தீக்கதிர் - செம்மலா் படியுங்கள்

Saturday, March 16, 2013

பாதுகாப்பற்ற சூழலில் பெண்கள்

க.ராஜ்குமார்


நன்றி தீக்கதிர் 16-03-13



இந்திய நாட்டின் முதல் குடிமகனாக பெண் இருந்துவிட்டார். மக்களவையின் தலைவராக பெண் இருக்கின்றார். ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெண். பல மாநிலங்களில் முதல்வர்கள் பெண்கள். விண்வெளியில் பெண் பயணம் செய்கின்றாள். காவல்துறை அதிகாரிகளாகவும், பெண்கள் விமானம் ஓட்டவும் செய்கின் றார்கள். பெண்கள் இன்று பல துறை களிலும் முன்னிலை வகித்தாலும் இவைகள் எல்லாம் ஒட்டுமொத்த பெண்களை அடிமைகளாக வைத் திருப்பதற்கான ஏற்பாட்டிற்குள்ளேயே நிகழும் சம்பவங்களாக உள்ளன.இந்தியாவின் தலைநகரான தில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்று தில்லியின் முதலமைச்சரே ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைதான் இன்று இந்தியாவின் பெண்கள் நிலை. 12 ஆண்டுகளாக தில்லியின் முதலமைச்சராக உள்ள ஷீலா தீட்சித் தில்லியில் சட்டம்-ஒழுங்கு மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு (உள்துறை) மத்திய அரசின் பொறுப்பில் உள்ளது என தனது பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறார்.
மத்தியில் உள்ள ஆட்சியும், உள்துறை அமைச்சராக உள்ளவரும் அவர் சார்ந்துள்ள காங் கிரஸ் கட்சிதான் என்பதை அவர் சௌகரியமாக மறந்துவிட்டார். சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பணியிடங்களில் பாலியல் கொடு மைகளை சந்திக்க நேரிடும் பெண் களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகை யில் ஒரு புதிய மசோதா நிறைவேறி யுள்ளது. இந்த புதிய சட்ட மசோதா வின் மூலம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபர்களுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்படி நபர்களுக்கு தொழில் செய்வதற்காக வழங்கப்பட்ட உரிமமும் ரத்து செய்யப்படும். நிறைவேறியுள்ள சட்டத்தின்படி மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட பணியிடங்களில் பணிபுரியும் பெண்கள் புகார் அளிக்கவும் அவற்றிற்கு தீர்வு காணவும் குறைதீர்க்கும் குழுவை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்; பல மாநிலங்களில் இத்தகைய சட்டம் ஏற்கெனவே பெயரளவிற்கு இருந்து வருகிறது. பெண்கள் குறித்த புகார் களை விசாரிக்க ஒரு பெண் அதி காரியை நியமிக்க வேண்டும் என்ற சாதாரண கோரிக்கையை கூட மத்திய-மாநில அரசுகள் அமல்படுத்த தயாராக இல்லை என்பது குறிப் பிடத்தக்கது. சாட்லைட்கள் வலம் வரும் இந்த உலகில், பால் முகம் மாறாத பெண் குழந்தைகள் முதல் தள்ளாடும் முதுமை அடைந்த பெண்கள்வரை வக்கிரமான பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது தலைகுனிய வைக்கும் செய்தியாகும். பெண் தனக்கு இழைக் கப்படும் இன்னல்களை எதிர்த்து போராடக்கூடிய சூழ்நிலைகள் இன்னும் உருவாகவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையங்களுக்கு செல்ல தயாராக இல்லை. காவல் நிலையங்களிலேயே இன்று பெண்கள் மீதான தாக்குதல்கள் என்பது அதிகரித்து வருவதே இதற்கு காரணம். கணவனின் முன் மனைவியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கும் ‘சட்டத்தின் காவலர்கள்’ உள்ள நாடு இது. ஒரு பெண் நகைகளை அணிந்து கொண்டு இரவு நேரத்தில் தன்னந்தனியாக என்றைக்கு சென்று வருகின்றா ளோ அன்றுதான் ஒரு நல்ல அரசு இருப்பதாக கருதமுடியும் என மகாத்மா காந்தி சொன்னதாக கூறப்படுகிறது. இன்று இரவில் அல்ல, பகலில் கூட ஒரு பெண் தன்னந்தனியாக சென்று வரமுடியாத நிலைதான் இந்தியாவில் உள்ளது.
கிராமப்புற பெண்களின் நிலை

கிராமப்புறங்களில் பணியாற்றும் பெண்களின் நிலைமை மேலும் மோசமானது. பசிக்கு தனது குழந்தைக்கு பாலூட்டக்கூட முடியாத வக்கிரமான மனிதர்களை அவள், எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மாற்றக் கூட மாற்று ஆடை இல்லாத அவள் திறந்தவெளியில் இயற்கை கடன்களை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளாள். சமீபத்தில் மனிதனின் மலத்தை மனிதனே சுமப்பது நாமெல்லாம் வெட்கி தலைகுனிய வேண்டிய செயல் என பாரத பிரதமர் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஆனால் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆனபின்னும் இந்தியாவின் நிலை இதுதான். இதில் பெரிதும் பாதிப்பிற்குள்ளானவள் பெண் என்பதுதான் உண்மை. இந்தியாவில் பெண்களுக்கு போதுமான சத்தான உணவுகள் தரப்படுவதில்லை. எனவே இந்தியப் பெண்கள் பலவகையான சோகை நோய்களுக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது. ஆனால் குஜராத்தின் ‘ஜென்டில்மேன்’; முதல்வர் நரேந்திரமோடி, பெண்கள் தங்களின் உடல்களை மெலிந்து வைத்துக்கொள்ளவே விரும்புகிறார்கள் எனவே சத்தான உணவை அவர்கள் உட்கொள்வதில்லை என புது வியாக்கியானத்தை அளித்துள்ளார்.

சமவேலைக்கு சம ஊதியம்

ரயில்வே நிலையங்களில் டிக்கெட் வாங்குவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வரிசை என்று சமத்துவத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தும் அரசு நிர்வாகம் அதே நேரத்தில், உழைப்பிற்கான ஊதியத்தில் பெண்களுக்கு சமத்துவம் கிடைக்க வழிவகை செய்யவில்லை. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம ஊதியம் வழங்குவதற்கான உருப்படியான சட்டம் இல்லை. ஆண்களுக்கு ஒரு ஊதியம், பெண்களுக்கு ஒரு ஊதியம் என்பதே தொடர்கிறது. இந்தியாவின் கிராமப்புறங்களில் இன்னும் குடும்பத்துடன் அடிமையாக நிலக்கிழார்களிடம் பணிபுரியும் பெண்கள் அதிகம். வயிற்றுப் பிழைப்பிற்காக குடும்பமே கடன்பட்டுக் கிடக்கிறது. பெண்களின் பாதுகாப்பும், பெண்களுக்கான சமத்துவமும் இடைவிடாத போராட்டங்களின் மூலமே பெற முடியும்.




No comments:

Post a Comment