தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Wednesday, March 6, 2013

உங்கள் பணம் எங்கள் கம்பெனிகளுக்கே
க.ராஜ்குமார்
நன்றி தீக்கதிர் நாள் 06-03-2013


    திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கருணாநிதி, மத்தியஅரசு தனது உணவுப் பாதுகாப்புக் கொள்கையை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அண்மையில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மத்திய அரசு உணவுப் பாது காப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தை நிறை வேற்றி அமல்படுத்தி வருகிறது. இச் சட்டப் படி 12 லட்சத்திற்கும் மேற்பட்ட தொகைக்குமேல் வணிகம் செய்பவர்கள் உரிமம் பெற வேண்டும். இந்தச் சட்டத்தின் பிரிவுகள் சில்லரை வர்த்தகர்களுக்கு எதிராக உள்ளது என வணிகர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்நிலையில் 2011-ம் ஆண்டு மத்திய அரசு, உணவுப் பாதுகாப்புக் கொள்கைக்கான சட்ட முன்மொழிவினை, 17-12-2011 அன்று மத்திய அமைச்சரவையில் இறுதி செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவையில், திமுகவைச் சேர்ந்த மத் திய அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் அது சட்டமாக்கப்படாத நிலையில், நாடாளு மன்றத்தில் நிலுவையில் உள்ள போதே, மத்திய அரசு அச்சட்ட முன்மொழிவில் உள்ள பல அம்சங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 8 மாநிலங்களில், 51 மாவட்டங்களில், உணவுப் பாதுகாப்புக் கொள்கையின் அடிப் படையில், ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருள்களுக்கு பதிலாக அரசு வழங்கும் மானியத் தொகையினை நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு உங்கள் பணம் உங்கள் கையில் என கவர்ச்சிகரமான பெயரையும் வைத்துள்ளது. இதுவரை மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புக் கொள்கையை கண்டும் காணாமலிருந்த திமுக தலைவர் கருணாநிதிதான் அதை எதிர்த்து அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வரவேற்புக்குரியது என்றாலும், கலைஞரின் இன்றைய எதிர்ப்பிற்கும் ஒரு பின்னணி உள்ளது.



வாக்கு வித்தியாச எண்ணிக்கை -

 மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புக் கொள்கையையும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு அனுமதித் ததையும்; இடதுசாரிக் கட்சிகள் ஆரம்பத்தி லிருந்து கடுமையாக எதிர்த்து வந்தன. சில் லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தொடர் பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்திட வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் இக்கொள் கையை கடுமையாக எதிர்த்து வாக்களித்தன. முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி, சில் லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை தாம் எதிர்ப்பதாகத் தெரிவித்தாலும், கூட்டணி ஆட்சியைக் காப்பாற்றவே, வாக்கு வித்தியாச எண்ணிக்கையை காங்கிரஸ் கட்சிக்கு உணர்த்தவே, நாடாளுமன்றத்தில் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு ஆதர வாக தமது கட்சி (திமுக) வாக்களிக்க வேண்டியிருந்தது என்று புலம்பித் தள்ளினார். இந்த வாக்கெடுப்பை பொறுத்தவரை, தோற்றாலும் அரசு கவிழாது என்பதை அவரைப்போன்ற ,மூத்த அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக் காமலா போகும்? அவர் சில்லரை வர்த்தகர் களுக்கும், மக்களுக்கும் ஒன்றும் தெரியாது என நினைத்துவிட்டார். உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டம் கொண்டு வந்தபோதே அதன் பாதிப்பை உணர்ந்த வணிகர்கள் அதை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். தற்போது வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்து விட்ட தால் தங்களின் எதிர்காலம் நாச மாக்கப்பட்டதை அறிந்து அவர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.



வணிகர்களின் தொடர் போராட்டம் -

 அவருக்கு பக்கபலமாக இருந்த வணிகர் கள் அமைப்புகள் உள்பட, நாடுதழுவிய வணி கர்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து மத்திய அர சின் உணவுப் பாதுகாப்புக் கொள்கையையும், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதையும் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன. கருப்புக்கொடிகளை ஏற்றியும், மறியல் போராட்டம் செய்து கைதாகி யும், கடையடைப்பு செய்தும் தொடர்ந்து போராடி வருகின்றனர். மார்ச் 7-ம் தேதி தில்லியில் மூன்று லட்சம் சில்லரை வணிகர்கள் கலந்துகொள்ளும், பேரணியை நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தஉள்ளனர். இந்தச் சட்டத்திற்கு எதிராக வணிகர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து நடத்திவரும் போராட்டம் வலுவடைந்து வருகின்ற காரணத்தினாலே காலங்கடந்து திமுக தலைவர் உணவுப் பாதுகாப்புக் கொள்கையை எதிர்த்து அறிக்கைவிட காரணமாக அமைந்துள்ளது.

சில்லரை வர்த்தகத்தை அழிப்பதற்கான திட்டம் -

 உணவுப் பாதுகாப்புக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம், சில்லரை வணிகர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடத் திட்டமிட்டுள்ளது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனு மதித்திருப்பதன் மூலம் வால்மார்ட் போன்ற பகாசுர நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருகைதர உள்ள நேரத்தில் அவற்றிற்கு இந்திய நாட்டைக் கொள்ளையடிக்க வசதியாக சில்லரை வர்த்தகத்தை முடக்கிவிட மத்திய அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. திமுக தலை வர் கருணாநிதியின் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதுபோல், உணவு பொருள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏன் தற்காலிக கடைக்காரர்கள், தெருவில் கூவி விற்பனை செய்பவர்கள் போன்ற சிறு வணிகர்களும் பதிவு செய்துகொண்டு உரிமம் பெறவேண்டும் என்ற கட்டாயம் இந்தச் சட்டத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது. தூசு, ஈ, எலி, கரப்பான்பூச்சி போன்றவை கடைகளில் இருந்தால் லட்சக் கணக்கில் அபராதமும், மாதக்கணக்கில் சிறைத்தண்டனையும் வழங்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. உணவுப்பொருள் ஒரு இடத் திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல இந்தச் சட்டப்படி உரிமம் பெற வேண்டும். சில்லரை வணிகர்கள் அனை வரும் வர்த்தக உரிமம் பெற வேண்டும். அவர்கள் விற்பனை செய்யக் கூடிய உணவுப் பொருட்கள் உறையிடப்பட்டு அதன் மீது தயாரிப்பு தேதி மற்றும் விபரங்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் குறிப்பிட வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்துள்ளது. சில்லரை வர்த் தகத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு எல்லையற்ற அதி காரம் தரப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் சட்டத்தில் இல்லாத தண்டனைகளும் அபராதங் களும் இந்தச் சட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இவையெல்லாம் சரிதானே என கேட்கத் தோன்றும். சாதாரண கமர்கட்டும், பொரி உருண்டையும் விற்பனை செய்யும் சில்லரை வர்த்தகர்கள் இவற்றைச் செய்ய முடியுமா? தேவையா? என சிந்தித்துப் பார்க்க வேண் டும். இந்திய நாட்டின் குடிசைத் தொழிலான ஊறுகாய் தயாரிப்பு மூலம் கிராமப்புறங்களில் உள்ள, பெரும்பாலான கைம்பெண்கள் கடை களுக்கு அனுப்பி வருகின்றனர். இனி அவர் கள் என்ன செய்ய முடியும்? இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) தலைவர் சந்திரமௌலி இந்தியாவில் இது வரை 350 வகையான உணவுப்பொருட்கள் தரக்கட்டுப்பாடு நிர்ணயச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள் ளார். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் 2011-ம் ஆண்டு இச்சட்டத்தில் உருவாக்கப்பட் டுள்ள புதிய விதிகளின் படி நட்சத்திர ஹோட்டல் முதல் பிளாட்பாரத்தில் உள்ள பீடா கடைகள் வரை பதிவு செய்யப்பட வேண் டும். இது குறித்த விழிப்புணர்வை வியாபாரி களிடையே கொண்டுவருவதற்காக தமிழகத் தில் வேன் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட் டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வணிகர்களின் அமைப்புகள் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏற் கெனவே அமலில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் (2006) கீழ் பதிவு செய்யப்படாத வியாபாரிகளை ரூ.5 லட் சம் அபராதம் அல்லது 6 மாதம் வரை சிறைத் தண்டனை என அதிகாரிகள் மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 21 ஆயிரத்து 932 சில்லரை வர்த்தகர்கள் மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையரிடத் தில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் ரூ.12 லட்சத்திற்கும் அதிகமாக வணிகம் செய்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து அறுபத்தி எட்டாயிரம் பேர் ஆவர். இவர்களில்தான் 21,932 பேர் பதிவு செய்துள் ளனர். சில்லரை வர்த்தகர்கள் உரிமம் பெறு வதற்கு பிப்ரவரி 4-ம் தேதிவரை கால அவ காசம் தரப்பட்டிருந்தது. அது தற்போது வணி கர்களின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சட் டத்தை எதிர்த்து சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் 32 வழக்குகள் நிலுவை யில் உள்ளன. 16 வழக்குகளில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நோக்கம்

 மத்திய அரசின் நோக்கம் இந்திய மக் களுக்கான உணவை பாதுகாப்பது அல்ல. சில்லரை வர்த்தகத்தை முடக்கி, இந்திய சில் லரை வர்த்தகச் சந்தையை அந்நிய பகாசுரக் கம்பெனிகளுக்குத் தாரை வார்ப்பதே ஆகும். ஒரு பக்கம் ரேசன் கடையை மூட நடவ டிக்கை எடுத்து வரும் மத்திய அரசு,மறுபுறம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்திருப்பதும் ஒரு திட்டமிட்ட நட வடிக்கையே. ரேசன் கடைகளில் வழங்கப் படும் உணவுப் பொருள்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.65,000 கோடி மானியம் வழங்கி வருகிறது. இது நீங்கலாக இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் சில்லரை வர்த்தகம் இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இவ்வளவு பெரிய தொகையை, ‘உங்கள் பணம் உங்கள் கை மூலமாக எங்கள் பகாசுர கம்பெனிகளுக்கே’ என்று அனுப்பி வைக்கும் ஏற்பாடே உணவுப் பாதுகாப்புக் கொள்கையாகும்.
இடதுசாரிகள் இயக்கம் -

 இத்தகைய மக்கள் விரோதக் கொள் கையை எதிர்த்து இடது சாரிக்கட்சிகள், 5 கோடி மக்களிடம் கையெழுத்துக்கள் பெற்று, பிப்ரவரி மாதம் 26-ம்தேதி தில்லியில் பேரணி நடத்தி பிரதமரிடம் கொடுத்துள்ளன. நாடு முழுவதும் இப்பணி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. போராடி வரும் வணி கர்களுக்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இதனைக் கண்டு தான் திமுக தலைவர் கருணாநிதிக்கு கலக்கம். எதிர்கொள்ளவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புக் கொள்கை ஒரு முக்கியப் பொருளாக மேலோங்கி வரும். நாடு முழுவதும் உள்ள நாலரை கோடி வணிகர்களின் பின்னால் உள்ள வாக்கு வங்கி வெற்றி தோல்வியை தீர் மானிக்கும் என்பது அவரைப் போன்றவர் களுக்கு தெரியாமலா போகும்?





No comments:

Post a Comment