தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Monday, January 23, 2012

வாரிய அட்டை
-க.ராஜ்குமார் -


நன்றி தீக்கதிர் 23-01-2012

புதிதாக கட்டப்பட்டுவரும் அந்த கட்டிடத்தின் அருகே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, எட்டி எட்டி பார்த்துவிட்டு புலம்பிக் கொண்டே சென்றனர்.

என்ன பலமான அடியா?

சரியான அடிபோல இருக்கு

நடுத்தர வயது இருக்கும் போல..

உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. தப்பிச்சுட்டான்.

-இப்படி சிலர்.

வீட்டுக்காரர் ஏதாவது உதவி செய்வாரா?

அவரு ஏன் செய்யறார்? அவரு தான் கான்ட்ரக்ட் விட்டுவிட்டாரு இல்ல. இஞ்சினியர் செஞ்சாதான் உண்டு.

தனியார் ஆஸ்பத்திரிக்கு போனா ரூ.25000க்கு குறையாது.

-இப்படி சிலர்.

நான் சாரம் கட்டும்போதே சொன்னேன். கயிறு பழையது என்று, மேஸ்திரி புதிதாக வாங்கித் தர சங்கடப்பட்டார். இப்போ செந் தில் கால்தான் உடைந்தது.. இது சகதொழிலாளியின் புலம்பல்.

சாரம் சர சர வென்று சரியும் சத்தம் கேட்டு அவரு எட்டிக் குதிச் சுட்டாரு. அதனாலே தப்பிச்சிட் டாரு. இல்லைன்னா அவ்வளவு தான். அவர் போட்ட சத்தத்திலே நாங்கெல்லாம் விலகி ஓடிப்போ னோம், தப்பிச்சோம்... இது கூட வேலை செய்துகொண்டிருந்த சித்தாள்.

செந்திலோ வலி தாங்கமுடியா மல் கதறிக்கொண்டே இருந்தான்.

இவர்கள் இப்படி பேசிக்கொண் டிருக்க, அங்கு வந்த முதியவர் ஒரு வர் எல்லோரையும் பார்த்து ஆளுக்கு ஆள் இப்படி பேசிக் கொண்டிருந்தா எப்படி? யாராவது அடிபட்ட ஆளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக வேண்டாமா என்று பொதுவாகக் கடிந்துகொண்டார்.

செந்தில் வீடு பக்கம்தான். அவ ரது மனைவிக்கு சொல்லியிருக்கு. அவங்க வந்துடுவாங்க என்று ஒரு வர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,

அய்யோ.. என்னங்க ஆச்சு உங் களுக்கு.. என்று உரத்தக் குரலில் அழுதுகொண்டே, இடுப்பில் ஒரு குழந்தையுடன் வந்து சேர்ந்தாள் செந்திலின் மனைவி.

ஒண்ணுமில்லை. காலில் சரி யான அடி. கவர்ன்மெண்ட் ஆஸ்பத் திரிக்கு கொண்டுபோகலாம்.. மற் றதை பின்னால் பார்த்துக்கொள்ள லாம். மேஸ்திரி வரட்டும் என சக தொழிலாளிகளின் ஆலோசனை.

அங்கு வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி கவர்ன்மெண்ட் ஆஸ்பத் திரிக்கு அடிபட்டவரை கொண்டு போகனும் என்று சொல்ல,

ஆட்டோக்காரர் கேட்டார், பலத்த அடியா? உயிர் இருக்கிறதா?

அய்யய்யோ காலில்தான் அடி. எழுந்திருக்க முடியாம கிடக்கிறாரு என அவரது மனைவி கதற,

இருவர் சேர்ந்து செந்திலை ஆட் டோவில் ஏற்றி கூட அவரது மனை வியையும் அனுப்பிவைத்தனர். நீங்க முன்னாலே போங்க, நாங்க பின்னா டியே வர்றோம் என்றனர் செந்தி லின் நண்பர்கள்.

ஆஸ்பத்திரிக்கு சென்று சேர்ந் தவுடன், ஆட்டோவிலிருந்து செந் திலை எப்படி இறக்குவது என்று அவரது மனைவி தெரியாமல் புலம் பிக்கொண்டிருந்தார்.

ஆட்டோக்காரர், யாராவது தெரிந் தவர்கள் இருந்தால் கூப்பிடு, சிலையாட்டம் நின்னுக்கிட்டு இருந்தா எப்படி என்று அவரது பங்கிற்கு செந் திலின் மனைவியை கடிந்துகொள்ள,

செந்திலோ வலி தாங்க முடியா மல் ஆட்டோவில் கதறிக்கொண் டிருந்தார். அக்கம்பக்கம் நின்று கொண்டிருந்தவர்களிடம் செந்தி லின் மனைவி கெஞ்ச, அவர்கள், உள்ளே போய் சொல்லு ஸ்ட்ரெச்சர் வரும் என்று ஆலோசனை சொன் னார்கள்.

