தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Thursday, August 12, 2010

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் கற்றுக் கொடுத்த படிப்பினை


பூட்டை உடைக்கும் தொழிலே சரிதானா?
-க.ராஜ்குமார்-

நன்றி தீக்கதிர் 13-08-௧0


பட்டுக்கோட்டையாரின் பாடலை நினைவுப்படுத்தும் வகையில், டாஸ்மாக் ஊழியர்களின் வேலை நிறுத்த போராட் டத்தில் தமிழக அரசின் அணுகுமுறை இருந்தது. மூடிக் கிடந்த மதுக்கடைகளை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக்கொண்டு பூட்டை உடைத்து, மாற்றுப் பணியாளர்களைக் கொண்டு கடைகளை திறந்து மதுவை தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு அவசரகதியில் நடவடிக்கை எடுத்துள் ளது. ஒரு நாள் குடிக்காவிட்டால் குடியா மூழ்கிவிடும்? பிரச்சனை அதுவல்ல. போராட்டங்களை அனுமதிப்பது இல் லை என்ற தமிழக அரசின் மனப்பான் மைதான் இந்த அதிரடி நடவடிக்கை எல்லாம். காரணம்

thamilnaatil palveru மாவட்டங்க ளில் பூட்டப்பட்டிருந்த மதுக்கடைகளின் பூட்டுக்களை அதிகாரிகள் உடைக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் காட்டப் பட்டுள்ளன. செய்திதாள்களில் வெளி யிடப்பட்டுள்ளன. இவ்வாறு பூட்டுக் களை உடைத்து கடைகளை திறப்ப தற்கு டாஸ்மாக் நிர்வாகம் எந்த மட்டத் தில் முடிவெடுத்தது. அதற்கு துணை போன காவல்துறைக்கு யார் பூட்டை உடைக்க ஆணையிட்டது. வட்டாட்சியர் களும் கிராம நிர்வாக அலுவலர்களும் இந்தப்பணியில் எந்த சட்டத்தின் கீழ் ஈடுபடுத்தப்பட்டார்கள். பூட்டை உடைப் பதற்கு எந்த நீதிமன்றம் ஆணை வழங் கியது? எத்தனை காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? யார் புகார் கொடுத்தார்கள்? என்பது குறித்து டாஸ்மாக் நிர்வாகமும் தமிழக அரசும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சி பொறுப்பு தன்வசம் உள்ளது என்பதால் சட்டங்களை மதிக் காமல் எதையும் யாரையும் வைத்துக் கொண்டு செய்யலாம் என்ற தாந்தோன் றித்தனமான நடவடிக்கையாகவே டாஸ் மாக் போராட்டத்தில் தமிழக அரசின் நடவடிக்கை உள்ளது.

போராடும் ஊழியர்களின் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி பிரச்சனையை தீர்க்க வேண்டிய தமிழக அரசு, அவர்களை அச்சுறுத்தி போராட் டத்தை உடைக்க முயற்சித்தது. காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரி களை பயன்படுத்தி மதுக்கடை ஊழியர் களை அச்சுறுத்தியது. வேலை நிறுத்தத் தில் பங்கேற்க மாட்டோம் என நிர்ப்பந்தப் படுத்தி எழுதி வாங்கியது. “எஸ்மா” சட் டத்தை பயன்படுத்த மாட்டோம் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு மற்றொரு பக்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலை போய்விடும் என்று அச்சுறுத் தியது. வேலை வாய்ப்பகத்திலிருந்து மாற்றுப் பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. வேலை நிறுத்த நாளன்று ஆங்காங்கே டாஸ்மாக் ஊழியர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத் திற்கு எதிராக அரசு நிர்வாகத்துடன் அரசியல் பிரமுகர்கள் கைகோர்த்துக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டது வேதனை அளிப்பதாக உள்ளது.

