தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Saturday, May 14, 2011

Election Counting proceedure

வாக்கு எண்ணிக்கை வழிமுறைகள்
-க.ராஜ்குமார்-

நன்றி - தீக்கதிர் - 12-05-11

தமிழக தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணப்படும் இடத்தில் முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் வாக்கு எண்ணப்படும் விபரம் குறித் தும், முடிவுகள் அறிவிக்கப்படும் நடைமுறை குறித்தும் விரிவாக கூறப்பட் டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் மட்டுமின்றி, இந்த நடைமுறையை பொதுமக் களும் அறிந்திடுவது அவசியமாகும்.

வாக்கு எண்ணிக்கை முகவர்களின் கவனத்திற்கு

* வாக்கு எண்ணிக்கை நாளன்று சரியாக காலை 7 மணிக்குள் வாக்கு எண்ணிக் கை அறைக்குள் சென்றுவிட வேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப் பட்ட அடையாள அட்டையை தவறாமல் கொண்டுசெல்ல வேண்டும்.

* தேர்தல் நடத்தும் அதிகாரி முன் ‘வாக்க ளித்தல் இரகசியத்தை காத்திடல்’ குறித்த உறுதிமொழிப் பத்திரத்தில் கையெ ழுத்திட வேண்டும்.

* வாக்கு எண்ணப்படும் அறைக்குள் செல் போன்கள் கொண்டு செல்லக் கூடாது. அப்படி கொண்டு செல்லப்படும் செல் போன்கள் வாக்கு எண்ணிக்கை அறைக்கு வெளியே அதிகாரிகளால் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும்.

* வாக்கு எண்ணப்படும் மேஜைக்கும் முகவர்கள் உள்ள இடத்திற்கும் இடை யில் வாக்கு எண்ணிக்கையை தெளி வாக பார்க்கும் வகையில், கம்பி வலைகள் அல்லது மூங்கில் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டு இருக்கும். இதைத் தாண்டி முகவர்கள் செல்லக் கூடாது.

* தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட் சிகள், மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், பிற மாநிலத்தில் அங்கீகரிக்கப் பட்ட கட்சிகள், பதிவு செய்யப்பட்ட அங் கீகரிக்கப்படாத கட்சிகள், சுயேச்சைகள் என வரிசைக்கிரமமாக முகவர்கள் வாக்கு எண்ணப்படும் இடத்தில் அமர்வதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

* வாக்கு எண்ணப்படும் அறையிலிருந்து ஒரு முறை முகவர்கள் வெளியேறினால் மீண்டும் அறைக்குள் வர அனுமதிக் கப்படமாட்டார்கள்.

* உணவு, தேனீர் அரசு அலுவலர்களால் ஏற்பாடு செய்யப்படும். வெளியே செல்ல அனுமதி இல்லை. புகை பிடித்தல் கூடாது.

பொதுவாக, முகவர்கள் வாக்கு எண்ணிக் கையின்போது, தங்களுடைய வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கின்றன என்பதற் காகவோ அல்லது குறைவான வாக்குகள் கிடைக்கின்றன என்பதற்காகவோ கவனக் குறைவாக இருப்பது நல்லதல்ல. ஒவ்வொரு சுற்றிலும் கவனம் தேவை. வாக்கு எண்ணிக் கையின்போது வேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் மேஜைக்கு அருகே வந்து பார்வையிட வாய்ப்பில்லை. எனவே மேஜை பொறுப்பில் உள்ள முகவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை முறை

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து வாக்கு எண்ணப்படும் மேஜைகளின் எண்ணிக் கை அதற்கேற்றவாறு இருக்கும். ஆனால் 14 மேஜைகளுக்கு மேல் இருக்காது. ஒவ் வொரு மேஜைக்கும் ஒவ்வொரு வேட்பாள ருக்கு ஒரு முகவர், இருக்க அனுமதிக்கப்படு வார். வேட்பாளரின் தலைமை முகவர், தேர்தல் நடத்தும் அதிகாரி அருகிலிருந்து அவர் மேற் கொள்ளும் பணியினை பார்வையிடலாம்.

