தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Friday, November 18, 2011

TNGEA 10th State Conference - Krishnagiri

அரசு ஊழியர்களின் விடிவெள்ளி
-க.ராஜ்குமார் -


நன்றி தீக்கதிர் 19-11-2011





appan பரதன், தமிழக அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர்கள். 1970-ல் நடைபெற்ற என். ஜி.ஓ.யூனியன் தேர்தலில் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர் சங்கத்தை சேர்ந்த தோழர் எம்.ஆர்.அப்பன் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.பரதன் ஆகியோர் சிவ இளங்கோவுடன் சேர்ந்து ஒரு அணியை அமைத்து தேர்தலில், அரசுக்கு விசுவாச மான தேவநாதன் என்பவரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். சிவ இளங்கோ தலைவராகவும். எம்.ஆர் அப்பன் பொருளாளராகவும், புறநகர் துணைத்தலைவராக ஜே.எஸ். பரதனும் தேர்வு செய்யப்பட்டனர்.

என்.ஜி.ஓ.யூனியனில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அன்றைய முதல்வர் கருணா நிதி விரும்பவில்லை. எனவே தலைவராக தேர்வு செய்யப்பட்ட சிவஇளங்கோ, அரசுடன் இணக்கமாகவே இருக்க விருப்பப்பட்டார். ஆனால் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.ஆர்அப்பன் மற்றும் பரதன் போன்றவர்கள் இடதுசாரிக் கண்ணோட்டத்துடன் செயல்படுபவர்கள் என ஆட்சிyalargal கருதுவதால் இவர்களை கழட்டிவிட அவர் திட்டமிட்டார்.

என்.ஜி.ஓ. மாநாடு- சேலம்

1972-ம் ஆண்டு சேலத்தில் நடை பெற்ற மாநாட்டில் அன்றைய முதலமைச் சர் கலைஞர் கலந்துகொண்டார். இம் மாநாட்டில் கலந்துகொண்ட ஆயிரக் கணக்கான ஊழியர்கள், தங்களுக்கு ஊதியம், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முழக்கமிட்டு பேரணி யில் வந்தனர். மாநாட்டில் நடைபெற்ற விவாதங்களில் கோரிக்கைகளை வலி யுறுத்தி வேலை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என பல மாவட்டங்கள் வலி யுறுத்தின. இவைகளுக்கு காரணம் எம்.ஆர்.அப்பனும், பரதனும்தான் என என்.ஜி.ஓ. யூனியன் தலைமை கருதியது. எனவே இவர்கள் இருவரையும் சங்கத்தி லிருந்து நீக்கிவிட தீர்மானித்தது.

இந்நிலையில் எம்.ஆர்.அப்பன் பொதுச்செயலாளராக இருந்த ஐ.டி.ஐ சங் கத்தில் துறைவாரியான கோரிக்கைக ளுக்காக வேலை நிறுத்தம் 1972 டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு என்.ஜி.ஓ.யூனி யன் ஆதரவு கிடையாது என அறிவித்த சிவஇளங்கோ, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.ஆர். அப்பனை நீக்கிவிட்டார். அதனை தொடர்ந்து என்.ஜி.ஓ.யூனியன் பொருளா ளர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆதரவாக இருந்த ஜே.எஸ்.பரதனும் மாநில துணைத்தலைவர் பொறுப்பி லிருந்து நீக்கப்பட்டடார்.

நடவடிக்கைக் குழு

என்.ஜி.ஓ.யூனியனிலிருந்து நீக்கப்பட் டவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச் சியில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ஏ.கூடலிங்கம் தலைமையில் என். ஜி.ஓ.யூனியன் நடவடிக்கைக் குழுவை துவக்கி செயல்பட்டனர். இதன் விளை வாக அரசு கடுமையான நடவடிக்கை களை மேற்கொண்டது.

தோழர் எம்.ஆர்.அப்பன் அவர்களை யும் ஐ.டி.ஐ சங்கத்தின் சில தலைவர் களையும் இந்திய அரசியல் சட்டம் பிரிவு 311 2(ஏ) (பி) (சி) -ன் கீழ் பணிநீக்கம் செய்ய அன்றைய கலைஞரின் அரசு ஆளு நருக்கு பரிந்துரை செய்தது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பவே, ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டு விட்டார். வருவாய்த்துறை அலுவலர் சங் கத்தின் மாநிலத் தலைவரும் நடவடிக் கைக் குழுவின் தலைவருமான மதுரை ஆர்.ஏ.கூடலிங்கம் ஓய்வு பெறும்வரை யிலும் (1975) தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தில் கண்காணிப்பாளராக பணி யாற்றிவந்த டி.என்.எஸ் என்கிற தோழர் சீனிவாசன், தட்டச்சராக பணி இறக்கம் செய்யப்பட்டார். நடவடிக்கைக் குழுவின் சென்னை மாவட்ட தலைவராக இருந்த கே.இரங்கநாதன் கட்டாய ஓய்வில் அனுப் பப்பட்டார். இதுபோல தமிழகம் முழு வதும் பல தோழர்கள் அரசால் பழிவாங் கப்பட்டனர். எனினும் அச்சமின்றி தோழர்கள் இயக்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

பொது வேலை நிறுத்தம் - 1978

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன், என்.ஜி.ஓ. யூனியன் தலைமை, ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட் டத்தை நடத்தியது. சிவ இளங்கோ திமுக அனுதாபி என்ற காரணத்தினால் அன் றைய முதல்வர் எம்.ஜி.ஆர். போராட்டங் களை அடக்க முயன்றார். 1978-ம் ஆண்டு ஜூன் 5 அன்று கோட்டையை நோக்கி சென்ற பேரணியை காவல்துறை யினர் பலப்பிரயோகம் செய்து தடுத்து நிறுத்தியதால், அதே இடத்தில் சிவ இளங்கோ வேலை நிறுத்தத்தை அறிவித் தார். ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தில் நடவடிக்கைக் குழுவும் கலந்து கொண்டது. எனினும் சந்தர்ப்பவாத தலைமை இந்த போராட்டத்தின் இறுதி யில் அரசிடம் சரண் அடைந்தது. போராட்டக் காலத்தில் நடவடிக்கைக் குழுவின் நடவடிக்கைகள் தமிழகம் முழு வதும் அரசு ஊழியர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து நடந்த சங்க தேர்தலில் நடவடிக்கைக் குழு பங்கேற் பது என்ற முடிவினை எடுத்தது. நடவடிக் கைக் குழுவில் ஏற்பட்ட கருத்து வேறு பாடின் காரணமாக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மாநில தேர்தலில் தோல்வியை தழுவினாலும், வேலூர், கோவை, மதுரை போன்ற மாவட்டங் களில் நடவடிக்கைக் குழுவினர் வெற்றி பெற முடிந்தது. வெற்றி பெற்ற மாவட்டங் களில் நடவடிக்கைக் குழுவினரின் நடவடிக்கைகள் ஊழியர்களை ஈர்ப்பதை கண்ட சிவஇளங்கோ, 1984ம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாவட்டங்களில் சங்க தலைவர்களை நீக்கினார். இப்படி நீக்கப் பட்டவர்கள் வேலூரில் 01-04-1984-ல் கலந்து ஆலோசனை செய்து அரசு ஊழியர் சங்கத்தை துவக்க முடிவு செய்தனர்.

மதுரையில் அமைப்பு மாநாடு

மதுரையில் 1984-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதியன்று நடைபெற்ற மாநாட்டில் அரசுஊழியர் சங்கம் உதய மானது. மதுரையில் நடைபெற்ற மாநாட் டில் அரசுஊழியர் சங்கத்தின் அமைப்பா ளராக தோழர் எம்.ஆர்.அப்பன் அவர் களும். என்.எல்.சீதரன் பொருளாளராக வும் 21 தோழர்களைக் கொண்ட மாநில நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. தலைவராக கே.கங்காதரன் தேர்வு செய் யப்பட்டார். சங்கத்தின் அமைப்புச் சட்ட விதியை உருவாக்கிட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் தோழர் எப்.எம்.குத்புதீன் தலைமை யில் ஒரு குழு அமைக்கப்பட்டது

பத்தாவது மாநில மாநாடு

அரசு ஊழியர் சங்கத்தின் 10-வது மாநிலமாநாடு, கிருஷ்ணகிரியில் நவம்பர் 17,18,19 ஆகிய தேதிகளில் நடைபெற வுள்ளது. தமிழ்நாடு அரசு மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ள நிலையில், நடைபெறும் இம்மாநாடு மக் கள் பணியாளர்களின் துயர்துடைக்க வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. கடந்த 27 ஆண்டுகாலமாக செயல்பட்டுவரும் அரசுஊழியர் சங்கம், போராட்டப்பாதை யில் முன்னேறி வரும் சங்கமாகும்.

தாடியுடன் பிறந்த குழந்தை

1990-ல் கோவையில் நடைபெற்ற அகில இந்திய மாநில அரசுஊழியர் சம் மேளனத்தின் 7-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற வெளி மாநிலத்தை சேர்ந்த அரசுஊழியர் சங்கங்களின் தலைவர்கள், 1984-ல் துவக்கப்பட்ட அரசுஊழியர் சங்கம் ஒரு குறுகிய காலத் தில் அகில இந்திய மாநாட்டை சிறப்பாக நடத்துவதை கண்டு வியப்பு தெரிவித் தனர். இதுகுறித்து அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் அன்றைய பொதுச் செயலாளர் சுகுமால்சென் குறிப் பிடுகையில், தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் துவங்கி ஆறு ஆண்டுகளாயினும் அதன் முன்னோடிகள் தமிழக அரசு ஊழியர் இயக்கங்களில் நெடுங்காலம் பணியாற்றி நீண்ட அனுபவம் பெற்றவர் கள். அந்த அனுபவங்களின் முதிர்ச் சியை தமிழ்நாடு அரசுஊழியர் சங்கம் பெற்றுள்ளது. அரசுஊழியர் சங்கம் தாடியுடன் பிறந்த குழந்தை என பாராட்டிப் பேசினார்.

அரசுஊழியர்களின் விடிவெள்ளி

அரசுஊழியர் சங்கம் தோன்றிய பிறகு தான் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய நிலைமை மேம்படுத்தப்பட்டது. பணிப் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட்டது. தொகுப்பூதியம் பெறும் சத்துணவு ஊழி யர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வரு வாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத் தர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் என மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஊழியர்களை ஒன்றுதிரட்டி போராட் டங்கள் நடத்தியதன் மூலமாக அவர்க ளுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் ஊதிய மேம்பாடு கிடைத்தது. அரசுஊழியர் சங்கம் இன்றும் புதிய பென் சன் திட்டத்தை எதிர்த்தும், காலிப் பணி யிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும் தொடர்ந்து போராடி வருகிறது. அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீகாரம் வழங்கிட ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அரசு ஊழியர்களின் உரிமை களுக்காக போராடும் அரசு ஊழியர் சங்கம், தமிழக அரசுஊழியர்களின் அங்கீ காரத்தை பெற்றுள்ள சங்கமாக, விடி வெள்ளியாக திகழ்கிறது.

Friday, November 11, 2011

ஏமாற்றம் தரும் புதிய பென்சன் திட்டம்!
-க.ராஜ்குமார் -
நன்றி தீக்கதிர் 10-11-11

மத்திய ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டம் பாரதிய ஜனதா தலைமையி லான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் 2003-ல் கொண்டு வரப்பட்டது. 23-08-2003-ல் பிஎப்ஆர்டிஏ என்ற ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் அமைக் கப்பட்டது. 10-10-2003ல் மத்திய அரசு ஒரு நிர்வாக உத்தரவு பிறப்பித்ததின் மூலம் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

புதிய பென்சன் திட்டத்திற்கான மசோதா இந்த ஆண்டு (2011) மார்ச் மாதம் நாடாளு மன் றத்தில், பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவோடு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்த்து இதற்குமுன் வரலாறு கண்டிராத வகையில், மத்திய-மாநில அரசு ஊழியர் சம்மேளனங் கள், அகிலஇந்திய ஆசிரியர் கூட்டமைப்பு, பாதுகாப்புத்துறை, இரயில்வே மற்றும் பொதுத் துறை நிறுவன ஊழியர் சம்மேளனங்கள் ஒன் றிணைந்து இயக்கங்கள் நடத்தி வருகின்றன. வரும் நவம்பர் 25 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்று நாடுமுழுவ தும் கோடிக்கணக்கான மக்களிடம் புதிய பென்சன் மசோதாவிற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்துக்களை பிரதமரிடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசில்..

நாடாளுமன்றத்தில் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், புதிய பென் சன் திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய நீதித்துறை இணை அமைச்சர் ஸ்ரீநமோநாராயண் மீனா அளித்த பதில்-

- 2004 ஜனவரி 1-க்குப் பிறகு, ஆயுதப் படை தவிர, மத்திய அரசில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

- 2010 ஏப்ரல் 30 வரை இத்திட்டத்தில் மத் திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களைச் சேர்ந்த 6 லட்சத்து 17 ஆயிரத்து 278 சந்தாதாரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்தி கண்காணித்திட ஊசுஹ எனப்படும் ஊநவேசயட சுநஉடிசன மநநயீiபே யனே ஹஉஉடிரவேiபே ஹபநnஉல ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

ஊழியர்களின் ஊதியம் மற்றும் அகவி லைப்படியிலிருந்து மாதம் 10 விழுக்காடு பிடித்தம் செய்யப்படுகின்றது. அதே அள விற்கு மத்திய அரசாலும் செலுத்தப்படுகிறது .இவ்வாறு சேகரிக்கப்படும் நிதி மீள எடுக்கப் படாத வகையில் புதிய பென்சன் திட்டத்தின் கீழ் அடுக்கு-1 (சூடிn-றவைானசயற யடெந யீநளேiடிn வசைந-1 யஉஉடிரவே) ல் வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் விலகும்போது, சேர்ந்துள்ள பென்சன் தொகையில் 40 விழுக்காடு காப்பீடு முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சிக் குழுமம் (ஐசுனுஹ-ஐளேரசயnஉந சுநபரடயவடிசல யனே னுநஎநடடியீஅநவே ஹரவாடிசவைல) ஒன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தொகை பெறும் வகையில் கட்டாயமாக முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 60 விழுக்காட்டுத் தொகையை மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம்.

60 வயதிற்கு முன்னதாக இத்திட்டத்திலி ருந்து விலக வேண்டியிருந்தால் ஐசுனுஹக்கு 80 விழுக்காடு தொகை கட்டாயமாக செலுத் தப்பட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் சேர்ந்த ஊழியர் ஒருவர் இடையில் இறந்துபோனால் ஓய்வூ தியக் கணக்கில் உள்ள தொகை முழுவதும் அவரது நியமனதாரருக்கு அளிக்கப்படும்.

இதுவரை இத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்காக 4 ஆயிரத்து 181 கோடியே 97 லட்சம் ரூபாய் டிரஸ்டி வங்கிக்கு (வசரளவநந யெமே) செலுத்தப்பட்டுள்ளது.

இறப்பு, ராஜினாமா ஆகிய காரணங்களுக் காக தொகையை திரும்பக் கேட்டு

22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தமிழ்நாட்டில்..

தமிழ்நாட்டில் இந்த திட்டம் 1-04-2003-லிருந்து அமல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 66,000-க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்களிடமிருந்து மட்டும் 10 விழுக் காடு தொகை ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. மாநில அரசு அதற்கு இணையான தொகையை (அயவஉாiபே உடிவேசiரெவiடிn) செலுத்தவில்லை...

தமிழக அரசு ஆணை எண்.222, நாள்

3-06-08-ல் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய் யப்பட்ட தொகைக்கு 8 சதவிகிதம் வட்டி வழங்கி ஆணையிட்டுள்ளது.

இந்த தொகையை பராமரிக்க மத்திய அரசு நியமனம் செய்தது போல் தனி நிறுவனம் ஏதும் அமைக்கப்படவில்லை. மாறாக அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை மாநில கணக்காயரிடம் அளிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக முறையாக சட்டம் அமலாக்கப்படாததால், மாநில கணக்காயர் இந்த தொகையை அனாமத்து கணக்கில் வைத்துள்ளார்.

மேலும் பஞ்சாயத்துகளில், பஞ்சாயத்து யூனியன்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய கணக்கினை மாநில உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை இயக்குனர் பராமரித்துவர அரசு ஆணையிட் டுள்ளது (அரசு ஆணை எண்.201, நிதி (ஓய்வூ தியம்), நாள் 21-05-2009). இதனால் இறந்து போன, இடையில் நின்றுவிட்ட அரசு ஊழியர் களுக்கு எவ்வித நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை.

திரிசங்கு பென்சன்

புதிய பென்சன் திட்டமும் இல்லாமல் பழைய திட்டமும் இல்லாமல் தமிழ்நாடு அரசு ஆணை எண்.175, சமூக நலத்துறை, நாள்

15.9.2008 ல் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டம் என்று ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி சத்துணவு அமைப்பாளர், அங்கன் வாடி பணியாளர்களுக்கு ரூ.700, அங்கன் வாடி உதவியாளர் நிலை-ஐ சமையலர்களுக்கு ரூ.600, அங்கன்வாடி உதவியாளர் நிலை-ஐஐ சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.500 என மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது.

பொருளாதார வீழ்ச்சியில் சிக்கிய அமெரிக்காவில் பல லட்சம் கோடி ரூபாய் ஓய் வூதியத்தொகை மூழ்கிப்போனது. இதற்கு பிற கும் கூட மத்திய அரசு பிடிவாதமாக இதை உலக வங்கியின் நிர்ப்பந்தத்தின் காரணமாக அமல்படுத்துகிறது. பெரும் மூலதனத்தை திரட்டிட புதிய பென்சன் திட்டத்தை இன் றைய முதலாளித்துவ நாடுகள் பயன்படுத்து கின்றன.

பிற மாநில அரசுகளின் நடவடிக்கை..

மத்திய அரசு அமைத்துள்ள ஞகுசுனுஹ அமைப்போடு இதுவரை 15 மாநிலங்கள் உடன் படிக்கை மேற்கொண்டுள்ளன.