அவசர அவசரமாக உள்ளே போய் செந்திலின் மனைவி வழி யில் பார்த்தவர்களிடம் கெஞ்ச அவர்கள் ‘காசுவாலிட்டிக்கு’ கொண்டு போ இங்குவந்து கத்தாதே என்று கடிந்துகொண்டனர். செந்திலின் மனைவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் ஆட்டோ இருக்குமிடத்திற்கே ஓடிவந்தாள். கையில் குழந்தையுடன்.

அதற்குள் ஆட்டோக்காரர் தனக்கு அவசரம் என்று அவருக்கு தெரிந்த சிலரை அழைத்து செந் திலை கீழே இறக்கி அமரவைத் திருந்தார். செந்திலின் மனைவியை கண்டவுடன் எங்கே போயிட்டே? நான் போக வேண்டாம் என்று முகம் காட்ட, செந்திலின் மனைவி தனது இடுப்பில் இருந்த ரூபாயை எடுத்து ஆட்டோக்காரரிடம் நீட்டி னாள். ஆட்டோக்காரர் அந்த ரூபாயை பெற்றுக் கொண்டு திருப்பி திருப்பி பார்த்தார். அது போதாது என்பதை தெரிந்துகொண்ட செந்திலின் மனைவி, அண்ணா.. என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது. பின்னால் தர்றேன் என்று சொல்ல அவளை ஏற இறங்கப் பார்த்த ஆட்டோ டிரைவர், பரவாயில்லை நீ போய் உன் புருஷனை பாரு என்றார்.

மனம் ஒடிந்து போயிருந்த செந் திலின் மனைவிக்கு இந்த வார்த் தையே பெரும் நம்பிக்கையை அளித்தது.

மீண்டும் ஆஸ்பத்திரிக்குள் போய் காசுவாலிட்டியை கண்டு பிடித்த செந்திலின் மனைவி தனது கணவன் அடிபட்டதையும் வெளி யில் அமர்ந்திருப்பதையும் கூறி அவரை அழைத்துவர ஸ்ட்ரெச்சர் அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்களோ போலீசுக்குச் சொல்லிட்டியா? முதலில் போலீ சில் போய் புகார் கொடுத்து அவர் களிடமிருந்து கடிதம் கொண்டுவா என்றனர்.

செந்திலின் மனைவி என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்க, அவளைப் பார்த்து இரக்கப்பட்ட ஒருவர், ஆஸ்பத்திரிக்குள்ளேயே போலீஸ் அவுட்போஸ்ட் ஒன்று உள்ளதை காட்டி அங்கேபோய்ச் சொல் என்று சொன்னார். செந் திலின் மனைவி இதைக்கேட்ட வுடன் தெம்பு பெற்றவளாக போலீஸ் அவுட் போஸ்டிற்கு சென்றாள்.

அங்கு அமாந்திருந்த காவலரி டம் நடந்ததைச் சொல்ல அவர் சாவகாசமாக, போய் ஒரு வெள் ளைப் பேப்பர் ஒரு குயர் வாங்கி வா. உன்னிடம் ஸ்டேட்மெண்ட் வாங்க வேண்டும் என்றார். வெள்ளை பேப் பர் எங்கே வாங்குவது என்று தெரி யாமல் திணறிய செந்திலின் மனைவி கடை எங்கே இருக்கிறது என்று பலரையும் கேட்டு தெரிந்து கொண்டு ஒரு குயர் பேப்பர் வாங்கிக் கொண்டு வந்து காவலரிடம் கொடுத் தார்.

அதைப்பெற்றுக்கொண்டு, நடந்த விபரத்தை கேட்டறிந்து ஸ்டேட் மெண்ட் வாங்குவதற்குள் நான்கு முறை ஒண்ணும் தெரியாத நீயெல் லாம் ஏன் வெளியே வர? எங்க உயிரை வாங்கற? என்று செந்தி லின் மனைவியை திட்டித் தீர்த்தார்.

அவர் கொடுத்த புகார் பெற்றுக் கொண்டதற்கான ரசீதை பெற்றுக் கொண்டுவந்து காசுவாலிட்டியில் காண்பிக்க, அவர்கள் ஒரு ஸ்ட்ரெச் சரை அனுப்பி வைத்தனர். அவர் களை செந்தில் அமர்ந்துகொண் டிருந்த இடத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள் செந் திலின் மனைவி.

அப்போது அங்கு வந்திருந்த செந்திலின் நண்பர்கள் அவளைப் பார்த்து கேட்டனர். இத்தனை நேரம் எங்கே போயிருந்தாய்? உன் புரு ஷனை தனியாக விட்டு விட்டு.

செந்திலின் மனைவி அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டாள்.

செந்திலின் நண்பன் ஒருவன் செந்திலின் மனைவியை பார்த்து, தலைவருக்கு போன் பண்ணிச் சொல்லியிருக்கேன். அவரு இப்போ வந்துறேன்னு சொன்னாரு. எங்கே செந்திலின் வாரிய அட்டை? வந் தவுடனே தலைவர் கேட்பாரு என்று கேட்க, அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் அடி பட்ட கணவனைப் பார்த்துக் கொண்டே திகைத்து நின்றாள்.

No comments:

Post a Comment