* வாக்குச்சாவடியில் இருந்து பெறப்பட்ட, கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக் குகள் எண்ணப்படும். கட்டுப்பாட்டுக் கரு வியுடன் வாக்குச் சாவடி தலைமை அதி காரி பூர்த்தி செய்து, முகவர்களின் கை யொப்பம் பெற்று தனது கையொப்பத்துடன் அனுப்பிய படிவம் 17-சி ஒவ்வொரு மேஜைக்கும் கட்டுப்பாட்டுக் கருவியுடன் கொண்டுவரப்படும். எண்ணிக்கைக்கு முன்பாக, வாக்குச்சாவடியில், கட்டுப் பாட்டுக் கருவிக்கு வைக்கப்பட்டுள்ள ‘சீல்’ நல்ல முறையில் உள்ளதா என்ப தை கண்டறிய வேண்டும். வாக்குச் சாவடி அதிகாரியால் சீல் செய்ய பயன்படுத்தப் பட்ட பச்சை நிற முத்திரை எண் 17-சி யில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுடன் ஒத்து வருகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். இதுவே முக்கியமானது. சீல் சேதமடைந்திருந்தாலோ, முத்திரை எண் மாறுபட்டிருந்தாலோ முகவர்கள் அந்த கட்டுப்பாட்டுக் கருவி எண்ணிக்கைக்கு உட்படுத்தப்படுவதை ஆட்சேபித்து மறுக்க வேண்டும். இத்தகைய கட்டுப் பாட்டுக் கருவி குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணை யமே இறுதியில் முடிவு செய்யும்.

* கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள, வாக்குப்பதிவு முடிவு பட்டன் மேல் உள்ள சீல் முகவர்கள் முன்னிலையில் உடைக் கப்பட்டு, பட்டன் அழுத்தப்படும். தற்போ து கட்டுப்பாட்டுக் கருவியில் உள்ள திரை யில், ஒவ்வொரு வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை காண முடியும். அவசியம் எனில் வாக்குப்பதிவு முடிவு பட்டனை மீண்டும் அழுத்தி வாக்கு எண்ணிக்கையை திரும்பவும் அறியலாம். இதை ஒவ்வொரு மேஜையி லும் உள்ள வாக்கு எண்ணிக்கை மேற் பார்வையாளர் 17-சி படிவத்தில் பதிவு செய்து கையொப்பமிடு வார். முகவர்களும் இந்த படிவத்தில் கையொப்பமிடலாம். முகவர்கள் வாக்குப்பதிவு தினத்தன்று சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடமிருந்து பெறப்பட்ட 17-சி படிவத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை முகவரிடம் அளிக்க வேண்டும்.

* தலைமை முகவர், மேஜை முகவர்களி டமிருந்து பெற்ற 17-சி படிவத்திற்கும் ஒவ் வொரு மேஜையிலிருந்து பெறப்பட்ட 17-சி படிவத்திற்கும் ஒத்து வருகிறதா என்று சரிபார்க்க வேண்டும். அல்லது இக்குறிப் பிற்கு மேஜை வாரியாக ஒவ் வொரு சுற்றி லும் வாக்கு எண்ணிக்கை குறித்து முக வர்கள் ஒரு குறிப்பேட்டையும் பராமரிக் கும் வகையில் ஏற்பாடு செய்தால் நல்லது.

* வாக்கு எண்ணிக்கையின்போது, ஒவ்வொரு சுற்றிற்கும் முடிவில் தேர்தல் வாக்கு எண் ணிக்கை பார்வையாளர் அங்கொன்றும், இங்கொன்றுமாக இரு மேஜைகளில் உள்ள கட்டுப்பாட்டுக் கருவியினை எடுத்து மீண் டும் ரிசல்ட் பட்டனை அழுத்தி அதிலுள்ள விபரமும், 17-சி படிவத்தில் கொடுக்கப் பட்ட விபரமும் சரியாக உள்ளதா என ஒப் பிட்டுப் பார்ப்பார். அவருக்கு உதவ ஒவ் வொரு மேஜையிலும் மத்திய அரசு அல் லது பொதுத்துறையைச் சேர்ந்த அலுவலர் ஒருவர் விபரங்களை சேகரித்து அளிப்பார்.

* ஒவ்வொரு சுற்றிலும் அனைத்து மேஜை களிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து, தேர்தல் நடத்தும் அதிகாரி விபரங்களைப் பெற்று, முதல் சுற்று எண்ணிக்கை விபரத் தை அறிவித்த பிறகுதான் அடுத்த சுற்று எண்ணிக்கை துவங்கும்.