ஆனால் இதுவரை ஹரியானா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் மட்டும் பி.எப்.ஆர்.டி.ஏ.வில் 159 கோடி ரூபாய் செலுத்தியுள்ளன.

மற்ற மாநிலங்கள் கணக்கை பராமரிப்ப தில் சிரமம் உள்ளதால் பணம் செலுத்த முடிய வில்லை என்றும் கர்நாடக மாநிலம் பிஎப்ஆர் டிஏவில் சேர ஒரு சந்தாதாரருக்கு ஆண்டு கட்டணம் ரூ.450-ம் இணைப்புக் கட்டணம் ரூ.50 என்பது அதிகம் என்பதால் சேர யோசித்துக்கொண்டுள்ளன.

குஜராத்தில் கடந்த 5 வருடகாலமாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது வரை 31,000 ஊழியர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய தொகை யை கையாள பண்டு மேனேஜர்களாக ஸ்டேட் பாங்க், எல்ஐசி மற்றும் யூடிஐ வங்கி கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் இந்த திட்டம், 1-09-2004 முதல் அமல்படுத்தப்படுகிறது. இது மத்திய அரசு அமைத்துள்ள பி.எப்.ஆர்டி.ஏ வுடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தாலும் நிதியை இதுவரை செலுத்தவில்லை.

கர்நாடகாவில் இந்த திட்டம் 1-04-2006 முதல் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இதுவரை 65,000 ஊழியர்கள் இந்த திட்டத் தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவும் மத்திய அரசு அமைத்துள்ள நிறுவனத்துடன் உடன் பாடு செய்துகொண்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இந்த திட்டம் 2010 ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டு வரப்படு கிறது.

மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநில இடதுசாரி அரசுகள் இந்த புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்தமாட் டோம் என அறிவித்தன. தற்போது கேரளத்தி லும், மேற்குவங்கத்திலும் அரசுகள் மாறிவிட் டதால் அங்கேயும் புதிய பென்சன் திட்டம் அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பென்சன் மட்டுமின்றி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்புத்திட்டம் என்ற பெயரில் அவர்களி டமிருந்து சந்தா தொகை பெற்று அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் நரியின் வாலை அறுத்து நரிக்கு சூப் வைத்து தருவது போல், இத்திட்டத்திற்கென மத்திய அரசு நிதி போது மான அளவிற்கு ஒதுக்காத காரணத்தினால் இந்திய நாடுமுழுவதும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இத்திட்டத்தில் சேராமல் புறக்கணித்துவிட்டனர்.

பங்குச் சந்தைகளில் நிதி மூலதன குவிய லுக்கு வழி வகுக்கும் இந்த புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் எதிர்ப் புக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கை யில், ஆளுங்கட்சியான காங்கிரசும் எதிர்க்கட் சியான பாரதிய ஜனதாவும் கைகோர்த்துக் கொண்டு இந்த புதிய பென்சன் திட்டத்திற் கான மசோதாவை நிறைவேற்ற துடித்துக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக உழைப்பாளி மக்கள் வெகுண்டு எழுந்து போராடிக்கொண்டுள்ள நிலையில், புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்து இந்திய நாட்டு தொழிலாளிவர்க்கம் இதை எதிர்த்து நடத்தும் போராட்டமே உழைப்பாளி மக்களின் உரிமைப் போராட்டமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Friday, October 7, 2011

அவர் ஒரு அயர்வறியா போராளி!
-க.ராஜ்குமார் -


நன்றி தீக்கதிர் -07-10-2011

தோழர் எப்.எம்.கே என்று அனை வராலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர் எப்.எம்.குத்புதீன் அவர்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெற்றவர். தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவராகவும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர்.

ஆங்கிலத்தில் புலமையும், அறிவாற்றலும் மிக்க தோழர் எப்.எம்.கே வடிவமைத்துக் கொடுத்த அமைப்பு விதிகள் (உடிளேவவைரவiடிn) தான் இன்றளவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர் சங்கங்களின் அமைப்பு விதிகளாக அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின் றன என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வரு வாய்த்துறையில் பணியாற்றினாலும் அனைத் துத் துறை ஊழியர்களாலும் பெரிதும் மதிக்கப் பட்டவர்.

தோழர் எம்.ஆர்.அப்பன் மற்றும் தோழர் ஜே.எஸ்.பரதன் ஆகியோருடன் இணைந்து அரசு ஊழியர் இயக்கத்தில் பணியாற்றி முத் திரை பதித்தவர். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவ ரான எப்.எம்.கே. அதன் தலைவர்களான, மது ரை கூடலிங்க பிள்ளை மற்றும் புதுக்கோட் டை சுப்பிரமணியம் ஆகியோரின் நம்பிக் கைக்கும் அன்பிற்கும் உரியவராக திகழ்ந்தார். அரசு ஊழியர்களை, ஆசிரியர்களை ஒன்று திரட்டிட அவர்கொண்ட முயற்சிகள் அளவற் றது. இறுதியில் அவர் அதில் வெற்றியும் பெற் றார். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்-ஆசிரியர் களிடையே ஒரு கூட்டமைப்பு உருவாக அவர் காரணமாக இருந்தார். அரசுப்பணியில் கேந்திரமாக உள்ள வருவாய்த்துறையை பொதுப் போராட்டத்திற்கு கொண்டுவந்ததின் மூலம் இதை அவரால் சாதிக்க முடிந்தது. இன்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பொது இயக்கத்தில் முன்னணியில் இருப்ப தற்கு வித்தாக இருந்தவர் தோழர் எப்.எம்.கே என்றால் அது மிகையாகாது.

அவரது அறிவாற்றல் காரணமாக பேச்சு வார்த்தைகளின்போது அரசு அதிகாரிகளை திணறடித்தவர். இவர் அரசிற்கு கொடுக்கும் முறையீடுகளே ஆணைகளாக வெளியிடு மளவிற்கு ஆங்கிலத்தில் எழுத்தாற்றல் மிக்க வர். அரசு ஊழியர்களின் ஒழுங்கு நடத்தை விதிகளை முழுமையாக அறிந்திருந்தவர். அதன் கொடுமைகளிலிருந்து ஊழியர்களை காப்பாற்றுவதில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

ஒரு சமயம் திருநெல்வேலி மாவட்டத் தில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த வர், அங்கிருந்த ஊழியர்களை பழிவாங்கிய போது, பொதுச்செயலாளராக இருந்த எப். எம்.கே அவருக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடி தம் அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோபத்தை மூட்டியது. அவர் எப்.எம்.கே மீது காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கும் பதிவு செய்துவிட்டார். இந்த வழக்கை தோழர் எப்.எம்.கே. திருநெல்வேலி மாவட்டத்திலி ருந்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி, புகழ்பெற்ற வழக்கறிஞர் மறைந்த தோழர் என். டி.வானமாமலை அவர்களை தனது வழக்கறி ஞராக நியமித்து எதிர்கொண்டார். இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக் கும் உள்ள எழுத்துரிமை, பேச்சுரிமையை யாரும் தடுக்க முடியாது என்று வாதிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் கொடுத்த புகாரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வைத்தார்.

1980-ம் ஆண்டு தமிழ்நாட்டில் முதல்வ ராக இருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு அவசரச் சட்டம் மூலம் தமிழ்நாட்டில் பணியாற்றிவந்த பல்லாயிரக் கணக்கான கிராம அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். பணி இழந்தவர்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் இன்றி வருவாய் நிர்வாகமும் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருந்த இந்த அவசரச் சட்டத்தை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் எப்.எம். கே ஒரு அறிக்கை வெளியிட்டார். அவரது இந்த அறிக் கை உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல் லப்பட்டு, பாதிக்கப்பட்ட கிராம அதிகாரிகள் உரிய நிவாரணம் பெற்றார்கள் என்பது வரலாறு. அவரது தன்னிகரற்ற திறமையினால் ஆயிரக் கணக்கான கிராம ஊழியர்கள் மறுவாழ்வு பெற்றனர்.

1981-ல் கருவூலகணக்குத்துறை அலுவ லர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது, அந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் வகை யில் வருவாய்த்துறை அலுவலர்களை கருவூ லத்துறை அலுவலர்களின் வேலைகளில் ஈடுபடும்படி அன்றைய அரசு கேட்டுக் கொண்டது. அன்றைய காலகட்டத்தில் வரு வாய்த்துறை அமைச்சராக எஸ்.டி.சோமசுந் தரம் பொறுப்பேற்று, வருவாய்த்துறைக்கு பல் வேறு காரியங்களைச் செய்துகொண்டிருந்தார். பொதுச்செயலாளராக இருந்த தோழர் எப்.எம்.கே. எந்த ஒரு நிலையிலும் போராடும் ஊழியர்களுக்கு எதிராக கருங்காலிகளாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை செய்ய முடியாது என அறிக்கை வெளியிட்டார். மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை அலு வலர்கள் தோழர் எப்.எம்.கே அவர்களின் அறிக்கையை ஏற்று கருவூலத்துறை அலுவ லர்களின் பணிகளை செய்ய மறுத்தனர். அடுத்து கூடிய மாநில செயற்குழுவும் பொதுச்செயலாளரின் நிலைபாடு சரியென ஒப்புதல் தந்தது குறிப்பிடத்தக்கது.

தனது பணியின் துவக்கக் காலத்தில் தான் சந்தித்த சாதியக் கொடுமைகளுக்கு எதிராக குரல்கொடுத்தவர் தோழர் எப்.எம்.கே. அவரது காலத்தில் அரசு அலுவலகங்களில் இரண்டு குடிநீர் பானைகள் இருக்கும். இந்த கொடுமையை கண்டு கொதித்தெழுந்தவர் எப்.எம்கே. தான் பணியாற்றிய அலுவலகத் தில் இருந்த இந்த பானைகளை தூக்கிப் போட்டு உடைத்தவர் அவர். அடிமைகளாக அரசுஊழியர்கள் இருந்த காலத்தில் உரிமை களுக்காக அவர்களை திரட்டி போராடியவர். இடதுசாரி முற்போக்கு எண்ணம் கொண்டவ ரான தோழர் எப்.எம்.கே. அரசு ஊழியர் களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பாக செயலாற்றியவர்.

அரசுப் பணியில் துணை ஆட்சியர் (னுநயீரவல ஊடிடடநஉவடிச) பணி வரை உயர்ந்த அவர், தனது தொழிற்சங்கப் பணியை ஒருபோதும் கைவிட் டதில்லை. அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற் றபிறகும் தனது எழுத்தாற்றலை பயன்படுத்தி பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அவரது கைவிரல் அசையும்வரை எழுதி அதிர்வுகளை உண்டாக்கியவர். கருப் புப் பணம் குறித்து அவர் இருபது வருடங் களுக்கு முன் எழுதியது இன்று வெளிச்சத் திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டுமனைப்பட்டா: தடையாக இருப்பது எது?
-க.ராஜ்குமார் -

நன்றி தீக்கதிர் -29-09-2011

அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருக்கும் அனைவருக்கும், நிலத்தை வகைப்பாடு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனவும், வீட்டு மனையற்றவர்களுக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்து வீட்டுமனைப்பட்டாவழங்கவேண்டுமெனகேட்டுஅகிலஇந்தியவிவசாயத்தொழிலா ளர் சங்கம் தொடர்ச்சியாக இயக்கங்கள் நடத்தி வருகின்றது. மாநில அரசும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிவருவதாக சட்டமன் றத்தில் தெரிவித்துவருகிறது. இந்த ஆண்டும் சட்டமன்றத்தில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீட்டுமனைப்பட்டா வழங்க அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி என்ப தற்கு ஒப்பாகும். கோடிக்கணக்கான மக்கள் இன்று தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீட்டுமனை இல்லாமல் தவித்துக்கொண் டுள்ளபோது, அரசின் இந்த அறிவிப்பு ஒரு சரியான மாற்றாக அமையாது. அனைவருக் கும் வீட்டுமனைப்பட்டா வழங்க ஆக்கப்பூர்வ மான நடவடிக்கையை மேற்கொள்ள வேண் டியது அவசியமாகும்.

ஆமை வேகத்தில் நடவடிக்கை

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நாளதுவரை இப்பணி நிறைவடையாமல் உள்ளது. இதற்கு காரணம் அரசின் மெத்த னமே ஆகும். 5-02-2000ல் அரசு ஆணை எண்.75, வருவாய்த்துறையில் வெளியிடப் பட்ட அரசு ஆணையில், புறம்போக்கு நிலங் களில்20ஆண்டுகளுக்கும்மேல்வீடுகளைக் கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டு மனைப் பட்டாவழங்குவதுகுறித்துபரிசீலனை செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த பரிந் துரையின்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க லாமென 27-03-2000 நாளிட்ட அரசு ஆணை எண். 168 (வருவாய்) வெளியிடப்பட் டது. இந்த ஆணையின்படி எதிர்பார்த்த அள விற்கு வீட்டுமனைப்பட்டா வழங்க இயலா மல் போய்விட்டது. இதற்கு காரணம் பெரும் பான்மையானோர் நீர்நிலை புறம்போக்குக ளில்ஆக்கிரமிப்புசெய்துவீடுகட்டியிருந்தனர். அரசு பதிவேடுகளில் இவைகளெல்லாம் நீர் நிலை புறம்போக்குகள் என்று வகைப்படுத் தப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் நகரம் மற்றும் கிராமங்களின் வளர்ச்சியின் காரண மாக பல ஆண்டுகாலமாக நீர்வரத்து இல்லாத வறட்சியான பகுதிகளாக இருந்தன. இவற் றில் வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும்போது, சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் நீதிமன் றம், நீர்நிலை புறம்போக்குகளையும் மக்கள் பொதுவாக பயன்படுத்தப்படும் தெருக்கள், சாலைகளில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. ஏற்கெனவே இத்தகைய ஆக்கிர மிப்புகளை வரன்முறை செய்வதற்கு அரசும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவையெல்லாம் மேலே சொன்ன படி காலப்போக்கில் இயற்கையின் மாற்றத்தி னால் பயன்பாடு அற்றதாக இருந்ததால் ஆக் கிரமிப்புகள் செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன.

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும்அகிலஇந்தியவிவசாயத்தொழிலாளர் சங்கமும் சட்டமன்றத்திலும், மக்கள் மத்தியி லும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த காரணத் தினால் கடந்த ஆட்சியில் வருவாய்த்துறை யில் 30-12-2006-ல் அரசு ஆணை எண்.854 பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை, பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டிக் குடியிருந்து வருபவர் களுக்கு தடையாணைகளை தளர்வு செய்து ஒரு சிறப்பு திட்டமான ஒரேஒரு முறை என்ற சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் வீட்டு மனைப்பட்டாக்களை வழங்க வழிவகுத்தது. இந்த ஆணையின்படி உள்ளாட்சி மன்றங்க ளின் தீர்மானங்களைப் பெற்று அந்நிலங்கள் அரசுக்கு தேவையில்லை எனில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அவற்றை பரிசீலனை செய்து பட்டா வழங்கலாம். பின் னர் 10 ஆண்டுகள் என்பது 2008-ல் 5 ஆண் டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்க ளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. பின்னர் அது 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அரசு இவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டும் முழு மையாக அனைவருக்கும் பட்டாக்கள் வழங்க இன்றளவும் இயலவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையாணை ஒரு புறம் இதற்கு காரணம் எனினும் அரசு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்குவது குறித்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காததும் காரணம் ஆகும். முறையாக நிலங்களை ஆர்ஜிதம் செய்து வீட்டுமனைப்பட்டா வழங்க அரசு முன்வரவில்லை. கண் துடைப்பிற்காக சில திட்டங்களை அறிவித்து, அவை செயல் பாட்டிற்கு கொண்டுவர அரசு அக்கறையான நடவடிக்கையும் எடுப்பதில்லை.

நிலங்கள் கிரயம் பெற
குறுக்கே நிற்பது எது?

ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டவர் கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு நிலங்களை ஆர்ஜிதம் செய்து வீட்டுமனைப் பட்டா வழங்க ஒவ்வொரு ஆண்டும் அரசு நிதி ஒதுக்கி வருகிறது. இந்த நிதி முழுமை யாக ஒதுக்கப்பட்ட காரணத்திற்காக ஒரு ஆண்டும் செலவிடப்பட்டதாக வரலாறு கிடையாது. காரணம், அரசு நிலங்களை ஆர்ஜி தம் செய்ய உருப்படியான சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. நடைமுறையில் உள்ள சட்டங்களை கொண்டு நிலங்களை ஆர்ஜி தம் செய்ய இயலாது. 21.9.1995ல் தனியாரிட மிருந்து நிலங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் கிரயம் செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டம் தோறும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ( அரசு ஆணை எண்.885 வருவாய்த்துறை நாள் 21.09.1995) இந்த குழுவிற்கு பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொகை, வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பிற்கு 150 விழுக்காட்டிற்கு உட் பட்டிருந்தால் அதை முடிவு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் இருந் தால் அரசின் ஆணைகளைப் பெற்று கிரயம்செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இத்தகைய நடைமுறைகளை ஒரு நிதி ஆண்டிற்குள் மேற்கொள்ள இயலாது என்ப தால் இந்த ஆணை மூலம் பெரிதளவில் நிலங்களை தனியாரிடமிருந்து பெற இயல வில்லை.

