தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Friday, October 7, 2011

வீட்டுமனைப்பட்டா: தடையாக இருப்பது எது?
-க.ராஜ்குமார் -

நன்றி தீக்கதிர் -29-09-2011

அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருக்கும் அனைவருக்கும், நிலத்தை வகைப்பாடு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனவும், வீட்டு மனையற்றவர்களுக்கு நிலத்தை ஆர்ஜிதம் செய்து வீட்டுமனைப்பட்டாவழங்கவேண்டுமெனகேட்டுஅகிலஇந்தியவிவசாயத்தொழிலா ளர் சங்கம் தொடர்ச்சியாக இயக்கங்கள் நடத்தி வருகின்றது. மாநில அரசும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிவருவதாக சட்டமன் றத்தில் தெரிவித்துவருகிறது. இந்த ஆண்டும் சட்டமன்றத்தில் நடப்பு ஆண்டில் ஒரு லட்சம் வீட்டுமனைப்பட்டா வழங்க அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி என்ப தற்கு ஒப்பாகும். கோடிக்கணக்கான மக்கள் இன்று தங்களுக்கென்று சொந்தமாக ஒரு வீட்டுமனை இல்லாமல் தவித்துக்கொண் டுள்ளபோது, அரசின் இந்த அறிவிப்பு ஒரு சரியான மாற்றாக அமையாது. அனைவருக் கும் வீட்டுமனைப்பட்டா வழங்க ஆக்கப்பூர்வ மான நடவடிக்கையை மேற்கொள்ள வேண் டியது அவசியமாகும்.

ஆமை வேகத்தில் நடவடிக்கை

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நாளதுவரை இப்பணி நிறைவடையாமல் உள்ளது. இதற்கு காரணம் அரசின் மெத்த னமே ஆகும். 5-02-2000ல் அரசு ஆணை எண்.75, வருவாய்த்துறையில் வெளியிடப் பட்ட அரசு ஆணையில், புறம்போக்கு நிலங் களில்20ஆண்டுகளுக்கும்மேல்வீடுகளைக் கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு வீட்டு மனைப் பட்டாவழங்குவதுகுறித்துபரிசீலனை செய்து, அரசுக்கு பரிந்துரை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்த பரிந் துரையின்படி 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க லாமென 27-03-2000 நாளிட்ட அரசு ஆணை எண். 168 (வருவாய்) வெளியிடப்பட் டது. இந்த ஆணையின்படி எதிர்பார்த்த அள விற்கு வீட்டுமனைப்பட்டா வழங்க இயலா மல் போய்விட்டது. இதற்கு காரணம் பெரும் பான்மையானோர் நீர்நிலை புறம்போக்குக ளில்ஆக்கிரமிப்புசெய்துவீடுகட்டியிருந்தனர். அரசு பதிவேடுகளில் இவைகளெல்லாம் நீர் நிலை புறம்போக்குகள் என்று வகைப்படுத் தப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் நகரம் மற்றும் கிராமங்களின் வளர்ச்சியின் காரண மாக பல ஆண்டுகாலமாக நீர்வரத்து இல்லாத வறட்சியான பகுதிகளாக இருந்தன. இவற் றில் வீடுகட்டி குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கும்போது, சென்னை உயர்நீதிமன்றத் தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் நீதிமன் றம், நீர்நிலை புறம்போக்குகளையும் மக்கள் பொதுவாக பயன்படுத்தப்படும் தெருக்கள், சாலைகளில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. ஏற்கெனவே இத்தகைய ஆக்கிர மிப்புகளை வரன்முறை செய்வதற்கு அரசும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவையெல்லாம் மேலே சொன்ன படி காலப்போக்கில் இயற்கையின் மாற்றத்தி னால் பயன்பாடு அற்றதாக இருந்ததால் ஆக் கிரமிப்புகள் செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன.

போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும்அகிலஇந்தியவிவசாயத்தொழிலாளர் சங்கமும் சட்டமன்றத்திலும், மக்கள் மத்தியி லும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த காரணத் தினால் கடந்த ஆட்சியில் வருவாய்த்துறை யில் 30-12-2006-ல் அரசு ஆணை எண்.854 பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை, பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டிக் குடியிருந்து வருபவர் களுக்கு தடையாணைகளை தளர்வு செய்து ஒரு சிறப்பு திட்டமான ஒரேஒரு முறை என்ற சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் வீட்டு மனைப்பட்டாக்களை வழங்க வழிவகுத்தது. இந்த ஆணையின்படி உள்ளாட்சி மன்றங்க ளின் தீர்மானங்களைப் பெற்று அந்நிலங்கள் அரசுக்கு தேவையில்லை எனில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அவற்றை பரிசீலனை செய்து பட்டா வழங்கலாம். பின் னர் 10 ஆண்டுகள் என்பது 2008-ல் 5 ஆண் டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்க ளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க அரசு ஆணை பிறப்பித்தது. பின்னர் அது 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அரசு இவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டும் முழு மையாக அனைவருக்கும் பட்டாக்கள் வழங்க இன்றளவும் இயலவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையாணை ஒரு புறம் இதற்கு காரணம் எனினும் அரசு வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்குவது குறித்து ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காததும் காரணம் ஆகும். முறையாக நிலங்களை ஆர்ஜிதம் செய்து வீட்டுமனைப்பட்டா வழங்க அரசு முன்வரவில்லை. கண் துடைப்பிற்காக சில திட்டங்களை அறிவித்து, அவை செயல் பாட்டிற்கு கொண்டுவர அரசு அக்கறையான நடவடிக்கையும் எடுப்பதில்லை.

நிலங்கள் கிரயம் பெற
குறுக்கே நிற்பது எது?

ஆதிதிராவிடர்கள், பிற்படுத்தப்பட்டவர் கள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு நிலங்களை ஆர்ஜிதம் செய்து வீட்டுமனைப் பட்டா வழங்க ஒவ்வொரு ஆண்டும் அரசு நிதி ஒதுக்கி வருகிறது. இந்த நிதி முழுமை யாக ஒதுக்கப்பட்ட காரணத்திற்காக ஒரு ஆண்டும் செலவிடப்பட்டதாக வரலாறு கிடையாது. காரணம், அரசு நிலங்களை ஆர்ஜி தம் செய்ய உருப்படியான சட்டம் இதுவரை இயற்றப்படவில்லை. நடைமுறையில் உள்ள சட்டங்களை கொண்டு நிலங்களை ஆர்ஜி தம் செய்ய இயலாது. 21.9.1995ல் தனியாரிட மிருந்து நிலங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் கிரயம் செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டம் தோறும் ஒரு குழு அமைக்கப்பட்டது. ( அரசு ஆணை எண்.885 வருவாய்த்துறை நாள் 21.09.1995) இந்த குழுவிற்கு பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொகை, வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பிற்கு 150 விழுக்காட்டிற்கு உட் பட்டிருந்தால் அதை முடிவு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் இருந் தால் அரசின் ஆணைகளைப் பெற்று கிரயம்செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இத்தகைய நடைமுறைகளை ஒரு நிதி ஆண்டிற்குள் மேற்கொள்ள இயலாது என்ப தால் இந்த ஆணை மூலம் பெரிதளவில் நிலங்களை தனியாரிடமிருந்து பெற இயல வில்லை.

