தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Monday, February 11, 2013

பெண்கள் மீதான தாக்குதல் - காங்கிரஸ் வடிக்கும் நீலிக்கண்ணீர்
க.ராஜ்குமார்
தீக்கதிர் 
 நாள் 2-01-13

தில்லியில் ஒடும் பேருந்தில் மருத்துவக் கல் லூரி மாணவி ஒருவர் கொடூரமான முறையில் சமூகவிரோதிகளால் பாலி யல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார். இந்திய நாட் டின் தலைநகரில் நடை பெற்றுள்ள இச்சம்பவம் இந்திய நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள் ளது. தில்லி சம்பவம், ஏதோ தற்செயலாக நடந்துவிட்ட சம்பவம் என்றோ, சில பத் திரிகைகள் ஆதங்கப்படு வதைப்போல் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தினாலோ ஏற் பட்டுள்ள சம்பவமாக கருத முடியாது. இந்தியாவில் பெண்கள் எப்படி எப்படி திட்டமிட்டு தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்று இந்திய குற்றப்பதிவு ஆணையம் திடுக்கிடும் தக வல்களை வெளியிட்டுள்ளது.நமது நாட்டில் கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் பெண்கள் மீதான வன் கொடுமை வழக்குகள் 2.28 லட்சம் பதிவு செய்யப்பட் டுள்ளன என்றும், இதில் 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் மீதான பாலி யல் வன்கொடுமை வழக்கு கள் 24 ஆயிரம் ஆகும் என்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவ லை தேசிய குற்றப்பதிவு ஆணையம் தெரிவித்துள் ளது. குற்றங்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, குறிப்பாக அரியானா மற் றும் மேற்கு வங்கத்தில் சமீ பகாலமாக பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் அதிகரித்து வருவதையும் இந்த தகவல் தெரிவிக்கிறது.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறும் அரி யானா மாநிலம் பெண்கள் மீதான தாக்குதலில் முதல் இடத்தில் உள்ளது.

செப்டம்பர் 9 அன்று ஹிசார் அருகில் உள்ள தாப் ரா என்ற இடத்தில் 16 வயது தலித் பெண் ஒருவர் 8 காட்டுமிராண்டிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த தலித் பெண்ணின் தந்தை இந்த கொடுமையை தாங்க முடியாமல் தற்கொ லை செய்துகொண்டுள்ளார்.செப்டம்பர் 27ந் தேதி யன்று சோனாபட் அருகில் உள்ள கோஹன என்ற ஊரில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி நான்கு கொடிய வர்களால் பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட் டுள்ளார்.கடந்த ஒரு மாத காலத் தில் மட்டும் அரியானா மாநிலத்தில் 17 பாலியல் வன் கொடுமைகள் நடந்துள் ளன. சென்ற 2011-ம் ஆண்டு மட்டும் இந்த மாநிலத்தில் 733 பாலியல் வன் கொடு மைகள் நடத்தப்பட்டு, காவல் துறையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் 6 மாத காலத்தில் மட்டும் 367 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவை நீங் கலாக இன்னும் பல வன் கொடுமைகள் நடந்தேறி யுள்ளன. காவல் துறையின் மீதுள்ள அவநம்பிக்கை யின் காரணமாக பாதிக்கப் பட்டவர்கள் புகார்கள் தரு வதில்லை. இது குறித்து ஜக மதி சங்வான் குறிப்பிடுகை யில், காவல்துறையினர் குற்ற வாளிகள் காப்பாற்றவே செய்கின்றனர். பாதிக்கப் பட்டவர்களின் பெற்றோர் நீதி கிடைக்காது என்பதை உணர்ந்து காவல்துறையில் புகார் செய்ய முன் வருவ தில்லை என்கின்றார். மேலும் அரியானா மாநிலத்தில் 1000 ஆண்கள் 830 பெண்கள் என்ற விகிதாச்சாரஅளவில் உள்ள ஆண்-பெண் பாகு பாடும் சமூகத்தின் அவலத் திற்கு காரணமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள் ளார்.

காங்கிரஸால் இறக்கு மதி செய்யப்பட்ட திரிணா முல் காங்கிரஸ் ஆட்சி செய் யும் மேற்கு வங்க மாநிலத் தில் பெண்கள் மீதான தாக் குதல்கள், கடந்த ஆண் டைக் காட்டிலும் (2011) இந்த ஆண்டு 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது தேசிய அளவில் 33 விழுக் காடு என்ற சராசரி அள வைக்காட்டிலும் இரண்டு மடங்கு என தேசிய குற்றப் பதிவு ஆணையத்தின் தக வல் கூறுகிறது. இதற்கு மேற் குவங்க முதல்வர் மம்தா செய்தித்தாள்களின் மீது பாய்கிறார். செய்தித் தாள் கள் விஷயத்தை ஊதி பெரி துபடுத்துகின்றன என்பது அவரின் குற்றச்சாட்டு. இவர் இப்படி கூறினாலும், கொல் கத்தா நகரில் இரவில் வெறிச்சோடி கிடக்கும் வீதி களும், பூட்டிகிடக்கும் அடுக்குமாடி கேட்டுகளும், காலையில் நடைபயணம் மேற்கொள்வோரின் எண் ணிக்கை சொற்பமாக குறைந்திருப்பதும் கொல் கத்தா நகரில் வன்கொடு மைகள் அதிகரித்து வருவ தை நிரூபிக்கின்றன. என் பதை அவர் மறுக்க முடி யாது.சமீபத்தில் மாநிலங்கள வையில், உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்; 2011-ம் ஆண்டில், நாட்டி லுள்ள 28 மாநிலங்களில் மிக அதிகமாக மேற்கு வங் கத்தில் மட்டும் 29,133 வழக் குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன என அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஜனநாயக உரிமைகள் கூட்டமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்க ளின்படி இந்தியாவில் 260 அரசியல் வாதிகள் மீது பாலியல் வன்முறை வழக் குகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கடந்த தேர் தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களாவர். இவர் களில் 72 பேர் சுயேச்சை ஆவர்கள். 26 பேர் காங்கி ரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். 24 பேர் பாரதிய ஜனதா கட்சியையும், 16 பேர் சமாஜ்வாதி கட்சியை யும் 18 பேர் பகுஜன் சமாஜ் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதன்மையான இடத்தில் உள்ளது. இங்கு 41 பேரும், மேற்கு வங்கத்தில் 22 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 37 பேரும் இந்த பட்டியலில் உள்ளனர். இந்த லட்சணத் தில் காங்கிரஸ் கட்சி பாலி யல் வன்முறையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை தேர்த லில் போட்டியிடுவதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளது நகைப்பிற் குரியது.

No comments:

Post a Comment