விழி பிதுங்கும் வழி காட்டி பதிவேடு

மேலும் அரசின் வழிகாட்டிப் பதிவேட் டில் குறிப்பிட்டுள்ள மதிப்பிற்கும் சந்தை மதிப்பிற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. இதற்கு காரணம் இந்த வழிகாட்டிப் பதிவேடு, மேஜையில் அமர்ந்து அதிகாரிகளால் தயாரிக்கப்படுவது ஆகும். ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர், பிற்பட் டோர் நலத்துறை ஆகிய துறைகளில் பணி யாற்றும் அலுவலர்கள் எப்படியேனும் நிலங் களை ஆர்ஜிதம் செய்து, தங்கள் இலக்கினை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட அளவில் அரசால் அனுமதிக்கப் பட்ட தொகைக்கும் சந்தை மதிப்பிற்கும் இடையே உள்ள தொகையை அந்த நிலம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி களின் துணையோடு பட்டா வழங்க உத்தே சித்துள்ள மக்களிடம் மறைமுகமாக பெற்று ஈடு செய்வது இன்று வழக்கமாகிவிட்டது. போதிய நிதியை அரசு ஒதுக்கிட தவறியதா லும், நிலங்களை ஆர்ஜிதம் செய்ய உரிய வழி முறைகள் இல்லாததாலும் நிலங்களை தனி யாரிடமிருந்து கிரயம் பெற்று வழங்குவது என் பது எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. இது துறைத் தலைவர்களுக்கும் தெரியும் அமைச் சர் பெருமக்களும் நன்கறிவர். ஆனால் இத்தகைய இழிநிலையை மாற்றிட அவர்கள் முன் வருவதில்லை.

வழிகாட்டிப் பதிவேட்டை பொறுத்தவரை அது நில அபகரிப்பு செய்யும் மோசடிப்பேர்வழி களுக்கும், கருப்பு பணத்தை நிலங்களில் முதலீடு செய்யும் கொள்ளைக்காரர்களுக்கும் துணை செய்யவே இருக்கிறது. பல கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள இடங்கள் சில இலட்சங்களுக்கு கிரயம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு, அரசின் பதிவுத் துறைக்கு வரவேண்டிய வருமானம் தடுக்கப் படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

வழி என்ன?

எந்த அரசு வந்தாலும் நத்தத்தில் குடியி ருப்பவர்களுக்கு பட்டா வழங்க இலக்கை நிர்ணயம் செய்கின்றனவே ஒழிய புதிதாக நிலங்களை ஆர்ஜிதம் செய்து பட்டா வழங்க தயாராக இல்லை. மேலும் ஆதீனங்களின் கட்டுப்பாட்டிலும், கோயில்களின் பெயர்களி லும் உள்ள நிலங்களில் வீட்டுமனைப்பட்டா வழங்க அரசு தயாராக இல்லை. இத்தகைய நிலங்களிலும் ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பட்டா வழங்க அரசு உரிய ஆணைகளை வெளியிட தயக்கம் காட்டி வருகின்றது. உண்மையில் அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்க ஒரு அரசு விரும் பினால், போதுமான நிலங்களை ஆர்ஜிதம் செய்தும், கோயில் மற்றும் ஆதீனங்களின் பிடியில் சிக்கியிருக்கும் நிலங்களை மீட்டும் வழங்கலாம். இதற்கான ஆணையை வெளி யிட மாநில அரசு முன்வர வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில நிலங்களின் வகைப்பாட்டை மாற்றி உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். தேவைக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள வர்களிடமிருந்தும், அரசு நிலங்களை ஆக்கிர மிப்பு செய்துள்ள நிலமுதலைகளின் பிடியி லிருந்தும் நிலங்களை மீட்டெடுக்க சட்டங் களை பிறப்பிக்கலாம்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற் கிணங்க ஆக்கப்பூர்வமான ஆணைகளை பிறப்பித்து, அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனைப்பட்டா கேட்டு சமீபத்தில் தமிழகத்தில் மக்கள் திரண்டு நடத்தி வரும் இயக்கங்களை அரசு கண்டு கொள்ளாமல் இருந்தால் அது ஒரு பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக் கும்என்பதைசுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.

Wednesday, August 10, 2011

New Pension Scheme - a story

ஓய்வூதியம் சுமையானது?
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் 10-08-11
மத்திய அரசு நாடாளுமன்ற கடந்த கூட் டத்தொடரின் இறுதி நாள் அன்று புதிய ஓய் வூதிய திட்டத்திற்கான மசோதாவை மக்கள வையில் தாக்கல் செய்தது. ஆளும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உறுப் பினர்கள் பெரும்பாலானோர் இல்லாத நிலை யில் தாக்கல் செய்யப்பட்டதை அறிந்த மார்க் சிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழு தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா இதற்கு எதிர்ப்பு தெரி வித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். வேறு வழியின்றி சபாநாய கரும் வாக்கெடுப்புக்கு விட மசோதாவை திரும்பப் பெறவேண்டிய நிலையில், காங்கி ரஸ் வெட்கமின்றி பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாகட்சி தலைவர்களிடம் சென்று கெஞ்சி ஆதரவைப் பெற்றது. இப்படி ஆளும்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் சேர்ந்து கொண்டுவந்துள்ள புதிய ஓய்வூதிய மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றிட மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

கடந்த 2003-ல் அன்று ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய ஓய்வூதிய திட்டம் இன்றுவரை உழைப்பாளி மக்களின் போராட்டங்களினா லும் இடதுசாரி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகள் காரணமாகவும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. எனினும் நிர்வாக உத்தரவின் மூலம் மத்திய அரசும், சில மாநில அரசுகளும் இதனை அமல்படுத்தி வருகின்றன. சட்டப்பூர்வமான அங்கீகாரம் இதற்கு இல்லாத காரணத்தினால் இந்த திட்டத்தை எதிர்த்து தட்சிண இரயில்வே ஊழியர் சங்கத்தின் சார்பில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் இந்திய அரசியல் சட்டத் திற்கு எதிராக சட்ட ரீதியான ஒப்புதல் இதற்கு இல்லை என்றும் எனவே புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட ஊழியர்களை பழைய, வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்றும் இடைக் கால தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும் தற் போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மசோதா நிறைவேற்றப்படுமானால் இந்த தீர்ப்பும் பயனற்றதாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசுகள் எதிர்ப்பு

இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருந்தாலும் அவை ஆளும் மாநிலங்களிலேயே புதிய ஓய் வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆரம்பக்காலத்தில் மத்திய அரசு அமைத்த ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத் துடன் (ஞகுசுனுயு) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் இன்று ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை செலுத்தாமல் உள்ளன. 19-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 5 மாநிலங்கள் மட்டுமே சந்தா தொகையை செலுத்தியுள் ளன. தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்கள் தொகையை செலுத்தாமல் அனாமத்து கணக் கில் வரவு வைத்துள்ளன. இதன் பொருள் இத்தகைய மாநிலங்களில் 1.01.2004-க்குப் பிறகு பணியில் அமர்த்தப்பட்ட அரசு ஊழியர் களுக்கு புதிய ஓய்வூதிய திட்டமும் இல்லை; பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியமும் இல்லை என்பதாகும்.

6-வது ஊதியக்குழுவிற்காக, மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகை கள் குறித்து ஆய்வு செய்த டாக்டர் கே.காயத் திரி பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து தனது அறிக்கையில், மத்திய அரசு தற்போது (2004-ல்) இதற்காக ஒதுக்கீடு செய்ய வேண் டிய தொகை ரூ.14,284 கோடியாக உள்ளது. இது 34 ஆண்டுகளில் (2004-38) ரூ.57,088 கோடியாக உயர்ந்து, மத்திய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் சுமையாக மாறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே பல்வேறு மாநில அரசுகள் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்டாலும் தற்போது அமல்படுத்த தயங்கி வருகின்றன. தமிழ்நாட் டில் தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போ தைய தமிழக முதல்வர் தனது ஆட்சி அமைந் தால் புதிய ஓய்வூதிய திட்டம் அகற்றப்பட்டு, அனைவரும் ஓய்வூதியம் பெறும் வகையில் பென்சன் திட்டம் அமல்படுத்ததப்படும் என அறிவித்தார். தற்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த புதிய ஓய்வூதிய மசோதாவை எதிர்த்து இடசாரிக்கட்சிகளு டன் அண்ணா திமுகவும் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய அரசு, நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்துள்ள மசோதாவில் அரசுப்பணிகளில் புதிதாக சேரும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கெனவே (1-01-2004 முன்னதாக பணியில் அமர்த்தப்பட் டவர்கள்) பணியாற்றிவரும் ஊழியர்களுக்கும் மற்றும் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை மாற்றியமைக்க அதிகாரம் வழங் கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெரும்பாலானோர், ஓய்வு பெற்றவர்கள் பெற்றுவரும் ஓய்வூதியத்தில் மத்திய அரசு கைவைப்பது என்பது இயலாது என்றும் அரசியல் சட்டம் 309 பிரிவின் கீழ் தங்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்றும் விவாதித்து வருகின்றனர். ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா சட்டமா கும் நேரத்தில், மத்திய-மாநில அரசுகள் பணி யில் இருப்பவர்களாக இருந்தாலும் ஓய்வு பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களின் ஓய்வூ தியத்தை மாற்றியமைக்கும் அதிகாரத்தை பெற்று விடுகின்றன என்பதே உண்மையாகும்.

எஜமான விசுவாசம்

அரசுஊழியர்களுக்கும் பயன் இல்லாமல் அரசுகளுக்கும் பயன் இல்லாமல் உள்ள ஒரு திட்டத்தை கொண்டுவர காங்கிரசும் பிஜேபி யும் சேர்ந்து அவசரப்படுவதின் நோக்கம் என்ன? உலக வங்கியும், பன்னாட்டு நிதி அமைப்பும் கொடுக்கும் நிர்ப்பந்தத்தின் காரணமா கவே இன்று புதிய ஓய்வூதிய மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்பதே உண்மை யாகும்.

புதிய ஓய்வூதியம் திட்டம் என்று பேசப் படும்போது, இது ஏதோ, மத்திய-மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒரு சில பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் சம்பந்தப் பட்ட விஷயமாக கருதப்படுகிறது. சமூகபாது காப்பு திட்டம் என்ற பெயரில் அரசு 2009-ல் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கென கொண்டுவரப்பட்டுள்ள பென்சன் திட்டத் தின் கதியும் இதுதான். தொழிலாளர்களிட மிருந்து பெறப்படும் சந்தா தொகை பங்குச் சந் தைக்கு அனுப்பப்பட்டு, அதன் ஏற்ற இறக்கங் களின் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என் பதே மத்திய அரசின் திட்டமாகும். சில தொழிற்சங்கங்களும் மத்திய அரசும் இந்த திட் டத்தை தூக்கிப் பிடித்தாலும் ஊழியர்கள் இதை நிராகரித்து விட்டார்கள். இந்த திட்டத் தில் அரசின் பங்களிப்பு ஏதும் கிடையாது. ஊழியர்களின் பங்களிப்பை வைத்து சூதாடும் நாடகம்தான் புதிய சமூக பாதுகாப்புத்திட்டம். அதனால்தான் இந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் 50,000 தொழிலாளர்கள் கூட இதுவரை இந்த திட்டத்தில் சேரவில் லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு இந்த சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு போது மான நிதியினை ஒதுக்கிட முன் வரவேண் டும். ஆக்கப்பூர்வமான திட்டமாக செயலாற்ற வேண்டும் என்பதே பொருத்தமாக இருக்கும். அதை தவிர்த்து, பங்குச் சந்தைக்கு பணத் தை அள்ளிச் செல்லும் நோக்கத்தோடு செயல்பட்டால் அது கடுமையான விளைவு களை சந்திக்க நேரிடும். இதுவே இன்று பல் வேறு மேலை நாடுகளில் நடந்தேறிவருகி றது. அர்ஜென்டினாவில் இருபது ஆண்டு காலமாக இருந்து வந்த புதிய பென்சன் திட் டம் இன்று விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

நாட்டுடமையாக்கப்பட்ட ஓய்வூதியம்

உலகம் முழுவதும் பென்சன் தனியார் மயமாக்கப்பட்டு வரும் இந்நேரத்தில் பொலி வியா நாட்டில் பென்சன் நாட்டுடமை ஆக்கப் பட்டுள்ளது. ஆம்.! உண்மைதான்! அந்நாட்டு அதிபர் ஈவோ மொரேல்ஸ் இதற்கான உத் தரவை பிறப்பித்துள்ளார். அது மட்டுமல்லா மல் அந்நாட்டில் பென்சன் பெறுவதற்கு வயது ஆணுக்கு 65 என்றும் பெண்ணுக்கு 60 என்றி ருந்ததை 58 மற்றும் 55 ஆக குறைத்தும் ஆணையிட்டுள்ளார். இதே காலகட்டத்தில் மேலை நாடுகளில் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியிருப்பதால் அங்கு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது. பென்சன் பொறுப்பை தட்டிக்கழிக்கப் பார்க்கும் நமது நாட்டு ஆட்சி யாளர்களுக்கு பொலிவியா நாட்டில் பென் சனை அரசே ஏற்க முன் வந்திருப்பது அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கும்.

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான இயக்கங்கள் இந்தியாவில் வலுவடைந்து வருகின்றன. கடந்த 22-07-11 அன்று தலை நகர் தில்லியில் நடைபெற்ற தேசிய கருத் தரங்கில் மத்திய-மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள், இரயில்வே ஊழியர்கள், காப்பீட்டுத்துறை ஊழியர்கள், ஆகியோரின் அமைப்புகளும் ஓய்வு பெற்ற ஊழியர்களின் அமைப்புகளும் இணைந்து நாடுதழுவிய இயக்கங்கள் நடத் திட முடிவு செய்துள்ளன. மக்கள் மத்தியில் இப்பிரச்சனையை கொண்டு செல்லும் வகை யில் முதலில் கையெழுத்து இயக்கம் நடத் திடவும், பின்னர் தில்லியில் நாடாளுமன்றத் தை நோக்கி பேரணியாக சென்று முறையீடு அளிப்பது என்றும், அதே நாளில் அனைத்து மாநில தலைநகரங்களிலும், பேரணி சென்று ஆளுநரிடம் முறையீடு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவுள்ளன.

கடந்த 10 ஆண்டுகாலமாக புதிய ஒய்வூ திய திட்டத்திற்கு எதிராக இரண்டு வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. இம்முறை நடைபெறவுள்ள இந்த இயக்கங்களில் இது வரை கண்டிராத ஒற்றுமை உருவாக்கப்பட் டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் ஏற்கெ னவே அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுபவர்கள் என கோடிக்கணக் கான ஊழியர்கள் ஒன்று திரண்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் புதிய ஓய்வூதிய திட்டத் திற்கான மசோதாவை பிஜேபியின் ஆதர வோடு எளிதாக சட்டமாக்கிவிடலாம் என கருதிகொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு ஒரு கடுமையான எதிர்ப்பை மக்கள் மன்றத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரையாளர்: பொருளாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம்

Thursday, June 2, 2011

Ambani's costly House

அம்பானியின் ஆடம்பர வீடு!
-க.ராஜ்குமார்

நன்றி -தீக்கதிர் - 03-06-11
உலகிலேயே மிகப்பெரிய வீடு எங்கிருக் கிறது தெரியுமா? நமது இந்தியாவில்தான்! மும்பை, அல்ட்டா மவுன்ட் சாலையில் உள்ள இந்த வீட்டின் சொந்தக்காரர் முகேஷ் அம்பானி ஆவார். 2007-ல் ரூ.4,400 கோடி மதிப்பில் கட்டுமான வேலைகள் துவக்கப் பட்டு, 2010 இறுதியில் கட்டி முடிக்கப்பட்டுள் ளது. ஏசியன் கண்டெம்பொரரி எனும் அமெ ரிக்க நிறுவனம் இந்த வீட்டை கட்டித் தந் துள்ளது. இந்த வீட்டின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியாகும். முகேஷ் அம் பானி 2011-ம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.. இவரின் இன்றைய சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

மின் கட்டணம் ரூ.70 இலட்சம்

முகேஷ் அம்பானி தனது வீட்டிற்கு குடி யேறியவுடன், முதல் மாதம் மின்சாரக் கட்ட ணமாக ரூ. 70 இலட்சம் கட்டியுள்ளார். முதல் மாத மின்சார உபயோகக் கட்டணமாக ரூ.70 லட்சத்து 69 ஆயிரத்து 488 பில் வந்துள்ளது. இது 6 லட்சத்து 37 ஆயிரத்து 240 யூனிட் மின் சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தில் அதிகபட்சமாக பயன்படுத்தப் படும் சராசரி மின் அளவு 300 யூனிட் ஆகும். அம்பானியின் வீட்டு மின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவிற்கும் உள்ள இடைவெளியாகும். மின்சாரக் கட்டணத்தை சரியாக செலுத்திவிட்டதால் அம்பானிக்கு, ரூ.48 ஆயிரத்து 354 தள்ளுபடி செய்யப்பட் டுள்ளதாம். இதுபோகத்தான் அம்பானி ரூ.70 லட்சம் மின் கட்டணம் செலுத்தியுள்ளார்.