* வாக்கு எண்ணப்படும் முறை குறித்தும், வாக்கு எண்ணும் அதிகாரிகளின் நடத் தை குறித்தும் சந்தேகம் ஏற்படின் அல் லது ஆட்சேபணை இருப்பின், முகவர்கள், வேட்பாளர்கள் அல்லது தலைமை முகவர் கள் மூலமாகவோ அல்லது தானோ தேர் தல் நடத்தும் அதிகாரிக்கு புகார் கொடுக்க லாம். வாக்கு எண்ணும் அதிகாரிகளுடன் எவரும் வாக்குவாதத்தில் இறங்கக் கூடாது.

* வாக்கு எண்ணிக்கை குறித்த விபரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியால் படிவம் 20-ல் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு சுற்று முடிந்தபிறகும் முடிவுகள் அறிவிக் கப்படும். இதற்கு பிறகே அடுத்த சுற்று எண்ணிக்கை தொடங்கும். முடிவுத்தா ளில் முடிவினை எழுதி தேர்தல் அதிகாரி கையெழுத்திடுவதற்கு முன்பாக மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பான கோரிக்கை வேட்பாளராலோ அவரது முகவர்களாலோ உரிய காரணங்களோடு அளிக்கப்படலாம்.

* ஒவ்வொரு மேஜையிலும் வெப் கேமரா மூல மும், வீடியோ மூலமும் வாக்கு எண்ணும் பணி நேரடியாக பதிவு செய்யப்படுகிறது

தபால் வாக்குகள் எண்ணிக்கை

* முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக் குகள் எண்ணும் பணி துவங்கும். இப் பணி 8.30மணிக்குள் முடியவில்லை என் றாலும், 8.30 மணிக்கு கட்டுப்பாட்டுக் கரு விமூலம் வாக்கு எண்ணிக்கை தொடங் கப்படும்.

* தபால் வாக்குகள் 13-இ என்ற கவரில் இருக்கும். இதனை திறந்து அதனுள் உள்ள 13-அ மற்றும் 13-ஆ, கவர்களை எடுக்க வேண்டும். முதலில் 13-அ கவரில் உள்ள உறுதிமொழிப் படிவம் முறை யாக பூர்த்தி செய்யப்பட்டு, வாக்காளர் கையொப்பமிட்டு இருக்க வேண்டும். அதை உரிய அலுவலர் மேலொப்பம் செய்திருக்க வேண்டும். இவ்வாறு இல்லை எனில் 13-ஆ (வாக்குச் சீட்டு உள்ள கவர்) திறக்கப்படாமல் நிராகரிக்கப் பட வேண்டும். உறுதிமொழி படிவம் சரி யான முறையில் இருந்தால் 13-ஆ கவர் பிரிக்கப்பட் டு அதி லுள்ள வாக்குச்சீட்டு எண்ணிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். முன்னதாக இந்த வாக்குச் சீட்டுகள் செல்லத்தக்கதா? முறையான வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என் பதையும் கண்டறிய வேண்டும். பின்னரே வாக்குகளை எண்ண வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டுக் கரு விகளில் வாக்கு எண்ணிக்கை முடிவ டைவதற்கு இரண்டு சுற்றுக்களுக்கு முன்னர் தபால் வாக்குகள் எண்ணிக்கை வெளியிடப்பட வேண்டும்.

* வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் வேட்பாளர் அல்லது அவரின் முகவர்கள் முன்னிலையில் கட்டுப்பாட்டுக்கருவி யில் உள்ள பேட்டரிகள் அகற்றப்பட்டு, மீண்டும் சீல் வைக்கப்பட்டு, தேர்தல் நடத்தும் அதிகாரியின் முத்திரை வைக் கப்படும். வேட்பாளரின் முத்திரையும் இதில் வைக்கலாம். இப்பணியிலும் முக வர்கள் முழுமையான கவனம் செலுத்தப் பட வேண்டும். அனைத்து கட்டுப்பாட்டுக் கருவிகளின் பேட்டரிகளும் நீக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பிற்கு கொண்டு செல்லப்படும்வரை கவனம் தேவை. குறைந்தபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி அமையுமானால் மறு வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment