி.மீ.தூரத்திற்கு நீர்வழிப்பாதை அமைவதால் போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியும். இதனால் சாலைப் போக்குவரத்து செலவுகளை கட்டுப் படுத்த முடியும்.* மீன் வளத்தை பெருக்க முடியும். * வெளி மாநில சுற்றுலாவாசிகளை ஈர்க்க முடியும்.இவ்வளவு நன்மைகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்பதால் இந்த திட்டத்தை கிடப்பில் போடாமல் செயல்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும். இதனை வெகுஜன அமைப்புகள் வலியுறுத்த வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள கட்சிகள் இணைந்து ஆக்கப்ப+ர்வமான வழி காண வேண்டும்.

No comments:

Post a Comment