5 லட்சம் லிட்டர் தண்ணீர்

தினசரி இந்த வீட்டிற்கு மும்பை மாநக ராட்சி நிர்வாகம் 5 இலட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. முகேஷ் அம் பானியும் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவரது தாயார் உள்பட 6 பேர் மட்டும் இந்த வீட்டில் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு சேவை செய்ய சுமார் 600 பணியாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

இந்த வீட்டிற்கு ‘ஆண்டிலா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 4532 சதுர அடி தரை பரப்பளவும், 4,00,000 சதுர அடி மொத்த பரப்பளவும் கொண்ட இந்த வீட்டின் உயரம் 570 அடியாகும். 60 தளங்களை அமைப்பதற் கான அடித்தளம் அமைக்கப்பட்டு, தற்போது 27 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட் டிடத்தில் மூன்று ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளன. விலை உயர்ந்த, வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 168 கார்கள் உள்ளன. இவைகளை நிற்க வைப்பதற்கு இந்த வீட்டில் 6 தளங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. எட்டாவது மாடியில் பொழுதுபோக் கிற்காக ஒரு மினி சினிமா தியேட்டரும் உள் ளது. மூன்று தளங்களில் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 4-ம் மாடியில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் நுழைந்தால் குளிர்காலத்தில் சூடாகவும், வெயில்காலத் தில் குளிராகவும் இருக்குமாம். 9-வது தளம் அவசர காலத்திற்கு பயன்படுத்த ஒதுக்கப்பட் டுள்ளது. 10, 11-வது தளங்கள் விளையாடு வதற்காகவும் உடற்பயிற்சிக்காகவும் ஒதுக் கப்பட்டுள்ளது. இதில் ஒரு நீச்சல் குளமும் உள்ளது. விருந்தினர்கள் தங்குவதற்காக இரண்டு தளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள நான்கு தளங்களில் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீத்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் கோகில பென் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த தளங்களிலிருந்து அரபிக்கடலின் அழகிய தோற்றமும், மும்பை நகரத்தின் எழிலையும் கண்டு களிக்கலாம். அதற்கு மேல் உள்ள இரண்டு தளங்கள் ஹெலிகாப்டர் இயக்கு வதற்கான கட்டுப்பாட்டு அறைகளை கொண் டுள்ளது. மும்பை மாநகராட்சி நிர்வாகம் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு இன்னும் அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர் பட்டி யலில் இரண்டாம் இடத்தில் உள்ள பில் கேட்ஸ் வீட்டின் மதிப்பு 100 மில்லியன் டாலர். இந்திய நாட்டின் இன்னொரு பணக்காரரும் உல பணக்காரர் பட்டியலில் இடம் பெற்ற வருமான லட்சுமி மிட்டல், கடந்த ஆண்டு லண்டனில் 60 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு வீடு வாங்கியுள்ளார். முகேஷ் அம்பானி இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு வீட் டை கட்டியிருக்க வேண்டிய அவசிய மில்லை என்று இந்திய நாட்டின் பெரும் பணக்காரரான ரத்தன் டாடா கருத்து தெரி வித்துள்ளார். உலகம் முழுவதும் பேசப்படக் கூடிய ஒரு விஷயமாக இன்று அம்பானி யின் ஆடம்பர வீடு அமைந்துள்ளது

இந்த அம்பானிக்கும் அவரது குடும்பத் தினருக்கும்தான் இந்திய அரசு, பொருளாதார நெருக்கடி என்ற காரணத்தைக் காட்டி சில ஆண்டுகளுக்கு முன்னர் கோடிக்கணக்கான ரூபாயை மீட்புத் தொகையாக வழங்கியுள்ளது.

அம்பானியின் இந்த பிரம்மாண்டமான வீடு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. மாறாக இந்திய நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ், மக்கள் தொகையில் சரி பாதிக்கும் மேல் உள்ள மக்களின் வறுமைக்கு காரணமாக விளங்குகிறது.

Saturday, May 14, 2011

Election Counting proceedure

வாக்கு எண்ணிக்கை வழிமுறைகள்
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 12-05-11

தமிழக தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணப்படும் இடத்தில் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் வாக்கு எண்ணப்படும் விபரம் குறித் தும், முடிவுகள் அறிவிக்கப்படும் நடைமுறை குறித்தும் விரிவாக கூறப்பட் டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் மட்டுமின்றி, இந்த நடைமுறையை பொதுமக் களும் அறிந்திடுவது அவசியமாகும்.

வாக்கு எண்ணிக்கை முகவர்களின் கவனத்திற்கு

* வாக்கு எண்ணிக்கை நாளன்று சரியாக காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணிக் கை அறைக்குள் சென்றுவிட வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப் பட்ட அடையாள அட்டையை தவறாமல் கொண்டுசெல்ல வேண்டும்.

* தேர்தல் நடத்தும் அதிகாரி முன் ‘வாக்க ளித்தல் இரகசியத்தை காத்திடல்’ குறித்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெ ழுத்திட வேண்டும்.

* வாக்கு எண்ணப்படும் அறைக்குள் செல் போன்கள் கொண்டு செல்லக் கூடாது. அப்படி கொண்டு செல்லப்படும் செல் போன்கள் வாக்கு எண்ணிக்கை அறைக்கு வெளியே அதிகாரிகளால் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.

* வாக்கு எண்ணப்படும் மேஜைக்கும் முகவர்கள் உள்ள இடத்திற்கும் இடை யில் வாக்கு எண்ணிக்கையை தெளி வாக பார்க்கும் வகையில், கம்பி வலைகள் அல்லது மூங்கில் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டு இருக்கும். இதைத் தாண்டி முகவர்கள் செல்லக் கூடாது.

* தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட் சிகள், மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பிற மாநிலத்தில் அங்கீகரிக்கப் பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங் கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சைகள் என வரிசைக்கிரமமாக முகவர்கள் வாக்கு எண்ணப்படும் இடத்தில் அமர்வதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

* வாக்கு எண்ணப்படும் அறையிலிருந்து ஒரு முறை முகவர்கள் வெளியேறினால் மீண்டும் அறைக்குள் வர அனுமதிக் கப்படமாட்டார்கள்.

* உணவு, தேனீர் அரசு அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்படும். வெளியே செல்ல அனுமதி இல்லை. புகை பிடித்தல் கூடாது.

பொதுவாக, முகவர்கள் வாக்கு எண்ணிக் கையின்போது, தங்களுடைய வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன என்பதற் காகவோ அல்லது குறைவான வாக்குகள் கிடைக்கின்றன என்பதற்காகவோ கவனக் குறைவாக இருப்பது நல்லதல்ல. ஒவ்வொரு சுற்றிலும் கவனம் தேவை. வாக்கு எண்ணிக் கையின்போது வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் மேஜைக்கு அருகே வந்து பார்வையிட வாய்ப்பில்லை. எனவே மேஜை பொறுப்பில் உள்ள முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முறை

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து வாக்கு எண்ணப்படும் மேஜைகளின் எண்ணிக் கை அதற்கேற்றவாறு இருக்கும். ஆனால் 14 மேஜைகளுக்கு மேல் இருக்காது. ஒவ் வொரு மேஜைக்கும் ஒவ்வொரு வேட்பாள ருக்கு ஒரு முகவர், இருக்க அனுமதிக்கப்படு வார். வேட்பாளரின் தலைமை முகவர், தேர்தல் நடத்தும் அதிகாரி அருகிலிருந்து அவர் மேற் கொள்ளும் பணியினை பார்வையிடலாம்.

* வாக்குச்சாவடியில் இருந்து பெறப்பட்ட, கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக் குகள் எண்ணப்படும். கட்டுப்பாட்டுக் கரு வியுடன் வாக்குச் சாவடி தலைமை அதி காரி பூர்த்தி செய்து, முகவர்களின் கை யொப்பம் பெற்று தனது கையொப்பத்துடன் அனுப்பிய படிவம் 17-சி ஒவ்வொரு மேஜைக்கும் கட்டுப்பாட்டுக் கருவியுடன் கொண்டுவரப்படும். எண்ணிக்கைக்கு முன்பாக, வாக்குச்சாவடியில், கட்டுப் பாட்டுக் கருவிக்கு வைக்கப்பட்டுள்ள ‘சீல்’ நல்ல முறையில் உள்ளதா என்ப தை கண்டறிய வேண்டும். வாக்குச் சாவடி அதிகாரியால் சீல் செய்ய பயன்படுத்தப் பட்ட பச்சை நிற முத்திரை எண் 17-சி யில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுடன் ஒத்து வருகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதுவே முக்கியமானது. சீல் சேதமடைந்திருந்தாலோ, முத்திரை எண் மாறுபட்டிருந்தாலோ முகவர்கள் அந்த கட்டுப்பாட்டுக் கருவி எண்ணிக்கைக்கு உட்படுத்தப்படுவதை ஆட்சேபித்து மறுக்க வேண்டும். இத்தகைய கட்டுப் பாட்டுக் கருவி குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணை யமே இறுதியில் முடிவு செய்யும்.

* கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள, வாக்குப்பதிவு முடிவு பட்டன் மேல் உள்ள சீல் முகவர்கள் முன்னிலையில் உடைக் கப்பட்டு, பட்டன் அழுத்தப்படும். தற்போ து கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள திரை யில், ஒவ்வொரு வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை காண முடியும். அவசியம் எனில் வாக்குப்பதிவு முடிவு பட்டனை மீண்டும் அழுத்தி வாக்கு எண்ணிக்கையை திரும்பவும் அறியலாம். இதை ஒவ்வொரு மேஜையி லும் உள்ள வாக்கு எண்ணிக்கை மேற் பார்வையாளர் 17-சி படிவத்தில் பதிவு செய்து கையொப்பமிடு வார். முகவர்களும் இந்த படிவத்தில் கையொப்பமிடலாம். முகவர்கள் வாக்குப்பதிவு தினத்தன்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடமிருந்து பெறப்பட்ட 17-சி படிவத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை முகவரிடம் அளிக்க வேண்டும்.

* தலைமை முகவர், மேஜை முகவர்களி டமிருந்து பெற்ற 17-சி படிவத்திற்கும் ஒவ் வொரு மேஜையிலிருந்து பெறப்பட்ட 17-சி படிவத்திற்கும் ஒத்து வருகிறதா என்று சரிபார்க்க வேண்டும். அல்லது இக்குறிப் பிற்கு மேஜை வாரியாக ஒவ் வொரு சுற்றி லும் வாக்கு எண்ணிக்கை குறித்து முக வர்கள் ஒரு குறிப்பேட்டையும் பராமரிக் கும் வகையில் ஏற்பாடு செய்தால் நல்லது.

* வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சுற்றிற்கும் முடிவில் தேர்தல் வாக்கு எண் ணிக்கை பார்வையாளர் அங்கொன்றும், இங்கொன்றுமாக இரு மேஜைகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கருவியினை எடுத்து மீண் டும் ரிசல்ட் பட்டனை அழுத்தி அதிலுள்ள விபரமும், 17-சி படிவத்தில் கொடுக்கப் பட்ட விபரமும் சரியாக உள்ளதா என ஒப் பிட்டுப் பார்ப்பார். அவருக்கு உதவ ஒவ் வொரு மேஜையிலும் மத்திய அரசு அல் லது பொதுத்துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் விபரங்களை சேகரித்து அளிப்பார்.

* ஒவ்வொரு சுற்றிலும் அனைத்து மேஜை களிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் நடத்தும் அதிகாரி விபரங்களைப் பெற்று, முதல் சுற்று எண்ணிக்கை விபரத் தை அறிவித்த பிறகுதான் அடுத்த சுற்று எண்ணிக்கை துவங்கும்.

* வாக்கு எண்ணப்படும் முறை குறித்தும், வாக்கு எண்ணும் அதிகாரிகளின் நடத் தை குறித்தும் சந்தேகம் ஏற்படின் அல் லது ஆட்சேபணை இருப்பின், முகவர்கள், வேட்பாளர்கள் அல்லது தலைமை முகவர் கள் மூலமாகவோ அல்லது தானோ தேர் தல் நடத்தும் அதிகாரிக்கு புகார் கொடுக்க லாம். வாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் எவரும் வாக்குவாதத்தில் இறங்கக் கூடாது.

* வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியால் படிவம் 20-ல் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் அறிவிக் கப்படும். இதற்கு பிறகே அடுத்த சுற்று எண்ணிக்கை தொடங்கும். முடிவுத்தா ளில் முடிவினை எழுதி தேர்தல் அதிகாரி கையெழுத்திடுவதற்கு முன்பாக மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான கோரிக்கை வேட்பாளராலோ அவரது முகவர்களாலோ உரிய காரணங்களோடு அளிக்கப்படலாம்.

* ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமரா மூல மும், வீடியோ மூலமும் வாக்கு எண்ணும் பணி நேரடியாக பதிவு செய்யப்படுகிறது

தபால் வாக்குகள் எண்ணிக்கை

* முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக் குகள் எண்ணும் பணி துவங்கும். இப் பணி 8.30மணிக்குள் முடியவில்லை என் றாலும், 8.30 மணிக்கு கட்டுப்பாட்டுக் கரு விமூலம் வாக்கு எண்ணிக்கை தொடங் கப்படும்.

* தபால் வாக்குகள் 13-இ என்ற கவரில் இருக்கும். இதனை திறந்து அதனுள் உள்ள 13-அ மற்றும் 13-ஆ, கவர்களை எடுக்க வேண்டும். முதலில் 13-அ கவரில் உள்ள உறுதிமொழிப் படிவம் முறை யாக பூர்த்தி செய்யப்பட்டு, வாக்காளர் கையொப்பமிட்டு இருக்க வேண்டும். அதை உரிய அலுவலர் மேலொப்பம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு இல்லை எனில் 13-ஆ (வாக்குச் சீட்டு உள்ள கவர்) திறக்கப்படாமல் நிராகரிக்கப் பட வேண்டும். உறுதிமொழி படிவம் சரி யான முறையில் இருந்தால் 13-ஆ கவர் பிரிக்கப்பட் டு அதி லுள்ள வாக்குச்சீட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். முன்னதாக இந்த வாக்குச் சீட்டுகள் செல்லத்தக்கதா? முறையான வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என் பதையும் கண்டறிய வேண்டும். பின்னரே வாக்குகளை எண்ண வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டுக் கரு விகளில் வாக்கு எண்ணிக்கை முடிவ டைவதற்கு இரண்டு சுற்றுக்களுக்கு முன்னர் தபால் வாக்குகள் எண்ணிக்கை வெளியிடப்பட வேண்டும்.

* வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் வேட்பாளர் அல்லது அவரின் முகவர்கள் முன்னிலையில் கட்டுப்பாட்டுக்கருவி யில் உள்ள பேட்டரிகள் அகற்றப்பட்டு, மீண்டும் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியின் முத்திரை வைக் கப்படும். வேட்பாளரின் முத்திரையும் இதில் வைக்கலாம். இப்பணியிலும் முக வர்கள் முழுமையான கவனம் செலுத்தப் பட வேண்டும். அனைத்து கட்டுப்பாட்டுக் கருவிகளின் பேட்டரிகளும் நீக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பிற்கு கொண்டு செல்லப்படும்வரை கவனம் தேவை. குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி அமையுமானால் மறு வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

Monday, May 9, 2011

Crorebathi CMs in India

கோடீஸ்வர முதலமைச்சர்கள்
-க.ராஜ்குமார் -
நன்றி - தீக்கதிர் - 10-05-11

இந்தியாவில் உள்ள 30 முதலமைச் சர்களில், 24 முதலமைச்சர்கள் கோடீஸ் வரர்கள் என தகவல்கள் வெளியாகி யுள்ளது. 30 முதலமைச்சர்களின் சொத்து மதிப்பீடு அவர்கள் தேர்தலில் போட்டி யிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது அளித்த தகவல்களின் அடிப்படையில் சுமார் 236 கோடி ரூபாய் ஆகும். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமையில், மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங் களில் உள்ள இடதுசாரி அரசுகளின் முத லமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் பட்டிய லில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய் யும்போது ஒவ்வொரு வேட்பாளரும் தனது சொத்து மதிப்பு குறித்து உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என 2003-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்த ரவு பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படை யில் பெறப்பட்ட தகவல்களே முதல மைச்சர்களின் சொத்து குறித்து கிடைத் துள்ள தகவல்கள் ஆகும். ஆனால் இந்த தகவல்களே குறைத்து கொடுக்கப்பட் டுள்ளன என்றும் இது குறித்து வரு மானவரித்துறை ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒரு கருத்து உள்ளது. ஏனெனில் தற்போது மேற்கண்ட முதலமைச்சர்கள் கொடுத் துள்ள தகவல்களில் பெரும்பான்மை யோருக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் அவர்களின் வங்கி இருப்புத் தொகை சொற்பத் தொகையாகவும் காட் டப்பட்டுள்ளது.

அண்மையில், ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கோடீஸ்வர முதலமைச் சர்களின் பட்டியலில் முதல் இடத்தை உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் மாயாவதி பிடித்துள்ளார். பள்ளி ஆசிரி யையாக இருந்த மாயாவதி இன்று 2010ல் ரூ.87 கோடிக்கு அதிபதியாக உயர்ந்துள் ளார். 2007-ல் இவரது சொத்து மதிப்பு ரூ.52 கோடி என இவர் கணக்கு காட்டி யுள்ளார். இந்த மூன்று ஆண்டு காலத்தில் 67 விழுக்காடு இவரது சொத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது. 2007-2008 வரி விதிப்பு ஆண்டில் இவர் ரூ.26 கோடி வரி செலுத்தி இந்தியாவில் அதிக மான வரி செலுத்துவோர் பட்டியலில் முதல் இருபது இடத்தில் உள்ளார்.

பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளவர் தமிழ்நாட்டின் முதலமைச் சர் கருணாநிதியாவார். இவரின் சொத் தின் மதிப்பு ரூ.44 கோடி ஆகும். இவரது துணைவியார் தயாளம்மாளுக்கு ரூ.17.34 கோடியும் மற்றொரு துணைவியாருக்கு ரூ.18.68 கோடியும் உள்ளது என கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் இவரது மகன்கள், பேரன்கள் சொத்து மதிப்பு ஏதும் சேராது. 2010-ல் சன் டி.வியில் இருந்து தனக்கு ரூ.100 கோடி பங்கு தொகை கிடைத்ததாகவும், இதற்கு ரூ.22.50 கோடி வருமானவரி செலுத்தி யிருப்பதாகவும், இதில் தான் 10 கோடி ரூபாய் வைத்துக்கொண்டு, மீதியை தனது குழந்தைகளுக்கும் அறக்கட் டளை நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டதாகக் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இப்பட்டியலில் மூன்றாவது இடத் தைப் பிடித்துள்ளவர், காங்கிரஸ் கட்சி யை சேர்ந்த சமீபத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த, அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி காண்டு ஆவார். இவர் 2009ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையின்படி இவருக்கு ரூ.23 கோடி சொத்து உள்ளது.

இவருக்கு அடுத்ததாக, பிஜேபியை சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் எடியூ ரப்பாவிற்கு 2008-ம் ஆண்டில் அவர் காட்டிய சொத்து மதிப்பு ரூ.2 கோடியாக இருந்தாலும், தற்போது அவரின் சொத்து இந்த வருடம் ரூ.11 கோடியாக உயர்ந் துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தனது தொகுதியில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடு ஒன்றும் உள்ளது.

