தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Sunday, August 29, 2010

சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நியாயமானதே

சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோபம்
-க.ராஜ்குமார்

நன்றி - தீக்கதிர் - 30-08-10

சத்துணவு ஊழியர்கள் பணி நிய மனம் செய்யப்பட்ட 1982-ம் ஆண்டு முதல், அவர்களின் பணிப் பாதுகாப்பிற்காகவும் ஊதிய மேம்பாட்டிற்காகவும் சங்கம் அமைத்துக் கொடுத்து வழிநடத்தியவர் தோழர் எம்.ஆர். அப்பன். அவரின் நினைவு நாளான இன்று (ஆகஸ்ட் 30) முறையான காலமுறை ஊதியம் வழங்க கேட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்திருப்பது மிகவும் பொருத்தமானதே!இந்தியாவிலேயே குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டிருந்த தமிழக அரசு ஊழியர் களிடையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பிற் போக்கு குணம் கொண்ட தலைமைகளை எதிர்த்து போராடி, அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை ஒரு மகத்தான போராட்டம் மூலம் பெற்றுத்தந்தவர் தோழர் எம்.ஆர்.அப்பன் அவரின் எளிமையான தோற்றமும், கொஞ்சும் தமிழும் லட்சக் கணக்கான ஊழியர்களை கவர்ந்தது என் றால் மிகையாகாது. அவரின் ஆழ்ந்த ஞான மும், ஆங்கிலச்சொல் திறனும் அரசு அதிகாரி களை ஈர்த்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது அறிக்கையில், நாங்கள் வெற்றி பெற்றுவந்தால் தொகுப்பூதிய முறையை ஒழித்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்து. அரசு ஊழியர் சங்கத்தின் 8-வது மாநில மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், பிற மாநி லங்களில் இத்தகைய ஊழியர்களுக்கு தரப்ப டும் ஊதியத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் கூடுதலாக வழங்கப்படுவதாகவும், எனினும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கை உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் எனவும் உறுதி யளித்தார். மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழ்நாட்டில் அமல்படுத்தும்போது சத்துணவு ஊழியர் களுக்கு ஊதியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதற்கு பதிலாக, ஒரு புதிய சிறப்பு காலமுறை ஊதியத்தை குறைந்தபட்ச ஊதியத்திற்கும் மிகக் குறைவாக கண்டுபிடித்து வழங்கினார். பிரச்சனைகளை சங்க பிரதிநிதிகளுடன் பேசி தீர்ப்பதற்கு பதிலாக தனக்கும் தனது ஆட்சிக்கும் எதிரான போராட்டமாக பார்ப்பது என்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது.

விஷம் போல் ஏறிவரும் விலைவாசி இன்று நடுத்தர மக்களை வாட்டி வதைப்பதை உணராமல் அரசு ஊழியர்களுக்கு அள்ளித் தந்துவிட்டதாக நினைத்து செயல் பட்டால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். இன்று 12 லட்சம் அரசுஊழியர்களில் 5 லட்சம் அரசு ஊழியர் கள் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற பெயரில் குறைந்த ஊதியத்தை, மாதம் ரூ.100 முதல் ரூ.6000 வரை பெற்றுக் கொண்டி ருப்பதை அலட்சியப்படுத்துவது ஆபத்தில் முடியும் என்பதை சுட்டிக் காட்ட விரும்பு கின்றோம்.மாறாக சத்துணவு ஊழியர்களின் போராட் டத்தை ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடுவ தாக அங்கலாய்த்துக்கொள்கிறார். தமிழக அர சின் அணுகுமுறைதான் உண்மையில் போராட் டங்களை தூண்டுகிறது. இந்தியாவிற்கே வழி காட்டுவதாக அமைந்துள்ள சத்துணவுத் திட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பணி யாற்றும் ஊழியர்களின் பரிதாப நிலையை கண்டு கொள்ளாமல், சங்கத்திலிருந்து ஓடிய தலை வர்களை வைத்து போட்டி மாநாடு நடத்தி, நன்றி மழையில் நனைந்து மகிழ்வது நியாயமா? வாழ்க்கையை தொகுப்பூதிய பணியில் தொலைத்துவிட்ட ஊழியர்களின் கோபம் நியாயமானதே! .

No comments:

Post a Comment