விழி பிதுங்கும் வழி காட்டி பதிவேடு

மேலும் அரசின் வழிகாட்டிப் பதிவேட் டில் குறிப்பிட்டுள்ள மதிப்பிற்கும் சந்தை மதிப்பிற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. இதற்கு காரணம் இந்த வழிகாட்டிப் பதிவேடு, மேஜையில் அமர்ந்து அதிகாரிகளால் தயாரிக்கப்படுவது ஆகும். ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர், பிற்பட் டோர் நலத்துறை ஆகிய துறைகளில் பணி யாற்றும் அலுவலர்கள் எப்படியேனும் நிலங் களை ஆர்ஜிதம் செய்து, தங்கள் இலக்கினை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக மாவட்ட அளவில் அரசால் அனுமதிக்கப் பட்ட தொகைக்கும் சந்தை மதிப்பிற்கும் இடையே உள்ள தொகையை அந்த நிலம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி களின் துணையோடு பட்டா வழங்க உத்தே சித்துள்ள மக்களிடம் மறைமுகமாக பெற்று ஈடு செய்வது இன்று வழக்கமாகிவிட்டது. போதிய நிதியை அரசு ஒதுக்கிட தவறியதா லும், நிலங்களை ஆர்ஜிதம் செய்ய உரிய வழி முறைகள் இல்லாததாலும் நிலங்களை தனி யாரிடமிருந்து கிரயம் பெற்று வழங்குவது என் பது எட்டாக்கனியாகவே மாறிவிட்டது. இது துறைத் தலைவர்களுக்கும் தெரியும் அமைச் சர் பெருமக்களும் நன்கறிவர். ஆனால் இத்தகைய இழிநிலையை மாற்றிட அவர்கள் முன் வருவதில்லை.

வழிகாட்டிப் பதிவேட்டை பொறுத்தவரை அது நில அபகரிப்பு செய்யும் மோசடிப்பேர்வழி களுக்கும், கருப்பு பணத்தை நிலங்களில் முதலீடு செய்யும் கொள்ளைக்காரர்களுக்கும் துணை செய்யவே இருக்கிறது. பல கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள இடங்கள் சில இலட்சங்களுக்கு கிரயம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு, அரசின் பதிவுத் துறைக்கு வரவேண்டிய வருமானம் தடுக்கப் படுகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

வழி என்ன?

எந்த அரசு வந்தாலும் நத்தத்தில் குடியி ருப்பவர்களுக்கு பட்டா வழங்க இலக்கை நிர்ணயம் செய்கின்றனவே ஒழிய புதிதாக நிலங்களை ஆர்ஜிதம் செய்து பட்டா வழங்க தயாராக இல்லை. மேலும் ஆதீனங்களின் கட்டுப்பாட்டிலும், கோயில்களின் பெயர்களி லும் உள்ள நிலங்களில் வீட்டுமனைப்பட்டா வழங்க அரசு தயாராக இல்லை. இத்தகைய நிலங்களிலும் ஆயிரக்கணக்கானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பட்டா வழங்க அரசு உரிய ஆணைகளை வெளியிட தயக்கம் காட்டி வருகின்றது. உண்மையில் அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்க ஒரு அரசு விரும் பினால், போதுமான நிலங்களை ஆர்ஜிதம் செய்தும், கோயில் மற்றும் ஆதீனங்களின் பிடியில் சிக்கியிருக்கும் நிலங்களை மீட்டும் வழங்கலாம். இதற்கான ஆணையை வெளி யிட மாநில அரசு முன்வர வேண்டும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில நிலங்களின் வகைப்பாட்டை மாற்றி உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளலாம். தேவைக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்துள்ள வர்களிடமிருந்தும், அரசு நிலங்களை ஆக்கிர மிப்பு செய்துள்ள நிலமுதலைகளின் பிடியி லிருந்தும் நிலங்களை மீட்டெடுக்க சட்டங் களை பிறப்பிக்கலாம்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதற் கிணங்க ஆக்கப்பூர்வமான ஆணைகளை பிறப்பித்து, அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனைப்பட்டா கேட்டு சமீபத்தில் தமிழகத்தில் மக்கள் திரண்டு நடத்தி வரும் இயக்கங்களை அரசு கண்டு கொள்ளாமல் இருந்தால் அது ஒரு பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக் கும்என்பதைசுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.

No comments:

Post a Comment