சிரோன் மணி அகாலிதள தலை வரும், பஞ்சாப் முதலமைச்சருமான பிர காஷ் சிங் பாதலுக்கு உள்ள சொத்தின் மதிப்பு ரூ.9.20 கோடியாகும். (2007) ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் பஞ் சாப் முழுவதும் ஹெலிகாப்டரில் சென்று வந்ததற்குமட்டும் ரூ.33 கோடி செலவிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் கர்கோன் நகரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள டிரிடென்ட் ‘ஹில்டன் என்ற ஹோட்டலில் இவ ருக்கு 85 விழுக்காடு பங்கு உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

மற்ற கோடீஸ்வரர்கள் பட்டியல் தொடர்கிறது

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என்.கிரண்குமார் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் உள்ள சொத்தின் மதிப்பு ரூ.8.11கோடி

ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ரூ. 7.89 கோடி, நாகலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ ரூ.7.23 கோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மகாராஷ்டிர முதல்வர் பிரித்வி சவாண் ரூ.6.81 கோடியும், பாண்டிச்சேரி முதலமைச்சர் வி.வைத் தியலிங்கத்திற்கு ரூ.5.70 கோடியும், அசாம் முதலமைச்சருக்கு ரூ.4.94 கோடியும், சிக்கிம் முதலமைச்சர் பாவன் சாம்லிங்கிற்கு ரூ.3.82 கோடியும், ஹரியானா முதலமைச்சர் பி.எஸ். ஹமூடாவிற்கு ரூ.3.74 கோடியும், ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு ரூ.3.49 கோடியும், மேகாலயா முதல்வர் முகுல் சங்மாவிற்கு ரூ.3.42 கோடியும், கோவா முதலமைச்சர் திகம்பர் காமத் திற்கு ரூ.3.23 கோடியும், மிசோராம் முதல் வர் பு லல்தன் வாலாவிற்கு ரூ.2.29 கோடியும்,

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ரூ.1.5 கோடியும், ஜார்கண்ட் முதல்வர் அர்ஜூன் முன்டாவிற்கு ரூ.1.33 கோடியும், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானுக்கு ரூ.1.23 கோடியும், தில்லி முதலமைச்சர் ஷீலாதீட்ஷித்திற்கு ரூ.1.18 கோடியும், இமாச்சலப் பிரதேச முதல்வர் பி.கே.துமாலுக்கு ரூ.1.18 கோடியும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டிற்கு ரூ.1.04 கோடியும், சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கிற்கு ரூ.1 கோடியும் சொத்துக்கள் உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மற்ற முதல்வர்களின்

சொத்து மதிப்பு

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் புத்ததேவின் சொத்து மதிப்பு ரூ.46.20 இலட்சம், கேரள முதல்வர், அச்சுதானந்தன் சொத்து மதிப்பு ரூ.16.09 லட்சம், திரிபுரா முதல மைச்சர் மாணிக் சர்க்கார் சொத்து மதிப்பு ரூ.8.11 லட்சம் எனவும் தகவல்கள் வெளி யிடப்பட்டுள்ளன. பட்டியலில் கடைசி மூன்று இடத்தில் இரண்டு இடம் கம்யூ னிஸ்டு முதலமைச்சர்களுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. 35 ஆண்டுகாலம் மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் வர் கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது இங்குள்ள அரசி யல்வாதிகளுக்கு திகைப்பூட்டும் செய்தியாக இருக்கும்.

உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணை யமும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலமாக மக்கள் தங்கள் முதலமைச் சர்கள் குறித்து அறிந்துகொள்ள ஓரள விற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் ஏழைப்பங்காளர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள முயற்சிக் கும் தலைவர்களின் முழுமையான சொரூபம் இன்னும் வெளிப்படவில்லை என்பதே உண்மையாகும். வருமானவரி ஏய்ப்பவர்கள் பட்டியலிலும், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டிய லிலும், கருப்புப் பணத்தை வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டிய லிலும் உள்ளவர்களின் பெயர்கள் வெளி யிடப்பட்டால், இவற்றிலும் இந்நாள் முன் னாள் முதலமைச்சர்களின் பல பெயர் கள் இடம்பெற்றிருக்கும் என்பதில் ஐய மில்லை.

Sunday, May 1, 2011

மே தின வரலாறு

மேதினி போற்றும் மேதினம்!
-க.ராஜ்குமார் -

நன்றி தீக்கதிர் - 01-05-11
1886-ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதியன்று சிகாகோ நகரில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் வேலை கேட்டு நடத்திய மகத்தான வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடையாளமே இன்று உலகம் முழு வதும் மே தினமாக கொண்டாடப்படு கிறது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல், அடால்ப் பிட்சர் ஆகியோர் தங் களது இன்னுயிரை இதற்காக விலை யாக தரவேண்டியிருந்தது. தொழிலா ளர் தலைவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண் டனை விதிக்கப்பட்டது.

1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதியன்று சிகாகோ நகரில் 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக கார்மிக் ஹார் வெஸ்டர் என்ற கம்பெனியின் முன் னால் திரண்டிருந்த 500 தொழிலாளர் களிடையில் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். அமைதியான முறையில் நடைபெற் றுக் கொண்டிருந்த இந்த கூட்டத்தை காவல்துறையினர் கண்மூடித்தன மாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். ஐவர் படுகாயமுற்ற னர். பலர் தாக்கப்பட்டனர். இந்த அடக்கு முறையை கண்டித்து அன்று இரவு, சிகாகோ நகரின் மையப் பகுதியில் உள்ள ஹே மார்கெட் என்ற இடத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தோழர்கள் ஆகஸ்டு ஸ்பைஸ், ஆல்பர்ட் பார்ஸன்ஸ், சாமு வேல் பீல்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்டதால் இறுதி கட்டத்தில் சுமார் 200 தொழிலாளர் கள் மட்டுமே இருந்தனர். சாமுவேல் பீல்டன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜான்போன் பீல்டு என்ற அதிகாரியின் தலைமையில், 180-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கூட்டத்தினரை வளைத்து உடனடியாக கலைந்து போகும்படி உத்தரவிட்டனர். சிறிது நேரத்தில் அங்கு கலவரம் வெடித்தது. அப்போது திடீரென்று காவல்துறை யினர் மீது ஒரு கையெறி குண்டு வந்து விழுந்தது. அதில் ஒருவர் உயி ரிழந்தார். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட்டனர். இதில் பல தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உரிமைக் குரல்

இந்த கலவரத்தை காரணம் காட்டி தொழிலாளர்களின் தலைவர் கள் கைது செய்யப்பட்டனர். 1886-ம் ஆண்டு மே 1-ம் தேதி கைது செய்யப் பட்டு ஒரு ஆண்டிற்கு மேலாக நீதிமன் றத்தில் விசாரணை செய்யப் பட்டு, 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம்தேதி அவர்கள் தூக்கிலிடப்பட்ட னர். மேற்கண்ட நான்கு தோழர்களு டன், அடால்ப் பிட்சர், மைக்கேல் ஸ்வார்ப், சாமுவெல் பீல்டன், லூயிஸ் லிங்க் மற்றும் ஆஸ்கர் நீப் ஆகிய தோழர் களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் ஆஸ்கர் நீப் என்ற தோழ ருக்கு 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற தோழர்களுக்கு மரண தண் டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு உலகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள் நடை பெற்றன. இதன் விளைவாக ஸ்வார்ப் மற்றும் பீல்டன் ஆகியோருக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங்கல், அடால்ப் பிட்சர், ஆகியோர் 1887-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ந்தேதியன்று தூக்கிலிடப்பட் டனர். லூயிஸ் லிங்க் என்ற தோழர் சிறை யிலேயே தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார்.

நீதிமன்றத்தில்

உரிமைக் குரல்

சிகாகோ நகர தொழிலாளர் களுக்கு 8 மணி நேரம் வேலை கேட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்திய தோழர் களில் முதன்மையானவர் தோழர் ஆகஸ்டு ஸ்பைஸ் ஆவார். நீதிமன் றத்தில் இவர் மீது குற்றம் சுமத்தி வாதா டிய அரசு வழக்குரைஞர், ‘ஆயிரம் ஆயிரம் தொழிலாளர் இவர் பின்னால் அணிதிரண்டதே இவர் செய்த முதன் மையான குற்றம்’ என வாதிட்டார். ஆகஸ்ட் ஸ்பைஸோ, ‘இந்த குற்றச் சாட்டே தனக்கு தற்காப்பு வாதமாக அமைந்து விட்டது” என எதிர்வாதம் செய்தார். காவலர்கள் மீது தான் குண்டு வீசியதாக அரசு தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது இதன்மூலம் பொய் என நிரூபிக்கப்பட்டுவிட்டதாக வாதிட் டார். காவலர்கள் மீது வீசப்பட்ட குண்டு தன்னால் உண்மையில் வீசப்பட்டி ருந்தால் அதை நீதிமன்றத்தில் ஏற் றுக்கொள்வதில் தனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது என்று தைரி யத்தோடு உரைத்தார்.

மற்றொரு தோழர் ஆல்பர்ட் பர் ஸன் நீதிமன்றத்தில் வாதாடுகையில், மரம் கனிகளால் அறியப்படுவதைப் போல் தொழிலாளர்கள், போர்க்குணம் மற்றும் தியாகத்தின் மூலம் தங்களது உண்மையான தலைவர்களை அடையாளம் கண்டுகொள்வார்கள். தங்களுக்கு அளிக்கப்படும் மரண தண்டனை தீப்பொறியாக உலகம் முழுவதும் பரவும் என ஆர்ப்பரித்தார்.

ஆஸ்கர் நீபி என்ற தோழர், கல வரம் விளைவிக்கப்பட்ட இடத்தில் நடந்த கூட்டத்திற்கு தான் தலைமை வகித்தேன் என்ற உண்மையை இந்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொள்வ தாகவும், 8 மணி நேரம் வேலை கேட்டு போராடிய தொழிலாளர்க ளுக்கு நான் தலை வன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுவதாகவும் உரைத்தார்.

அடால்ப் பிட்சர் என்ற தோழர் நீதி மன்றத்தில் உள்ள காவலர்களைப் பார்த்து எள்ளி நகையாடி இவர்களா சட்டத்தின் காவலர்கள்? இவர்கள் திரு டர்கள். அடுத்தவர்களின் சொத்தினை அபகரிப்பவர்கள் என எக்காளமிட்டார்.

தோழர் மைக்கேல் ஸ்வாப், நீதி மன்றத்தில் தங்களுடைய நோக்கம் கலகம் விளைவிப்பது அல்ல, சோச லிசத்தை அடைவதே என்று பிரக டனப்படுத்தினார்.

தோழர் ஜார்ஜ் ஏங்கல், தொழிலா ளர்களின் தேவை, வேலை, ரொட்டி, அமைதி, இவை மூன்றுதான். இது கூட இவர்களுக்கு இன்று உத்தரவா தப்படுத்தப்படவில்லை என்று முழக்க மிட்டார்.

தோழர் சாமுவேல் பீல்டன் நீதி மன்றத்தில் உரையாற்றுகையில், நாங் கள் சோசலிசத்தைப் பேசினால் சிலர் பயப்படுகிறார்கள் நாங்கள் பிறரின் சொத்துக்களை சோசலிசத்தின் பெய ரில் அபகரித்து விடுவோம் என நினைக் கிறார்கள். ஆனால் சோசலிசத்தின் நோக்கம் அது அல்ல. யார் ஒருவர் இன்னொருவருடைய சொத்துக்களை திட்டமிட்டு பறிக்கிறார்களோ அதை தடுத்து நிறுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குவதுதான் சோசலிசம் என விளக்கினார்.

முதலாளித்துவத்திற்கு சாவுமணி!

சுரண்டப்படும் தொழிலாளர்களை திரட்டி, சோசலிச உணர்வுகளை ஊட்டி முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வதை ஒடுக்கவே, காவல்காரர்களே குண்டு வீசி சதி செய்து, தங்கள் மீது குற்றம் சுமத்தி மரண தண்டனை வழங்க திட்டமிட்டுள்ளார்கள் என்று தெரிந்தி ருந்தும், மே தின தியாகிகள் சிறிதும் அஞ்ச வில்லை. நீதிமன்றத்தில் வாதாடுவது மூலம் தாங்கள் தண் டனையிலிருந்து தப்பமுடியும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அந்தக் கொலைக்களத்தை யும் பிரச்சார மேடையாக பயன்படுத்தி முதலாளித்துவத்தின் முகமூடியை கிழித்தெறிந்து, சோசலிசத்தின் மேன் மையை தூக்கிப் பிடித்து, நீதிமன்றத் தில் அவர்கள் ஆற்றிய உரையும், ஆதிக்க சக்திகளின் திணறலையும், வரலாற்று ஆவணமாக மாற்றிய அவர்களின் வீரத்தை போற்றி பாராட்ட வார்த்தை களே இல்லை. அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீரத்துடன் போராடிய அந்த தோழர் களுக்கு கிடைத்த மரண தண்ட னையே முதலாளித்துவத்திற்கு அடிக் கப்பட்ட முதல் சாவு மணியாக மாறி யது. அவர்களின் மரணமே உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்த்திடும் மகத்தான சக்தியாக இன்று உருவெ டுத்து உள்ளது. மே தின தியாகிகள் வாழ்க!

Saturday, April 16, 2011

தேர்தல் ஜாக்கிரதை

ஜனநாயகம் வெல்லும் -க.ராஜ்குமார் - நன்றி தீக்கதிர் - 1304-11 தமிழக தேர்தல் ஆணையர் பிரவீண் குமார் தேர்தல்களத்தில் பணப்புழக்கம் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி யுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை தமிழ்நாட்டில் 33.11 கோடி ரூபாய் கைப்பற்றப் பட்டுள்ளது என்றும் 12.58 கோடி ரூபாய் மதிப் புள்ள பரிசுப் பொருட்கள் கைப் பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிடிபட்ட பணம் ஒரு சில கோடிகள் என்றால் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிய பணம் பல ஆயிரக் கணக் கான கோடி ரூபாய் இருக்கும். ஏனெனில் இன்று சில தொகுதிகளில் ஒரு ஓட்டிற்கு ரூ.1000 வரை தரப்படுகிறது. இது ஒன்றும் இரகசியமான விஷயமாக கருதப்படவில் லை. பகிரங்கமாக இன்று பலதொகு திகளில் பணப்பட்டுவாடாவை செய்துவரு கின்றனர். பணம் கடத்துவதில் தங்களின் திறமை யையும், அதிகாரத்தையும் இவர்கள் பயன் படுத்த தவறுவதில்லை. சமீபத்தில் சென் னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணை யம் அதிர்ச்சியான தகவலை தெரிவித் துள்ளது. காவல்துறை அதிகாரிகளின் வாக னங்களிலேயே பணம் கடத்தப்படுவதாகவும் இதுகுறித்து அந்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவருக்கு சொந்தமான பேரூந்திலிருந்து ரூ.5 கோடிக் கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாட்டில் மட்டும், இதுவரை 975 வழக்குகள் பணப் பரிவர்த்தனை மற்றும் பரிசுப்பொருள்கள் வாக்காளர்களுக்கு வழங் கியது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன என் றும் தெரிவித்துள்ளார். தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே பெருமளவிற்கு பணப்புழக்கம் அதி கரித்துள்ளது என்பது அவரது அறிக்கையி லிருந்து தெரியவருகிறது. தேர்தல் ஆணை யம் கடுமையாக நடவடிக்கை எடுத்தும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை என்பதே அவரின் செய்தியாக உள்ளது. சில பகுதிகளில் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா குறித்து தகவல் கிடைத்திருப்பதாகவும் அத் தகைய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந் தாலும் தேர்தல் ஆணையம் அவற்றினை ரத்து செய்து மறுதேர்தல் நடத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதும் குற்றம், வாக்காளர் பணம் பெறுவதும் குற்றம் என்றும், ஓராண்டுவரை இதற்கு சிறைத்தண்டனை கிடைக்கும் என வும் அவர் எச்சரித்துள்ளார். ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தின் மூலம் ஊழல் செய்து கோடிக் கணக்கில் சேர்த்துவைத்துள்ள பணத்தில் ஒருபகுதியை மக்களுக்கு பகிர்ந்து அளிப்பதின் மூலம் அவர் களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என நினைத்து வருகின்றனர். எனவேதான் இந்த வேலையில் அமைச்சர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மக்கள் ஏமாறத்தயாராக இல்லை. பணப் பட்டுவாடா செய்ய வருபவர்கள் யார் என்பதை அறிந்துகொண்டுள்ள அவர்கள், ஊழலில் கொழுத்த வேட்டையாடிய இவர்கள், தங் களுக்கு எலும்புத் துண்டை வீச வருகிறார்கள் என்பதை புரிந்துகொண்டுள்ளனர். பல இடங்களில் பணம் கொடுக்க வரு பவர்களை மக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ஆனால் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு கிடைக்கும் புகார்களை முன் கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்துவிட்டு, சம்பவ இடத்திற்கு கால தாமதமாக சென்று சமூகவிரோதிகளை தப்பவிட்டுவிடுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் பார்வையாளர்களாக வெளி மாநிலங் களிலிருந்து வந்துள்ள தேர்தல் அதிகாரிகள் இதனை தெரிந்துகொண்டு அவர்களின் நேரடிப் பார்வையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு பணப் பட்டுவாடாவை தடுத்து வருகின்றனர். இதனால்தான் கோபமடைந்த சிலர் தேர்தல் ஆணையத்தை திட்டித் தீர்த்து வருகின்றனர். முன்னெப்பொழுதும் கண்டிராத அளவிற்கு இந்த தேர்தலில் பணம் புரண்டாலும் மக்கள் இத்தகைய அரசியல்வாதிகளை கண்டு முகம் சுழித்து வருகின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என பல்வேறு ஊழல்கள் குறித்து அறிந்துள்ள மக்கள் இன்று தேர்தலில் விநியோகிக் கப்படும் பணத்தை அருவருப்புடன் பார்க் கின்றனர். இந்த ஊழல் கூட்டணி வேட் பாளர்களுக்கு மீண்டும் வாக்களித்து ஆட்சி யில் அமர்த்தி னால் இந்தியாவையே விற்று விடுவார்கள் என மக்கள் கருதிவிட்டனர். எனவே இத்தகையவர்களை தண்டிப்பது என முடிவெடுத்து விட்டனர். இந்த தேர்தலில் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் முன்னுக்கு வந்திருந்தாலும் மக்கள் முதன் மையாக பார்ப்பது ஊழல் பெருச்சாளிகளின் கொள்ளையோ கொள்ளையைத்தான். கொள் ளையடித்த பணத் தின் மூலம் மீண்டும் ஆட் சியைப் பிடித்து விட்டால் என்று நினைப்ப வர்களை அப்புறப்படுத்த மக்கள் முடிவெ டுத்துவிட்டனர். எனவே இந்த தேர்தலில் பணநாயகத்தை வீழ்த்தி வெல்லப்போவது ஜனநாயகமே!

Friday, April 15, 2011

தேர்தல் உஷார்

ஆட்சி மாற்றமும்! விலைவாசி உயர்வும்! -க.ராஜ்குமார் - நன்றி தீக்கதிர் 31-03-11 1967-ல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு முதன்மையான காரணங்களில் விலைவாசி உயர்வும் ஒன்றாகும். 1964-ல் தமிழ்நாட்டில் உண வுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப் பாடு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற் றுக் கொண்டிருந்தது. முதலமைச்சராக பக்தவச்சலம் இருந்தார். 1967-ல் நடை பெற்ற சட்டமன்ற தேர்தலில் விலைவாசி உயர்வை முன்வைத்து திமுக தேர்தலை சந்தித்தது. ‘பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி’ ‘காமராஜ் அண்ணாச்சி பருப்புவிலை என்னாச்சி’ ‘கூலி உயர்வு கேட்டான் அத்தான் குண் டடிப்பட்டு செத்தான் அத்தான்’ ‘கும்பி எரியுது குளு குளு ஊட்டி ஒரு கேடா’ என்ற முழக்கங்களை முன்வைத்து திமுக பிரச்சாரம் செய்தது. காங்கிரஸ் தோற்று, திமுக வெற்றியும் பெற்றது. ஆனால் இன்று அதே திமுக அதே காங்கிரஸமூடன் கூட்டணி சேர்ந்து கொண்டு விலைவாசி உயர்வை நியா யப்படுத்திக் கொண்டுள்ளது. சமீபத்தில் சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் அன் பழகன் விலைவாசி ஏற்றத்திற்கு ஆட்சி யாளர்கள் பொறுப்பில்லை என்றும், பூகம் பம், வெள்ளம் வருவதைப் போன்றுதான் விலைவாசி உயர்வும் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளார். முன் எப்பொழுதும் கண்டிராத விலை வாசி உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு இன்று ஆளாகியுள்ளனர். திமுக, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுவதாக சொல் லிக்கொண்டாலும் 100 ரூபாய்க்கு பருப்பு விற்பதையும், சர்க்கரை, சமையல் எண் ணெய் போன்ற உணவுபொருட்களின் விலை யானை விலைக்கு விற்பதையும்; மறைக்க முடியாது. ஏன் வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்றது? எப்படி விலை குறைக்கப்பட்டது? இடையில் கொழுத்த இலாபம் யார் பெற்றது? என்பதை நாடே அறியும். வெளிநாடுகளுக்கு வெங்காயத் தை ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுத்த தும், மாடுகள் ஓடிய பிறகு பட்டியை சாத் தியதும், திமுக பங்கேற்றுள்ள, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் என்பதை அனைவரும் அறிவார்கள்.. விலைவாசி உயர்விற்கு மூல காரண மாக உள்ளது பெட்ரோல், டீசல் விலை உயர்வாகும். அதை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசில் திமுக பங்கேற்றுள்ளது. பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள நிறுவனங்களுக்கே அதிகாரத்தை வழங் கும்போது, அதற்கு ஆமாம் போட்ட திமுக, இதுவரை மவுனமாக இருந்துவிட்டு, இனி விலைவாசியை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தப் போகிறதாம்! தற்போது திமுக தேர்தல் அறிக்கை யில், தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந் தால் (!) விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில் ஊகவணிகத்தை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளது. யார் மத்திய அரசில் ஆட்சி செய்வது? யார் யாரை வலியுறுத்துவது? தமிழ்நாட்டு மக்கள் எதைச் சொன்னாலும் ஏமாந்து விடுவார்கள் என திமுக தப்புக்கணக்கு போடுகிறது. சட்டமன்ற தேர்தலில் அதிக சீட்டு கேட்டு காங்கிரஸ் கட்சி திமுகவை வற்புறுத்தினால், மத்திய அரசிலிருந்து விலகி விடுவோம் என மிரட்டும் திமுக, ஏன் ஊக வணிகத்தை தடை செய்யா விட்டால் ஆட்சியிலிருந்து விலகிவிடு வோம் என மிரட்டக்கூடாது ? தமிழ் நாட்டு மக்கள் எதையும் எளிதில் மறந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில்தானே மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுக, மத்திய அரசை வலியுறுத்துவோம் என வெற்று வாக்குறுதியை தந்துள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மற்றொரு வேடிக்கை, சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை திமுக வலியுறுத் தப் போகிறதாம். பட்டிதொட்டிகளிலெல் லாம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சில் லரை வர்த்தகத்திற்கு அனுமதி அளித்து விட்டு, அப்பளம் முதல் குடிக்கும் நீர் வரை அந்நியநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு இனி அந்நிய முதலீடுகளை எதிர்க்கப்போகிற தாம். கேட்பவர்கள் இ-னா வா-னாவாக இருந்தால் இதையும் சொல்வார்கள், இன்னமும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணத் தை தேர்தலுக்கு தேர்தல் சத்தம் போடா மல் குறைத்துவிட்டு, தேர்தல் முடிந்த வுடன் வினோதமான பெயர்களை பேருந்துகளுக்கு சூட்டி கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் பணம் பறிக்கும் திமுக அரசின் நயவஞ்சகத்தனம் அம் பலப்பட்டுவிட்டது. இனியம் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற ஆசைக் கனவை தகர்த்தது திமுக ஆட்சி அல்லவா? செங்கல் விலை மூன்று மடங்காகவும், கம்பி விலை குதிரை விலையாகவும் யார் ஆட்சியில் உயர்ந்தது? மணல் விலை மலையாக உயர்ந்ததற்கும் யார் காரணம்? ஆற்றில் மணல் எடுத்து கோடி கோடியாக பணம் சேர்த்தவர்களின் பின்னால் யார் உள்ளனர் என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துவிட்டார்கள் போலும். கட்டுமானப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்ததால் பாதியில் நின்று போன வீடுகள் இன்று திமுக ஆட்சியின் அவலத்தை பறைசாற்றிக்கொண்டுள் ளன. இதனால் வேலைவாய்ப்பை இழந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குடும் பங்கள் பட்டினியால் வாடிக்கொண்டுள் ளன. ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்ட அவர்கள் காத்துக்கொண்டுள் ளனர். மத்திய அரசின் கொள்கையால், மாநில அரசின் கண்டும் காணாதப் போக் கால், இன்று நூல் விலை கடுமையான ஏற்றத்தை சந்தித்துள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நூல் வியாபாரிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் குடும்பங் கள் இன்று நடுத்தெருவிற்கு வந்துவிட் டன. விசைத்தறி உரிமையாளர்கள் வங்கி யில் வாங்கிய கடனை கட்ட முடியால் பரி தவிக்கின்றனர். விசைத்தறி தொழி லாளர்கள், ஷிப்ட் குறைக்கப்பட்டு அரை வயிற்று கஞ்சிக்கு ஆளாய் பறந்துகொண் டுள்ளனர். போதாக்குறைக்கு தமிழக அரசின் மின்வெட்டு காரணமாக பஞ்சா லைகளும் விசைத்தறிகளும் விழி பிதுங்கி விக்கித்து நிற்கின்றன. இதுதான் திமுக அரசின் கடந்த 5 ஆண்டுகால சாதனையாகும், யார் சென்றாலும் வேலை கிடைக்கும் என்ற தமிழகத்தின் மான்செஸ்டர் திருப்பூர் இன்று சோகக் கடலில் மூழ்கிக் கிடப்பதற்கு யார் காரணம்? சாயப்பட் டறை கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத் தை பொறுப்பற்ற முறையில் தமிழக அரசு அணுகிய காரணத்தால் இன்று இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை யிழந்து வாடிக்கொண்டுள்ளனர். சிறு தொழில் நிறுவன உரிமையாளர்களிலி ருந்து பெரும் தொழில்நிறுவன உரிமை யாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று திருப்பூர் தொகுதியில் நூற்றுக் கணக்கானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளனர். திருப்பூரின் இன்றைய அவலநிலைக்கு காரணமான மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு மக்கள் தக்க தீர்ப்பு எழுத காத்துக் கொண்டுள்ளனர். எல்லா பொருட்களின் விலையும் உயரும். ஆனால் பால் கொள்முதல் விலை மட்டும் ஏன் உயராது? பால் கொள்முதல் விலை உயர்வு கேட்டுப் போராடிய பால் உற்பத்தியாளர்களை, எங்களுக்கும் போராட்டம் நடத்த தெரியும் என மிரட்டியவர்தான் இன்று வாக்கு கேட்டு தமிழக மக்கள் மத்தியில் வலம் வந்துகொண்டுள்ளார். எந்த விலைவாசியை வைத்து 1967ல் திமுக காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியதோ அதே விலைவாசி உயர்வு இன்று திமுக-காங்கிரஸ் கூட் டணியை வீழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

Monday, March 28, 2011

சொன்னதும் செய்ததும்

மக்களை ஏமாற்றுவதில் திமுக அரசு முதலிடம் -க.ராஜ்குமார் நன்றி தீக்கதிர் -28-03-11 எதிர்பார்த்தது நடந்துவிட்டது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஓய்வூதியத் திட்டத்தை தனியார்மயமாக்கிட வழிவகுக்கும் சட்டமுன்மொழிவினை ஆட்சி யாளர்கள்; அறிமுகப்படுத்தியுள்ளனர். 2001ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டுவந்த, ஓய்வூதியத்தை தனியார்மயமாக்கிட வழி வகுக்கும் மசோதா கடந்த 10 ஆண்டுகாலமாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியே யும் இடதுசாரிகள் நடத்திய போராட்டங்களின் காரணமாக கிடப்பில் போடப்பட்டது. ஆனால் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, பாஜகவின் ஆதரவுடன், காங்கிரஸ் இன்று மீண்டும் அந்த மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. 2008-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நம் பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப் பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் பிரதமர் மீது உரிமைமீறல் பிரச்சனையை நடப்புக் கூட்டத்தொடரில் கிளப்பிய பி.ஜே.பி., ஓய்வூ திய மசோதாவை காங்கிரஸ் கொண்டுவரும் போது அதை ஆதரித்தது என எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பெருமையுடன் பீற்றிக்கொண்டுள்ளார். தொழிலாளர்களின், மத்திய-மாநில அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இடதுசாரிகளின் கரங் களை பலப்படுத்துவதே இன்றைய தேர்தல் கால உடனடி தேவையாக உள்ளது. ஓய்வூதி யத் திட்டம் தனியார்மயமாக்கலை எதிர்த்து வருவதுடன் இடதுசாரிகள் ஆளுகின்ற மேற்குவங்கம் கேரளம், திரிபுரா ஆகிய மாநி லங்களில் அதை அமல்படுத்த மறுத்துவருப வர்கள் இடதுசாரிகள். இன்று இந்திய நாட் டின் இறையாண்மைக்கு ஆபத்தை விளை விக்கும், ஊழலின் ஊற்றுக் கண்ணாக திகழும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவதும், அவர்களை பலகீனப்படுத்துவதுமே இன்றைய அவசர அவசியத் தேவையாகும். இந்த அடிப்படையி லேயே இன்று தமிழகத்தில் இடதுசாரிகள் பங்கேற்றுள்ள அ.இ.அ.தி.மு.க அணி உருவா கியுள்ளது. இந்த அணியினை வெற்றிபெறச் செய்வதே இன்று நம்முன் உள்ள பணியாகும். திமுகஆட்சிக்கு வந்தபிறகு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். இன்று தேர்தல் நடத்தும் துறையான வருவாய்த்துறையில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில், காலி ஏற் பட்ட 4000 கிராம நிர்வாக அலுவலர் பணி யிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதே துறையில் 3000-க்கும் மேற்பட்ட உதவியா ளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துகின்ற மற் றொரு துறையான ஊரக வளர்ச்சித்துறையில் 3000 உதவியாளர் பணியிடங்கள் காலியாக வுள்ளன. இது துணை முதல்வரின் பொறுப் பில் உள்ள துறை என்பது குறிப்பிடத்தக்கது. அரசுத்துறைகளில் கேந்திரமான, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற துறைகளில் கேட்கவே வேண்டாம். வாய்கூசாமல் காலிப் பணியிடங்களை நிரப்பிவிட்டோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். வருவாய்த்துறையில் வட்டாட்சியருக்கும், ஊரகவளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அவர்களின் பணியின் சிறப்புத் தன்மையை கருத்தில் கொண்டு, தனி ஊதியம் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என ஆணையிட்டவர்கள் ஒரே மாதத்தில் அதை இரத்து செய்து ஆணையிட்டுள்ளனர். “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூ திய முறையை ஒழிப்போம்” என்றார்கள். ஆனால் சிறப்பு காலமுறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து, ஊழியர் களை ஏமாற்றினார்கள். ஊதியக்குழுவால் நிர் ணயிக்கப்பட்ட ஊதியம் கேட்டுப் போராடிய சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர்களை பணியிலிருந்து நீக்கினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிப் போம் என்றவர்கள், அதை செய்திடக் கேட்ட சாலைப்பணியாளர்களை காவல் துறையின ரை வைத்து அடித்து காயப்படுத்தினர். ஆளும் கட்சியினரின் நிர்ப்பந்தத்திற்கு பணியாத அரசுஊழியர்களை அலுவலகத்திற் குள் புகுந்து தாக்கி காயப்படுத்தினர். மணல் கொள்ளையில் சமூகவிரோதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு அரசுஊழியர்களின் உயிருக்கு உலைவைத்தனர். கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரப் படுத்துவோம் என கடந்த தேர்தல் அறிக் கையில் குறிப்பிட்டவர்கள், ஆட்சிக்கு வந்த வுடன் அவர்களை பணியிலிருந்து நீக்கினர். எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறை யின் மூலம் அடக்குமுறையை ஏவினர். அரசு ஊழியர் சங்கத்திற்கு அரசின் அங்கீ காரம் கொடுப்போம் என்று சொன்னவர்கள், அரசின் ஊழியர் விரோத நடவடிக்கைக ளுக்கு ஒத்திசைக்க அரசு ஊழியர் சங்கம் தயாராக இல்லை என்பதால் அங்கீகாரம் கொடுக்க மறுத்தனர் . சங்கப் பிரதிநிதிகளுடன் பேசி பிரச்சனை களை தீர்ப்போம் என்று சொன்னவர்கள், பேச சென்றவர்களை காவல்துறையை வைத்து அடித்து உதைத்து அனுப்பினர். சொன்ன தைச் செய்வோம் என்று சொன்னவர்கள், 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அறிவித்த தேதிக்கு மாறாக ஓராண்டு கழித்து அறிவித்தார்கள். மத்திய அரசு வழங்கிய வீட்டுவாடகைப்படியோ, போக்குவரத்துப்படியோ வழங்க மறுத்துவிட் டனர். மத்திய அரசு மகப்பேறு விடுப்பு 18 மாதங்கள் என்று வழங்கியுள்ள நிலையில் அதை தருவதற்கு தயாராக இல்லாதவர்கள், இன்றும் திமுக தேர்தல் அறிக்கையில் 4 மாதம் தருவோம் என்று அறிவி;த்துள்ளார்கள். ஊதியமாற்ற ஆணைகளில் குழப்பங்களை விளைவித்து ஊழியர்களிடையே பிளவு களை ஏற்படுத்த முயற்சித்தனர். முரண்பாடு களே இல்லை என்று ஏகடியம் செய்தவர்கள் இன்று தங்கள் தேர்தல் அறிக்கையில் மீண் டும் ஆட்சிக்கு வந்தால் முரண்பாடுகளை நீக்க மீண்டும் ஒரு குழுவினை அமைப்பதாக தெரிவித்துள்ளனர்! இனியும் இவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கிட அரசுஊழியர் கள், ஆசிரியர்கள் தயாராக இல்லை. சொல் வது ஒன்றும் செய்வது ஒன்றுமான இவர்க ளின் கபட நாடகத்தை புரிந்து கொண்டுவிட் டனர். ஆடு நனைகிறதே என்று கவலைப் பட்ட ஓநாய்களை அரசுஊழியர்கள் அடை யாளம் கண்டுகொண்டுவிட்டனர். -கட்டுரையாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்

Sunday, March 20, 2011

தேர்வாணையம் தேறுமா ?