ஆண்டிற்கு சுமார் ரூ.14000 கோடி வருவாயை அரசுக்கு ஈட்டித்தரும் இந்த துறையில் பணியாற்றும் ஊழியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசு தயங்கு வது எந்த விதத்திலும் நியாயமாகாது. இவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றால் ஆண்டிற்கு ரூ.200 கோடிதான் செலவாகும். பணியாளர்கள் ஊதியம் கேட்டால் மதுக் கடைகளை மூடிவிடக் கூட அரசு தயங்காது என்று சொல்வது அரசின் தொழிலாளர் விரோத அணுகு முறையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள சுமார் 6700 அரசு மதுக்கடைகளில் கடந்த ஏழு ஆண்டு காலமாக 30000-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் உதவியாளர்களுக்கு, ரூ.2100 விற்பனையாளர்களுக்கு, ரூ.2800 மேற் பார்வையாளர்களுக்கு, ரூ.4000 என தொகுப்பூதியத்தின் கீழ் ஊதியம் வழங் கப்பட்டு வரப்படுகிறது. இவர்கள் அனை வரும் தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கூலிக் கூட இவர்களுக்கு இதுவரை ஊதியமாக வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை நேரம் என்பதற்கு பதிலாக இவர்கள் 12 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றி வருகின் றார்கள். இவர்களில் 5000-க்கும் மேற்பட் டோர் 2003-ம் ஆண்டு நடைபெற்ற அரசு ஊழியர்-ஆசிரியர் போராட்டத்தின்போது, தற்காலிகமாக அரசு ஊழியர்களாக நிய மனம் செய்யப்பட்டு, தலைமைச்செயல கம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் பணி யாற்றியவர்கள். அரசால் நிரந்தர வேலை என்ற ஆசை வார்த்தை காட்டப்பட்டு அரசு மதுக்கடைகளில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள். இவ்வாறு மதுக் கடைகளுக்கு வர விருப்பம் தெரிவிக்கா மல் அரசுத்துறைகளிலேயே பணியாற்றி வந்த 10000 ஊழியர்களுக்கு தேர்வா ணையம் மூலம் தனித் தேர்வு நடத்தப் பட்டு, அரசுத்துறைகளில் காலியாக வுள்ள இடங்களில் நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுக் கடைகளில் பணி நியமனம் செய்யப்பட்ட வர்கள், தற்காலிக ஊழியர்களாகவே இருந்து வருகின்றனர்.

இவர்களின் நியா யமான கோரிக்கைகளை வலியுறுத்தி இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தனித்தனியே போராடிவந்தனர். அதன் விளைவாக பலன் ஏதும் கிடைக்காத தால், இன்று அங்குள்ள அனைத்து சங் கங்களும் ஒன்றாக இணைந்து கூட்டு போராட்டக்குழுவினை அமைத்துக் கொண்டு வேலை நிறுத்தப் போராட் டத்தை துவக்கியுள்ளனர்.இன்று மதுக்கடை ஊழியர்களின் போராட்டத்தை முறியடிக்க காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவை ஏற்படுத்தியிருப்பது போல் உணவுப் பொருளை பதுக்குபவர் களை பிடிக்கவும், ரேசன் கடை அரி சியை கடத்தி விற்பவர்களை பிடிக்கவும், ஆற்றில் மணல் எடுத்து கொள்ளை கொள்ளையாக கோடிக்கணக்கில் குவிப் பவர்களை பிடிக்கவும், ஒரு தனிப்படை யை அமைக்க இந்த அரசு முன்வருமா என வினவ விரும்புகின்றோம். வீட்டுமனைப்பட்டா கேட்டு ஆயிரக் கணக்கான மக்கள் விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கையில், அவர்க ளுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க ஆக் கப்பூர்வமான நடவடிக்கையை வரு வாய்த்துறை அலுவலர்களை கொண்டு மேற்கொள்ளாமல் அவர்களை சாராயக் கடை களை நடத்த அரசு தூண்டுவது ஏன்?அரசு நிலங்களை ஆக்கிரமித்து வைத் துள்ளவர்களிடமிருந்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கொண்ட குழுவினை அமைத்து ஆக்கிர மிப்பை அகற்றி ஏழைகளுக்கு பட்டா கொடுக்கும் நடவடிக்கையை எடுக்க அரசு முன் வருமா? அரசுக்கு செலுத்த வேண் டிய பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நிலுவையை இத்தகைய அதிரடிப்படை மூலம் வசூலிக்க அரசு தயாரா? நாள் ஒன்றிற்கு ரூ.100 கூட ஊதியம் இல்லை என்பதற்காக போராடும் டாஸ்மாக் பணி யாளர்கள் அரசின் பார்வையில் ஏளன மாக தெரிவதால்தானே இந்த அதிரடி நடவடிக்கை? போராடும் அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், டாஸ்மாக் ஊழி யர்களுக்கு களத்தில் கிடைத்துள்ள அனு பவம் அவர்களை ஒன்றுபடுத்தும்! தமி ழக அரசில் பணியாற்றிக் கொண்டுள்ள, தொகுப்பூதியம் பெறும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் நிச்சயம் தங்களின் உரிமைகளுக்கான் போராட்டத்தை நியாய ஊதியத்திற்கான போராட்டத்தை முன் எடுத்து செல்வார்கள்! அடக்கு முறைக்கு எதிராக அணிதிரள்வார்கள். அரசிற்கு சரியான பாடத்தை புகட்டு வார்கள்.

No comments:

Post a Comment