அரசுப்பணி நியமனங்களில் முறைகேடுகள்
-க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் 19-03-11
அரசுப்பணி நியமனங்களில் முறை கேடுகள் நடந்திருப்பதால் அவற்றை இரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தால் 2000-01ம் ஆண்டில், துணை ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், வணிகவரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் சார் பதிவாளர், ஊரகவளர்ச்சி உதவி இயக் குனர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் விதி முறைகளை மீறி பிரதான எழுத்து தேர்வு விடைத்தாளில் கலர் பென்சில், கலர் பேனா, கலர் ஸ்கெட்ச், முதலியவற்றை பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்து தனி யார் இருவர் சென்னை உயர்நீதிமன் றத்தில் தொடுத்த வழக்கில் முதலில் தனி நீதிபதி, விதிமுறைகள் பின்பற்றவில்லை என்ற காரணத்திற்காக நியமனங்களை இரத்து செய்ய வேண்டியதில்லை என தீர்ப்பளித்திருந்தார். இதன் மீதான மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 83 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு முரணானது என்று தீர்ப்பளித்து, அவர்களின் நியமனங்களை இரத்து செய்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 6 வார காலத் திற்குள் உரிய விதிமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதிய அனைவரின் விடைத் தாள்களும் மறுமதிப்பீடு செய்து, தகுதி யின் அடிப்படையில் புதிய தரப்பட்டியல் வெளியிட்டு, நியமனங்கள் செய்யப்பட வேண்டுமெனவும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில், விதிமுறைகளை மீறி எழுதப்பட்ட விடைத்தாள்கள் எதற்காக திருத்தப்பட்டன என்பது குறித்து தேர் வாணையம் உரிய காரணத்தை சொல்ல வில்லை என்றும் இதன் மூலம் தேர்வா ணையம் உரிய நடைமுறைகளை பின் பற்றவில்லை என்பதும்; தெரியவருகிறது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தேர்வாணையம் ஒரு சிலரின் விருப்பத்திற்கு அல்லது கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது அதன் பொருளாகும். இப்படி பணிநியமனம் செய் யப்பட்டவர்கள் அரசுப் பணியில் நீண்ட காலம் பணியாற்றியிருந்தாலும், பதவி உயர்வு பெற்று இருந்தாலும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது. ஆனால் தேர்வாணையம் இந்த தீர்ப்பினை அமல்படுத்த தயாராக உள் ளதா என்பதே இப்போது நம்முன் எழுந் துள்ள கேள்வியாகும். ஏனெனில் சமீப காலமாக தேர்வாணையத்தின் நடவடிக் கைகள் தேர்வு எழுதும் போட்டியாளர் களின் அதிருப்திக்கு ஆளாகி, நீதிமன்றத் தில் வழக்குகள் தொடரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் நம்பிக்கையைப் பெற தேர்வாணையம் முன்வரவேண்டும்.

இந்நேர்வில் ஏற்பட்ட தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்ற கருத்தி னை மட்டும் நீதிமன்றம் சொல்லியுள்ளது. இந்த தவறுக்கு யார் காரணம்? என்ன காரணம்? என்பதை கண்டறிந்தும், இத் தகைய பணி நியமனம் பெற்றவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும் என் பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் இவ்வாறு தவறான வழியில் நியமனம் பெற்றவர்கள், பணி நியமனத் திற்காக தாங்கள் இழந்தவைகளை வட்டி யும் முதலுமாக திரும்பப் பெறும் ஒரே நோக்கத்துடன் பணியாற்றி வருகின்றனர் என்பதே பெரும்பாலானோர் கருத்தாகும்.. இவர்களின் பின்னால் உள்ள செல்வாக் குப் பெற்ற அந்தப் புள்ளிகள் யார் என்ப தையும் அறிய தமிழக மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஒரு நேர்வில் மட்டு மல்லாமல் இதற்குப் பின்னர் நடைபெற் றுள்ள தேர்வுகள் குறித்தும் ஒரு திறந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. ஏனெனில் தமி ழக அரசின் பல்வேறு துறைகளில் கொல் லைப்புற வழியாக நியமனம் பெற்ற அதி காரிகளின் ஆதிக்கம் தலைவிரித்தாடு கிறது. வணிகவரித்துறை போன்ற துறை களில் தவறான சான்றிதழை கொடுத்து பதவி உயர்வு பெற்றவர்கள் மீது நடவடிக் கை எடுக்க அரசு தயங்கிவருகிறது. பதவி உயர்வை இரத்து செய்ததே போதுமானது என அரசு கருதுகிறது போலும். சமீபத் தில் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு வந்த பைலட் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத் தப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக 4000-க்கும் மேற்பட்ட பைலட்டுகளின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வரப்படு கின்றன என்ற செய்தியும் வெளியாகி யுள்ளது. இத்தகைய நெஞ்சுறுதி தமிழக அரசிற்கு மட்டும் ஏன் இல்லை?

யாரை வேண்டுமானாலும் அவர்க ளின் செல்வாக்கைப் பொறுத்து எந்தப் பணியிலும் நியமனம் செய்யலாம் என்பது தானே தேர்வாணையத்தின் தற்போதைய நடைமுறையாக இருந்து வருகிறது? குரூப்-1 குரூப்-2 ல் தேர்வு செய்யப்படக் கூடியவர்கள் நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றக் கூடியவர்களாக உள்ளனர். இவர்களின் நியமனத்தில் குறுக்கீடுகள், குளறுபடிகள் என்றால் அது எங்கே போய்முடியும்? தேர்வாணை யத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வும் அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் நேர்காணலும் நியாயமான முறையில் தான் நடைபெறுகிறதா என்பதை மக்க ளுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய பொறுப்பு தேர்வாணையத்தின் மீது தற்போது விழுந்துள்ளது.

ஏனெனில் சமீபகாலமாக தேர்வா ணையத்தின் நடவடிக்கைகளில் தடு மாற்றம் காணப்படுகிறது. அரசுப் பணி யாளர் தேர்வாணையம் ஒரு சுயேச் சையான அதிகாரம் பெற்ற ஒரு அமைப் பாகும். ஆனால் சமீபகாலமாக அதன் நடவடிக்கைகள் தமிழக அரசின் கீழ் உள்ள ஒரு துறை நடவடிக்கை போன்றே இருந்து வருகிறது. அதனால்தான் என்னவோ தமிழக அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தேர்வாணையமும் தப்பவில்லை. தற்போது 30 விழுக்காட் டிற்கு மேல் அங்கு பணியிடங்கள் காலி யாகவுள்ளது. அரசுப் பணிக்கு தேர்வு செய்யும் தேர்வாணையத்திலேயே பணி யிடங்கள் காலியாகவுள்ளன என்பது விந்தையிலும் விந்தையாகும்.

இதனால் தேர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இன்றைக்கு போட்டியாளர்களை நீதிமன்றத்திற்கு தள்ளியுள்ளது. சமீபகாலமாக தேர்வா ணையம் மேற்கொண்டு வரும் நடவடிக் கைகள் அது குழப்பத்தின் உச்சத்தில் இருப்பதை காட்டுகிறது. திறந்தவெளி பல்கலைக்கழகங்களின் மூலம் பட்டம் பெற்றவர்களை முதலில் தேர்வு எழுத அனுமதித்துவிட்டு, தேர்வு செய்தபின், தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அவர்களுக்கு பணி நிய மனம் வழங்க முடியாமல் தேர்வாணை யம் திணறிக்கொண்டு உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக அரசின் பல்வேறு துறைகளில்; பணியாற் றிய தற்காலிக ஊழியர்களை பணி நிரந் தரம் செய்ய குரூப்-4 சிறப்பு தேர்வு நடத் தப்பட்டு, 9000-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு, நாளதுவரை 1000க் கும் மேற்பட்டோருக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது. கடந்த ஆண்டு குரூப்-2 க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு இதுவரை முழுமையாக முடிவு வெளி யிடப்படாத நிலையில், இந்த ஆண்டு மீண்டும் ஒரு குரூப்-2 தேர்வினை தேர்வாணையம் நடத்திட அறிவிக்கை செய்துள்ளது. சமீபத்தில் தேர்வாணையம் வெளியிட்டுள்ள குரூப்-2 தேர்வுக்கான அறிவிக்கையில், வருவாய்த்துறை, வணிகவரித்துறைப் போன்ற துறைக ளில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங் கள் தமிழக அரசின் ஸ்டாப் கமிட்டியின் முடிவிற்கு உட்பட்டது என அறிவித்துள் ளது. ஸ்டாப் கமிட்டி என்பது தமிழக அரசு பிறப்பித்துள்ள மறைமுக பணிநியமன தடை ஆணையின் ஷரத்துகளில் ஒன் றாகும். இதற்கு தேர்வாணையமும் கட்டுப் பட்டது என்பதே அறிவிக்கையில் வெளி யிடப்பட்டுள்ள செய்தியாகும். சென்ற ஆண்டு கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடத்தை நிரப்பிட அறிவிக்கை செய்யப்பட்டு, மேலும் அரசின் அறிவுறுத் தலின்படி கால நீட்டிப்பு செய்து இது வரை தேர்வினை நடத்த முடியாமல் தேர் வாணையம் திணறி வருகிறது. முரண் பாடுகளின் மொத்த உருவமாக இப்போது தேர்வாணையம் உள்ளது. அரசுப் பணிகளுக்கு பணி நியமனம் செய்யும் தேர்வாணையம் மக்களின் நம்பிக் கையை இழந்து வருகிறது. தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 70 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்துடன் தேர்வாணையம் விளையாடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

Wednesday, March 9, 2011

உலக மகளிர் தினம்

பெண்கள் உரிமை போற்றுவோம்!
-க.ராஜ்குமார்-
நன்றி தீக்கதிர் -8-03-11
இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படும் சர்வதேச மகளிர் தினம் உருவானதே ஒரு போராட்டக் களத்தில்தான். 1900ஆம் ஆண்டின் முதல் 10 ஆண்டுகளில் பெண்கள் பொருளாதாரரீதியாகவும் சமூகரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இவற் றிற்கு எதிராக உலகம் முழுவதும் பெண்கள் வெகுண்டெழுந்து போராடிக்கொண்டிருந் தனர். சில நாடுகளில் பெண்களுக்கான அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தினம் தோற்றம்

1907-ல் ஜெர்மனியில், ஸ்டட்கார்ட் என்ற நகரில் முதன் முதலாக ‘சோசலிச பெண்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 15 நாடுகளிலிருந்து 59 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உலகம் முழுவதுமுள்ள பெண்கள் அமைப்புகளை ஒருங்கிணைப்ப தற்கு ஒரு சர்வதேச பெண்கள் அமைப்பு இம்மாநாட்டில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு கிளாரா ஜெட்கின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

1908-ம் ஆண்டு முதன்முதலில் நியூ யார்க் நகரில், 15000-க்கும் மேற்பட்ட பெண் கள் பேரணியாக சென்று தங்களின் வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தியும், தேர் தலில் வாக்களிப்பதற்கான உரிமை கோரி யும், தங்களுக்கு நியாயமான, சமவேலைக்கு சமஊதியம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

1909-ல் ஆடை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த மகளிர் தங்களுக்கு நியாய மான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலைநிறுத் தம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் சோச லிஸ்ட் கட்சி தேசிய அளவிலான முதல் மகளிர் மாநாட்டை பிப்ரவரி 28-ம் தேதி நடத் தியது. அன்றைய தினத்திலிருந்து 1913 வரை பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக்கிழமை சர்வதேச பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது.

ஜெர்மனியில், 1910-ல் கோபன்ஹேகன் நகரில் ஜெர்மனியின் சோசலிச ஜனநாயக கட்சி இரண்டாவது மகளிர் மாநாட்டை நடத் தியது. இதில் 17 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இவர்கள் பல்வேறு நாடுகளின் தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகளாகவும், சோசலிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளாகவும், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் இருந்த னர். பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத் திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளாக வந்திருந் தனர். இந்த மாநாட்டில் சோசலிஸ்ட் ஜனநா யக கட்சியின் மகளிர் பிரிவு தலைவராக இருந்த கிளாரா ஜெட்கின், பெண்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தை நடத் திட வேண்டும் என்ற தீர்மானத்தை முன் மொழிந்தார். இந்த தீர்மானம் அனைத்து பிரதி நிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ரொட்டியும் ரோசாப்பூவும்

தொடர்ந்து 1911-ல் சர்வதேச மகளிர் தினம் முதன்முதலாக ஆஸ்திரியா, டென் மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களில் மார்ச் மாதம் 19-ந்தேதி கொண்டாடப் பட்டது. இந்த நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்ட பேரணி கள் நடைபெற்றன. இந்த பேரணிகளில் பெண்கள் வேலை செய்வதற்கான உரிமை. தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை, பயிற்சி பெறுவது, பொது அலுவலகங்களில் வேலை செய்வது, சமூகத்தில் பாகுபாடின்றி நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதே ஆண்டில் மார்ச் மாதம் 25-ந்தேதி அன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற ஒரு முக்கோண தீ விபத்தில், பணியில் ஈடுபட் டிருந்த 140 பெண்கள் உயிரிழந்தனர். இவர் களில் பெரும்பாலானோர் இத்தாலி நாட் டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து அன் றைய தினம் அமெரிக்க நாட்டில் பெண்க ளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்ததை வெளிப்படுத்தியது. இதன் பின்னர், தொழி லாளர் சட்டங்களை கடுமையாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட இந்த நிகழ்ச்சி அடிகோலாக அமைந்தது. இதே ஆண்டில் பெண்கள் நடத்திய ‘ரொட்டியும் ரோசாப்பூவும்’ என்ற இயக்கம் பெண்களின் கோரிக்கை களை வலியுறுத்துவதாக அமைந்தது. இத்த கைய தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை யும் வேலை செய்யும் உரிமையும் சம ஊதியம் பெறும் உரிமையும் பிற்காலத்தில் கிடைத்தன.

மார்ச் 8

சர்வதேச பெண்கள் தினம்

1913-14-ல் ரஷ்ய நாட்டில் முதன் முறை யாக சர்வதேச பெண்கள் தினம் கொண் டாடப் பட்டது. 1913-ம் ஆண்டு பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று நடைபெற்ற மாநாட்டில் மார்ச் 8 பெண்கள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 1914-ல் போருக்கு எதிராக பெண்கள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பேரணி நடத்தினர். 1917-ல் ரஷ்ய பெண்கள் ‘ரொட்டிக்காகவும் போருக்கு எதிராகவும்’ பிப்ரவரி கடைசி ஞாயிறு அன்று வேலை நிறுத்தம் செய்தனர். அப்போது நடைபெற்ற போரில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தை தடைசெய்ய ஆரம்பத் தில் அரசு முயற்சி செய்தபோதும் பின்னர் ரஷ்ய நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதல் முறையாக தந்தது குறிப் பிடத்தக்கது. அந்த வீரஞ்செறிந்த வேலை நிறுத்தம் ரஷ்ய ஜூலியன் காலண்டர் படி பிப்ரவரி 23 என்றாலும் உலகம் முழுவதும் கடைப்பிடித்து வரும் காலண்டர் படி மார்ச் 8 ஆகும். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே நாம் இன்று கொண்டாடும் மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகும்.

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகில் அனைத்து நாடுகளிலும் உற்சாகமாக கொண் டாடப்படுகிறது. சீனா, வியட்நாம், ஒன்றுபட்ட ரஷ்ய நாடுகளில் இன்று மகளிர் தினத்திற்கு அரசு விடுமுறை விடப்படுகிறது. அமெரிக் காவில் மார்ச் மாதம் முழுவதும் பெண்கள் வரலாற்று மாதம் (றுடிஅநn’ள ழளைவடிசல அடிவோ) கொண்டாடப்படுகிறது.

இந்திய நாட்டில் பெண்கள் நிலை

நமது நாட்டிலும் மகளிர் தின கொண் டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வணிக நிறுவனங்கள் இந்த நாளை பயன் படுத்திக்கொண்டு ஆடை அணிகலன்கள் விற்பனைக்கு, விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இந்திய நாட்டில் பெண்கள் நிலை மிகவும் மோசமாகவுள்ளது.

இந்திய நாட்டில் பணிபுரியும் பெண் களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக ‘அசோசெம்’ அமைப்பு சேகரித்த புள்ளி விப ரங்கள் கூறுகின்றன. இரவு நேரங்களில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற் றும் பெண்களும், விமானப் போக்குவரத்துப் பணியில் பணியாற்றும் பெண்களும், மருத்து வமனையில் பணியாற்றும் பெண்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்றும், நிறுவனங்கள் இவர்களுக்கு போதுமான பாதுகாப்பை தரத்தவறியுள்ளன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தலைநகர் தில்லியில் அதிகபட்சமாக 65சதவீதமும் ஹைதராபாத்தில் 28சதவீதமும் மும்பையில் 28சதவீதமும் என உள்ளது.

பெங்களூரில் உள்ள 2200 தொழில் நிறுவனங்களில் 1600 நிறுவனங்கள் மட்டும் தொழில்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் 75000 முதல் 95000 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். மருத் துவமனைகள், விமானப்போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் பணி யாற்றும் இவர்களில் 56சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என ‘அசோசெம்’ புள்ளிவிபரம் கூறுகிறது.

மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, தந்தை பெரியார் போன்றவர்கள் பெண் களுக்கு சம உரிமை வழங்குவது குறித்து பேசியிருந்தாலும், பெண்களுக்கென தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை யெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே உள்ளன. நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரச்சனையில் இன்று இந்திய அரசியல்வாதிகளின் முகமூடிகள் கிழித்தெறி யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சித் தலைவர்களை தவிர ஏனையோர் இரட்டை நிலைப்பாடு கொண்டி ருப்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. மாநி லங்களவையில் நிறைவேற்றப்பட்ட இட ஒதுக்கீடு மசோதா, மக்களவையில் நிறை வேற்ற முடியாமல் உள்ளது வெட்கக்கேடானது.

இன்று பெண்கள் தினத்தை கொண்டாடு வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் உள்ளது. அதே போல் உழைப்பாளி மக்களுக் கும் ஒரு நோக்கம் உள்ளது.

பெண்களுக்கு, சமூகம், அரசியல், பொரு ளாதாரம் மற்றும் தொழிற்சங்கத்தில் சமத்து வம் கிடைத்திடவும், சொத்து உரிமை, சட்டம் இயற்றக் கூடிய அவைகளில் இடம் பெற்றிடவும்,

வேலை செய்யுமிடங்களில் ஆண்- பெண் என்ற பாகுபாடு இல்லாமலிருக்கவும், வேலை செய்யுமிடங்களில் பாதுகாப் பினை உத்தரவாதப்படுத்திடவும், குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்திடவும், பாலியல் பலாத்காரத்தை தடுத்து நிறுத்திடவும், வரதட்சணைக் கொடுமைகளை களைந்திட வும், பெண்களை வணிக விளம்பரத்திற்கு அருவருக்கத்தக்க முறையில் பயன்படுத் துவதை தடுத்து நிறுத்திடவும், சாதியக் கொடுமைகளிலிருந்தும், மதரீதியான, சம்பிர தாய, மூட பழக்க வழக்கங்களிலிருந்தும் பெண்களை மீட்டெடுத்திடவும், உலகமயத் தினால் முதலில் பாதிக்கப்படுவது பெண் என் பதால் அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்துவதும்

இன்று உழைப்பாளி மக்கள் முன் உள்ள தலையாயக் கடமைகளாகும். இந்த உணர் வோடு 101-வது சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவோம்

Sunday, March 6, 2011

தப்பு தாளங்கள்

கலைஞர் அரசின் ஒப்புதல் வாக்குமூலம்
-க. ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் 7-03-11
6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி அரசு ஊழியர்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் கலை ஞரின் அரசு, ஊதிய மாற்ற ஆணைகளில் குளறுபடிகள் உள்ளன என ஒப்புக் கொண்டு, அவற்றை இரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் நிதித்துறை, 26.2.2011 தேதியிட்ட, அ.ஆ. நிலை எண்.71 ஆணையில், பத்தி 6ல் “ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ஆணைகளினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து சீரமைக்கும் வகை யில் அரசு விரிவாக ஆராய்ந்து இணைப்பில் குறிப்பிடப்பட் டுள்ள பணியிடங்களுக்கு ஊதிய விகித மாற்றங்களை செய்து அரசு ஆணையிடுகிறது” என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளது. இந்த ஆணையில், வேளாண்மைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மீன்வளத்துறை, நெடுஞ் சாலைத்துறை, ஊரக வளர்ச் சித் துறை, தொழில் மற்றும் வணிகவரித்துறை, தொழிற் சாலை ஆய்வகத்துறை, மாநில சுகாதார போக்குவரத்துத்துறை, மோட்டார் வாகன பராமரிப்புத் துறை, பட்டு வளர்ச்சித் துறை, பொதுப்பணித்துறை, போக்கு வரத்துத்துறை, மாற்றுத் திற னாளிகள் மறுவாழ்வு ஆணை யரகம், பேரூராட்சிகள், மின் ஆய்வுத்துறை, சென்னை மாநக ராட்சி, இந்திய மருத்துவம் மற் றும் ஹோமியோபதி துறை என 18 துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் தொகுப்பு ஊதியம் மற்றும் தர ஊதியத்தை குறைத்தும், மாற்றியும் அரசு ஆணையிட்டுள்ளது. இணை இயக்குநர்களுக்கு ஊதியம் (யீயல க்ஷயனே) ரூ.37,400-67,000 தரஊதியம், (ழுசயனந ஞயல) ரூ.8,700 என வழங்கப்பட்டதை அதிரடி யாக ஊதியம் ரூ.15,600-39,100, தரஊதியம் ரூ.7,600 என குறைத்து ஆணையிட்டுள்ளது.

எஸ்.மாலதி இ.ஆ.ப., தலை மையிலான அலுவலர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று தமிழக அரசு ஊதிய மாற்ற ஆணை களை பிறப்பித்தபோது, அதில் முரண்பாடுகள் உள்ளன என் பதை சுட்டிக்காட்டிய ஒரே சங் கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம். இதற்காக அச்சங்கத் தின் பொறுப்பாளர்கள், முர சொலியின் வசவையும் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதா யிற்று. முரசொலி, ஊருக்கெல் லாம் ஒரு வழி என்றால் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் களுக்கு ஒரு வழி எனவும், கட்டிய வீட்டிற்கு திருஷ்டி பூசணிக்காய் போன்றவர்கள் அரசு ஊழியர் சங்கத்தின் தலை வர்கள் எனவும் கேலி செய்து எழுதியது. தற்போது வெளியிடப் பட்டுள்ள அரசு ஆணையில், பத்தி 3ல், 5-வது வரியில், “அலு வலர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதால் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு களை களைவதற்கு அரசு ஒரு நபர் குழுவை நியமித்து ஆணை கள் வெளியிட்டது” என அரசே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள் ளது. இதற்கு முரசொலி என்ன சொல்லப் போகிறது?

ராஜிவ்ரஞ்சன் இ.ஆ.ப., தலைமையில் ஒரு நபர் குழு வினை அமைத்தபோது, அப் போதும் இது ஊழலுக்கு வழி வகுக்கும் என அரசு ஊழியர் சங்கம் கருத்து தெரிவித்தது. முரண்பாடுகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நேரிடையாக அரசு பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவேண்டும் என அரசை கேட்டுக் கொண்டது. அதுவும் பலனற்றுப் போன நிலையி லேயே ஒரு நபர் குழுவின் அறிக் கையின் அடிப்படையில் அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. முரண்பாடுகளை களைவதற்கு பதிலாக முரண்பாடுகள் மேலும் அதிகரிப்பதற்கு அது வழி வகுத்தது. அலுவலர் குழு மற் றும் ஒரு நபர் குழுக்களின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்திதான் அரசு ஊழியர் சங்கம் தொடர்ந்து இயக்கம் கண்டு இரத்தம் சிந்தியது.

தற்போது மேற்கண்ட ஆணை (71) பிறப்பித்ததின் மூலம் பிரச்சனைகள் தீர்ந்து விடவில்லை. ஊதியம் குறைக் கப்பட்ட பிரிவினர் ஏமாற்ற மடைந்து, கோபமடைந்துள் ளனர். அதுமட்டுமல்ல அரசு ஊழியர்களில் இன்னும் சில ருக்கு மத்திய அரசிற்கு இணை யான ஊதியமே வழங்கப்படாத நிலையில், சிலருக்கு மேம்படுத் தப்பட்ட ஊதியம் வழங்கப்பட் டிருப்பது, ஊழியர்களிடையே கோபத்தைக் கிளறியுள்ளது. இவற்றிற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க சங்க நிர்வாகி களை அரசு நேரடியாக அழைத் துப் பேசி தீர்வு காண முன்வர வேண்டும்.

அலுவலர் குழுவும், ஒரு நபர் குழுவும் உருவாக்கியுள்ள பிரச் சனைகள் அரசிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி யுள்ளது. இதைத்தான் அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த ஆணை எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலை உருவான தற்கு ஒரு சில அதிகாரிகளே காரணமாவர். அரசிற்கு அவப் பெயரை உருவாக்கி, ஊழியர்க ளிடையே குழப்பத்தை உருவாக் கியவர்களின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகி றது? அரசு ஊழியர்கள் தங்க ளின் பணிக்காலத்தில், மேற் கொண்ட பணிகளினால், அர சிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அரசு கருதினால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, பணி ஓய்வு பெறுவதற்கு கூட அவர் கள் அனுமதிக்கப்படுவ தில்லை. அப்படியிருக்க, லட் சக்கணக்கான ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்கான ஆணை யில் இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்த காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டிய வர்களே என்பதை அரசு உண ருமா? அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க முன்வருமா? என அரசு ஊழியர்கள் எதிர் பார்க்கிறார்கள்.

Monday, February 28, 2011

அண்டப் புளுகும்! ஆகாசப் புளுகும்!
-க.ராஜ்குமார்-
நன்றி தீக்கதிர் 01-03-11
ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல் வதின் மூலமாக அதை உண்மையென நம்ப வைத்துவிடலாம் என்பது சர்வாதிகார மனப் போக்கு ஆகும். இதைத்தான் முதல்வரின் செயலாளர்களும் திரும்பத் திரும்ப செய்து வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் பணி தரப்பட்டு அவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருப்ப தாக உண்மைக்கு புறம்பான தகவலை முதல் வர் முரசொலியில் (27-02-11) தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் சாலைப் பணியாளர் கள் வேலை இழந்தது 2001-ல் இல்லை 5-09-2002-ல் (அரசு ஆணை 160 நெடுஞ் சாலைத் துறை, நாள் 5-09-2002 ) தான் அவர் கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அவர்கள் தொடர்ச் சியான போராட்டங்களை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வழிகாட்டுதலொடு நடத் திக் கொண்டே, உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் வந்தனர். அன்றைய அண்ணாதிமுக அரசு, அரசு ஆணை (நிலை) எண். 22நெ.(எச்.எம்.2) துறை, நாள் 10-02-06 ல் மீண்டும் பணியில் அவர்களை அமர்த்தி ஆணையிட்டது. ஆனால் முதல்வர் தனது கடிதத்தில், திமுக ஆட்சியில் மீண்டும் பணி யில் அமர்த்தப்பட்டனர் என்று குறிப்பிட்டுள் ளார். இது ஏதோ தவறுதலாக சொல்லப்பட்டது என கருத வாய்ப்பில்லை. ஏனெனில் தமிழ் நாடு அரசுஊழியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாடு சென்னையில் 19-08-2007-ல் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் அந்த மேடையிலும் இதே தவறான தகவலை தெரிவித்தார். அதற்கு சாலைப் பணியாளர் சங்கத்தின் அன்றைய மாநிலத் தலைவர் சண்முகராஜாவும், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்துவும் மறுத்து அறிக்கை விட்டனர்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இன் னொரு தவறான தகவல் கடந்த 25-02-11 அன்று முதல்வரின் கோபாலபுர இல்லத்தில் சாலைப் பணியாளர்களின் பிரதிநிதிகளாக தான் ஐந்தாறு பேரை சந்தித்ததாக குறிப்பிட் டுள்ளார். இந்த ஐந்தாறு பேர் யார் யார் என்பது கூட முதல்வர் அறியவில்லை போலும். கலைஞர் முதல்வராக இருந்தாலும் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தாலும் தங்கள் மாநாட்டிற்கு தவறாமல் இதுவரை அழைத்து வருகின்ற சங்கமான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வி, பொதுச் செயலாளர் இரா.சீனிவாசன், மாநிலப் பொருளார் என்.இளங்கோ, மாநிலச் செயலாளர் மு.அன்பரசு மற்றும் மாநில துணைத்தலைவர் ப.ரவி ஆகியோர் முதல் வரை சந்தித்துள்ளனர் என்பது கூட முதல் வர் அறிந்திருக்கவில்லை என்பது வினோத மாக உள்ளது. அல்லது அரசு ஊழியர் சங் கத்தை அறியாதவராக தன்னை காட்டிக் கொள்ள முதல்வர் முயற்சிக்கிறாரா?

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்றப்படும் என வாக்குறுதி தந்த திமுக அரசு, கடந்த 5 ஆண்டுகாலத்தில் அதை செய்ய தவறியதை கண்டித்துத்தான் சாலைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற் கொண்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டபோது ஒன்றுபட்டு போராடி மீண்டும் பணிபெற்ற சாலைப் பணியாளர் சங்கத்தை பிளவுபடுத் தியது திமுக ஆட்சியாளர்கள்தான் என்பதை சாலைப் பணியாளர்கள் நன்கு உணர்வர்.

கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ள மற்றொரு தவறான தகவல், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் அளித்த தோடு ஓய்வூதியம் தரவும் ஒப்புக் கொண்டி ருப்பதாக குறிப்பிட்டிருப்பதுதான். கடந்த 25 ஆண்டுகாலமாக காலமுறை ஊதியம் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் சத்து ணவு ஊழியர்களுக்கு கலைஞர் தந்திருப்பது சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்படாத ஊதி யம்தான் என்பதை மறைக்க முதல்வர் முயல் கிறார். 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரை களை ஏற்று தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊதிய மாற்ற ஆணையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.4800 மற்றும் தரஊதியம் ரூ.1300 (ரூ.5100) ஆகும். ஆனால் சத்துணவு ஊழியர் களுக்கு கலைஞர் கொடுத்திருக்கும் சிறப்பு காலமுறை ஊதியமோ ரூ. 2500 மற்றும் தர ஊதியம் ரூ.500 (ரூ.3000) ஆகும். கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் இது காலமுறை ஊதியம் அல்ல, கலைஞரின் அதிகாரிகளின் அண்டா மூளைகளால் கண்டுபிடிக்கப்பட்ட சிறப்பு (!) காலமுறை ஊதியம்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தை பொறுத்தவரை, புதிய ஓய்வூதிய திட் டமும் இல்லாமல் பழைய ஓய்வூதிய திட்ட மும் இல்லாமல் புதிதாக ஒரு சிறப்பு(!) ஓய் வூதிய திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.700,600,500 என கருணைத் தொகை வழங்க ஆணையிட்டுவிட்டு ஓய்வ+தியம் வழங்க ஒப்புக்கொண்டிருப்பதாக தவறான தக வலை தனது கடிதத்தில் தந்துள்ளார். ஒப் புக்கு கலைஞர் சத்துணவு ஊழியர்களுக்கு கொடுத்துள்ள சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியம் என்றே எடுத்துக்கொண் டாலும் அதில் 50 விழுக்காடு மாத ஓய்வூதி யமும், பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கியிருப் பதைப் போல் கருணை கொடையும் வழங்கி யிருக்க வேண்டும். அதுவும் கூட வழங்கப் படவில்லை என்பதுதான் உண்மை.

கலைஞர் தனது கடிதத்தில் குறிப்பிட் டுள்ள மற்றொரு தவறான தகவல் 1-1-2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 லட்சம் ரூபாய் கூடுதல் செலவில் ஆறாவது ஊதியக்குழுவின் பரிந் துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதாகும். தமிழக அரசு ஆணையில் ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 1-1-2006 முதல் கருத்தியலாகவும் 1-1-2007 முதல் தான் நிதிப்பயனும் தரக்கூடிய வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது என்பது முதல்வ ருக்கு தெரியாதா? இன்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மத்திய அரசு தனது ஊழியர் களுக்கு தந்திருப்பது போல் 1-1-2006 முதல் நிதிப்பயன் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடி வருவதை அதிகாரிகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வில்லையா?

செய்யாததை எல்லாம் செய்ததாக, அதி காரிகள் எழுதி தந்ததையெல்லாம் சாதனை யாக அறிக்கையாக வெளியிடுவது முதல்வ ருக்கு இது ஒன்றும் முதல் தடவை அல்ல. இந்த 5 ஆண்டுகாலத்தில் திரும்பத் திரும்ப பணி நியமனத் தடை ஆணை திமுக ஆட்சி யில் அகற்றப்பட்டது என அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வரப்படுகிறது. கடந்த ஆட்சியில் பணி நியமனத் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டதும், அதே ஆட்சி யின் இறுதியில் விலக்கிக்கொள்ளப்பட்டதும் (அரசு ஆணை எண்.14 ப.ம.நி.சீ.தி.து நாள் 7-2-2006 ) அனைவரும் அறிந்ததே. திமுக ஆட்சி அமைந்தவுடன் பணி நியமனங்க ளுக்கு மறைமுகமான தடை (நிபந்தனைகள்) விதித்து அரசு ஆணை எண்.91 ப.ம.நி.சீ.தி.து. நாள் 7-6-2006) பிறப்பித்தது என்பதுதான் உண்மையாகும். தமிழக அரசு 4 லட்சம் பணி யிடங்களுக்கு மேல் நிரப்பியதாக திரும்பத் திரும்ப அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் என்று இல்லாத ஒன்றை கண்டுபிடித்து கொடுத்துவிட்டு, இந்த ஆட்சி யில் அவர்கள் புதிதாக நியமனம் செய்யப் பட்டவர்களைப் போல் ஒரு தோற்றத்தை தமிழக மக்களிடையே உருவாக்குவதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. ஏமாறப் போவது மக்கள் அல்ல; ஆட்சியாளர்களே!

கடந்த 25-02-11 அன்று முதல்வர் தனது இல்லத்தில் சந்தித்த தலைவர்கள் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்கள். இவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் முதல்வருக்கு எப்படி ஏற்பட்டது. ஊதியக்குழு ஆணையில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி அரசுஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தலைமையில் கடந்த 23-02-11 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை அரசு ஊழியர் சங்கம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தை கலைஞரின் அரசு கண்டும் காணாமல் விட்டதின் விளைவாக சங்கத் தின் பொதுச் செயலாளர் தலைமையில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் திரண்டு புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை நோக்கி முதல்வரை சந்தித்து மனு கொடுக்க ஊர் வலமாக புறப்பட்டனர். அவர்களைத்தான் காவல் துறை முன்னே போகவிட்டு பின்னே தாக்கியுள்ளது. ஊர்வலத்தின் பின்பகுதியில் வந்த ஊழியர்கள் காவல் துறையால் கடுமை யாக தாக்கப்பட்டு, 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள னர். இந்த செய்தி காட்டுத் தீ போல் பரவி அன்றைய தினம் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளி யேறி ஆர்ப்பாட்டம் நடத்திய தகவல் கிடைத் தவுடன்தான் அரசு முழித்துக்கொண்டு, முதல்வரின் காதுக்கு செய்தி சென்று முதல் அரசுஊழியர் சங்கத்தின் தலைவர்களை அழைத்துப் பேசியுள்ளார்.

கலைஞரின் பொறுப்பில் உள்ள காவல் துறை கடந்த 5 ஆண்டு காலத்தில், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய தையும், சட்டக்கல்லூரி மாணவர்களின் தாக்குதலை கண்டுகளித்ததையும் கண்டு தமிழக மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். தமிழக காவல்துறையின் உயர் அதிகாரிகள், தங்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பு பறிக்கப் பட்டுவிட்டது என நீதிமன்றங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. காவல்துறை மக்க ளின் ஏளனத்திற்கும் கோபத்திற்கும் ஆளாகி யுள்ள நிலையில் இன்று அரசுஊழியர்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய கலைஞரின் காவல் துறை அரசு ஊழி யர்களை கண்மூடித்தனமாக தாக்கி காயப் படுத்தியுள்ளது. காவல் துறையின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி களும் கண்டித்துள்ள நிலையில் ஒன்றும் நடைபெறாதது போல் கலைஞர் காட்டிக் கொள்ள முயல்வார் என்றால், அவருக்கு தக்க பாடத்தை அரசு ஊழியர்கள் புகட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.